'பட்டான்’ நல்லாதானப்பா இருக்கு. ஏன் இப்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு கழுவி ஊத்துனாங்ய..?! ம்.. புரியலை. என்ன அண்டர்கவர் ஏஜண்ட். பிடிபட்டால் அப்படியே அரசாங்கம் கை கழுவிவிடும். ஒரு ஆங்கிலக்கதையில் சிறுவர்களை புகைக்கூண்டு வழியாக கீழிறக்கி வீட்டிலுள்ள பொருட்களைத் திருடிக்கொண்டு வரப்பணிப்பர், பிடிபட்டால் மேலிருந்து விடப்பட்ட கயிறு அப்படியே அறுபடும். கீழே இறக்கி விட்டவன் ஓடிவிடுவான். சிறுவனுக்கு நல்ல மொத்து பின்னர் பாலர்சிறை வாசம். அதே தான் இங்கயும். விஎஃபெக்ஸ் எஃபெக்ட்டெல்லாம் பிரமாதம், அதுவும் பாலிவூட் பாதுஷாவின் உடம்பில் பழனிப்படிக்கட்டுகள் கண்கூடு..ஹிஹி.
ஸைஸ் ஸீரோ ருபைய்யா, அதான்யா டீபிக்கா, யக்கா என்னமா பொரண்டு பொரண்டு அடிக்கிது.. இந்த ஹாலிவூட் படத்துலல்லாம் எம்புட்டூதான் அழகுப் பதுமையா இருந்தாலும் பெண்டு கழட்டீட்டு தான் விடுவாங்ய சண்டைக்காட்சீல.. உமா துர்மன் பாருங்க கில் பில் பார்ட்டூ 1 அப்பால பார்ட் ட்டூல...எல்லாத்துலயும் அதகளம். ’எந்த நேரத்திலும் ஏமாத்துவா’ன்னு டீப்பிக்கா கண்ணுலெயே தெரியுது.ஒண்ணும் புதிதில்லை.
டைகர் இஸ் கமிங். ஆரூப்பா அந்த டைகரூ.. அட நம்ம பஹில்வான் பாஹிஜான் சல்லுமான், இன்னமுந்தான் ஒடம்ப ’வீர்கல்தி’ (ஹிஹி அது வீர்கதி) ல வெச்சிருந்தாப்லயே மெயிண்டெய்ன் பண்றான்யா. ட்ரெயின் ஸ்டெண்ட்டெல்லாம் முடிஞ்சு ஒரு வழியா தண்டவாளத்துல உக்காந்து ரெண்டு பேரும் பேசீண்டுருப்பா. ஆச்சுய்யா முப்பது வர்சம். வேற எவனாவது கண்ல படுறானா? ஹ்ம். அப்டீன்னு பாதுஷா கேக்க, டைகர் ஓசிச்சு ஓசிச்சு இல்ல, அவன் செய்வான்யா ( எனக்கு தோணினது ரண்வீர் சிங்- அதான் டீப்பிக்கா ஹஸ்பெண்டூ) ..இல்ல இல்ல அவனாலல்லாம் செய்ய ஏலாது அப்படீன்னும் ரெண்டு பேரும் பேசிப்பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாம, எல்லாம் நம்ம தாண்டே செய்யணும், வேற ஒருத்தனும் செய்ய லாயக்கில்லைன்னு முடிக்கிறா..ஹிஹி. எல்லாம் நம்ம தலேலேஏழுத்து.. ஹிஹி.
கதை இரண்டு இஸ்லாமியர் சேர்ந்து இந்திய நாட்டை தம்முருவில் இருந்து மாறியிருக்கும் ஒரு இந்து விரோதியிடமிருந்து காப்பாற்றும் அடிச்சரடு.. ஹ்ம்.. சரி ரொம்ப பேச வேணாம். ஃபைன் கியின் போட்டு விட்டாலும் விட்றுவாங்ய..நமக்கு எதுக்கு வம்ப்பூ..
எனக்குப்பிடிச்ச ஷாரூக்’னா அது ‘ராஜூ பன் கயா ஜெண்டில்மேன், யெஸ் பாஸ், பாஸீகர்’ தான். ’தில் ஸே’ கூட சேத்துக்கலாம். இந்த மாதிரி ஜேம்ஸ்பாண்டூ வேலேல்லாம் செய்யறதுக்கு கொள்ளப்பேர் இருக்காங்ய, நல்லா கரண கரணயா காலும் கையும் ஒடம்பும் வெச்சிக்கிட்டு, இதெல்லாம் எதுக்கு ஷாரூக்குக்கு. ஹ்ம். இங்கு ஹேர்ஸ்டைல், உடல்மொழி எல்லாம் மாற்றிக்கொண்டு அலையும் பாதுஷா, ரஷ்யாவில் ஓட்டல் அறையில் தான் யார் என்பதை டீப்பிகாவிடன் தெரிவிக்கும் காட்சியில் மட்டும் எனக்குப் பிடித்த ஷாரூக். நீங்களும் பாருங்க.
55 is better than 56.... haahaaa....
ஆயிரம் கோடிப்பே....ஹிஹி.. #பட்டான்