மாமன்னனில் இரண்டு காட்சிகள். மிக முக்கியமான காட்சிகள் எனச் சொல்லப்பட்டவை. ஒன்று வடிவேலுவை உட்காரச்சொல்லாமல் நிற்க வைத்தே பேசுவது, இன்னொன்று தலைவியின் இலவசப் பாடசாலையை அடித்து நொறுக்குவது.
நாற்காலியில் வடிவேலுவை உட்காரச்சொல்லவில்லை சரி. அவர் மகன் உதயநிதியை உட்காரப்பா பேசலாம் எனச்சொல்லத்தானே செய்கிறார் ஃபகத். தாழ்த்தப்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த ஒருவரின் மகனை தமக்கு சமமாக உட்காரச்சொல்லத்தானே செய்கிறார் ஃபகத்?.. கொதித்தெழுந்தது மகன், பாசம் காரணமாக இருக்கலாம். தம் தந்தைக்கு சரியான மரியாதை தராததால் அடித்து உடைக்கிறார்.சரி ..இது எப்படி ரொம்ப முக்கியமான காட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது? அடிப்படையில் சிறு நெருடலெனக்கு. தம்மை உட்காரச்சொன்னது பிடிக்கவில்லையா? அடிப்படையில் தடுமாறும் காட்சி இது.
இன்னொன்று கீர்த்தியின் இலவசப்பாடசாலை எதிரிகளால் அடித்து நொறுக்கப்படுகிறது. சரி. அது எதிரியின் பண்பு. அதற்காக இல்லாவதவர்க்கு நன்மை செய்வதாக கூறிக்கொள்ளும் ஒரு பெண்/படித்தவர் இன்னொரு பாடசாலையை/மாணவர்கள் படிக்கும் பாடசாலையை உதயநிதியுடன் கூடவே சென்று புத்தகம்/கணினி என ஒன்றையும் விடாது அடித்து நொறுக்குகிறாரே எப்படி ? என்னால் செரிக்கவே இயலவில்லை. ஒரு ஆசிரியரின் இடத்தில் இருப்பவர் இப்படி நடந்துகொள்வாரா?
ரஹ்மானின் இசை எனப்போட்டிருந்தது. உள்ளே கேட்கும்போது எல்லாம் ராசைய்யாதான் நிறைந்திருக்கிறார். இதற்கு ராசைய்யாவே இசைத்திருக்கலாம். மண்ணுடன் ஒட்டி உறவாட அவரின் இசை தான் பொருத்தம். படத்துக்குள் ஒரு பொருந்தாத ஜீவன் என்றால் அது ரஹ்மான் தான்.
சுரேஷ் கண்ணன்,வடிவேலுவை நாகேஷுடன் ஒப்பிட்டு உயரம் போதவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். நாம் வடிவேலுவை பார்த்ததே அங்கனம் தான். போதாக்குறைக்கு தினமும் அள்ளித்தெறிக்கும் மீம்களும் அவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க ஒப்பவேயில்லை தான். இருப்பினும் வ்டிவேலு தமக்கும் அடக்கி வாசிக்கத்தெரியும் எனவும் மேலும் சீரியஸாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ளத்தெரியும் என்பது தெளிவு.இவ்வளவு நாளா நாம் இவரை எனக்கென்னவோ சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோணுகிறது.
இடைவேளைக்குப்பிறகு படம் தொய்கிறது என்றனர் பலர். நெட்ஃப்ளிக்ஸில் இடைவேளை என்பதே இல்லை. எனக்கோ அங்கனம் தோணவேயிலை. சரியான திரைக்கதை. நேர்கோட்டில் பயணித்து எதிர்பார்த்த முடிவுடன் நிறைவு. மேலும் இவ்வளவு தைரியமாக படம் எடுக்கத்துணிந்த மாரி படத்தின் பெயரையும் ‘அருந்ததியினர் மகன்’ என்றே வைத்திருக்கலாமே. மாமன்னன் எதற்கு ?
#மாமன்னன்