Wednesday, June 19, 2024

கொர்க்கே குக்கூரி - गोर्खे खुकुरी

 


இந்தப்பாடலை சில அஸ்ஸாமி அல்லது சில நார்த் ஈஸ்ட் பெண்கள் ஆடி வெளியிட்ட இன்ஸ்ட்டா ரீல்ஸ் காணக்கிடைத்தது. அப்போதிருந்து இந்தப்பாடலின் ஒரிஜினல் வீடியோ எங்க கிடைக்கும்னு தேடித்தேடி சலித்தது தான் மிச்சம். உலகத்தையே பொரட்டிப் போட்டு தேடினேன். மொழி/சொல் விளங்காதது தான் காரணம். எதேனும் ஒரு கேட்சியான சொல்லோ வாக்கியமோ கிடைத்தால் அதை வைத்து தேடலாம். இது கொஞ்சமும் விளங்காத மொழி...ஹிஹி. ஒரு சொல் போலும் மனதுக்குள் நுழைய மறுக்கிறது அதிலும் பாடலாக வருவதால் இசை மற்றும் ஆட்டத்தில் வரியைக் கவனிக்காது விடுதல் எனபது தொடர்ந்தது.
 
இருப்பினும் வடநாட்டு நண்பர்களிடன் கேட்டுப் பார்த்தும் பயனில்லை. அவர்களுக்கே மொழி புரிபடவில்லை. இது எதோ திரிபுரா மேகாலயாவில் இருக்கும் மொழி குக்கி போன்று (என்னென்ன மொழி இருக்கு பாரு.. இந்திய வெச்சே தேய்க்காதீங்கடா... அடச்சே ...ஹிஹி ) என கூறி விட்டனர். யூட்யூபில் தொடர்ந்து குக்கி சாங் எனத்தேடிப் பார்த்தால்..ம்ஹூம். வெளக்கமாக காட்டுது. இருப்பினும் 30 செகண்ட் வீடியோவில் இருக்கும் ஒரிஜினல் பாடலை கண்டே பிடிக்க முடியவில்லை. ஏன்னா அதில் ’க்குக்குரே’ ’குக்கிரே’ என்று சில சொறகள் வருகிறது.
 
சில காலம் கழிந்தது ...பின்னர் அதே பாடலின் வேறொரு ரீல்ஸில் ஒரு புண்ணியவான் இந்த இரு சொற்களை போட்டே வைத்திருந்தார் கமெண்ட்ஸில். அந்தக் கேட்சியான சொல் ‘கோர்க்கி கோக்கூரி’ ஒரு வழியா இந்தச் சொற்களைப் போட்டு தேடின உடன் முதல் வீடியோ இதான். ஆஹா. கண்டேன் சீதையை என்று கூவினேன். நேப்பாளி பாட்டுய்யா நேப்பாளி பாட்டு. இந்த ரீல்ஸை ஒரு தடவ ஓடவீட்டு கீழ செகுரிட்டி ‘டினேஷ் டம்பர் பிஷ்ட்’ (அடப்பாவி இப்டி ஒரு பேரா...ஒனக்கே அடுக்குமா?? 🙂 ) கிட்ட காட்டிருந்தா ஒரு நொடீல சொல்லீருப்பான். ஹ்ம். சரி தேடுங்கள் கண்டடைவீர்கள்னு கண்டுபிடித்து விட்டேன் பத்து நிமிடம் ஓடும் பாடல். பல தரப்பட்ட வயதுடைய காதல் ஜோடிகள் என பத்து நிமிடம் தொடர்ச்சியாக ஓடும் வீடியோ சாங் சீக்வென்ஸ். அற்புதம்.
 
01:07 லிருந்து தொடங்கி 01:25 வரை ஒலிக்கும் இசைதான் க்ரீம் பாடலுக்கு. அதன் பிறகு இதே ராக/தாளத்தில் அடிப்படையில் பாடி/ஆடிக்கொண்டே செல்லும் இளம்/கிழம் ஜோடிகள்..! ❤
 
இவங்ய பாட்டு பூரா இப்டித்தான்யா இருக்கு. ஆனா செமயா இருக்கு. மண்டபத்துல எழுதிக்குடுத்து ஆட்டையப்போட்ட பாட்டு மேரி இல்லாம ஒரிஜினல் நேப்பாளி சப்பை மூக்கு பாடல். நிஷ்சல் தாவடி’ யின் இசை மற்றும் குரலில் இணைந்து பாடுகிறார் ஷாந்த்திஷ்ரீ. கேட்டு மகிழுங்கள் மக்களே. கொர்க்கி கொக்கூரி பாட்டு. 🙂 🙂

#GorkheKhukuri
गोर्खे खुकुरी