Thursday, December 31, 2015

தாரை தப்பட்டை






 தாரை தப்பட்டை பற்றி, நிறைய நண்பர்கள் என்ன இப்படி முழுக்கவும் தடாலடியாகிருக்கிறதே, கேட்க முடியவில்லையே என தெரிவிக்கின்றனர். கதைக்கான இசை இது, நேரில் கரகாட்டம், ராஜா ராணி ஆட்டம் பார்த்தவர்களுக்கு இது விர்ச்சுவலாக கண் முன் கொணர்ந்து நிறுத்தும். அவைகளை விட்டு வி்லகி பல காலம் ஆகிவிட்டது நமக்கு. முழுக்க முழுக்க நாட்டார் இசையை எவ்விதக்கலப்புமின்றி 'ரா' வாக வந்திருப்பதால் இப்படியான கருத்து நிலவுகிறது. இது பாலாவின் படம். இயல்பில் வேணும் என கேட்டுக் கொண்டிருக்கலாம் ராசைய்யாவிடம். எலெக்ட்ரானிக், மற்றும் சிந்தஸைஸ்டு இசை கேட்டுக்கேட்டு போலியான ஒலிகளையே இசை என நம்பவைத்ததால் வந்த வினை இது. எப்பொழுதும் யதார்த்தமேயாகினும்,சிறு கற்பனை கலந்து கொடுக்கும் போதே இனிக்கும்...! என்ன செய்வது ?


வதன வதன வடிவேலா



இந்தப்பாடலுக்கும் குரல் தேர்வு அபாரம். பொதுவாக கரகாட்டம் ஆடுபவர்களில் அவர் பெண்ணாகவே இருந்தாலும் நிறையவே ஆண் தன்மை உடையவராகவே இருப்பர். அவர்தம் குரலும் ஆணின் குரல் போலவே இருக்கும். பெரும்பாலும் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுவதே அதிகம். கம்பீரமாக, ஆணை பிறப்பிப்பவரின் குரலை ஒத்திருக்கும் அத்தனை கணீரென உள்ள குரல். அங்கு மென்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. பெரும்பாலும் மேல்ஸ்த்தாயியில் பாடும் எந்தப்பெண் குரலும் கீச்சுக்குரலாக மாறி என்ன பாடுகிறார் எனக்கேட்கவியலாதே போகும். ஜானகி’யை கேட்டுப்பார்த்தால் அது விளங்கும். இங்கு அந்த மாற்றம் ஏதும் நிகழவில்லை.

அபங் பாடகி ‘அருணா சாயிராமை’ எடுத்துக்கொண்டால் எப்போதும் உச்சஸ்தாயியிலேயே பாடுவார். கொஞ்சம் ஆண் தன்மை காணப்படும்.கீச்சாக ஒலிக்காது. அதே போல் இங்கும் தெரிவு செய்யப்பட்டவரின் குரல்கள் கம்பீரத்தையும் கணீர்குரலையும் கொண்டவராக இருப்பது பாடலுக்கு அழகு சேர்க்கிறது. பழைய திரைப்படங்களில் ‘கண்ணாம்பா’ என்ற நடிகையின் குரலைக் கேட்டால் அப்படித்தான் கணீரென ஒலிக்கும். ஞானப்பழத்தைப்பிழிந்த கேபி சுந்தராம்பாளையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து விடலாம். அவரவர்க்கான குரல் ஒலி வீச்சுகள் (Range) நன்கு ஆராய்ந்தபிறகே இந்தப்பாடலை கொடுத்திருக்க வேணும்,.இவர்களை வைத்துக்கொண்டு காதல் பாட்டு பாடவைக்கவியலாது :)

இதைப்போல ஒரு பாடலை (இதே பாடல் அல்ல),முழுக்கமுழுக்க தாளத்திற்கென முக்கியத்துவம் கொடுத்து இசைத்தது தளபதி’யில் அந்த காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல். இதே முறையில் இசைக்கப்பட்ட பாடல் அது.தொடக்கமும், இடையிசையும், இடையில் தாளத்தை நிறுத்தி, ரசிகரின் இதயத்துடிப்பை அதிகம் துடிக்கவைக்கவுமாக ஒலித்த பாடல்.

