Tuesday, August 13, 2013

மலைகள் கவிதைகள்




மரணம்

மீளமுடியா மரணத்தின் பிடியிலிருந்து
இன்று என்னைக்
கடவுள் காப்பாற்றிவிட்டார்.
அவர் வசதிப்படி இன்னொரு நாள்
சாவகாசமாக எடுத்துக்கொள்வதற்கென.

அழகு

அழகு
தான் அப்படியிருப்பதற்காக
வருந்தத்தான் செய்யும்
பலநேரங்களில்

புன்முறுவல்

எத்தனை தான் பயனற்றவன் என
எனக்குள்ளே
நினைத்திருந்தாலும்
நினைத்தவுடன்
புன்முறுவல் பூக்கவைக்கும்
எனது உறவுக்கு
நெருக்கமானவன் தான்
எப்போதும்.

போன்சாய்

காமம் எனும் ஆலமரத்தின்
போன்சாய் வடிவம் காதல்.

ஒழுக்கம்

தனிமையிலும் இருட்டிலும்
ஒழுக்கமாக இருக்கிறேன்
என்று உங்களுக்குச்சொல்லி
எனக்கு என்ன ஆகப்போகிறது?

துயரம்

ஒரு சிறிய புன்முறுவலில்
கடலளவு துயரத்தைக்கூட
என்னால் மறைத்துவிட முடிகிறது
என்று தான் இத்தனை நாளும்
நினைத்திருந்தேன்.
 
மன்னிப்பு

எப்போதும் மன்னிக்கும்
இடத்தில் இருக்க எனக்கு
விருப்பமில்லை

பெயர்

என்ன பெயரென்று
தெரியாது
தவித்துக்கொண்டிருந்தேன்
எனினும்
நினைத்தது போலவே
வடமொழியில் உன் பெயரும்
அதன் பின்னர்
வழமைத்தமிழில் கூடவே
உன் தந்தையின் பெயரும் 





.


3 comments:

  1. வணக்கம்
    ஒவ்வொரு வார்தைகளையும் வைத்து கவிதை உருவாக்கிய விதம் மிக அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிலவை புரிவதற்கு நேரமெடுக்கிறது...
    சிலது சட்டெனப் புரிகிறது...

    புரிந்தவை ஒவ்வொன்றும் அழகு
    தொடருங்கள்

    ReplyDelete