

ஊர்ல எல்லாப்பேரும் விக்றோம் விக்றோம்னு கத்திக்கிட்டிருந்தப்ப ஒருத்தன் மட்டும் மராட்டி பாட்டு கேட்டுக்கிட்டிருந்தான். யார்ரா அவன்..ஹிஹி நான்தான்..ஹிஹி.... ஷ்ரெயா கோஷல் (மறுபடி வந்தாச்சா.. ஹிஹி. வழியாத வழியாத... ) ‘ நட்டுக்கட்டு நட்டுக்கட்டு’ன்னு போட்டுத்தாக்கி இருக்காங்ணா. ஆஹா. பாம்பேல கொஞ்சம் வேலே பாத்ததுனால , அவா சங்கீதமும் கொஞ்சம் தெரியும். அபங் (அடிக்கிற சரக்கு இல்லை. அவாளோட க்ருஷ்ணா பாட்டு) நம்ம ஓ எஸ் அருண் கூட நன்னாப்பாடுவார். சரி அத விடுங்க. அது மராட்டி சங்கீதம் தான்.
எப்பவும் History TV18-ல் வரும் Ancient Aliens நிகழ்ச்சி தவறாமல் பார்ப்பது வழக்கம். ஏற்கனவே Crop Circles Alien Abduction எல்லாம் பார்த்துச்சலித்த எனக்கு இந்த ஒரு எபிஸொடு சுவாரசியமாகப்பட்டது. Bob Lazar இவர் Area 51 ல வேலை பார்த்தவர் என்று முன்னோட்டத்திலேயே குறிப்பிட்டது ஆர்வத்தை தூண்டியது.
சிறுவயது முதலே சின்னச்சின்ன ராக்கெட் செய்து அதை சைக்கிளில், படகில் என இப்படி இன்னபிறவாகனங்களில் சேர்த்துக்கட்டி வைத்து பயணிப்பது இவரது பொழுதுபோக்கு. நிறைய கம்பெனிகளில் வேலையும் பார்த்திருக்கிறார். Area 51 ல் அதுவும் S4 பணியிடத்தில் வேலைக்கென சென்றிருக்கிறார். அமேரிக்க மிலிட்டரியே இவரை கூட்டிக்கொண்டு போய் கொண்டு வந்து விட்டிருக்கிறது. Area 51 என்பது ஏலியன்களின் கூடாரம்.ஹிஹி.. அதிலும் S4 என்பது பணிமனை, உள்ளே ஈ/காக்கா/எறும்பு/பாம்பு கூட செல்லவியலாத இடம். அங்கு தான் இந்த மகான் பணி புரிந்திருக்கிறார். அப்டி என்ன வேல மச்சான்னு கேட்டா, ஏலியன்களின் ஏர்க்ராஃப்ட்டை ரீ இன்ஜினியரிங் செய்து அதன் சூக்குமங்களைக் கற்றுக்கொண்டு அம்பேரிக்கா மிலிட்டேரிக்கு அதே போல ஏர்க்ராஃப்ட்களைச் செய்து கொடுக்க வேணும்..ஹிஹி.. லேசுப்பட்ட வேலயா இது ??
பத்துப்பதினஞ்சு ஏலியன் ஏர்க்ராஃப்ட்கள் ஒண்ணு கூடிக்கிடந்தனவாம். அவர் கூறுகிறார். அதனுள்ளே சிறுகுழந்தைகள் போல உருவில் ஏலியன்கள் அமர்ந்து எதோ செய்து கொண்டிருந்திருக்கின்றனர். அப்படியாப்பட்ட ஒரு ஏர்க்ராஃப்ட்டை மீளுருவாக்க இவரின் புத்தி பயன்பட்டிருக்கிறது அம்பேரிக்க மிலிட்டேரிக்கு. அத்தனை பாகங்களும் தமக்கு அத்துப்படி போல தாளில் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறார். பின்னர் ஒவ்வொரு கட்டமாக எங்கனம் இந்த பறக்கும் தட்டு வேலை செய்கிறது என்று விளக்கமும் கொடுத்து நம்மை ஏங்க வைக்கிறார்.
