Saturday, March 12, 2022

Bob Lazar Area 51 and Flying Saucers

 


 

எப்பவும் History TV18-ல் வரும் Ancient Aliens நிகழ்ச்சி தவறாமல் பார்ப்பது வழக்கம். ஏற்கனவே Crop Circles Alien Abduction எல்லாம் பார்த்துச்சலித்த எனக்கு இந்த ஒரு எபிஸொடு சுவாரசியமாகப்பட்டது.  Bob Lazar  இவர் Area 51 ல வேலை பார்த்தவர் என்று முன்னோட்டத்திலேயே குறிப்பிட்டது ஆர்வத்தை தூண்டியது.

சிறுவயது முதலே சின்னச்சின்ன ராக்கெட் செய்து அதை சைக்கிளில், படகில் என இப்படி இன்னபிறவாகனங்களில் சேர்த்துக்கட்டி வைத்து பயணிப்பது இவரது பொழுதுபோக்கு. நிறைய கம்பெனிகளில் வேலையும் பார்த்திருக்கிறார். Area 51  ல் அதுவும் S4 பணியிடத்தில் வேலைக்கென சென்றிருக்கிறார். அமேரிக்க மிலிட்டரியே இவரை கூட்டிக்கொண்டு போய் கொண்டு வந்து விட்டிருக்கிறது. Area 51 என்பது ஏலியன்களின் கூடாரம்.ஹிஹி.. அதிலும் S4 என்பது பணிமனை, உள்ளே ஈ/காக்கா/எறும்பு/பாம்பு கூட செல்லவியலாத இடம். அங்கு தான் இந்த மகான் பணி புரிந்திருக்கிறார். அப்டி என்ன வேல மச்சான்னு கேட்டா, ஏலியன்களின் ஏர்க்ராஃப்ட்டை ரீ இன்ஜினியரிங் செய்து அதன் சூக்குமங்களைக் கற்றுக்கொண்டு அம்பேரிக்கா மிலிட்டேரிக்கு அதே போல ஏர்க்ராஃப்ட்களைச் செய்து கொடுக்க வேணும்..ஹிஹி.. லேசுப்பட்ட வேலயா இது ??  

 பத்துப்பதினஞ்சு ஏலியன் ஏர்க்ராஃப்ட்கள் ஒண்ணு கூடிக்கிடந்தனவாம். அவர் கூறுகிறார். அதனுள்ளே சிறுகுழந்தைகள் போல உருவில் ஏலியன்கள் அமர்ந்து எதோ செய்து கொண்டிருந்திருக்கின்றனர். அப்படியாப்பட்ட ஒரு ஏர்க்ராஃப்ட்டை மீளுருவாக்க இவரின் புத்தி பயன்பட்டிருக்கிறது அம்பேரிக்க மிலிட்டேரிக்கு. அத்தனை பாகங்களும் தமக்கு அத்துப்படி போல தாளில் படம் வரைந்து  பாகங்களைக் குறிக்கிறார். பின்னர் ஒவ்வொரு கட்டமாக எங்கனம் இந்த பறக்கும் தட்டு வேலை செய்கிறது என்று விளக்கமும் கொடுத்து நம்மை ஏங்க வைக்கிறார்.

Element 115 Moscovium என்ற தனிமத்தைப் பயன்படுத்தி ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் ஒளியாண்டுகளை எளிதில் கடந்து செல்கின்றன என்கிறார். அவை எங்கு கிடைக்கும்? ஹ்ம்.. அதற்கு பதிலில்லை. (விக்கிப்பீடியால என்னென்னமோ எழுதி வெச்சுருக்காங்யள்..ஹிஹி ) , யுரேனியம் தோரியம் இவைகளை விட மிகச்சக்தி வாய்ந்த தனிமம் அது. ஹெவில் ரேடியோ ஆக்ட்டிவ். ஒரு கைப்பிடி அளவு கொண்டு பல்லாயிரம் மெகாவாட்களில் மின்சாரம் மற்றும் அவை சார்ந்த ஆற்றலை உருவாக்க இயலும்.  மேலும் இவை தற்கால ராக்கெட்டுகளைப்போல புகையோ, இல்லை தீப்பிழம்புகளோ இல்லை அது போன்ற உப பொருட்களை தாம் எரியும்போது உருவாக்குவதில்லை.  முழுக்க முழுக்க இது பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருமெனில் உலகமே இன்னொரு நூற்றாண்டை முன்னேறிப்பயணிக்கும்.  எதோ சிக்கல்கள் இன்னமும் இருக்கிறது போலிருக்கிறது.

சரி அதெல்லாம் விடுங்க. இப்ப என்ன பண்றார் நம்ம பாப் லாஸர். வேலை முடிந்ததும் சோலி முடிச்சுவிட எண்ணி, இவருக்கு நினைவுகள் ஏதும் திரும்ப வராமலிருக்க எதேதோ மருந்து மாயங்களைக்கொடுத்து வலுக்கட்டாயமாக உண்ண வைத்து ( ஏலியன்களால் அபகரிக்கப்பட்டவர் அனைவரும் இதையே கூறுவர், எதோ ஒரு பானம் அருந்தக்கொடுத்தனர், பின்னர் அங்கு நடந்த யாவும் எத்தனை யோசித்தும் நினைவுக்கு வருவதில்லை என) அத்தனையையும் மறக்கடித்துவிட்டனர். இவரின் மூளை கொஞ்சும் எடக்கு மடக்கு போலிருக்கு. எங்கயோ தட்டப்போக, தம்மை ஹிப்னாடிஸ சிகிச்சைக்கு உட்படுத்தி அங்கு நடந்த நிகழ்வுகளை அப்படியே வெளிக்கொண்டு வந்து விட்டார். இதை அறிந்த அம்பேரிக்கா, இவர் படித்த பள்ளி , வேலை பார்த்த இடங்கள் என ஒண்ணு விடாமல் போய் சான்றுகளை அழித்துவிட்டன. இன்றைக்கும் தாம் பட்டம் வாங்கிய சான்றிதழைக் காட்டுகிறார் . இது எப்டி சார் பொய்யாகும் என்று.. செம ‘சேமுசுபாண்ட்டு’ படம் மேரில்லா இருக்கு…

இவரை அப்போதே 1990களில் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து உண்மைகளை வெளிக்கொணர்ந்த டீவீக்காரா அப்புறம் இப்ப இந்த ஆவணப்படத்தை எடுத்த ஆவணக்காரா எல்லாரும் இந்தப்பச்சிளம் ஏலியன் பாலகனைப்பாருங்க என்று ஒரு படமாகவே எடுத்து வெளியே விட்டுவிட்டனர். படத்தின் பேர் ‘Bob Lazar Area 51 and Flying Saucers’  அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது. பார்த்து உய்யுங்கள் தோழர்களே..! #BobLazar

No comments:

Post a Comment