Monday, June 4, 2012

அகத்தூண்டுதல்



எட்டிப்பார்க்க இயலாத ஒட்டகச்சிவிங்கிகள்,
தாவிக்குதிக்க இயலாத ஆனைகள்,
ஓடி வெற்றிகொள்ள இயலாத ஆமைகள்,
பறக்கவே இயலாத கோழிகள்,
தலையை எப்போதும் மண்ணுக்கு வெளியே
நீட்டி வைத்திருக்கும் நெருப்புக்கோழிகள்,
கூடவே தானும் இறந்து விட்டதாகக்
கருதிக்கொள்ளாத வாத்துகள்,
எப்போதும் விரைந்து செல்ல இயலாத நத்தைகள்,
அழகிய குரலுடன் அகவத்தெரியாத மயில்கள்,
திரும்பிப்பார்க்கும்படி மயங்கவைக்க இயலாத அழகற்ற குயில்கள்,
வீசின காற்று நின்ற பிறகு சுற்ற இயலாத காற்றாடிகள்,
பரந்து விரிவதை நிறுத்திக்கொள்ள இயலாத பிரபஞ்சம்,
தனது இசையைத் தம் காதுகளால் அனுபவிக்க இயலாத பீத்தோவன்,
காதல் என்பதே அறியாத உன் மனது.



.

6 comments:

  1. தனது இசையைத் தம் காதுகளால் அனுபவிக்க இயலாத பீத்தோவன்,
    காதல் என்பதே அறியாத உன் மனது.//

    அருமை அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete
  3. இயலாமைகள்தான்....எல்லாமே.காதலும் அப்படித்தான்.ஆனால் மனிதனின் இயலாமை பொறாமையாகவும் கோபமாகவும் மாறுகிறதே சின்னப்பயல் !

    ReplyDelete
  4. @ ஹேமா , ஹ்ம்...என்ன செய்வது ?!

    ReplyDelete