டேட் மக்ரே (Tate McRae) பேரே ஒரு மாதிரி இருக்கிறதல்லவா?.. கனேடியன் பாடகி. தாத்தியானா என்ற பெயர் ரஷ்யாவில் இன்னபிற தொட்டடுத்த ஐரோப்பிய நாடுகளில் சகஜம். முதல்ல இவரின் பாடலை கமீலா கெபெல்லோ (சிண்ட்ரெல்லா அழகி ) வின் பாடலென்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்னா பாடல் பாடும் முறை.சிணுங்கல்கள், அப்பால அடிச்சு துவைச்சு துவம்சம் பண்ணும் நோட்ஸ்,அப்பால் யோடலிங், மேலும் அப்படியே அச்சசலான குரல் .
பொதுவாக பிரபலமான ஒரு பாடகரின் குரல் போலவே இருப்பவரை பாட அழைப்பதேயில்லை. அதுதான் வழக்கம். போனால் போகுது என்று நம்ம ஊர் ஆட்கள் திருவிழாக்கச்சேரிகளில் பாட அழைப்பர். அவர்களும் ஒற்றி எடுத்ததைப் போல எஸ்பிபி. ஜேசுதாஸ் ஜானகி போல பாடிப்பரிசில்கள் பெறுவர். இருப்பினும் பின்னணிப் பாடகர்களாக வலம் வருதல் என்பது அரிது. கிடையவே கிடையாது எனலாம். மது பாலகிருஷ்ணன் மட்டுமே விதிவிலக்கு. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஜேசுதாஸே தான். இருப்பினும் இப்போது வாய்ப்புகளின்றிப் போனார்.
டேட் மக்ரே மற்றும் கேமீலா கபேலா சம காலத்தில் வாழ்பவர்கள். இருவருமே தமது தனிப்பாடற்திரட்டுகள் வெளியிடுவதால் இந்தக்குழப்பம் வந்து கொண்டே தான் இருக்கும் எனக்கு இருப்பினும் டெய்லர் ஸ்விஃப்ட்டை முந்திக்கொண்டு இந்தத் டேட் மக்ரேயின் பாடல்கள் அமேரிக்க டாப் டென்களில் எப்போதும் பத்து இடங்களுக்குள் வலம் வந்து கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் அதிரடி பாப்/ மற்றும் கொஞ்சம் ராக் கலந்த பாடல்கள் மற்றும் கேட்சியான ரிதம்களால் முன்னுக்கு உந்தித்தள்ளி இடம் பெற்று விடுகிறது இவரின் பாடல்கள்.
பத்து இடங்களில் அதுவும் முதலாவதாக வருவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. அதன் பின்னில் இருக்கும் அரசியல். தோல் நிறம் , முக்கியமாக விற்பனைக்கணக்கு, உங்களின் பின்புலம், எந்த நாட்டிலிருந்து வந்தீர் என்பதையெல்லாம் கடந்து பயணித்து வந்தவைகள் தான் இடம்பெறும். நல்ல வேளை இவர் இங்கிலாந்திலிருந்து வரவில்லை. இல்லையெனில் பாட்டூன்னாலே அது இங்கிலாந்துக்காரா பாட்டூ தான்னு அளப்பறை பண்ண பெரும் கோஷ்ட்டியே கெளம்பி வந்துரும். (பீட்டில்ஸ், ஸ்பைஸ் கேர்ள்ஸ் எல்லாம் கும்பினி வகைறா.)
