என்னில் உன்னைப் பார்க்கிறேன்
புருவம் திருத்தினாய்
பொட்டு சரி செய்தாய்
சேலைத்தலைப்பை இழுத்து
சரி பார்த்தாய்
ஒற்றைத் தலை முடியை
முன்நெற்றிக்குத் தள்ளிவிட்டாய்
பிறகு என்னை விட்டு
சென்றுவிட்டாய்
என்னை உன்னில் பார்க்கிறேன்
குழந்தை தன்னைப்
பார்த்து தோழமையோடு
சிரித்தது, பின் அழுதது
நீர் வடிந்த முகத்தை
இடது கையால்
துடைத்துக் கொண்டது
பிறகு விலகிச்சென்று விட்டது
வேறொரு விளையாட்டு
பொம்மை தேடி
என்னை உன்னில் பார்க்கிறேன்
ஸ்டைலாக முடியைக்
கோதி விட்டாய்
ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்
தடவி பருவைக்
குறைக்க முயற்சி செய்தாய்
கூலிங் க்ளாஸை
மூக்கின் மேல்
சரியாகப் பொருத்திக்கொண்டாய்
பின் சீழ்க்கை அடித்தவாறே
விலகிச்சென்றாய்
என்னை உங்களில்
எப்போதாவது
பார்த்திருப்பீர்களா ?
கிடைக்கும் அந்த
வாய்ப்பு.. உங்களில்
ரசம் போனபின்.
.
புரியாமல் புரிகிறது கவிதை...
ReplyDeleteநன்றி வெறும்பய..!
ReplyDeleteஇரண்டாவது மற்றும் மூன்றாவது பத்தியில்
"என்னில் உன்னைப் பார்க்கிறேன் "
என்று படிக்கவும்...பிழை நேர்ந்து விட்டது..!