Thursday, September 20, 2018

கீச்சுக்குரல் கன்னி..!



கீச்சுக்குரல் கன்னி..! சக்திஸ்ரீஈஈஈஈஈஈஈ….ஹிஹி… இவ்வளவு உச்சஸ்த்தாயில அந்த ‘நுஸ்ரத் ஃபதே அலிக்கான்’ தான் பாடுவார். சுதி பிசகாம…ஹ்ம்.. டெக்னோ எலக்ட்ரானிக் பாப் என்னென்னல்லாம் இருக்கு இந்தப்பாட்டுல… எலெட்ரானிக் பாப்பு எண்டு முடிச்சிக்கலாம். முழு ஆல்பத்துலயும் இந்தப்பாட்டத்தான் கொஞ்சம் கேக்றாப்போல போட்ருக்கார் ரஹ்மான். 03:03-ல காண்டாமணி போல ஒலிக்கும் அந்த ஒலி. புதுசு. ”வென்று சென்றனை”… ஐ படத்தின் ’லேடியோ’ பாடலுக்குப்பிறகு எனக்கு பிடித்தவாறு இசைத்திருக்கிறார். ட்ரூலி இண்டர்நேஷ்னல். விஎச்1- சேனல்ல போடலாம் டைரக்டா!

.

Monday, September 17, 2018

இளையராஜா



ராசைய்யாவின் நேற்றைய நிகழ்ச்சி அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. குரல் உடைந்து இருக்கிறது ராசைய்யாவிற்கு. பயணக்களைப்பா இல்லை உடல் சோர்வா என எண்ணவைத்தது. இருப்பினும் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் உறங்கினேன். எழுபத்தைந்து வயதில் இத்தனை தூரம் பயணம் செய்து அத்தனை ஆர்க்கெஸ்ட்ராவையும் தயார் செய்து ,ஒருங்கிணைத்து வாசிப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம். அத்தனை களைப்பிலும் தன்னைக் காண வந்திருக்கிறார்கள் என்ற ஒரே நோக்கத்திற்கென வலிந்து தம்மை ஆட்படுத்திக்கொள்கிறார். பாட இயலவில்லை. பல வரிகளை இரண்டு முறை பாடுகிறார் அதே வரிகளை. இனியும் வதைக்க வேணுமா?!. கண்டெக்டர் லாஸ்லோ கவாக்ஸ் முன் வந்து தலை சாய்க்கிறார் பலமுறை எத்தனையோ சிம்ஃபொனி. ஆர்க்கெஸ்ட்ராவை வழி நடத்துபவர்.

விஜய் பிரகாஷின் குரல் கிஞ்சித்தும் எட்டவில்லை பாலுவின் உயரத்துக்கு. அப்படி என்னதான்யா சண்டை ஒண்ணாப் பாடிட்டுப் போகவேண்டீது தானே?! மொத்தமே பதினைந்து பேர் இசைக்குழுவில் இருந்திருப்பர் என நினைக்கிறேன். அதிலும் அதே பிரமிப்பு. கன கச்சிதமாக இசைக்கோர்வை. எனினும் பாடிய பலர் புதுமுகங்கள். என்னவோ ஒன்று குறைகிறதே என்ற எண்ணம் மேலிடாமலில்லை. ராசைய்யாவே வெளிநாடு சென்று நிகழ்வுகள் நடத்தவேணுமா என யோசிக்க வைக்கிறது. ஸ்கைப், வீடியோ கான்ஃபெரன்ஸிங் என பல அறிவியல் ஊடகங்கள் வளர்ந்துவிட்ட போதிலும் நேரில் தோன்றித் தான் நிகழ்ச்சி நடத்த வேணுமா?! முதுமை வாட்டுகிறது அவரை.

’என் ஜோடி மஞ்சக்குருவி’யில் 04:00 லிருந்து 04:10 வரை வரும் வரிகள், அதில் குரல் எது குழல் எதுவெனத்தெரியவே தெரியாது.ஆஹா. சித்ரா அதைக்கொணர முயன்றார். முயன்றார் மட்டுமே. அந்த இடங்களில் வரும் ”கூக்கூ”வைப்பாடினது சித்ரா தானே? இல்லை ஷைலஜாவா ?