Element 115 Moscovium என்ற தனிமத்தைப் பயன்படுத்தி ஏலியன்களின்
பறக்கும் தட்டுகள் ஒளியாண்டுகளை எளிதில் கடந்து செல்கின்றன என்கிறார். அவை எங்கு கிடைக்கும்?
ஹ்ம்.. அதற்கு பதிலில்லை. (விக்கிப்பீடியால என்னென்னமோ எழுதி வெச்சுருக்காங்யள்..ஹிஹி
) , யுரேனியம் தோரியம் இவைகளை விட மிகச்சக்தி வாய்ந்த தனிமம் அது. ஹெவில் ரேடியோ ஆக்ட்டிவ்.
ஒரு கைப்பிடி அளவு கொண்டு பல்லாயிரம் மெகாவாட்களில் மின்சாரம் மற்றும் அவை சார்ந்த
ஆற்றலை உருவாக்க இயலும். மேலும் இவை தற்கால
ராக்கெட்டுகளைப்போல புகையோ, இல்லை தீப்பிழம்புகளோ இல்லை அது போன்ற உப பொருட்களை தாம்
எரியும்போது உருவாக்குவதில்லை. முழுக்க முழுக்க
இது பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருமெனில் உலகமே இன்னொரு நூற்றாண்டை முன்னேறிப்பயணிக்கும். எதோ சிக்கல்கள் இன்னமும் இருக்கிறது போலிருக்கிறது.
சரி அதெல்லாம் விடுங்க. இப்ப என்ன பண்றார் நம்ம பாப் லாஸர்.
வேலை முடிந்ததும் சோலி முடிச்சுவிட எண்ணி, இவருக்கு நினைவுகள் ஏதும் திரும்ப வராமலிருக்க
எதேதோ மருந்து மாயங்களைக்கொடுத்து வலுக்கட்டாயமாக உண்ண வைத்து ( ஏலியன்களால் அபகரிக்கப்பட்டவர்
அனைவரும் இதையே கூறுவர், எதோ ஒரு பானம் அருந்தக்கொடுத்தனர், பின்னர் அங்கு நடந்த யாவும்
எத்தனை யோசித்தும் நினைவுக்கு வருவதில்லை என) அத்தனையையும் மறக்கடித்துவிட்டனர். இவரின்
மூளை கொஞ்சும் எடக்கு மடக்கு போலிருக்கு. எங்கயோ தட்டப்போக, தம்மை ஹிப்னாடிஸ சிகிச்சைக்கு
உட்படுத்தி அங்கு நடந்த நிகழ்வுகளை அப்படியே வெளிக்கொண்டு வந்து விட்டார். இதை அறிந்த
அம்பேரிக்கா, இவர் படித்த பள்ளி , வேலை பார்த்த இடங்கள் என ஒண்ணு விடாமல் போய் சான்றுகளை
அழித்துவிட்டன. இன்றைக்கும் தாம் பட்டம் வாங்கிய சான்றிதழைக் காட்டுகிறார் . இது எப்டி
சார் பொய்யாகும் என்று.. செம ‘சேமுசுபாண்ட்டு’ படம் மேரில்லா இருக்கு…
இவரை அப்போதே 1990களில் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து உண்மைகளை வெளிக்கொணர்ந்த டீவீக்காரா அப்புறம் இப்ப இந்த ஆவணப்படத்தை எடுத்த ஆவணக்காரா எல்லாரும் இந்தப்பச்சிளம் ஏலியன் பாலகனைப்பாருங்க என்று ஒரு படமாகவே எடுத்து வெளியே விட்டுவிட்டனர். படத்தின் பேர் ‘Bob Lazar Area 51 and Flying Saucers’ அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது. பார்த்து உய்யுங்கள் தோழர்களே..! #BobLazar

ரீச்சர் – இசையை ரசிக்கும் ஒரு போர்வீரன் , உவமையே ஒரு மாதிரி
இருக்குல்ல.? ப்ளூஸ் இசை (பெரும்பாலும் கறுப்பினத்தவரால் இசைக்கப்படும் ஒரு வகை இசை,
கேட்பதற்கு ஜாஸ் போல தோற்றமளிக்கும் ) யில் பெருவெற்றி பெற்ற ஒரு இசைக்கலைஞரின் ஊருக்கு
பயணமாக வருகிறான். அவரைப்பற்றி அறிந்துகொள்ள. சவரம் செய்துகொள்ள வரும் அவனை சலூன் வைத்திருக்கும்
ஒரு கறுப்பின முதியவர் , ஹ்ம் ஒரு வெள்ளையினத்தவன் , ஒரு ப்ளூஸ் இசைக்கும் ஒரு கறுப்பினத்தவனைத்
தேடி ஊரெங்கும் பயணித்து வந்ததோடல்லாமல் , அந்த இசையின் மேல் காதலும் கொண்டிருக்கும்
ஒரு வெள்ளையினத்தவனை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன் என்கிறார்.
