காஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர்ஸ் பண்ணக்கூடிய ஆள். அந்த ராஜநாயக் பார்ட் அசத்திட்டேள் போங்கோ.உடல்மொழி அருமை. குரல் தான் கொஞ்சம் மாற்றி பேசிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை! காமெடி பார்ட் அவர் ஏற்கனவே செய்தது தான் ஒன்றும் புதிதில்லை.பக்காவா ப்ளான் பண்ணி பேய்,பிசாசு எல்லாம் செட்டப் பண்ணீன்னு கலக்குறார். நிறைய இடங்கள்ல அந்த தலைல சுத்தி துணி கட்டிக்கிட்டு கண்ணில கருவளையம் வெச்சிக்கினு வரும்போது இயக்குநர் பாஇரஞ்சித் மாதிரியே இருக்கார். எனக்கு மட்டும் தான் தோணுதா இல்லை எல்லாருக்கும் தானா ?.
ஹிஸ்டாரிக்கல் பார்ட்டுக்கு டீம் நிறைய வேலை பார்த்துருப்பாங்க போலருக்கு, உழைப்பு அபாரம். ஏதோ ஃபேன்டஸி படம் மாதிரி இல்லாம ஒவ்வொரு காட்சியும் இழைக்கப்பட்டிருக்கிறது. அலீஸ் இன் வொன்டர்லேன்ட் மாதிரி இருக்கும்னு நினைத்து ஏமாந்தேன். வியூகம்,அரண்மனை,போர்க்காட்சிகள் எல்லாம் அபாரம்.எதுவும் எங்கும் அட்டை போல பல்லிளிக்கவேயில்லை. தேர்ந்துட்டானுடே.
ஹிஸ்டரிக்கல் பார்ட்ல கேரக்டரைசேஷன்லாம் கரீபியன் பைரேட்ஸ் போல தலையற்ற உடல்கள், அவ்வளவு பெரிய சான்டிலியர்ஸ்னு பிரம்மாண்டம். இப்பல்லாம் இந்த சிஜி பண்றது ஈஸி போலருக்கு, பொசுக்கு பொசுக்குன்னு பீரியட் படம் எடுத்து விட்டுர்றானுவ.ஹிஹி. ரத்னமகாதேவிய பக்கத்து நாட்டின் இளவரசன் குதிரையில் தூக்கிச்செல்லும் காட்சிகள், அதைத்தொடரும் சண்டைக்காட்சிகள் , வசனம் எல்லாமே அருமை. ஹ்ம்.. பாஜிராவ் மஸ்தானி ..ஹிஹி..ஞாபகம் வருது. விவேக் ரொம்ப நாட்களுக்கு பிறகு நிறைவான வயதுக்கேற்ற வேடம். அந்த பாட்டி இன்னாமா ஆக்ட் குடுக்குதுங்ணா. ரிமொட் கன்ரொல் வெச்சிக்கினு நாய்ச்சங்கிலிய சுத்தவிடுது.
சந்தோஷ்க்கு செம தீனி, அவர் ஏற்கனவே வில்லா' படத்துல ட்ரை பண்ணினது தான். அது கொஞ்சம் லோ பட்ஜெட் ,இங்க அளவுக்கு அதிகமாவே பட்ஜெட். இருந்தாலும் அதுல ஒரு பியானொ தீம் ம்யூஸிக் பண்ணீருப்பார்.அரண்டு போயிருவோம் இங்கயும் அதே மாதிரி அரண்மனை தான் ஆனாலும் இங்க தீம் ம்யூஸிக்னு ஒண்ணும் இல்லை. இருப்பினும் அடிச்சு மெரட்டுறார். கார்த்தி பாடும் முதல் பாதியில் வரும் பாடல் திக்கு திக்கு சார் பாடல் , நிக்கி மினாஜ் ( ஹிஹி...அவாளேதான் ) இன்ன பிற ஹிப் ஹாப் தோழர்கள் கூட பாடிய இந்தப்பாடல் தான்.. David Guetta - Hey Mama ft Nicki Minaj, Bebe Rexha & Afrojack பாடல் காட்சி அமைப்புகள், ஆடல் பாடல், மற்றும் லொகேஷன் எல்லாம்.அதேதான். பாருங்களேன். ஆனாலும் சந்தோஷோட ட்யூன் மட்டும் வேற நல்ல வேள.."லெட்சம் பெரியார் வந்தாலும்" ஹிஹி.. ஆனாலும் ஒரு பாட்டும் வெளங்கல. கொஞ்சம் க்ளாஸிக்கலா ட்ரை செய்த நயன்தாராவின் பாடல் மட்டும் கேட்கலாம் ரகம்.
.
No comments:
Post a Comment