கேங்க்ஸ்ட்டர்ஸ் படம்னாலே அது டரண்டினோ தான் எனக்கு. அப்பால யாரும் அவ்வளவு குரூரமா வன்முறையைக் காண்பித்தல் அதிலயும் அந்தந்தக் காட்சி/கதைகளுக்கு தகுந்தவாறு கச்சிதமாக பொருந்தும். இவ்வளவு ரத்தக்களரி ஏன்னு ஒருமுறைகூட கேட்க வாய்க்காது. அதுதான் க்விண்டின். லோகேஷ் கனகராஜ்/கார்த்திக் சுப்ராஜ் படங்களில் வன்முறையில் ரத்தக்களரி தெறிக்காது ஆனாலும் அடிக்கருத்து அது தான். வெற்றி மாறன் படங்களில் அது ரொம்ப ஸென்ஸிபிளாக தொடப் பட்டிருக்கும். ராம் கோபால் வர்மா படங்கள் தான் முழுக்க முழுக்க ரத்தக்களரியில் குரூரம் தாங்கி வெளிவந்தவை. விட்டா சீட்ல ஒக்காந்திருக்க நம்ம மேலயும் குருதி தெறிச்சாலும் தெறிச்சுடும்.அந்த வர்மா’வின் வரிசைல தான் இந்த ராயனை வைக்கவியலும்.
தங்கச்சிய காப்பாத்துறதுக்காக எத்தனை தூரம் வேணாலும் போவார் தனுஷ். அதானே?!. குடும்பத்த காப்பாத்துறதுக்காக எத்தற தூரம் வேணெங்கிலும் ஞான் போகும்னு பறயும் ஜோர்ஜ் குட்டி (த்ரிஷ்யம்) மாதிரி தான் இதுவும். நிறையக்குறைகள் இருக்கு. இருப்பினும் படத்தோடு ஒட்ட முடிகிறது. பழிக்குப்பழி, பலிக்குப்பலி அதான்.
குடும்பமே குண்டாஸா இருக்கமாதிரி எடுத்த மொதப்படம் இதாண்டா. தங்கச்சி கூட லேடீ குண்டாஸு. ! ஹிஹி. ஒரு சொடுக்கில் switching sides-ங்கறது கேங்ஸ்ட்டர்ஸ் படத்துல இருக்கிற சமாச்சாரம் தானே.. இருந்தாலும் வலுவான காரணம், ஆடியன்ஸை சமாதானப்படுத்தும் விதமா சொல்லாம சொதப்பினது தான் நம்ப ஏலவில்லை. தம்பிகளே ராயனுக்கு எதிரா போறாங்கன்னு காட்டினது தான் சோகம். தெண்டச் சோறுன்னு திட்டினா உடனே கத்தி எடுத்து வீசிறுவாராமா ?...அட ராமா...இல்ல அட ராயா... ஹிஹி..
ரெண்டு ஸ்டண்ட் சம்மதிக்கணும். அந்த துரை அண்ணனப்போட்றது, சுற்றுக்கட்டு தாழ்வார வீட்டில குதிச்சு எந்திரிச்சு க்ரில் தலைல தட்றா மேரி தாவி அடிச்சு தொம்சம் பண்ற சண்டை பிரமாதம்டா. அப்புறம், ராயன ஆஸுபத்திரில கிடத்தி வெச்சிருக்கப்ப நடக்கிற சண்ட. அடேயப்பா. லேடி கேங்ஸ்ட்டர் துஷாரா விஜயன். உள்ளேன் ஐயா. சரி அதேல்லாம் இருக்கட்டும். துஷாரா வெட்ட வெளில ஒரு மரத்தை வெட்டோ வெட்டுன்னு வெட்றார். பயிற்சி எடுக்கிறாராமாம்.. ஆனா அந்த மரம் முறிஞ்சு விழவே மாட்டேங்குதே.? அது மரமா இல்ல காங்க்ரீட் கல்லா... ஹிஹி.
பின்னணி இசைக்கு ரஹ்மான் பாய் யாராவது அஜீஸ்ட்டெண்டு கிட்ட குடுத்துட்டாரா? ஒரே மேரி ம்யூஸீக். ஸிக். சூரசம்ஹாரம், ராம்லீலா மைதானங்கள்ல அடித்து ஒலிக்கப்படும் இசை. ம்ஹூம்.. எடுபடவே இல்லை. ஐநாக்ஸ்ல 7.1 சவுண்டு லவுடு (ஹிஹி) ஸ்பீக்கர்லாம் வெச்சித்தான் இருக்கான். சொம்மா அதிர வேணாமா ?...பின்னால காளி படம், ராவணன் படம் எல்லாம் வரைச்சு வரைச்சு வேற வெச்சு ரோதனை பண்றாங்ய. கொஞ்சம் உழைச்சு தீம் ம்யூஸீக்கெல்லாம் வெச்சு பட்டயக் கெளப்ப வேணாமா பாய்...ஓ புவர் பாய்! இருக்கத தான குடுப்பாரு.. என்னா தான் செய்வார் பாவம். ராசைய்யா இது மேரி அடிதடி/குருதிக்களறி படங்களுக்கு இசைப்பதில்லைன்னு முடிவெடுத்து ஒதுங்கீட்டுண்டார். பாயும் அதயே ஃபாலோ பண்ணலாம்.
சரி துரை அண்ணன நீ தானே போட்ட ? எப்டி ஒத்த ஆளா போட்ட அவன ? என்று விடாமல் கேட்கும் எஸ்ஜேசூர்யா. வந்தான் சுட்டான் செத்தான் சார்ங்கற மேரியே வசனம் பேசுனா ஒரே மேரி ஆக்ட்டிங் குடுத்தா, ரீப்பீட்டு. போர். இளவயது செல்வராகவன் குழந்தை மாதிரி முகம். ஆஹா. அண்டர் ஆக்ட்டிங். பிரமாதம்ணெ. பிரகாஷ்ராஜ் என்ன பண்ணீருக்கார் அவர்கிட்டஏ கேப்போம்.
வன்முறை/ரத்தக்களரி ஜானர் ரசிகர்கட்கு மட்டும் ராயா... ஓ ராயா. !