இந்த அமேசான் ப்ரைம் சீரீஸில் எல்லாவினத்தவரிலும் நல்லவரும்
உளர், கெட்டவரும் உளர், கடைசி நேரத்தில் தம் உண்மை நிறங்காட்டும் பச்சோந்தியும் உளர்.
அடிப்படையில் இன்னவினத்தவன் மட்டுமே கெட்டவன் கேடுநினைப்பவன் எனக்காட்டாது அனைவரையும்
அவரவரின் இயல்பில் காட்டியது நன்று.
’ஆத்தாடி என்ன ஒடம்பு’ என்று சொல்லவைக்கும் உடல் வாகு. போர்வீரன்
என்றால் கண்ணைத்திறந்துகொண்டு சம்மதிக்கலாம். வீஎஃபெக்ஸ்’ஸெல்லாம் தேவையின்றி. நம்ம
ஊர்லதான் 70 வயது முதியவரை இன்னிக்கு நாளைக்கி என்று எண்ணிக் கொண்டிருப்பவரை புஜபலபராக்ரமசாலியாகக்காட்டி
நம்ம சோலிய முடித்துவிடுவர். கார் டிக்கிக்குள் நால்வரை கொன்று முடக்கி வைக்க முயற்சி
செய்து இயலாமல் போக, ஒவ்வொருவனின் கால்களை முறுக்கி அப்படியே உடைத்து செருகி வைக்கும்
காட்சி , ஹ்ம்… இன்னொரு அர்னால்ட். இதே இயல்பினால் ராணுவத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்
நம்ம ரீச்சர். ’You are too Violent’ என்ற முத்தாய்ப்புடன்.
பேசிப்பேசியே பாதி எபிஸோடுகளை முடிக்கின்றனர். இப்டி ஒரு
அர்னால்டை வைத்துக்கொண்டு புளிச்சமாவைப்போல வசனம் பேசியே கொல்லவெச்சா என்னதான் பண்றது..
அதான் ஸ்லைட் எரிச்சல். கள்ளநோட்டு கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு அரசாட்சி செய்கிறது.
இங்கிருந்து பணம் அடிச்சு வெனிஸூவேலா (அதானே பாத்தேன்…. இப்படியாப்பட்ட நாடுகள் தானே
ஹாலிவுட்டில் பேசப்படும்) வுக்கு அனுப்பி பின்னங்கிருந்து மீண்டும் அம்பேரிக்காவுக்குள்
புழங்க விடப்பட என வில்லன் கோஷ்ட்டி வேலை செய்கிறது. சரிக்குச்சரியாக அந்த போலீஸ் அதிகாரியாக
வருபவரும் அருமை. வழக்கம்போல ஒரு பெண்போலீஸ். அவாளுக்கும் நம்ம காட்டெருமை ரீச்சருக்கும்
..ஹிஹி.. அதெல்லாம் இல்லாம எப்பூடீ?... அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரேயொரு பெண்போலீஸ்.