இறங்கி குத்துவதற்கான பாடல். முதலில் ஆரம்பிக்கும் அந்தத்தாளம் மேலும் ஒரு தப்பும் பறையுமாக ஒன்றிணைந்து ஒலிக்கும்போது அந்தவித அபஸ்வரமுமின்றி ஒருங்கே ஒலிப்பதைக் கேட்கலாம்.  ஒன்பது செகண்ட் வரை தனியே ஒலித்தவை,பத்தாவது செகண்ட்டிலிருந்து கூடிச்சேர்ந்து ஒலிக்கும் போது எங்கும் தாளம் தப்பாமல் எங்கும் பிசகாது ஒலிப்பதைக்கேட்கலாம். முன்னொலி முடிந்து பாடகிகள் பாட ஆரம்பித்ததும்,உருமியும் சேர்ந்திறங்கி மயக்குகிறது. திமிரும் தெனாவட்டும் குரலில் ஒலிக்கிறது.

01:09ல் ஆரம்பிக்கும் முதல் இடையிசை கொஞ்சம் ‘வீட்டுக்குவீட்டுக்கு வாசப்படி வேணும்’ஐ ஒத்திருப்பினும் போகப்போக விலகிச்சென்று இல்லை இது வேறு பாடல் என உணர்த்துகிறது. ரகளை ரகளை களை கட்டுதடா’ தாளத்துக்கெனவெ அமைந்த பாடல். ஜதிகள் சொல்லியே பாடுகின்றனர் பாடகிகள். “தாம் தோம் தித்தோம் தாம் தோம் தித்தோம்” எனப்பாடும்போது தலை பக்கவாட்டில் அசைந்து கொடுக்கத்தான் செய்யும். கேட்டுப்பாருங்களேன். “வித்தாரக்கள்ளி நான் வந்து நின்னா, நிக்காம கை தாளம் போடுமடா ,சொக்காம சுதி சேரடா”

ஒவ்வொரு சரணமும் முடியும் போது பல்லவியைக்கோர்க்கும் ஒலியாக ஒலிக்கும் அந்த உறுமி, இத்தனை மென்மையாகவும் ஒலிக்கவியலும் என்பதை நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை. அத்தனை கீழ்த்தாஸ்யியில் (bass) மனதை அறுக்கும் அந்த உறுமல் கொள்ளை சுகம். 02:47ல் பாடல் முடிந்துவிடுகிறது. இன்னும் நான்கு சரணங்கள் வைத்து இன்னமும் நீளமாக இருந்திராதா என சொக்க வைக்கும் பாடல். ஹ்ம்..சரி லூப்பில் வைத்துக்கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.

  


தாரை தப்பட்டை கரு (தீம் இசை )

இந்த தீம் இசை படம் முழுக்க விரவிக்கிடக்கப்போகும் இசை. ஆதலால் சிறு சிறு துண்டுகளாக இசைக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது.              1:33 வரை ஒன்று பின்னர் 1:48 வரை இரண்டாவது, பின்னர் இந்த தீம் முடியும் 3:05 வரையிலான கடைசித்துணுக்கு. துந்துபிகள்/கொம்பு முழங்குகிறது பாடல் முழுதும். அந்தக்கால அரசர்கள் காலத்தில் வளைந்து நெளிந்து ஆளுயரத்துக்கு மேலும் நீண்டு கிடக்கும் அந்தந்துந்துபி/கொம்பு –இப்போதெல்லாம் யாரும் வாசிக்கிறார்களா ?.ஹ்ம்.. அருங்காட்சியகத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஊதுவதற்கு உடல் வலுவும்,மூச்சுப்பயிற்சியும் அவசியம். சின்னதாக இப்போது வரும் கேஸியோ கீபோர்ட்டில் முழு வலுவுடன் வாசித்துவிடலாம் தான். ஊதுவதற்கென சிறு பைப் கொடுக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் அந்த இயல்பான இயற்கை வாத்தியத்தின் ஒலிக்கு மாற்று என்பதே இல்லை. இப்போது இசைக்க வருபவர்க்கு இதன் பெயர் போலும் அறிந்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான். மேற்கத்திய இசையிலும் காற்றுக்கருவிகள் உண்டு. ட்ரெம்ப்பெட், கிளாரினெட், என Brass and Woods எனப்பெயர் அத்தகைய ஒலிக்கருவிகளை வைத்து இசைப்பதற்கு. எல்லா நாட்டிலும் ஒன்றுதானப்பா. எப்படி இசைக்கிறோம் எங்கே இசைக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வித்தியாசங்கள்.

