Sunday, April 26, 2020

எக்ஸ்ட்ராக்ஷன்


A Perfect World’ ன்னு ஒரு படம் கெவின் காஸ்ட்னர் நடிச்சு க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய படம். அதில் கெவின் காஸ்ட்னர் ஒரு குற்றவாளி தப்பித்து ஓடும்போது வழியில் கிடைக்கும் ஒரு பையனை துணைக்கழைத்துக் கொண்டே செல்வார். அந்தப் பையனுக்கும் கெவினுக்கும் இடையிலான ஒரு வெளியில் சொல்லமுடியாத தந்தை மகன் உறவை விரிவாகச்சொல்லும் படம் அது, அந்தப் பையனுக்கு இப்படி ஒரு ஆணின் அருகாமை கிடைக்காத துயரம். ஒரு ஃபாதர் ஃபிகராகவே கெவினைப் பார்ப்பான் அந்தப் பையன் .க்ளிண்ட் ஈஸ்ட்வுட் கெவினை தேடி அலையும் அதிகாரியாக வருவார். கடைசிக்காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது எனக்கு. குறுகிய தொலைவில் இருவரும் சிக்குவார்கள். இலக்கு வையுங்கள் என காவல்காரர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுட்டுவிடுவர். 


இதே ப்ளாட்டில் ஏறக்குறைய கொஞ்சம் அருகிலிருக்கும் படம் ‘எக்ஸ்ட்ராக்ஷன்’ என்ன பெரிய அடிதடி, வெகு விமரிசையான கார் சேஸிங், விரைவான ஆக்ஷன் என பட்டையைக்கிளப்பி இருக்கிறது. பங்களாதேஷ் இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காதது. ஏனிந்த ஹாலிவுட் காரர்களுக்கெல்லாம் மூன்றாம் உலக நாடுகளைக் கண்டால் ‘சேப்பியா டோனில்’ தான் எடுக்க வேணும் என்று தோணுகிறதோ? க்யூபாவையும் அவர்கள் படத்தில் அப்படியே காண்பிப்பர்.


நம்ம சுத்தியடி ‘தோர்’ ஹீரோ தான் இங்கயும். எக்கச்சக்க வயலன்ஸ். இந்த நெட்ஃப்ளிக்ஸ் படங்களுக்கெல்லாம் சென்ஸாரே கிடையாதா? ‘தோர்’க்கு இணையா அந்த மும்பை கூலிப்படை நடிகர் அற்புதம். விட்டா பையன ஒத்தக்கைல தூக்கிக்கிட்டு போயிருவார் போல. ஃபியர்ஸ் ஃபைட்டிங். கேட்ட காசு கைக்கு வரல, பையன அப்டியே விட்டுட்டு நீ மட்டும் கிளம்பி வந்துரு என்று ‘தோர்’க்கு ஆணை கிடைக்கும்போது நமக்கே ஒரு ஆயாசம் வந்துவிடுகிறது. இதுக்குத்தான் இவ்வளவும் பண்ணினானா என.

தோர்’ மனமிளகி காசெல்லாம் வேணாம் பையன அவங்க வீட்டிலயே விட்டுடு என்று கையளிக்கும் இடம் பிரமாதம். எனக்கு டென்ஷன் வரும் போதெல்லாம் காற்றிலெயே பியானோ வாசிப்பேன் கை விரல்களால என்கிறான் அந்தப்பையன். நான் ஒரு பேக்கேஜ், அவ்ளவு தானா? என்பதும் பாதாளச் சாக்கடையில் ஒளிந்திருக்கும் போது இருவர் தம்மில் அறிமுகம் செய்து கொள்வதும் என அத்தனை காட்சிகளும் பிரமாதம். நல்ல கெமிஸ்ட்ரி.

ஒற்றை ஆளாக பெரிய ராணுவத்தையே எதிர்ப்பது என்பதெல்லாம் ராம்போ காலத்திலேயே வாயில் விரல் வைத்துக்கொண்டு பார்த்தாயிற்று. உதவிக்கு ஒன்றிரண்டு பேர் கூட இல்லாமல் நாற்பது பேரை போட்டுத்தள்ளுவது எங்கனம் என்ற மாதிரி தர்க்கரீதிகளை யெல்லாம் தரைமட்டமாக்கி விட்டு பார்த்தால் கண் கொள்ளாக் காட்சிகள் தான் கண்ணா. 