அதுசரி.
ஃபேஸ்புக், இன்ஸ்ட்டா, ட்விட்டர் எதுலயுமே இவன் இல்லியே,
என்னா ஒரு கேரக்டரு என்று பெண்போலீஸ் கூறுகிறது. அப்பால இவர் ராணுவ அதிகாரி என்று கண்டுபிடித்து
சப்ஜெயிலுக்கு அனுப்பியவரை வெளியெ விட்றலாமேன்னு கொஞ்சுது.
சிறிதும் உணர்ச்சியே காட்டி விடக்கூடாதூன்னு டைரக்டர் சொலீட்டார்
போலருக்கு, நம்ம மகேசு பாவு’ படம் பார்த்து.. இருந்தாலும் ரீச்சர் அர்னால்ட்டை மிமிக்
பண்ண நினைப்பது தெள்ளெத்தெளிவு. காந்தஹாரில் வேலை பார்த்தார். அஃப்கானிஸ்தானில் அமைதி
நிறுவினார் என்று காந்தி ரேஞ்சுக்கு அடிச்சு ஏத்தறது தான் சகிக்கலை.
எட்டு எபிஸோடெல்லாம் பாக்ற அளவுக்கு சரக்கு ஒண்ணும் இல்லை. புதிர்களை அவிழ்க்கவே வேணாம். எல்லாம் நமக்கே நல்லாத்தெரியுது. மூணு இல்ல நாலு எபிஸொட்லயே முடிச்சி விட்றுந்தா புண்ணியமாப் போயிருக்கும்ணே … #ரீஈஈஈச்சர்.
இந்தப்பாட்டு
எப்பவுமே பெங்களூர் ரேடியோ இண்டிகோ 91.9ல ஒலித்துக் கொண்டே இருக்கும், என்ன
பிரச்னைன்னா பாடியவர்கள் பெயர்,குழு, நாடு எதுவுமே சொல்றதே இல்லை. பெரும்பாலான
பாடல்களைக்குறித்த விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதேயில்லை. CountDown-ல் மட்டுமே
இது போன்ற வியத்தகு விடயங்கள் பகிரப்படும்..ஹிஹி.. நானும் ரொம்பத் தேடிக்கிட்டு
இருந்தேன். இடையிடையே வரும் ஆங்கிலச் சொற்களை
வைத்து. ஒருவழியாக பிடிபட்டது Pretty Savage – from – BlackPink Girl Band – Ko-PoP..!
ஆஹா,,,!
வழக்கமா ’கோ-பாப்’
கொரியன் பாப்- என்றாலே அது BTS தான் அவா மட்டுந்தான் அப்படீன்னு நினைப்பேன். (Monsta
X-ன்னும் ஒரு குழு இருக்கிறது Boy Band) அதுவும் சரியாகத்தானிருக்கும் பல
சமயங்களில். ஏன்னா VH1-ல அவங்க பாடலைத்தவிர வேறே எந்த குழுவினரும் பாடலும் அத்தனை
கவர்வதில்லை. இன்னமும் Non Matured Babies போலவே மற்றவர்களின் பாடலும் இருக்கும். அதுக்கும்
மேலே அது Girl Band-ன்னா கேக்கவே வேணாம். ஏயப்பா ஏசப்பான்னு ஓடீரலாம் போலத்தோணும்.
DO-RE-MA என்ற அடிச்சரடு அங்கிருந்து வந்தது தான் எனினும் அவசரக் கோலத்தில்
அள்ளித்தெளிக்கும் இந்த ‘காளான்பாப்’கள் பாட்டுக்கேட்கும் மூடையே கலைத்து விடுகின்றன.
கொஞ்சம் முன்னேறி இப்பல்லாம் Mic Drop
பாடல் புகழ் BTS, அமேரிக்காவின் பிரபல பல குழுக்களுட்ன் சேர்ந்து இசைக்கவும்
ஆரம்பித்துவிட்டனர். அதிலொன்று Cold Play உடன் பாடிய My Universe , மற்றுமொன்று
எனக்கு மிகவும் பிடித்த பாடகி Halsey உடன் பாடிய Boy with Luv’ இப்படி பல
சொல்லிக்கொண்டே போகலாம்.