0:00 லிருந்து 0:37 வரை ஒலிக்கும் தாளம் மேல்நாட்டினரின் ‘டாப் டான்ஸ்’ன் ஒலிக்குறிப்புகளேயன்றி வேறில்லை. லியோ’வும் கேத்’தும் டைட்டானிக் கப்பலில் கீழ்த்தளத்திலிருந்து ஆடினரே அந்த நடனம் ஒரு Tap Dance.  அந்த தாளத்தை ஒருமுறை கேட்டுவிட்டு வாருங்கள். நான் சொல்வது புரியும். குறிப்பிட்டுச் சொல்வதானால் 0:31 லிருந்து 0:37 வரை கேட்கலாம் டேப் டான்ஸின் ஒலியை!

0:14, 0:23 மற்றும் 0:24லிலும் வரும் அந்த ஒலி , சிறு மூங்கில்களை உருட்டி விட்டாற்போல ஒலிக்கிறது. இந்த சேஷ்ட்டைகளெல்லாம் அநாயாசமாக அந்த நாட்களில் “வலையப்பட்டி சுப்ரமணியம்” செய்வார். பரமக்குடியில் கச்சேரி நாட்களில் நேரம் ஆக ஆக கூட்டம் குறையத்துவங்கியதும் அருகில் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக்கும். மத்தளம் வாசிக்கும் அவர் விரல்களை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு கேட்போம். அவரும் கொடுத்திருக்கிறார் :) பாடல் துவங்கும் போது ஒவ்வொருமுறை பறை/தவில் வாசித்ததும் ஒரு மயான அமைதி. என்னவோ நடக்கப் போகிறதே என. கிட்டத்தட்ட கேட்பவருக்கும், அதைக் கொடுப்பவர்க்கும் என எதிர்பார்ப்புகளில் ஒரு சேர இன்பம் அளிப்பதென மற்றொரு ஆர்கஸமாக உருவெடுத்து நிற்கிறது இந்த இசை. ராசைய்யா சாமியாரா ? ஹ்ம்..?

காற்றுக்கருவிகள் வாசிக்கும் இசைக்குறிப்புகளை அப்படியே தோற்கருவியில் வாசிக்கும் இந்த நிமிடத்துளிகள் 1:12லிருந்து 1:18 வரை , பின்னர் இரண்டுமாக ஒன்று சேர்த்து ஒரே இசைக்குறிப்புகளை வாசிக்கும் அக்கணம் எல்லாம் கேட்பவரின் காதுக்கும் மனதுக்கும் மகிழ்வுதரும்.

1:34 லிலிருந்து துவங்கும் அந்த உறுமியின் துண்டிசை மிகுந்த சீரியஸ்னென்ஸ்ஸுக்குள் நம்மை ஆழ்த்துகிறது. 1:42ல் ஆரம்பிக்கும் அந்த சங்கொலி வாரணாசியின் கங்கைக்கரையில் அடிக்கடி ஒலிக்கும். அதனைத்தொடர்ந்து பின் வரும் முழு ஊதல்களும் ஆக்ரோஷமான ஆட்டத்துக்குத்தயார்ப்படுத்துகிறது கேட்பவரை. ஊழித்தாண்டவம் ஆட நம்மை அழைக்கும் அந்த பறையொலியும்/தவிலிசையும் 2:24ல். பின்னரும் அதைத்தொடரும் இந்த ஒலங்களை இங்கு பெங்களூரில் அத்தனை எளிதில் விளங்கிவிடாத முருகபூபதியின் இரண்டு நாடகங்களிலும் கேட்டிருக்கிறேன். 2:39ல் தொடங்கும் அந்த சன்னாட்டா, ‘அழகு மலராட, அபிநயங்கள் கூட’வைக்கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது அல்லவா..? வேறொன்றும் இல்லை அதுவும் ஆடுபவளை உச்சத்துக்கு அழைத்துச்செல்லும் முயற்சி தான். அந்தப்பாடலும் இசையும் அதன் வரிகளும், இன்னொருமுறை கேட்டுப்பாருங்கள்.

