கடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது
புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ
ஒண்ணு மிஸ்ஸிங் என்ற எண்ணம் கேட்பவர் மனதில் எழாமல் இல்லை. ஏழு பாடல்கள், வழக்கமாக
ரஹ்மானின் ஸ்டைலில் இரண்டு பாடல்கள் ஒன்று சக்திஸ்ரீ , இன்னொன்று விஜய்
பிரகாஷ்/சின்மயி பாடியது. மற்ற பாடல்கள் ஒன்றில் கடல் ராசா ‘அரேபியன் டச்’,
இன்னொன்று ‘போர்த்துக்கீஸிய டச்’சில் அமைந்த I love Africa , கொஞ்சம் ஹிப் ஹாப் கலந்து, என அள்ளித்தெளித்த கோலமாக ஒரு
முழுமையான ஆல்பமாக இல்லாது ஒவ்வொன்றும் தனித்தனியே நிற்கிறது. 23 வருடக்களைப்பு
எங்கும் தெரிகிறது பாடல் முழுக்க. ரஹ்மான் என்ன செய்தாலும் ரசிப்போம் என்ற ரசிகர்களுக்கென
வந்திருக்கும் ஆல்பம் இது :) கிட்டத்தட்ட ‘கடல்’ படம் போலவே கதைப்பின்னணி
கொண்ட ஒரு படத்துக்கான இசை, அதனால இங்கும் அதன் பாதிப்பு வெகுவாகவே தெரிகிறது
I love Africa - Mysterious Girl
எதோ கார்ப்போரேட் நிறுவனங்களுக்காக
விளம்பரத்துக்கென செய்து கொடுத்தது போல தோற்றமளிக்கும் இந்தப்பாடல். ரஹ்மானுடன் ப்ளேஸ்ஸும் சேர்ந்து
பாடியிருக்கிறார். ஹிப் ஹாப், கொஞ்சம் ஜமைக்கன் உடன்
போர்த்துக்கீஸிய டச்’சுடன் வந்திருக்கும் பாடல். Peter Andre வின் Mysterious Girl ஞாபகத்துக்கு வந்தால்
நான் பொறுப்பல்ல.! ரஹ்மான் உலகெங்கும் போய் இசை அமைக்கிறார் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சான்று. இப்பல்லாம் Blaze நிறைய பாட்றார் தமிழ்ல!! :)
இன்னும் கொஞ்சம் நேரம் - சண்டக்கோழி
கொஞ்சம் Folklore
ஆக இருக்கட்டும்
என்று , ஆய்த எழுத்தின் “சண்டைக்கோழி”யை கொஞ்சம் மாத்தி தட்டி மெருகேற்றி இங்கு
“இன்னும் கொஞ்சம் நேரம்” ஆக இசைத்திருக்கிறார். திரும்பக் கேக்கணும்னு தோணவைக்கும் ஒரே
பாடல் இது. அருமையான மெலடி...3:14 ல் ஆரம்பிக்கும் வயலின் மனதுக்கு இதமாக
ஒலிக்கிறது. பெர்ஃபெக்ட் தமிழ்ப்பாட்டு. இப்டி சொன்னாத்தான் எல்லாருக்கும் புரியும் :) இன்னும் ரஹ்மான் அந்த
அக்கார்டியன் ஒலியிலிருந்து மீளவேயில்லை போலிருக்கு, பாடல் முழுக்க நிறைந்து
ஒலிக்கிறது. இருப்பினும் பழைய பாடல் என்ற தோற்றத்தை உண்டு பண்ணுவது
இந்தப்பாடலுக்கு ஒரு பெரிய குறை.
