இவற்றிற்கு உள்ள வால்களை மட்டும்
வைத்துக்கொண்டு இவை என்னென்ன செய்யும்?
அவையும் சுருண்டே கிடக்கின்றன
சிலிர்க்கப்பிடரி மயிரும் இல்லை
கால்கள் என உடலில் எங்கும் காணப்படவில்லை
இருந்திருப்பினும் அவை கடலின் பெருத்த அலைகளில்
அவற்றைப் பயன்படுத்த இயலாமலே போயிருக்கும்.
நீருக்குள் புழுதிகிளப்ப இயலாமை
குறித்து விசனப்படுமா தனக்குள்..?
கடலின் அலைகளிலும் அதன் அலைக்கழிப்பிலும்
தம்மை மனம் போன போக்கில் செலுத்திக்கொள்ள
இயலாமையும் அதற்கு ஒரு காரணம்.
சதுரங்கக்குதிரை போல யாரேனும் தம்மை
செலுத்தக்காத்திருப்பது போலவே அவை
எப்போதும் தோற்றமளிக்கும் தானாக எதையும்
செய்ய இயலாமல்.
இந்தக்குதிரையின் சக்தி அறிந்தவர் யார் ?
எதையும் உணராமல்
இந்த சீசாவினுள்
அடங்கிக்கிடக்கிறது.
இன்னொரு அலையையும்
அதன் அலைக்கழிப்பையும் எதிர்பார்த்து
என்னினம் போலவே.
வைத்துக்கொண்டு இவை என்னென்ன செய்யும்?
அவையும் சுருண்டே கிடக்கின்றன
சிலிர்க்கப்பிடரி மயிரும் இல்லை
கால்கள் என உடலில் எங்கும் காணப்படவில்லை
இருந்திருப்பினும் அவை கடலின் பெருத்த அலைகளில்
அவற்றைப் பயன்படுத்த இயலாமலே போயிருக்கும்.
நீருக்குள் புழுதிகிளப்ப இயலாமை
குறித்து விசனப்படுமா தனக்குள்..?
கடலின் அலைகளிலும் அதன் அலைக்கழிப்பிலும்
தம்மை மனம் போன போக்கில் செலுத்திக்கொள்ள
இயலாமையும் அதற்கு ஒரு காரணம்.
சதுரங்கக்குதிரை போல யாரேனும் தம்மை
செலுத்தக்காத்திருப்பது போலவே அவை
எப்போதும் தோற்றமளிக்கும் தானாக எதையும்
செய்ய இயலாமல்.
இந்தக்குதிரையின் சக்தி அறிந்தவர் யார் ?
எதையும் உணராமல்
இந்த சீசாவினுள்
அடங்கிக்கிடக்கிறது.
இன்னொரு அலையையும்
அதன் அலைக்கழிப்பையும் எதிர்பார்த்து
என்னினம் போலவே.
.