இனிமேலும் பிவிஆர் போன்ற திரையரங்குகளில் சென்று டால்பி ஸ்ட்டீரியோ, சர்ரவுன்டு சவுன்டுகளுடன் ,இல்லையேல் ஐநாக்ஸ் போன்றவையெல்லாம் போய்ப்பார்க்க இயலுமா இல்லை இனியும் திறக்குமா என்று காத்திருப்பதை விட்டு விட்டு நல்ல ஒரு 5.1 ஹோம் தியேட்டரை (எனது கொஞ்சம் பழசு தான் ஃபிலிப்ஸ்) வாங்கி அண்ட்ராய்டு எல்சீடி (கொஞ்சம் பெரிய சைஸ்) ட்டிவியில் செருகிவிட்டு சோஃபாவில் அமர்ந்து பார்த்தாலே போதும் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்றவையே போதுமென்ற மருந்தே இனி பொன் செய்யும் #எக்ஸ்ட்ராக்ஷன்

Sunday, April 19, 2020

ஸ்ருதி தென்பாண்டிச்சீமை



ஸ்ருதி பாடின ‘தென்பாண்டி சீமையில’ கேட்டேன். அவர் வெர்ஷன் அது. வெஸ்டர்ன் பாணியில கொஞ்சம் ஆப்ரா டைப் பாடலாக பாட முயற்சித்திருக்கிறார். என்ன பிரச்னைன்னா அந்தப் பாடலும் ராசைய்யாவும் கமலும் அந்தக் காட்சிகளுமாக கால காலமாக ஊறிப்போய்க் கிடக்கிறது நம்முள். இது போல சூழலுக்கோ இல்லை நமது கலாச்சாரப் பின்புலத்துக்கோ சரி வராத வெர்ஷனாக அவர் பாடினது தான் பிழையாகப் போய்விட்டது. 

இதையே திருவாசகத்தை ராசைய்யா மேல் நாட்டின் செவ்வியல் இசையான சிம்ஃபனி வடிவில் கொடுத்த போது ஏற்றுக்கொள்ள முடிந்தது. ராமானந்த ஸ்ரீனிவாச ஐயங்கார் அருளிச்செய்த மோகன ராகத்தில் அமைந்த ’நின்னுக்கோரி வர்ண’த்தை ராசைய்யா வெஸ்ட்டர்னில் ’அக்னி நட்சத்திரத்துக்காக’ இட்டபோது ரசித்தோம். ரஹ்மானும் ’கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா’ என்ற வெங்கடேச சுப்ரபாதத்தை மே மாதம் திரைப்படத்திற்கென ‘மார்கழிப்பூவே’ என்று கொடுத்த போதும் நம்மால் ரசிக்க முடிந்தது. இதெல்லாம் அவர்களின் வெர்ஷன்!

இருப்பினும் ஸ்ருதியின் இந்த வெஸ்ட்டர்ன் பாணியை நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ராகத்தையோ வரிகளையோ மாற்றாது பாடினும்.இதே போல கொஞ்ச நாள் முன்னால சுசீலா ராமன் பாடின ‘பால் மணக்குது பழம் மணக்குது’ என்ற பக்திப்பாடலையும் வெஸ்ட்டர்ன் பாணியில் பாடினதை நம்மால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கேட்டு கேட்டு ஊறித் திளைத்த ராகம் கலாச்சாரப் பின்னணி கொண்டதை கட்டுடைப்பு செய்து வேறுருவில் கொடுக்கும் போது அதிர்ச்சி மிஞ்சி கேலியுடன் புறந்தள்ள வைக்கிறது. 

எல்லாக்கட்டுடைப்புகளும் அவ்வக்காலத்தில் நடக்கத்தான் செய்யும். சில நாஸ்ட்டால்ஜியாக்களை சீண்டுதலை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சிலது போற்றப்படும் சிலது தூற்றப்படும். #ஸ்ருதிதென்பாண்டிச்சீமை

.