பியானோக்கட்டைகளை
அழுந்த துடைத்தெடுக்கும் ஒலியுடன் ஆரம்பிக்கும் பாடல். இது அவங்க இசையா என்று
கேட்டால் இல்லை என்று தான் சொல்லணும். குறுகிய காலத்தில் புகழ் பெறவேணும்,
மில்லியன் டாலர்ஸ் வேணும், ஹாலிவுட் ஹில்ஸில் ஒரு இல்லம் என்றபடியே எல்லா கொரியர்களும் நினைக்க ஆரம்பித்ததின்
விளைவு. தடம் புரளும் இசை. இப்ப சமீபமாக ஒரு இசைக்கலைஞர் பெண்மணி தற்கொலை
செய்துகொண்டார். பெரும்பாலும் மூடிமறைக்கப்படும் காரணங்கள். அதீத கடன் தொல்லை,
மேற்குலகைப்போல வாழ நினைக்கும் இளைஞர் கூட்டம். முக்கியமாக தென் கொரியாவில் கலைக்குப்
பஞ்சமில்லை. ஒரு பெரிய ஆர்ட்டிகிளே வந்தது
Wire தளத்தில். அது
போகட்டும்.
சரி
இந்தக்குழுவின் உறுப்பினர்களெல்லாம் ஆரார்னு பார்க்கலாம்னு போனா எல்லா முகமும் ஒரே
மேரி இருக்கி... ( யார் இசைப்பது, யார் எழுதுவது, யார் நடனமைப்பது என்றெல்லாம்
பார்ப்பது வழக்கம் Main Vocalist, Song Writer, Dance) .அதான் ப்ரச்னையே இந்த
கொ-பாப் எழவுல... இன்னி வரைக்கும் BTSல இருக்கிறவனுங்க ஒருத்தன் பேரையும் பார்த்தா
என்னால சொல்லவே ஏலாது... ஹிஹி...
இந்தப்பாடல் இசை ப்ளெயின் பாப், கொஞ்சம் EDM, கொஞ்சம் Rap இன்னும் கொஞ்சம் மெக்ஸிகன் பீட்ஸ், அதோடு கூடிய புல்லாங்குழல் ( இதற்கு ஒரு பெரிய ஸ்கோப்பே இருக்கிறது பாடலில்) இப்படி கொஞ்சம் கலவையான சங்கீதம். Savage-உம் Pretty-யாக வாய்ப்பிருக்கிறதா?! J மாட்டுக்கொம்பு மேலே ஒரு பட்டாம்பூச்சி போல .ஹிஹி பாடல் வரிகள்லாம் ..ஹிஹி.. அதெல்லாம் நமக்கெதுக்கு.. ஜஸ்ட் ம்யூசிக் கேட்டா போதும். ராகம் அற்புதம். பாடலின் அற்புத தருணத்திற்காக நீங்க 02:53 வரை காத்திருக்க வேணும் அதான்.. Finishing தான் பிரமாதம். . விரல் விட்டு சுண்டிக்கொண்டே கேட்பேன் இந்த இடத்தை.. அதற்கான அச்சாரம் 02:29-லேயே ஆரம்பித்து விடும். Kill them with Smile போல இந்த காட்டுமிராண்டித்தனமான Savage கொஞ்சம் Pretty தான்.. இந்த இடத்தின் புல்லாங்குழல் கொஞ்சம் ஹிஸ்பானியா (நம்ம யுவன் ஆரண்ய காண்டத்தில் முயற்சி பண்ணினது) சரி பாட்டுல அந்த ப்ளாக் ஓவர்கோட் ட்ரெஸ் போட்ருக்கிற பொண்ணையே பார்த்துக்கிட்டு இருக்காம முழுப்பாட்டையும் கேளுங்க..பாருங்க.. ஹிஹி.. # PrettySavage