Shes all I wanna be பாடல் அதிரடி ரிதமும், ஆடத்தகுந்ததாக இருக்கும் பாடல். ஆடிண்டே பாடுவாளோ, மூச்சிரைக்காதோன்னோ..ஹிஹி.. டேட் மக்ரே நல்ல ஆடற்கலைஞரும் கூடவாம் (warm) ..ஹீஹி. நம்ம ஊர்ல இருக்கிற/ வசிக்கிற/ பாட்ற பாடகர்கள் பாடகிகள் யாராவது ஆடறாளா?ன்னு கேட்டா இல்லவே இல்லைன்னு தான் சொல்லலாம். எஸ்பீபீ ஆடினாரேன்னு எந்திருச்சி வந்துல்லாம் சொல்லக்கூடாது அது அவர் அந்தப்படத்துல நடிச்சதுனால ஆடினார் (?) . மேடைல பாடிக்கிட்டே ஆட்றதுங்கறது நம்ம ஊர் சங்கதியே இல்லை. ஒண்ணு ஆட்ற நடிகர்களுக்கு பின்னிலிருந்து வாயசைப்பதோடே சரி. அப்பால ஒண்ணுமில்லை. அல் மோஸ்ட் இந்தப்பாடலை பாடகி சித்ராவோ இல்லை எஸ்.ஜானகி இல்லையெனில் சுசீலாம்மாவோ ஆடிக்கொண்டே பாடினால் எப்படி இருக்கும் என நினைத்துக்கூட நம்மால் பார்க்கவியலாது. கலாச்சாரத்தடை.! மேலும் கலாச்சாரக்கேடூ...ஹிஹி. அதான்.
அத்தனை மேற்கிசை கலைஞர்கள் ஆடிக்கொண்டே பாடக்கூடியவர் தான். நம்ம ஊர்ல இருக்கிற ஒருத்தரை சொல்லாம். அது DSP மட்டுந்தான். அப்பால ஹிஹி நம்ம ஆண்ட்ரியா (கொண்டு வந்துட்டம்ல ..ஹிஹி). இந்த DSP யப் பார்த்து நம்ம சூர்யா புள்ளாண்டான் , பாட்றார் ஆட்றார் இசைக்கிறார் , பயமாயிருக்குன்னு மேடேலேயே சொன்னார். அதான். ஒண்ணு ரெண்டு புள்ளங்க தான் இருக்கு நம்ம ஊர்ல. தம்பி அநிரூத் ஆடல்லாம் மாட்டான். அவனுக்கு இருக்கிற ஒடம்புக்கு ஆடினா அற்புதமா இருக்கும். உஹூம்.. அனங்க மாட்டான். ஹிஹி. சும்மா நாலு ஸ்டெப்ஸ் போடுவான். பின்னால இருக்கிற ஆடற்கலைஞர்கள் வந்து கவர் அப் பண்ணிடுவார்கள். நடிகர் விஜய்க்கு நன்கு பாட மேலும் அற்புதமாக ஆடவும் தெரியும்னு எல்லாருக்கும் தெரியும்.. ,,,ஆஹா.. இசைக்கத் தெரியாதே...அதான்...! ஒண்ணு இருந்தா ஒண்ணு இல்லை இங்க.
இங்க இருக்கிற பாடகர்கள்/பாடகிகள் கவனம் செலுத்துவதில்லை, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேணும் என. இதுக்கு ஒரு அடிப்படைக் காரணம் சொல்லலாம். கர்நாடக இசை இல்லையேல் ஹிந்துஸ்தானிய இசை பயிலச்செல்வோர் குரு சிஷ்யா பரம்பரையில் வந்து விடுவதால், மாணாக்கர்க்கு கற்பிக்கும் அத்யாபக்குகள் (fuck) அவர்தம் வித்யார்த்திகளுக்கு (மாணவர்க்கு) ஆடல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை. ஏன்னா அவாளுக்கே அது வராது. இஹி இஹி. அதனால குரலை வளப்படுத்துவதில் காட்டும் அக்கறை உடலைச் செம்மையாக்குவதில் காட்டப்படுவதேயில்லை. ஆமாம்.