Friday, April 17, 2020

அங்க்ரேஸி மீடியம்


இர்ஃபானின் படங்கள் கொஞ்சம் பார்க்கப்பிடிக்கும் எனக்கு. கடைசியாகப்பார்த்தது மதாரி (ஹிந்தி), சிங்கிள் பேரண்ட்டாக நடித்திருப்பார். அந்தப்பையன் மேம்பாலம் இடிந்து விழுந்து இறந்து போவான். டெல்லியில் அப்போதெல்லாம் நிறைய பாலங்கள் இடிந்து விழுந்து பலர் மரணித்தனர் சாலைகளில். அப்படி ஒரு விபத்தில் இறந்த தம் மகனைப்பார்க்க மருத்துவமனை செல்வார். மேம்பால இரும்பு கர்டர்கள் விழுந்து பள்ளிசெல்லும் சிறுவனை நசுக்கி கொன்றுவிட பையில் போட்டுத்தரவா இல்லை மூட்டையாக கட்டித்தரவா என மருத்துவமனையில் கேட்பர். உடைந்து போவார் இர்ஃபான். அப்படி ஒரு கேரக்டர் அவருக்கு,

இப்ப அங்க்ரேஸி மீடியம் பார்த்தேன். கரோனா ப்ரச்னையில் தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருந்த படம் இணையத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. இதுலயும் அதே சிங்கிள் பேரண்ட். மனைவி குழந்தை பெற்றுவிட்டு இறந்துவிட இவர் ஒற்றைக்கு வளர்க்கிறார். இன்னொரு கல்யாணமேன் பண்ணலை ? தெரியலை. பொண்ணு மாடர்னா வளருது, லண்டன்லதான் போய்ப்படிப்பேன்னு அடம் புடிக்கிது. இதுல பங்காளி சண்டை. மிட்டாய்க்கடை பெயர் யாருக்கு பாத்தியதைன்னு. கோர்ட் கச்சேரி,ராத்திரி பார்ட்டில ஜட்ஜுக்கு ரோலக்ஸ் வாட்சு குடுத்து தன்னக்கட்டினத பங்காளி உளறிவிட எல்லாம் போச்சு. ஸ்கூல் பிரின்ஸிப்பிள் கணவர் தான் ஜட்ஜ். இர்ஃபான் மேடையிலயே போட்டுக் குடுக்க பயணம் பணால். அதுக்கப்புறம் செம இளுவை. ஏகத்துக்கு செண்டிமெண்ட். இண்டியன் கலாச்சாரம் கழிசடைன்னு எல்லாம். பதினெட்டு வயசுல தானா சம்பாதிச்சு தன்னைக் காப்பாத்திக்கணும்னு எல்லா வெளிநாட்டு பிள்ளைகள் போல இந்தப்பொண்ணும் நினைக்குது, அது மாதிரியே செய்ய ஆரம்பிக்குது.

அவர் கூட நடிக்கும் பங்காளி தீபக் (இவரும் நாடக நடிகர்) அற்புதம். விட்டால் இர்ஃபானையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போலருக்கு. (’தனு வெட்ஸ் மனு’வில் நடித்திருப்பார்.)


இதுல என்ன கூத்துன்னா கரீனா கபூர், டிம்பிள் கபாடியா எல்லாரும் இந்தப்படத்தில நடிச்சிருக்காங்க. மார்க்கெட் இல்லாம எம்புட்டு காஞ்சு கெடப்பாங்கன்னு இதுலயே தெரியுது. ’பதினெட்டு வயசுல தானா சம்பாதிச்சு சொந்தக் கால்ல நிக்கிறதுல்லாம் செரிதான் அதே அதுக்காக அப்பப்ப அம்மாஅப்பாவ பாக்கக்கூட வரக் கூடாதுன்னு இல்லயே’ இந்த ஒரு இடம் வசனம் தான் கொஞசம் கெத்து இர்பான் பேசுறதுல. அப்புறம் அந்தப்பொண்ணு எனக்காக இவ்வளவுல்லாம் பண்றியே இந்தப்படிப்பே வேணாம்னு சொல்லிட்டு ராஜஸ்தானுக்கே அப்பாவ கூட்டிட்டு வந்திருது எதிர்பார்த்த மாதிரியே. 

ஒரேமாதிரி கேரக்டர், டயலாக் டெலிவரி தண்ணியடிச்சு மப்புலயே செருகிக்கெடக்கிற கண்கள். சலிக்குது இர்ஃபான். நஸ்ருதீன் ஷா, ஓம் புரி போன்றவர்களின் கதாபாத்திரங்களை எடுத்து அபிநயிக்கக் கூடியவர் இர்ஃபான். தோற்றமும் அதற்கு இடம் கொடுக்கும், ஸப் வேஸ்ட் ஹோகயா இதர் #அங்க்ரேஸிமீடியம்

Friday, April 3, 2020

ட்ரான்ஸா இது ட்ராஷ்!


