Saturday, December 4, 2010

பிரியமான இசை

உறக்கத்தை ஊடுருவியது
உண்ண அமரும்போது
நினைவில் உறுத்தியது
பார்க்கும் அவள் வயது பெண்களை
எல்லாம் நினைவுறுத்தியது

விழிமூடிச்சாய்ந்து கிடக்கும் முகத்தில்
அவள் அப்போது உணர்ந்த
வலிகளை வெளியே வந்து
இப்போது அறிவிக்கும் குருதி
மனதை உறைய வைத்தது,

இந்நிலை எதிரிக்கும் வரக்கூடாதென
நினைக்கும் மனது
அறிவிடம் மன்றாடியது

வெறி கொண்ட அறிவிற்கும்
விவேகம் கொண்ட மனதிற்கும்
நடக்கும் போராட்டத்தில்
வெறியே வெல்ல வேண்டும்
என நினைத்தாலும்
விவேகமே முன் நிற்கிறது

பிரியமான இசையைப் பாடி,
கேட்டு ரசிக்கலாம்
கிடத்தி அல்ல.


.

3 comments:

  1. அருமையான, ஒரு எளிமையான கவிதை. மிக நன்று

    ReplyDelete
  2. பிரியமான இசையைப் பாடி,
    கேட்டு ரசிக்கலாம்

    ReplyDelete
  3. நன்றி அங்கிதா
    நன்றி வெறும்பய.

    ReplyDelete