”இசைக்கு என்னைப்போல குழலுக்கு இவர்” என அருண்மொழியைக் கைகாட்டினார். இசைத்திமிர் ஆணவம் :) இன்னமும் ஆணவக்கொம்பு இளைக்கவேயில்லை. மனோவைப்பார்த்து நீ தான் பாடுகிறாயா இல்லை வேறு யாராவது பாடுகிறார்களா? என பாலுவை கிண்டலடிக்கவும் செய்கிறார். இதெல்லாம் கட்டையோட தாண்டி போகும்.அம்புட்டும் ஆணவம். அவருக்கிருக்கிற திறமைல 0.0001 விழுக்காடு எனக்கு இருந்திருந்தாலும் இத விடப்பல்லாயிரம் மடங்கு திமிரோட பேசுவேன் நான்..!

இதற்குப்பிறகு இன்ன நோட்’தான் என ஊறிப்போன ராகம்,தாளம் என்றாலும் நேரில் வாசிக்கும்போது சிலிர்க்கத்தான் செய்கிறது. மிக்ஸிங் குறைபாடு இருப்பினும் இல்லையே இங்க இது வரணுமே என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. நனவிலி மனது அறியும் அந்த இசைக்குறிப்புகளை! அடுத்த வாரமும் பார்ப்பேன்!

.

Friday, September 14, 2018

மீண்டும் 'மழைக்குருவி'

யப்பா சாமீகளா , அந்த மழைக்குருவி பாட்டுல என்னதாம்ல இருக்கு ? ஆளாளுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுதறீங்களே..? வரிகள் படு சுமார், இசை அப்பட்டமான உருவல், இழுத்து எடுத்தது, இதெல்லாம் தெரிஞ்சுமா பத்தி பத்தியா எழுதித்தள்றீங்க? ஒண்ணும் புரியலை. இல்ல என் காது தான் மக்கர் பண்ணுதா,எழவு இசை ரசனையே இல்லாமப் போயிருச்சா? ரவ்வும் பகலுமா உக்காந்து ப்ராஹ்ம்ஸ், ரஹ்மானினோவ், மொஸார்ட், மற்றும் இன்னபிற தெரிந்த இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளை மனனம் செய்து அவர்களின் இசைக்குறிப்புகளை எனது கிட்டாரில் எடுக்க எத்தனை சிரமப்பட்டது எல்லாம் வீணா ? 

இசைச்செல்வங்களே.செப்புங்கள் …ஹ்ம்… ! நெஞ்சத் தொட்டு சொல்லுங்க இசைவெறியர்களே. இதே பாடலை ஒரு அறிமுகப் பாடலாசிரியர் எழுதி அதற்கு தரன்குமார், இல்லை ஒரு லீயான் ஜேம்ஸ், ஷான் ரோல்டான் போன்ற திரைக்கும் வந்தும் புகழே கிடைக்காதவர்கள் இசைத்திருந்தால் இத்தனை எழுதுவீரா ?. ஐயா எனக்கொண்ணும் ரஹ்மான் மீது காண்டு இல்லை. கிஞ்சித்தும் யோசிக்காது மேம்போக்காக இசைத்து,அப்படி சொல்வதே தவறு, வாசித்துவிட்டு சென்ற ஒரு பாடலை எப்படிய்ய்யா இப்ப்டீல்லாம் வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுத முடியுது ?! 

விமர்சனம் எழுதுபவர்களெல்லாம் தமக்குப்பேர் கிடைக்கவேணும் என்பதற்காகவே எழுதுகின்றனர் என சுஜாதா சொல்லியிருக்கார். இதையெல்லாம் பாக்கும்போது அது தான் சரி என்று தோணுகிறது எனக்கு. #மழைக்குருவி

.

