Saturday, April 22, 2017
Sunday, April 16, 2017
மலைகளில் என் வானவில்
தற்காலிக மனநிலையில்
எடுத்த
உறுதியான முடிவு
என் காதல்
–
வானவில்லின்
மறுபாதி
அவள்
–
பிடிக்காத
பாடலின் வரிகள் போல
சிலசமயங்களில்
மாறிவிடுகிறாய்
–
எழுதிய
நான்கைந்து வரிகளுள்
எது கவிதை வரி என்பது
நீ வாசிப்பதில் இருக்கிறது
–
தவறி விழுந்த இலையை
காடு சென்று சேர்க்க
அலைகிறது காற்று
–
ஏதேனின் தோட்டத்தில்
கிடைப்பதை
என் வீட்டுத்தோட்டத்தில்
கண்டெடுத்தேன்
–
எழுத மறந்த வரிகள்
இன்னும் கவிதையாகத்தான்
இருக்கின்றன
–
மாற்றம் என்றால்
கம்பளிப்பூச்சியிலிருந்து
வண்ணத்துப்பூச்சி போன்றதாக
இருக்கவேண்டும்
–
சிமணி சொன்னாரென்று
கையைக்காலாக்கி
நடந்து செல்கிறேன்
கால்களை என்ன செய்ய ?!
–
கிளிகளைப்
பிடித்துக்கொண்டுவருபவனுக்கு கூட
பூனைகளிடம்
அத்தனை பரிச்சயமில்லை
–
சோளக்கொல்லை பொம்மையும்
மழையை ரசிக்கிறது
கைகளை விரித்தபடி
–
எல்லாச்சாலைகளிலும்
நான் பயணி
அத்தனை நதியிலும்
என் ஓடம்
–
எல்லாக்கோடுகளும்
சிறிதாகி விடுகின்றன காலம் கடக்கும்போது
அருகில்
இன்னொரு பெரிய கோட்டிற்கு
எவ்விதத்தேவையுமின்றி
மலைகள் இதழில்
.
Subscribe to:
Posts (Atom)