கடல் ராசா – அரேபியன் ட்ரீட்
“எலே கிச்சான்” American
Country Song மாதிரி இருக்குன்னு
எல்லாரும் புடிச்சு இழுத்துவிட்டதுல , அந்தப்பக்கமே போகம, கொஞ்சம் பக்கத்துல
இருக்கிற அரேபியாவிலருந்து பாட்டு கொண்டுவந்திருக்கார் இந்த முறை. பல்லவியில் சுண்டியிழுக்கும் பாட்டு , சரணங்களில்
சலிப்பை வரவழைக்கிறது. யுவனால் எட்டமுடியாத பிட்ச்’களை எட்ட வைக்கும் முயற்சி,
அதனாலேயே என்னவோ ரஹ்மானும் சேர்ந்தே பாடியிருக்கிறார் பாடலில் பல இடங்களில். ஷெனாய் கொண்டு ஆரம்பிக்கிறது
பாடல். இந்தக்கொலவெறி வந்ததிலருந்து எல்லா இசையமைப்பாளர்களுக்கும் மத்தளம், நாயனம்
வைத்துக்கொண்டு ஏதேனும் செய்து விட வேண்டும் என்று ஒரு ஆசை. அதையே இங்கும்
பூர்த்தி செய்திருக்கிறார். அரேபியன் ட்ரீட்டில் நம்ம ஊரு நாயனமும் மத்தளமும்.
விண்ணைத்தாண்டி வருவாயா’வில் அந்த Marriage Songக்கென வரும் Interlude ல் இதே போல ஆனந்தராகத்தை வாசித்திருப்பார். ஹ்ம்...எல்லாம்
ரிப்பீட் ஆகுதே ரஹ்மான் ஏன்...?!
யுவன்
ஆரம்பிப்பது ஏதோ முருகன் பக்திப்பாடல் போல, ஐயா ஐயா என்றே தொடங்குவது (அவரே ஒரு
பாட்டு போட்ருக்கார் , பில்லா-1ல்).மிகச்சுலபமாக பொருந்தும் பிட்ச்
அவருக்கு..இருப்பினும் கொஞ்சம் ஸ்ட்ரெச் ஆனது பிசிறடிக்கிறது. இடையிடேயே ரஹ்மானும்
கூடவே பாடி சமாளித்துவிடுகிறார். ராஜா சார்கிட்ட பாடினத விட யுவன் இதுல ரொம்ப
ஃப்ரீயா பாடினா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் :) அந்த ஒரு இறுக்கம் எங்கயுமே பார்க்கமுடியல :) நெஜமாத்தான் மச்சி..! :)
நெஞ்சே எழு – Truly
Madly Deeply
தேசபக்திப்பாடல் மாதிரி , ரஹ்மானின் குரலும் இசையும் எந்த வித தாக்கத்தையும் , புல்லரிப்பையும் ஏற்படுத்தவேயில்லை.! இந்தப்பாடலில் தெரியும் அந்தக்களைப்பு படத்தின் அத்தனை பாடல்களிலும்
பிரதிபலிக்கிறது. ராஜா சார் போல அத்தனை படங்கள் செய்வதில்லை ரஹ்மான். மிக கவனமாகத்
தேர்ந்தெடுத்தே இசை அமைப்பது வழக்கம். இருப்பினும் இப்படி..இந்தப்பாடலுக்கான
வரிகளும் Spoiling the Sport. பாடல் அவர் முன்பு செய்திருந்த “ நேற்று இல்லாத மாற்றம்
என்னது “ என்ற பாடலின் Orchestration ஐப்போலவே ஒலிக்கிறது.
அந்தப்பாடல் எந்த இசைக்கலைஞரையும் வைத்து இசையமைத்த பாடல் இல்லை.! முழுக்க Synth-ல் செய்தே முடித்துவிட்டார்
ரஹ்மான்.
Savage Garden ‘Truly Madly Deeply’, ‘Animal Song’ என்று ஏகத்துக்கு இது “போல” அமைந்த பாடல்கள் கேட்கும்
சுவாரசியத்தை குறைத்தே விடுகிறது.
நேற்று அவள் – Typical
Rahman Style
விஜய் பிரகாஷ்
(சன் சிங்கர்ல எல்லாம் உக்காந்து போரடிச்சுப்போயி) மற்றும் சின்மயி (ட்வீட் பண்ணியது போக மீதம் கிடைக்கும்
நேரத்தில்) பாடியிருக்கும் பாடல் இது. இது ரஹ்மான் பாட்டு தான் என்று
அடித்துச்சொல்ல வைக்கும் Typical Rahman Style Song. இவரோட ஸ்டைலக்காப்பி
அடிச்சு நிறையப்பேர் இது போல பாடல்களை இசைக்க ஆரம்பித்து விட்டதால் ,எதோ ஒரு Boredom இந்தப்பாட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது. 180 அப்டீன்னு ஒரு
படத்தில ஒரு பாட்டு எங்க ஆரம்பிக்குது எங்க முடியுதுன்னு தெரியாம , போற
வழியெல்லாம் போயி , எப்பத்திரும்பி வரும்னே தெரியாம, எப்படியோ முடிஞ்சா சரின்னு
இருக்கும்.அது மாதிரி ஏகத்துக்கு Slow வாக அமைந்திருக்கும் பாடல். ஹ்ம்,.,,ரசிக்க முடியல ரஹ்மான்.