இந்த முழு இசைத்துணுக்கையும்,உங்கள் ஹோம் தியேட்டரில் ‘ராக்’ இசைக்கான ‘ஈக்வலைஸர்’ ஆப்ஷன் இருக்குமானால் அதில் செட் செய்து வைத்துக்கொண்டு கேட்கவும். ஒவ்வொரு துளியும் தேனாக இனிக்கும். என்னுடைய ஃப்லிப்ஸ் ஹோம் தியேட்டரில் ஈக்வலைஸரில் ‘ராக்’ மற்றும் பொதுத்தெரிவில் ‘பார்ட்டி’ (‘டால்பி’ தெரிவில் அத்தனை சுகமில்லை) என்ற தெரிவில் வைத்துக்கேட்டேன். லேப்டாப்பில்/ மொபைலில் கேட்கும் இசையெல்லாம் இல்லை இது.. ‘ராக்’ எங்குமில்லை எல்லாம் நாம் ஒதுக்கிவைத்துவிட்ட நமது தோற்கருவிகளில் புதைந்து கிடக்கிறது. அடித்து வெளிக்கொணர ஒரு ராசைய்யா தேவைப்படுகிறார்.



தலைவன் அறிமுக இசை (ஹீரோ இன்ட்றோ தீம்)

நாயனம் கொஞ்சும் தீம் இசை.ன்றும் புதிதில்லை என்பவர்களுக்கு இத்தனை இனிமை கொஞ்சும் இசை.அத்தனையும் இசைக்கருவிகளை வைத்தே இசைத்தது. ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்றால் சாயங்காலமே மத்தளமும், நாயனமும் குழாய் வைத்து எட்டு வீதிக்கும் கேட்கும்படியாக ஒலிக்கும். இப்போ எனது லேப்டாப்பில் ஒலிக்கிறது அதே இசை. இத்தனை ஒரிஜினாலிட்டியுடன் பாடல்கள் கேட்டு எத்தனை நாட்களாயிற்று மக்கா. எலே போட்டுத்தாக்குலே நீ. அத்தனை கூட்டத்துக்குள்ளும் கூடவே சலங்கைகளும் இரட்டை நாயனம் போல அத்தனை செறிவாக ஒலிக்கிறது. இதெல்லாம் ஏற்கனவே அவர் செய்தது என எந்த நொடியிலும் சொல்லவியலாத இசை இன்ட்றோ. சசிகுமார் எப்படி ஆடுகிறார் இதற்கு பார்க்கலாம்.

இந்த தீம்’ இசையில் ஏகப்பட்ட முறை தாளம் மாறிக்கொண்டே யிருக்கிறது பாருங்கள். 0:10, 0:18, 0:24, 0:38, 0:45, 0:59, 1:12, இத்தனை தாளமாற்றத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது 0:24லிலிருந்து 0:31 வரையிலான தாளம். கூடவே ஒலிக்கும் சலங்கை ஒலியும்..ஆகா அனுபவிக்கணும்டா , உறுமி எல்லாவற்றையும் இணைத்துப் பிணைக்கிறது பின்னிலிருந்து.

யுவன் கொஞ்ச நாட்கள் முன்னால் ‘அவன் இவனில்’ விஷாலுக்கு இசைத்திருந்தார். ஆடியேபோய் விட்டேன். அதை ஒப்பிடும்போது இங்கு கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறது. மத்தளத்தோலை கொஞ்சம் தீ மூட்டி சூடு காட்டி விரைக்கச்செய்து அடித்துப்பார்த்தால் அதில் வரும் ஒலியே தனி. மணி ஒலிப்பது போலத்தோன்றும். என்னிடம் ஒரு சிறிய மத்தளம் இருக்கிறது. பெங்களூரில் இப்போது நல்பனிக்காலம். கை வைத்து அடித்துப் பார்ப்பேன். தண்ணீருக்குள் தடி வைத்து அடிப்பது போல ஒரு சுகமிருக்காது. அதுவே வெய்யில் காலமெனில் முதலில் கூறியது போல் கிண்ணென்று ஒலிக்கும். ஆடி ஆடியே தமது எல்லைகளை ஒறுக்குவது அந்த இடத்தில் போய் நின்று பார்க்கும் போது தெரியும். வீதியில் ஆடினாலும் தமக்கென ஒரு வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டே செல்வர். ராசைய்யாவின் வட்டம் இன்னும் விரிந்து கொண்டேயிருக்கிறது.

இழவுக்கும், இன்பத்துக்கும் ஒரே வாத்தியம் தான் நம்மிடம். வாசிப்பில் வித்தியாசம் காட்டி விடுவதால் அந்த இடத்திற்கேற்ப நமது மனமும் குதூகலிக்கும், இல்லையே இன்னும் வருந்தும். எனக்கென்னவோ இந்த இரட்டை நாயனத்தில் கொஞ்சம் சோகம் கலந்து ஒலிப்பது போலவே உணர்கிறேன்.உங்களில் யாரேனும் அதைக்கவனித்தீரா ?