Tuesday, September 11, 2018

நீராளீ - ஆக்டபஸ்



நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். நீராளி ஹிஹி.. லாலேட்டன் சினிமயல்லே அது கொண்டு. லாலேட்டன் பீஜேப்பீல சேரப் போறாராமேன்னு ரொம்ப விசனப்பட்டுக்கொண்டார் போகன். ஏற்கனவே லால்சலாம்னு ஒரு படத்துல நடிச்சவர் தான் லாலேட்டன். சரி அதேல்லாம் எதுக்கு நமக்கு படத்தப்பாப்பம்னு ஒக்காந்தென், ஒரு பழைய டெம்ப்போவ எடுத்துக்கிட்டு அவரும் அவர் நண்பரும் பெங்களூரிலருந்து கேரளாவுக்கு போகின்றனர். வழியில் ஒரு அபகடம் அதாண்ணே ஆக்ஸிடென்டு.! வண்டி தொங்குது பாறைமேல. கீழ அதலபாதாளம். விழுந்தா ஒரு எலும்பு கூட மிஞ்சாது. 

இங்கருந்து தான் ப்ளாஷ்பேக் ஆரம்புடிக்கிது. வண்டிக்குள்ள மாட்டிக்கிட்டவொடனே கதையும் குடுங்கிப்போகுது. அவரால ஒண்ணும் செய்ய முடியலை. பக்கத்துல இருக்கிற மரத்துல ஒரு மந்தி அந்த அர்த்தராத்திரியிலயும் ஒக்காந்து லாலேட்டன் எந்தா செய்யுன்னுன்னு நோக்குன்னு. ட்ரைவர் ஃப்ரெண்டு மயங்கிக்கிடக்கார். அவர் தம்மட மகளுக்கு வாங்கிச்ச கேக்கை எடுத்து தூக்கிப்போட்டு ஆச காட்றார். இருன்னாலும் பக்கத்துல வரமாட்டார் அந்த மந்தி!. கொண்டு வந்த வைரங்களை எடுத்து தூக்கிப்போட்றார் , உயிரை விட இதெல்லாம் வெறும் துச்சமாணுன்னு மந்திக்கி சொல்றாரா இல்ல நமக்குதான் சொல்றாரான்னு புரியலை. இதுக்கிடையில நாசர் திடீர்னு வண்டி பேனட்ட் மேல வந்து குந்திக்கினு ‘ஞான் கரையின்ன ஆளில்லா நோக்கியோ, இதக்க அங்ஙன ஊதிக்களையாம்’னு கூவறார். இந்த பெர்ஃபார்மன்ஸ பண்றதுக்கு நாசர் தேவையா?! ஹ்ம்,…

வண்டிக்குள்ள குடுங்கிய சமயத்தில ஒரு எதிர்பார்ப்பும் இல்லை ஆடியன்ஸுக்கு. இவர் லாலேட்டனில்லே எங்கனயாகிலும் தப்பிக்கும் என்ற மனநிலைதான் எனக்கும். அதான் ஒரு பிரச்னை. இருக்கிற செல்ஃபோனுக்கு சார்ஞ் போட வழியில்லை. அதில பேலன்ஸும் இல்லை. கோள்ஸ் (calls) வந்தில்லங்கில் இங்க இருக்கிற பிரச்னைய வெளில சொல்ல வழியில்லை. Daylightன்னு ஒரு சில்வஸ்டர் படம் அது பாக்கணும். கிட்டத்தட்ட இதுமாதிரி நிலை தான். ஆனாலும் அவரோட ஒரு பத்து பேர் உள்ள கிடப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும் சில்லிட்டு சீட்டு நுனிக்கு கொண்டு போகும். இங்க லாலேட்டன் எந்து வேணங்கிலும் செய்து இவடருன்னு தப்பிக்கும்னு நமக்கு நம்பிக்கை இருக்கிறதால.. ஹிஹி.. செம போர் சேட்டா!