Sorry ! ‘சொன்னாலும்
கேட்பதில்லை கன்னி மனது’ (காதல் வைரஸ்) ஒலிக்குதா..?! :)
எங்க போன ராசா - Re Run
of the Nenjukulle
‘நெஞ்சுக்குள்ளே’ என்று பாடிய ஷக்திஸ்ரீ கோபாலன்
பாடியிருக்கும் பாடல் கேபா ஜெரீமியா’வின் லீட் கிட்டாரில் இந்தப்பாட்டு ஒரு Perfect Guitar Lesson. தொடர்ந்தும் ’நெஞ்சுக்குள்ளே’வை ஞாபகப்படுத்துகிறது. வேற
யாரையாவது பாட வெச்சிருக்கலாம். அந்தக்குரல்ல மயங்கிட்டார் போல ரஹ்மான், அவரையே பாடவெச்சு
அதே பாட்டை ஞாபகப்’படுத்தி’யிருக்கிறார். தாளமேயில்லாது லீட் கிட்டாரை வைத்துக் கொண்டே
செய்த மேஜிக் இது. 1:45ல் ஆரம்பிக்கும் ஹம்மிங், மற்றும் கூடவே பாடும் கிட்டார்
என்று அமர்க்களமாக ஆரம்பித்து உச்சஸ்தாயியில் முடிய நினைக்கும் போது , சடாரென
கீழிறங்கி முதலில் பாடிய இடத்திற்கே வந்து சேர்கிறது. இருப்பினும் எதிர்பார்த்த அந்த
Pep இல்லை பாடலில். நிறைய Eric
Clapton Songs இது மாதிரி வாசிக்கிறதுக்கு
ரொம்ப இதமா இருக்கும்.அந்த லிஸ்ட்ல இந்த “காணாமப்போன ராசா’வையும் சேர்த்துக்கலாம்.
சோனாப்பரீயா - IPL Theme
‘கும்மி அடீ’ன்னு
ஒரு பாட்டு “சில்லுன்னு ஒரு காதல்’ல போட்ருப்பார் , சூர்ய ஜோதிகா கல்யாணத்துக்காக. அந்த Genre ல் ஒலிக்கும் இந்தப்பாடல்.
ஆல்பத்திலேயே கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. கூடவே இப்போது
நடந்துகொண்டிருக்கும் IPL Theme Music ஐ ஞாபகப்படுத்தும்
முன்னணி Trumpet உடன் ஆரம்பித்து
வெகு சாதாரணமாக இருந்துகொண்டு நம்மை கவரத்தவருகிறது
நிறைய புதிய
இசையமைப்பாளர்கள் களமிறங்கி விட்ட நிலையில், இன்னும் இது போன்று தனது பழைய ஸ்டைலிலேயே
கொடுத்துக் கொண்டிருந்தாரென்றால் என்ன சொல்வது ?!.. இருபத்து மூன்று வருடக் களைப்பு
அத்தனை பாடல்களிலும் தெளிவாகத்தெரிகிறது. ட்ரெண்ட் செட் செய்தவரின் பாடல்கள்
எப்போதுமே அதுபோலவே ஆட்சி செய்து கொண்டிருக்கும் என்று இனியும் தோணவில்லை. ‘கடல்’
பாடல்கள் எத்தனை பேர் கேட்கிறோம்..ஹ்ம்...? பார்க்கலாம் அடுத்த அடுத்த
ஆல்பங்களை..! :)
இது எனது 250 ஆவது பதிவு
நைஸ்..
ReplyDeletethanks! @ தாமரைக்குட்டி
ReplyDelete