உயிரோசையில் எனது கவிதை.
வாய்க்காலில் கட்டுக்கடங்காத
பிணங்கள்,
அலையடிக்கும் அலைக்கற்றையின்
எண்ண முடியாத கணக்குகள்,
அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென
அடித்துப்புரண்டுகொண்டிருக்கும்
கொரில்லாக்கள்,
காட்டிக்கொடுப்பதையே
தொழிலாகக்கொண்டு
சமாதானப்போர்வைக்குள்
தன்னை முடக்கிக்கொண்ட
முன்னாள் போராளிகள்,
டிஜிட்டல் பேனரில்
சிரிக்கும் எந்திரன்,
என
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு
சும்மா தான் இருந்தார்
மோட்டர் சைக்கிளில்
பயணித்தவாறே.
சே'
எனது டீஷர்ட்டில்
.