'மழை தொடங்கறதுக்குள்ள போயிறணும்'
'மழை நின்னவொடன திரும்பிறணும்'
'சின்னதா தூறல் போடறப்பவே ஒதுங்கி நின்னுக்கணும்'
'மழை விட்டவொடனே விறுவிறுன்னு நடையைக் கட்டணும்'
'மழையில நனைஞ்சா காய்ச்சல் வந்திரும்'
'மேகமூட்டமா இருக்குன்னு தெரிஞ்சா கையோட குடை
எடுத்துக்கிட்டு தான் போகணும்'
ஆமா..ஏன் மழை யாருக்குமே புடிக்கிறதில்ல ?
.
Saturday, June 26, 2010
Monday, June 14, 2010
மனிதம்
வெட்டப்படும் மரத்தின்
இலையிலிருந்து விழுந்தது
கடைசி மழைத்துளி
அதில் கோடரி சிலிர்த்தது.
"எங்கோ படித்தது"
கருவறுக்கப்படும் இனத்தின்
கடைசிக்குழந்தை அழுதது
அதில் மனிதம் சிலிர்த்தது,
.
Sunday, June 13, 2010
மகன் தந்தைக்காற்றும் உதவி..!
கிழிந்த கரையான் அரித்த கணையாழியின்
கடைசிப் பக்கங்களை,
இணையத்தில் தேடிக்கொடுத்தான் என் மகன்
மகன் தந்தைக்காற்றும் உதவி..!
.
கடைசிப் பக்கங்களை,
இணையத்தில் தேடிக்கொடுத்தான் என் மகன்
மகன் தந்தைக்காற்றும் உதவி..!
.
Friday, June 11, 2010
ஞானி ?
கூத்தாடிக்கு
கொண்டாட்டம்
ஊர் ரெண்டுபட்டா
இந்தப் 'பட்டவனு'க்கு மட்டும் ஏன்
திண்டாட்டம்
அவர்கள் ஒன்றுபட்டா?
.
கொண்டாட்டம்
ஊர் ரெண்டுபட்டா
இந்தப் 'பட்டவனு'க்கு மட்டும் ஏன்
திண்டாட்டம்
அவர்கள் ஒன்றுபட்டா?
.
டக்ளசும், ஆன்டர்சனும்..!
சாயப்பட்டறைக் கழிவு,காலாவதி மருந்து,
பி.டி.கத்திரிக்காய்,சீனப்பால்மா வினியோகம்
இவையாவும் என்மீது சுமத்தப்பட்ட வழக்குகள்
பொது மன்னிப்பு கிடைக்குமென நினைத்தேன்
ஆனால் நான் 'டக்ளஸ்' இல்லை..!
அதே நாள் பிணையும்,சொற்ப அபராதத்தோடும்
போகும் என நினைத்தேன்
ஆனால் நான் 'ஆன்டர்சன்' இல்லை..!

Wednesday, June 9, 2010
சிங்கம்,புலி மற்றும் நரி'யின் கதை
புலியைக் கன்னத்தில் அடித்தது சிங்கம்
புலியும் வாலைக் குழைத்து ஓடியது
சங்கிலியை,செல் பேசியைக் காணவில்லை
என புகார் கொடுத்தது புலி (?!)
சிங்கம் அதைக்கண்டுபிடிக்குது..
புலியின் உடுப்பு அடுத்தவன் கைக்கு போகும்போது
அதைச்சண்டையிட்டு மீளக்கொடுக்குது சிங்கம்.
சின்ன முள் கீறலைக் காட்டி அழுகுது புலி
திட்டி அனுப்புது சிங்கம்..
பின்பு புலி சொல்லுது சிங்கத்தைக் காதலிப்பதாக..!
சிங்கத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை,,வழக்கம்போல்,,
இடையே வந்த 'நாட்டாமை' நரி சிங்கத்தை ஊர் மாற்றி அனுப்புது..
சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்ததால்
வெளி உலகை வெறுக்குது,திரும்பக் குகை செல்ல நினைக்குது,,!
புலி வந்து புத்திமதி(?!) கூற வெளி உலகையும் தன்
குகையாக நினைக்குது சிங்கம்...
பின் நரியை மதியால் வென்று அனுப்பிவிட்டு(?!)
புலியுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கிறது சிங்கம்
... கதை தொடரும்...

Tuesday, June 8, 2010
தினக்கஞ்சி
கசாப்புக்கு தூக்கு
மங்களூரு விமான விபத்து
சிரிசிரி நாய் துப்பாக்கி சூடு
அரை வேக்காடு ஆரிய சிங்களக்கூத்து..
பர்க்கா'வுக்கும் அர்னாப்'பிற்கும்
தினசரி கஞ்சிக்குப் பஞ்சமில்லை
நமக்கு யார் ஊத்துறா..?
.
மங்களூரு விமான விபத்து
சிரிசிரி நாய் துப்பாக்கி சூடு
அரை வேக்காடு ஆரிய சிங்களக்கூத்து..
பர்க்கா'வுக்கும் அர்னாப்'பிற்கும்
தினசரி கஞ்சிக்குப் பஞ்சமில்லை
நமக்கு யார் ஊத்துறா..?
.
Sunday, June 6, 2010
இணையம்
சென்றடையும் இடம்
ஒன்றே என்பதால்
எங்கிருந்து வேண்டுமானாலும்
செல்லலாம், ஆம்
அதைக் கடவுள் என்றான்
என் நண்பன்
அதை இணையம் என்றேன்
நான்.
ஒன்றே என்பதால்
எங்கிருந்து வேண்டுமானாலும்
செல்லலாம், ஆம்
அதைக் கடவுள் என்றான்
என் நண்பன்
அதை இணையம் என்றேன்
நான்.
Wednesday, June 2, 2010
வலைமுள்
வலைமுள்.
முல்லை'க்குத் தோள் கொடுக்கத்தான் எத்தனை பாரி'கள் ?
லீனாவின் காயத்திற்கு மருந்திட டாக்டரும் மறுக்கிறார்.
நரசிம்ம அவதாரம் வாயிற்படியில் தானே கிழிந்துவிட்டது.
இதை வினவினால் தகுமா ? அல்லது ..இதுவும் கடந்து போகுமா..?

Subscribe to:
Posts (Atom)