'கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்' நண்பர்கள் கொடுத்த யூட்யூப் சுட்டியில் கேட்டது வரை, ராப்' கலந்து கட்டி அடித்த கானா தான். வடிவம் கைகூடி வந்திருக்கிறது. ஏற்கனவே மேயாத மானில் வந்த 'நீ கெடச்சா குத்துவிளக்கு' பாடல் வடிவம் , கானவையும் கொஞ்சம் வில்லுப்பாட்டு வடிவத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது. பின்னரும் முன்பு 'மெட்ராஸ்' ,மட்டும் அட்டக்கத்தி' யிலும் பரவலாக காணப்பட்டது. இங்கு கொஞ்சம் ஃயூஷன் வடிவம் கானா+ராப்+ஹிப் ஹாப்+ராக், எல்லாத்தையும் கலந்து கட்டினா ..ஆஹா.. இருப்பினும் ஒலித்தெளிவு இல்லை யூட்யூபில், நேரடியாக பதிவு செய்து ரசிகர்கள் வெளியிட்டிருக்கும் காணொலிகளில். முழு ஆல்பமும், ஒலிப்பேழையாக வரும்போது இன்னமும் சிறப்பாக விமர்சனம் எழுதலாம். எனினும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
மேடையில் அத்தனை பேரும் கோட்சூட் அணிந்துகொண்டே பாடுகின்றனர்.! அங்க இருக்கு கெத்து. மாட்டுக்கறி , கேடுகெட்ட மனுசன், சாதி சம்பந்தமான பாடல்கள் வரிகள் அருமை. இருப்பினும் இந்த ராப் வடிவம் உலக அளவில் கறுப்பின இசைக்கலைஞர்களால் கொண்டு வரப்பட்டு இன்னமும் மீறி ஹிப் ஹாப்பாக உருவெடுத்து கலக்கிக்கொண்டிருக்கிறது. ஓரளவுக்கு மேல் இம்ப்ரூவ் செய்யவியலாத, சலிப்பூட்டும் இசை வடிவம் இது.ஏதோ ஒன்றிரண்டு வேணுமானால் கேட்கலாம். எமினெம் கூட முயற்சி செய்தார். ராசைய்யா இந்த வடிவத்தை மாற்றியமைத்து 'ஃரெண்ட்ஸ்' படத்தில் அதன் உள்ளுருத்தெரியாமல் இசைத்து மகிழ்வித்தார். ‘மஞ்சள் பூசும் மாலை நேரம்' பாட்டில். ரஹ்மான் 'பேட்டை ராப்'பிற்கு பிறகு இடைச்செருகலாக 'ஷோக்காலி' பாடலில் ரொம்ப நாளைக்குப்பிறகு கொண்டு வந்தார்.
கானாவுக்கென ஒரு வடிவம் இருக்கிறது. சிந்துபைரவி ராகத்தில் அதிகம் இசைக்கப்படும் கானாக்கள். இருப்பினும் பாகேஸ்வரி, மோஹனத்திலும் கூட இம்ப்ரொவைஸ் செய்து கானாவாக இசைக்கலாம் தான். தம்பி அநிருத் இப்போது 'தானா சேர்ந்த கூட்டத்தில்' சில பாடல்களை கானா வடிவத்தில் கொடுக்க எத்தனித்திருக்கிறார். ஏற்கனவே தேவா'வை வைத்து ஒரு பாடல் கொடுத்தார். இசைக்கு மொழியில்லை. சாதியுமில்லை. பாடுவதற்கு எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் இந்த கானா' அள்ளித்தெளிக்கிறது. இங்கு பாடும் அனைவரும் அடைமொழியாக கானா' என்ற சொல்லை தம்பெயருடன் சேர்த்தே சொல்கின்றனர். :) ஒருங்கிணைப்புங்கறது பெரிய விஷயம் இல்லை ரஞ்சித்துக்கு , இவ்வளவு பெரிய பட்ஜெட்ல படம் பண்றவர் இத செய்ய மாட்டாரா என்ன ?! :) மகிழ்ச்சி ! :) :) #CastelessCollective
.