புழு தின்னத்தொடங்கும்
சடலத்தின் நாற்றம்
எனக்குள்ளும் இருக்கிறது
சடலத்தின் நாற்றம்
எனக்குள்ளும் இருக்கிறது
-
இரண்டு நிலவுகள்
இருக்கும் வானில்
ஆதவனுக்கு வேலையில்லை
இருக்கும் வானில்
ஆதவனுக்கு வேலையில்லை
-
அவனைப் பைத்தியம்
என்று நினைக்கவேண்டாம்
அழிந்து கொண்டிருக்கும் அவன் மொழியை
தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடும்
என்று நினைக்கவேண்டாம்
அழிந்து கொண்டிருக்கும் அவன் மொழியை
தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடும்
-
ஒரு சகமனிதனுக்குரிய
மரியாதை
கிடைத்தால் மட்டும் போதும்
வாழ்ந்துவிடலாம்
மரியாதை
கிடைத்தால் மட்டும் போதும்
வாழ்ந்துவிடலாம்
-
இந்த வெய்யில் சுற்றிவந்து
என் அடுத்த ஜன்னலைத் தொட
இன்னும் ஆறுமாத காலம் பிடிக்கும்
என் அடுத்த ஜன்னலைத் தொட
இன்னும் ஆறுமாத காலம் பிடிக்கும்
-
என் நனவிலி மனதின்
திறவுகோல்
உன்னிடம் இருக்கிறது
திறவுகோல்
உன்னிடம் இருக்கிறது
-
மணற்கடிகாரத்தை
மீளத் திருப்பி வைக்கத்தான்
வேண்டியிருக்கிறது