நதியாதான் பொண்சாதியாம் அவர் ஒரு பிரசவ வார்டுல அட்மிட் ஆயிட்டுண்டு. அவர் எப்பழும் லாலேட்டனுக்கு ஃபோன் கோள் செய்து டைம்பாஸ் செய்றார். அடிக்கடி கால் கட் செய்துவிடுகிறார். கட்டெய்யறது கட்டெய்யறதுன்னு கெஞ்சறார் லாலு. இருந்தாலும் மசியாது அந்த நதியா மொய்து…ஹிஹி :)
 
இதுக்கிடையில ஒரு ஒன்ஸ்ஸைடு காமம். யப்போ காமமெண்டால் மலயாளத்துல லவ்வுன்னு அர்த்தமாக்கும். அவள் லாலேட்டன் மேல காண்டாகி இப்ப லாலேட்டன் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையை போலிஸுக்கோ இல்ல தீஅணைப்பவருக்கோ பறையாது அடம் பிடிக்கின்னு. என்னதான் செய்வார் லாலேட்டன் இந்த அறுபது வயசிலை இதெல்லாம் தேவையா ?!...ஹிஹி… 

ஒரே ஒரு சம்சயம் எனிக்கு. இந்த எழவு படத்துக்கு எதுக்கு நிராளீன்னு பேர் வெச்சது ?...ஹ்ம்… நீராளின்னா மலயாளத்துல ‘ஆக்டபஸ்’ எண்டு அர்த்தம், #நீராளீஈஈ


.

Monday, September 10, 2018

#ஓலாஊபர்

ஓலா/ஊபர் பற்றி நிறையப்பேர் சென்னை அனுபவங்களைப்பற்றி எழுதுகிறார்கள். இங்கும் அதே பிரச்னை உண்டு. ஓட்டுநர்கள் பயணத்தை கேன்சல் செய்வது என்பது.முக்கிய காரணம் பெங்களூரில் உள்ள அரசு பஸ்ஸான வோல்வோ வஜ்ரா ஏசி சர்வீஸ் இப்போது கூடுதலாக மக்களால் விரும்பப்படுவதற்கு ஓலா/ஊபர் டாக்ஸிகளின் அட்ராசிட்டியே காரணம். டாக்ஸியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்களுக்கு தொல்லை, குறிப்பிட்ட நேரத்துக்கு வராது நீட்டித்தல் போன்ற பல வெறுப்புகள் இப்போதெல்லாம் எல்லோரையும் அரசு ஏசி பஸ் சர்வீஸினை நோக்கி போக வைக்கிறது. 

இரவு இரண்டு மணி வரை பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எல்லா முக்கிய பாகங்களுக்கும் செல்ல பஸ் வசதி உண்டு. அதை விட்டால் அதிகாலை ஐந்து மணியிலிருந்து தொடங்கும். எப்போதும் எனது அத்தனை பயணங்களையும் இந்த நேரத்துக்குள் வந்து சேரும் படியாக அமைத்துக் கொள்வேன். ஓலா/ஊபர் இவர்களை நம்பிக் கொண்டிருந்தால் அதோ கதிதான். மேலும் இந்த ஓலா/ஊபர்களில் பயணித்த பின் வரும் ஃபீட்பேக்களில் நான்கு ஸ்டார்களுக்கு கீழ் கொடுத்த பயணிக்கு அடுத்தமுறை ஓலா/ஊபர் டாக்ஸி புக் பண்ண முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற குண்டும் உண்டு. இந்த எழவுகளுக்காகத்தான் நான் அதன்பின்னர் வரும் குறுஞ்செய்திகளுக்கோ இல்லை ஈமெயிலுக்கோ பதிலே சொல்வதில்லை :)
 
ஏர்போர்ட் செல்லும் வழிக்கு இந்த டாக்ஸிகாரர்கள் ”வாங்க கொண்டு போய் விடுகிறேன் பஸ் கட்டணம் கொடுத்தால் போதும்,ஷேரிங்கில் செல்லலாம்” என்று ஆசை காட்டுவர். ஏறினால் அதோடு தொலைந்தோம்.கண்ட இடங்களிலும் நிறுத்தி இன்னும் சில பலர் ஏறட்டும் சார் எனக்காக்க வைத்து கடைசி நொடியில் கொண்டு போய் சேர்ப்பர்.