இந்த கெளதம் மேனன்லாம் ஏன் நடிக்கிறார்? எதாச்சும் பணமுடையா?. இவர் சொல்லிக்கொடுத்து தான் இத்தனை நடிகர்களும் நடித்தார்கள் , எஸ்பெஷலி சிம்பு, என்று நம்புவது அத்தனை கடினமாக இருக்கிறது எனக்கு. ஒரு வில்லனுக்குரிய உடல் மொழி இல்லை. வசன உச்சரிப்பு திகிலூட்டுவதாக அமையவில்லை. எதோ நானும் ஸ்க்ரீன்ல நிக்கிறேன்ங்ற மாதிரி பேசறார். நடக்கிறார். இவர் சொல்லி சூர்யா/டேனியல் பாலாஜீல்லாம் நடிச்சாங்கன்னு நம்பவே முடியலை. கம்ப்ளீட் வேஸ்ட். ஹ்ம்.. ட்ரான்ஸ் பார்த்தேன் நேத்து அதான் இப்டி. அந்தப்பெண்ண கொலை செய் அப்டீன்னு சைகையால காட்றார். அதப்பாத்தா என்னவோ ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வான்னு சொல்றா மேரி இருக்கு ஹிஹி… சொல்லப்போனா இவர்தான் படத்துக்கு ஹீரோ. கேரக்டர் அஸாஸினேட் ஆக்கிட்டார்.!

ஆனாலும் அந்த நஸ்ரியா கேரக்டருக்கு ‘ஆண்ட்ரியா’ தான் பொருத்தமா இருப்பாங்க ( ஹ்ஹி , வழிய ஆரம்பிச்சிட்ட பாத்தீயாஆ..ஹிஹி) ஏன்னா அந்த மேரி ஒரு கேர்லெஸ் அட்டிட்யூட் உள்ள பெண்ணா நடிக்க அவரத்தான் தேர்ந்தெடுத்திருக்கணும். மேலும் ஃபகத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி அத்தனை அம்சமா இருக்கும் ‘அன்னயும் ரசூலும்’ படத்துல.

எதோ பள்ளிக்கூடப்பிள்ளய கூட்டிட்டு வந்து சிகரெட்டெலாம் ( அதுவும் ட்ரக்குள்ள சிகரெட்டாம். .ஹிஹி) குடிக்க விட்டு தண்ணியடிக்க விட்டு பாடாப்படுத்தியிருக்காங்க மக்கா. ஸ்டைலிஷ் நடையில்லை, ஒரு க்ளாமர் லுக் இல்லை, இதெல்லாம் வந்து ஒரு மெகா ஸ்டாரை வந்து மயக்குதாம் நாம அதப்பாக்கணுமாம்..அடச்சீ. ஒரு வேள நஸ்ரியாவே இது மாதிரி எவளாவது கூட நடிச்சு ஃபகத்தை கொத்திண்டு பொய்ட்டாள்னா, அப்டீங்கற பயத்துலயே நானே நடிக்கிறேன்னு சொல்லீருக்கும் போல. பர்த்தாவும் பதிவிரதையும். ஹிஹி.

ஃபகத்தும் என்னென்னவோ மாயாஜாலம்லாம் காட்றார். இருந்தாலும் ஓவர் ஆக்ட்டிங் தான் கெடுத்து குட்டீச்சொவராக்குது படத்த. இவன் நடிக்கிறான்னு தெரிஞ்சா ஒரு அவார்ட் குடுக்கலாம்னு அவரே அவர புகழ்ந்துக் கிர்றதுல்லாம் ..ஹ்ம்.. நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இது மேரி வசனமெல்லாம் தேவையா? இடவேளைக்கப்பிறம் இவனுக்கு ஒண்ணுமே ஆகாது இனிமே தான் சந்தரமுகி ஆட்டம் ஆரம்பம்னு தெளிவா தெரியிற திரைக்கதை பெரும் ஓட்டை. இது எல்லா மதத்துலயும் நடக்கிற கார்ப்பரேட் கசமுசா சமாச்சாரம் தானே?  ட்ரான்ஸா இது ட்ராஷ்! #ட்ரான்ஸ்