Monday, March 18, 2019

யக்ஷகானம்


சனிக்கிழமை மாலையில் ஸ்ரீனி அழைத்திருந்தார். பெங்களூர் டவுன் ஹாலில் இருக்கும் கலாஷேத்ராவில் ஒரு நாடகம் , வாங்க செந்திலும் வருகிறார் என. போய்ப்பார்த்தால் நாடகம் வேறிடத்தில். சரி வந்தாயிற்று உள்ளே வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு வயதானவர் சாரங்கி வாசிப்பவர் என மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். வயது கேட்டால் 84 ஆம். .. என்னை தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். நடக்க இயலாது என்றவர், மேடையில் அமர்த்தி வைத்துவிட்டால் எட்டு மணிநேரம் சாரங்கி வாசிப்பேன் என்கிறார். குரலில் அத்தனை நடுக்கம். இவராலென்ன வாசித்தவிட முடியும் என நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி ஆரம்பித்தது. 


இப்போது பிரபலமாக இருக்கும் பியானோ லிடியன் என்ற பொடியன் போல சாரங்கி மழை பொழிகிறது. கூட்டம் அசையவேயில்லை. அவர்தான் ராஜீவ் தாராநாத். வயது 84 , பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இந்த வயதுக்கு என்னால் கிட்டாரை தூக்கக்கூட இயலுமா என்றெண்ணிக் கொண்டேன். அவர் கைகளுக்கு அத்தனை சக்தி. சளைக்காது ஒரு முழுப்பாடலை அரைமணிநேரத்துக்கும் கூடுதலாக இடை விடாது வாசிக்கிறார். இசை இசை மட்டுமே அவர் பேச்சு. பேச்சில் இருக்கும் நடுக்கம் கொஞ்சமும் கைகளில் இல்லை. தொடர்ந்தும் வாசித்துக் கொண்டே இருந்தார்.  சரி அவர் வாசிக்கட்டும் என நினைத்து கொஞ்சம் வயிற்றுக்கு ஈயலாம் என்றெண்ணி ஒரு மணி நேரம் கழித்து வந்தால் கூட்டம் அப்படியே நிற்கிறது. வாகனங்கள் பார்க் செய்யப்பட்டவை ஒன்றும் அதனிடத்தை விட்டு அகலவில்லை. 


 செளக்கிதார் (ஹிஹி) சொன்னார் உள்ளே இப்ப `யக்‌ஷகானம்` நடந்து கொண்டிருக்கிறது. அதான் கூட்டம். மணி கிட்டத்தட்ட இரவு ஒன்றை தாண்டிவிட்டது. இன்னமும் கூட்டம். அத்தனை பேரும் கண்கொட்டாமல் சீழ்க்கையடித்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கோ அத்தனை ஆச்சரியம். பெங்களூரில் யக்‌ஷகானம் பார்க்க இத்தனை கூட்டம். அதுவும் இரவு ஒரு மணிக்கு மேல. கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லை. உட்கார இடமேயில்லை. நின்று கொண்டு பார்ப்பவர் பலர். உள்ளே ஒரு சீட் காலியாக இருக்கிறதே என அருகில் போய்ப்பார்தால் அதில் ஒரு மொபைல் வைக்கப்பட்டிருந்தது. யாரோ இடம் பிடித்து வைத்திருக்கிறார் போலும். நம்ம ஊர்ல பிரபல நடிகை வந்து கடை திறந்து வைத்தால் மட்டுமே கூட்டம் கூடும் அதுவும் இரவு இரண்டு மணிக்கு.


 சினிமாவுக்கு அத்தனை முக்கியத்துவம் இந்த உள்ளூர் கன்னடக்காரர்கள் கொடுப்பதில்லை. அது அவர்களின் திரைப்படங்களை பார்த்தாலே தெரியும். அவர்களின் ரசனை இன்னமும் கலைகளில் தான் தங்கியிருக்கிறது. வெகு நேரமாகி விட்டதே என வெளியில் கிளம்பினால் இன்னமும் பத்து பேர் அரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.


Thursday, March 14, 2019

வணக்கம் ராகுல்


நான் இன்றும் இளைஞன் தான் ராகுல்னே கூப்டுங்க.. பெண்கள் கல்லூரியில்லயா எல்லாப்பயலும் இதத்தான் சொல்லுவாங்ய... ஹிஹி அட முதன்முறையா ஒரு அரசியல்வாதி இவ்வளவு திறந்தமனதுடன். இதைப் போல ஒரு சந்திப்பை மிஸ்டர் மோடியை நிகழ்த்தச்சொல்லுங்க என சவால் விடுக்கிறார். ராக் ஸ்டார் போல ராம்ப்பில் நடந்து நடந்து சளைக்காமல் பதிலளிக்கிறார். இவர் இவ்வளவு பேசுவார்னு எனக்கு இப்பத்தான் தெரியுது. இம்ரான் கான் பழைய அரசாங்கங்கள் செய்தவற்றை விட்டுவிட்டு வாங்க பேசலாம் என அழைக்கிறார். நம்ம ராகுல் ராம்ப்பில் நடந்து உரையாடுகிறார். 

நல்ல மாற்றங்கள் கண்ணுக்குப் புலனாகிறது. இப்படியே தொடரலாம். வெறுப்பரசியல் விட்டு விருப்பரசியல் செய்ய கட்டி அணைத்தேன் என்கிறார். செம ட்ரெயினிங் போல இந்த அஞ்சு வருசத்துல. அப்பப்ப ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியை புகழ்கிறார். தைரியமான பேச்சு, முன்னும் பின்னும் நடந்து கொண்டு ...அட இந்தியா மிளிரும் போலருக்குடே.. பாகிஸ்தான் அப்டித்தான் இருப்பாங்க. வட நாட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த மோடி அரசு. டீமானிட்டைசேஷன் எல்லாம் விட்டு விளாசுறார். முழுநேர அரசியல் வாதியாக மாறிநிற்கும் ராகுலைப்பார் ..ஆஹா.... #வணக்கம்ராகுல்