எனக்குத்தெரிந்து எங்கள் ஏரியாவில் ஆறு ஏழு ஆண்டுகளாக ட்ராவல் சர்வீஸ் நடத்தி வந்த மலையாளி ஒருவர், ஓலா/ஊபர் போட்டியில் தொடர்ந்து நடத்த வியலாது அத்தனை கார்களையும் விற்று விட்டு ஒன்றிரண்டு கார்களை மட்டும் வைத்துக்கொண்டு எங்கள் ஏரியாவிலேயே எதோ சிறிய ட்ரைவிங் ஸ்கூல் நடத்திக்கொண்டிருக்கிறார் பாவம் வண்டி கேட்டால் வீடு வாசல் கொண்டு வந்து நிறுத்துவார்.. #ஓலாஊபர்

.

Thursday, September 6, 2018

'செக்கச்சிவந்த' மழைக்குருவி




ரஹ்மானின் ’மழைக்குருவி’ இங்கு கீச்சிடுகிறதா மக்களே… நல்ல ஃபாஸ்ட் டெம்ப்போல இருக்கிற இந்தப்பாட்ட அப்டியே தூக்கி ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டியேப்பா ..! என்னடா எங்கயோ கேட்டப்போலவே இருக்கேன்னு ஒரே ரோசனை தான் :) நாள்ப்பூஊரா ... :)

மழைக்குருவி, எங்கோ கூவ ஆரம்பித்து எங்கு முடிப்பது எனத்தெரியாமல் அநிருத் சந்தோஷின் காட்டுக்குள் வழி மறந்து அலைகிறது பாவம். எப்டீல்லாம் இருந்த மனுசன். சரி ஃபீல்டவுட் வைரமுத்து வரிகளை அடைகாத்துத்தானே ஆகவேண்டும். இவால்லாம் செத்த ஒதுங்கி ஓரமா ஒதுக்குப்புறமா இருந்து என்ன நடக்குது எண்டு பாத்துக்கிட்டு சொம்மா இருந்தாதான் என்ன ? அய்யனார் கோவில்ல பூசாரி மெதுவா ஆரம்பிப்பார் பயந்துகிட்டு அது மேரி ஆரம்பிக்கிறார் ரஹ்மான்.

“நான் இயற்கையில் திளைத்திருந்தேன்’ என்னா வைர வரிங்ணா..?! அடப்பாவமே.. ”கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து  பேசின பேச்சரவம் கேட்டிலையோ?  பேய்ப்பெண்ணே!”  திருப்பாவை’யை விட்டொழிங்க முத்து. ஏற்கனவே ஆண்டாள்கிட்ட வாங்கிக்கட்டினது போறாதா?!

சரணம் பல்லவின்னு ஒரு வேறுபாடின்றி, மொத்தமே வசனங்களை வாசித்து விட்டுப்போவதற்கு பாட்டு எதற்கு? தாளம் தன்னால் பின்னில் இசைக்கிறது, அதோடு எங்கும் பொருந்தாது வரிகள் செல்கிறது. கேட்கக்கேட்க இன்னமும் தப்பித்தான் போகிறது ரஹ்மான். 01:53 லிருந்து விலகல் ஆரம்பிக்கிறது. 03:04 ல் பாருங்க எங்க போனார்னு தேடத்தான் வேணும்.ஒரு போதும் திரும்பி வர அவரால் இயலவில்லை.

தேநீக்கள் எல்லாம் தம் திரும்பும் வழி மறந்து போகின்றன. எல்லாம் உரங்களும் செயற்கைத் தெளிப்பான்களும் தான் காரணம் என்றறிந்த மோர்கன் ஃப்ரீமேன் அமெரிக்காவில் இதற்கென ஒரு ஆர்கானிக் தோட்டமமைத்து செயற்கை உரம், சோதனைக்கூட தெளிப்புகளின்றி வளர்த்து வருகிறார் தேநீக்களை. அவை தம் வழி தப்பாது இசைக்க, தம் பாரம்பரிய வழியறிந்து கூட்டுக்கு திரும்ப வாழ்நாளில் ஒரு நல்ல விஷயத்தை செய்து வருகிறார். இந்த ரஹ்மான் தேநீக்கும் ஒரு மார்கன் ஃப்ரீமேன் கிடைத்தால் நல்லது.