ப்ரூனோ
மார்ஸ்’ன் leave the door open! நல்ல பாடல். Rhythm and Blues வகையில்
சேர்க்கப்பட்டிருக்கும் பாடல் எனக்கென்னவோ இது ஒரு நல்ல ஜாஸ் எனவே தோன்றுகிறது. ப்ரூனோ மார்ஸ் கொஞ்சம் ரெட்ரோக்களை (பழைய )தொட்டு
இசைத்து சுகிப்பதில் விருப்பமுடையவர். Uptown Funky World கேட்டுப்பாருங்க தெரியும்.
ஆர்ப்பாட்டமான பாடல் Dont believe me Just
Watch...! அப்புறம் Cardi B-யுடன் பாடிய Finesse ஆகட்டும் எல்லாம் ஆடிப்பாடித்திளைக்க
வைக்கும் பாடல்கள். இங்கு leave the door open-ல் மேடையில் ஒரு குழுவாக அமர்ந்து கொண்டு
ஒரு ட்ரம்ஸ், ஒரு ப்யானோ இன்னபிற இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு மேடைப்பாடல் போலவே
அமைந்திருப்பது. நம்ம ‘கேளடி கண்மணி பாடகன் சங்கதி’ ஒரு மேடைப்பாடல் தான்.
ராசைய்யாவின் ‘கண்ணன் வந்து பாடுகின்றான் பாடலெல்லாம்’ , ‘மன்றம் வந்த தென்றலுக்கு’
பின்னர் ரஹ்மானின் ‘அடியேய் என்ன எங்க நீ கூட்டிப்போற’ ’ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி’
கூட சொல்லலாம். சந்தோஷின் ‘அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார்’ பாடல் ...ஆனால் இவையெல்லம்
அச்சசல் நூறு சதமானம் ஜாஸ் இசை..! இதஒயெல்லாம் கொஞ்சம் கேட்டுட்டூஊ இந்த ப்ரூனோ மார்ஸக்கேட்டா
You will definitely leave the door open!... ஹிஹி...!
’சவரம் செய்து கொண்டு இப்போ பிறந்த குழந்தை போலிருக்கிறேன் வா’ எனக் காதலியை கூப்பிடுகிறார் ப்ரூனோ. ஹிஹி.. ஊரில் மேடைப் பாடல்கள் பாடும்போது, திருவிழாக்களில் இப்படித்தான் பின்னில் நிழல் போல உருவங்கள் பதிந்தோடும் பாடுபவர்களின் மேலும், இசைக் கருவிகளிலும் , முழு மேடையிலும்.. அதெற்கென கருவியை கொண்டே வருவர், பாடலிசைக்கும் போது எஃபெக்ட்கள் கொடுப்பதற்கு. ஆமாம்.. இது ஒரு ரெட்ரோ பாடல்தான். அந்த Feel வருவதற்காக நிழல்கள் ஓடுகின்றன. 01:50 செகண்ட்களில் உங்கள் கை தானாகத் தட்டத்துவங்கும். இல்லையெனில் அது தேவையேயில்லை எனலாம்.!
I ain't playin' no games
Every word that I say is coming straight from my heart
So if you tryna lay in these arms
02:29-ல் ஆரம்பிக்கும் அந்த ‘ல லல் லாஆஆ’ வில் மயங்கி நீங்க
எழுந்து ஆடித்தானாகணும்,! வேறு வழியேயில்லை. பாடலின் உயிரே அந்தப்பகுதியில் தான் துவங்குகிறது.
மேலும் பழைய பாடல்களில் முடிவுறும் தருவாயில் Fading செய்து கொண்டே போய் பாடல் முடிவுறும்..
ஆஹா இங்கும் அதே தான். இப்போதைய பாடல்களில் அந்த Fading முறை கைவிடப்பட்டு கடைசி வரை
முழு சப்தத்துடன் பாடி ஓயும். !
Rhythm and Blues-க்கெனெவே Trace Urban என்ற
ஒரு சேனல் வந்து கொண்டிருந்தது எனது கேபிளில். அதை மாற்றி இப்போது டாட்டா ஸ்கை வந்ததும்
எல்லாம் போயேவிட்டது. ஸ்கையில் இருக்கிறதாவென தேடித்தான் பார்க்கணும். நம்பவே இயலாது.
அந்த சேனலில் ஒரு முறை ஒரு விளம்பரம் கூட வரவே வராது. முழுக்க முழுக்கப்பாடல்கள் தான்.
We love R and B என்ற முகப்பு வாக்கியத்துடன் சேனல் ஒலிக்கும், ஒரு மாதம் தொடர்ந்து
பார்த்தாலும் விளம்பரங்களே வராது. அதனாலேயோ என்னவோ அந்தச்சேனல் எனக்கு வருவதேயில்லை...!!