Saturday, February 18, 2012

என் ஆசிரியனைக்கொல்ல



எனக்கும் ஆசைதான்
என் ஆசிரியனைக்
கொல்லவேணுமென்று

என்ன செய்தாலும்
தவறு கண்டுபிடிப்பார்
எவ்வளவு சரியாக எழுதினாலும்
பிழை கண்டு சொல்வார்

நேரத்தாமதங்களை அவர்
ஒருபோதும் அனுமதித்ததேயில்லை
வீட்டுப்பாடங்களை முடிக்காமல்
வந்தால் முட்டி நிச்சயம் அடுத்தநாள்

ஒப்பிட்டு பேசியே
நாள் முழுதும் ஓட்டிடுவார்,
எரிச்சல் கிளம்பினும்
வாய் திறந்து
ஏதும் சொல்ல இயலாது

அரை மதிப்பெண்ணில்
தவறவிட்ட முதலிடத்தை
எப்போதும் சுட்டிக்காட்டுவார்

காற்றிறக்கிய மிதிவண்டியை
உருட்டிச்செல்லுமவரை
குறுகுறுப்புடன் பார்த்து மகிழ்வேன்
இருக்கையில் வேம்பின்
பிசினை ஒட்டி வைத்து
அவரின் கிழிந்த வேட்டியை
கண்டு மகிழ்வேன்

பிற நண்பர்களுடன் கூடி
கொஞ்சம் அசட்டுத்தைரியத்தில்
அவர் பெயரை கல்லறையில்
எழுதிவைத்தும் இருக்கிறேன்.

வாங்கிச்சரிபார்த்து
மதிப்பெண் இட எத்தனித்த
அவனின் நோட்டுப்புத்தகத்தில்
என் கவிதை
எங்கனம் வந்தது ?


.

8 comments:

  1. அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. கும்மாச்சி..

    எல்லோர் மனதிலும் இருக்கும் உணர்வுகள் தான்
    இந்தக்கவிதை...இவற்றைக்கடந்து யாரும் வந்திருக்க இயலாது...வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. சௌந்தர்

    மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு,,:-)))

    ReplyDelete
  4. விஜயா மேடம்

    இங்கயும் வந்தாச்சா..?! ;-))) ஆஹா..வாழ்த்துகளுக்கு நன்றி..இந்தக்கவிதையை எழுதினவுடன் அனுப்பலாமா இல்ல வேணாமாமன்னு ரொம்ப யோச்சிச்சேன்..பரவால்ல என்ன ஆனாலும் சரின்னு மனுஷ்யபுத்ரன் சாரோட உயிரோசைக்கு அனுப்பினேன் வந்தேவிட்டது,,,:-))))

    ReplyDelete
  5. வந்தாச்சு ராம்..உங்க ப்ளாக் follower இப்போ நான். நீங்க என்ன போட்டாலும் அது உடனே வருது என் ப்ளாக்கிற்கு. இது இவ்வளவு நாளா தெரியாம போச்சே.! பாலாவின் பக்கங்கள் பாலா தான் சொல்லிக்கொடுத்தார். இனி உடனே நொடிஃபிகேஷன் வரும்..நானும் உங்களோடு. :)

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி :-))

    ReplyDelete