- தொடரும்
 

Saturday, December 12, 2015

பீப் ஸாங்



பெருமாள் முருகன் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒன்றாகத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார், பட்டவர்த்தனமாக அத்தனை சொற்களையும் தேடித்தேடி ஆவணமாவே வெளியிட்டிருந்தார். அங்கெல்லாம், அதற்கெல்லாம் யாரும் கூவவில்லை. சாரு’வின் அத்தனை பதிவுகளிலும் தெள்ளத்தெளிவாக வந்துவிழுந்து கொண்டேதானிருக்கிறது ‘அத்தனை’ வார்த்தைகளும்’. எதோ சிம்புவும் தம்பி அநிருத்தும் சேர்ந்து அந்த வாலிப மனதுக்குரிய விஷயங்களை எளிமையான சொற்களைக்கொண்டு ஒரு குத்துப்பாடல் வெளியிட்டால் அது தவறு. உடனே தூக்கிலேற்றிவிடவும் அத்தனை பேரும் தயார். சிம்பு ஏற்கனவே இது போன்ற ஒரு பாடலை ‘ எவண்டி ஒன்னப்பெத்தான் என் கைல கெடச்சா செத்தான்’னு எழுதிய போதே எதிர்ப்புக்கிளம்பியது தான். இந்தப்பாடலிலும் ‘அந்த’ச்சொல் வரும்போது பீப் ஒலிக்கத்தான் செய்கிறது. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் கேட்காதீர்கள். தூர எறியுங்கள். 'வக்கம் சென்னை' தின்ரு பாலில் 'யிரு' என்சொல்லை வெளிப்டையாகப்யன்டுதாமல் அங்கும் ீப் ஒலிது. இந்தச்சொல்லுக்குப்பின்னால் உள்ள அசிலை எடுதால் இன்னும் துப்திவுகள் எழுவேணடிரும்.

இந்த வார்த்தை தெருவில் சாதரணமாக ஒலிக்கிறது. டாஸ்மாக் ஏரியாவில் பல இணைப்பு சொற்களோடு கேட்கலாம் குழந்தைகள் காதுகளில் விழுகிறது.பெண்கள் கேட்காதது போல செல்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் புரிகிறது. திரைப்படங்களில் சில மில்லி மீட்டர் தவிர அதை காட்டுகிறார்கள். அதை டிவியில் குடும்பத்தோடு பார்க்கிறோம். அனால் ஆடியோவாகக் கேட்கும்போது மட்டும் எப்படி அதிர்ச்சி வருகிறது. இதில் இருக்கும் உளவியல் புரியவில்லை.

சாரு சொல்கிறார், நாளை சிறுகுந்தைகள் இந்தப்பாலை மேடையில் பாட எனிப்பார்கள் அதை நினைது தான் என் லை ன. பாலைீர்மானிப்து அவர்ளின் பெற்றோர்கள் மற்றும் நிகழ்ச்சியின் டுவர்கள் தான். எந்தக்குந்தையும் தாம் நினைதையெல்லாம் பாடிவிட இலாது. இதுநாள் ரை 'நெலாக்காயுதே'வை எந்தக் குந்தையும் மேடையில்/போட்டியில் பாடி நான் கேட்தில்லை. 

இதே கலாச்சாரக்காவலர்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களைக்கொண்டு பாடல்கள் எழுதியபோதும் அதை மறைமுகமாக ரசித்துக்கொண்டுதான் இருந்தனர். யாரெல்லாம் கூவுகின்றனர் எனப்பார்த்தால் எல்லாம் கெழடு கட்டைகள் தான் கூவுகின்றன. ராசைய்யாவும் “நெலாக்காயுதே”வில் முகம் சுழிக்கும் அத்தனை ஒலிக்குறிப்புகளையும் கொடுத்து பாடலுக்கு இசையமைத்தவர்தான். கணத்தில் தோன்றும் அந்த வார்த்தை தான் சரியான வெளிப்பாடு. எத்தனையோ ஐட்டி கம்பெனிகளில் நிமிடத்துக்கொருமுறை சொல்லிச்சொல்லி ஓயும் அதே வார்த்தையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார் சிம்பு. கெழங்களே மூடிட்டுப்போங்கடா..! #பீப்ஸாங்