எந்தப்பாடகரை எடுத்துக்கொண்டாலும் மேற்கில் தம் குரலை விட உடலுக்கு உடல் ஷேப்பிற்கு அதிக கவனம் செலுத்துவோர்தான் அதிகம். கேட்டி பெர்ரி, தூவா லீப்பா, டெய்லர் ஸ்விஃப்ட் (அனோரெக்ஸிக் பேஷண்ட்..ஹிஹி) கமீலா கபேலோ, பிபி ரெக்ஸா, இதில் ஒரு விதிவிலக்கு அடேல் (Adele ) மட்டுமே , பாட்டுக் கேக்கத்தான் வர்றான் என்னைப்பார்க்க இல்லை என உடலில் கிஞ்சித்தும் அக்கறையில்லாது ( இருப்பினும் ஊதிப் பெருத்துல்லாம் இருக்க மாட்டார்.) சாதாரணமாகத்தான் இருப்பார். இருப்பினும் இவர் பாடல்கள் நம்ம ஊர் சலீல் செளத்ரி பாடல்கள் போல் அத்தனை செறிவானதும் கடுமையானதும் கூட. அத்தனை எளிதில் புரிபடாதவை. யூட்யூப்ல இந்தப் பாட்டை தேடி எடுத்துப்பாருங்களேன். Adele - Send My Love (To Your New Lover) ..சிரிக்கக்கூடாது.. அவ்ளவ் தான் அவருக்கு ஆடத்தெரியும்..ஹிஹி. ( கிட்டத்தட்ட இவரொரு இங்கிலீஷ் பானுமதி. அல்லாப்பாசையும் பேசுவார், நடிப்பார் ஆனா ஆடத்தெரியாது ..அதான் ஹிஹி )
இந்தப்பாடலில் (She’s all I wanna be ) 01:48 ல் ஆரம்பிக்கும் வரிகளைக்கேட்டால் அது அப்படியே கமீலா கபேலின் ஸ்டைலில், அவர்தம் குரலியே ஒலிக்கும். அம்மா டேட் தாயே..ஏம்மா ஏன்...இப்ப்டி ..ஹிஹி. இந்தப்பெண்மணி டேட் மக்ரே ஆறுவயசிலியே (ஏஏஏ) பாட ஆட ஆட (எத்தான ஆட) ஆரம்பிச்சுட்டாராம். அது சரி. நம்ம ஊர் தம்பி அனிருத் மூணு வயசிலேயே கீபோர்டு வாசிக்க ஆரம்பிச்சுட்டானாம். நாமெல்லாம் கொஞ்சம் லேட்டு. அதான்...ஒண்ணும் பண்ணமுடியாமப்போச்சு..ஹிஹி.
All I wanna be so bad பின்னர் கொஞ்சம் இடைவெளி விட்டு So bad என ஒருமுறை பாடுவார். அந்தப்பாடலில் இந்த இடத்தின் இடைவெளியில் ஒரு எதிரொலியேனும் இல்லையேல் இன்னொரு முறை அதே So badஐ அவரே பாடுவரென நினைத்தால் பாடமாட்டார். நீங்க பாடுவீங்க அதான் வெற்றி பாடலில். இப்படி இதுகாறும் நினைத்து வைத்துக்கொண்டிருக்கும் பீட்களோ இல்லை வழக்கமான பாடல் முறைகளோ இல்லாது பயணிக்கும் முழுப்பாடலும்.
சரி.இதுக்கு முன்னால என்னேல்லாம் பாட்டு போட்றுக்கார்னு பாக்க போனா எல்லாம் காதல் டோல்வி தான். தனிமைஐ தான். ஒண்ணும் சிறக்கலை தான். இந்தப்பாட்டிலருந்து (Shes all I wanna be ) அதிரடி ஆரம்பிச்சதும் ராங்க்கிங்ல வர ஆரம்பிச்சிருக்கார்.
Oh Im Sorry Sorry that You Love Me, இது பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லுன்னு சொல்வது போல எப்போதும் உள்ளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு எட்டிலும் ஆறிலுமாக இருக்கும் பாடல். நீங்களாகவே விரல்களால் தாளம் போடாமல் இந்தப்பாடலைக் கேட்கவே இயலாது. Foot Tapping Notes! 0:48 லும் 01:40லும் வரும் அந்தச்சேஞ்ச் ஓவர் அற்புதம்.கேளுங்க என்ஜாய் பண்ணுங்கோ. எனினும் சீக்கிரம் தேய்ந்து போகும் பாடல் வகை இது.
மற்றும் Greedy பாடல் (இது கிட்டத்தட்ட எட்டு வாரங்களுக்கு மேல் டாப் டென்னில் நம்பர் ஒன்னில் இருந்தது) இவையெல்லாம் இவரின் சமீபத்திய பாடல்கள். ஏகப்பட்ட ரோட் ஷோக்கள், அவார்ட் மேடைகளில் ஆட்டம் என கலக்கும் டேட். அதெல்லாம் இருக்கட்டும். இவாளுக்கு வயசு 20 தானாம்.. இருபதே இருபது. அது சரி. நம்ம வேலையப்பாப்பம்...