Showing posts with label தமிழ்பேப்பர். Show all posts
Showing posts with label தமிழ்பேப்பர். Show all posts

Wednesday, August 29, 2012

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்


MS விஸ்வநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப் பார்த்துவிட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து தலயக்காட்டிட்டு போறார் சில படங்கள்ல.

 
UnderPlay, Under Acting-ங்கறது நடிக்க, தமது திறமையை/உணர்ச்சிகளை இன்னும் நல்லா காட்ட முடியுங்கற இடங்கள்ல அடக்கி வாசிக்கிறது. ‘பரதம்’" என்று 90-கள்ல ஒரு மலையாளப்படம் வந்திருந்தது. "மோகன்லால்" நடிச்சிருந்த படம் அது. அதுதான் UnderActing – அவருக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் அள்ளிக்குவித்த படம் அது. இது மாதிரி நடிக்க வேண்டிய இடங்கள்லயும் நடிக்காமலே இருக்கிறதுக்குப் பேரு UnderActing இல்ல.இன்ன பிற துறைகள்லயும் தன் திறமையைக் காட்றேன்னு வர்றவங்களால தான் இந்தப் பிரச்சினையே வருது. ஹிந்தில பாடகர்/இசையமைப்பாளர் கிஷோர்குமார் ஏற்கனவே முயற்சி செய்ததுதான் இந்த நடிப்புத்துறை.

Matt Damon –னின் Bourne பட வரிசைகள் போல தாம் யார் என்று தெரியாத Character ஆக உலா வராமல், தான் யாரென்று தெரிந்து சூழலுக்குத் தகுந்தவாறு இங்கு தம்மை மாற்றிக்கொள்ளும் விஜய் ஆண்டனி, கிட்டத்தட்ட மௌனகுரு’" அருள்நிதி பாணிலயே அடிக்குரல்ல பேசி,தான் சரியா நடிக்கிறோமா/இல்லயான்னு தனக்குள்ள நினைச்சிக்கிட்டே படம் பூரா வர்றார். சொல்லப்போனா அவர் நடிச்சிருக்கிற "Character" தான் அவரக்காப்பாத்துது.Body Language, Dialogue Delivery போன்ற Technical விஷயங்கள்ல இன்னும் நிறைய உழைத்திருக்கலாம் விஜய் ஆண்டனி .

படத்தில் வரும் எந்தப்பெண்ணையும் மருந்துக்குக்கூடத் தொட்டுப்பார்க்கவில்லை விஜய் ஆண்டனி. அவர் படிப்பது மருத்துவமே என்றான போதிலும்.(ஒருவேளை அது அவர் மனைவியின் அன்புக் கட்டளையாகக்கூட இருக்கலாம் )

Well Knit Plot , அதற்கேற்ற அருமையான தெளிவான குழப்பமில்லாத திரைக்கதை.எந்த இடத்திலும் படம் தொய்கிறது என்று கூறவே இயலாது. எனினும் படத்தின் ஆரம்பக்காட்சிகள் முழுக்க நந்தா" படம் போலவே அச்சசல் இருக்கிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, தாயின் அன்புக்காக ஏங்குவது , பின்னர் அதுவே எல்லோரையும் அடித்து வைப்பதற்கான காரணங்களாகக் காட்டுவது என்பதெல்லாம் குறைகள். Flirting Friend அஷோக், அப்புறம் அவரின் தோழர்கள் எல்லோரும் நாம வழக்கமாகப் பாக்றவங்க தான்.நம்ம கூட இருக்கறவங்க போலத்தான் வந்துவிட்டுப் போகிறார்கள்.

பாடல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை/உழைப்பை பின்னணி இசைக்கும் கொடுத்திருக்கலாம். எப்போதும் போல பாடலின் ராகத்தை இஸ்லாமியப் பின்னணிக்கென "Mandolin" கொண்டே இசைத்திருப்பது பெரிய Drawback. Psycho படத்தில் வரும் கொலைக்காட்சிகளுக்கான Viloin, Double Bass இங்கும் அவ்வப்போது வந்து போகிறது.

இப்போது இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு எங்கிருந்தாவது உருவி பாடல்களை அமைத்துவிடுவது எளிதாக இருக்கிறது.படத்தின் காட்சிகளை உள்வாங்கி அதன் கதையை உணர்ந்து , Theme Music Concepts களை
வைத்துக்கொண்டு இசைப்பது என்பது இமாலய முயற்சியாகத்தான் தோன்றுகிறது அவர்களுக்கு. கற்பனை வளம் குன்றிய பின்னணி இசை, இது போன்ற Thriller படத்திற்கு உரமேற்றத் தவறுகிறது. Thriller படங்களுக்கெனவே பழைய காலங்களில் வேதா" என்பவரின் இசை வெகுவாகப் பாராட்டப்பட்டது." ‘அதே கண்கள்" பின்னணி இசை இன்னும் நிலைத்திருப்பதே அதற்குச் சான்று. படத்தின் பல இடங்களில் "Predator 1" ன் பின்னணி இசையை உணரமுடிகிறது.


முன்னெல்லாம் English கலந்துதான் Lyrics எழுதினாங்க, இப்ப "Spanish, Portugese" லாம் கூட தமிழ்ப்பாடல்களில் காண முடிகிறது. "மக்காயேலா மக்காயேலா காய மவ்வா " என்ற வரியை பாடலின் துவக்கத்திற்கென ரைமிங்கிற்கென எடுத்துக்கொண்டாலும் ஹாரீஸ்போல அனைவரும் இறங்கியிருப்பது வருந்தத்தக்கதே. அந்தப்பாடலைப் பாடகர்கள் Spanish Background-லேயே பாடியுமிருக்கின்றனர். ராஜா சார் " Elvis Presly " Style ல் அமைத்திருந்த பாடல் " ரம்பம்பம் ஆரம்பம் , ரம்பம்பம் பேரின்பம் " ,எப்போது கேட்டாலும் அது தமிழ்ப்பாடல் போலத்தான் ஒலிக்கும், ஆங்கிலப்பாடல் நமக்கு ஞாபகம் வரவே வராது. பிற தேசத்து பாணி இசையை இங்கு கொண்டுவருதல் தவறில்லை. அதை நமக்குத் தகுந்தவாறு அதன் வாசனை சிறிதும் இல்லாமல் கொடுப்பதில் இருக்கிறது இசையமைப்பாளனின் பங்கு.


படத்தின் அனைத்துப் பாடல்களையும் மேற்கத்திய இசைப்பாங்கில் அமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஈழக்கவிஞர் அஸ்மின் எழுதிய "தப்பெல்லாம் தப்பேயில்லை"" பாடலுக்கு நமது பாணியில் இசை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பாடலின் ஒவ்வொரு சரணத்திற்குப்பிறகும் English ல் குரல் ஒலிக்கிறது. சலிப்புத்தான் வருகுது

என்னய்யா ரொம்பவே அடக்கியே வாசிக்கிறாரே நம்ம விஜய் ஆண்டனி, எடுத்து அடிக்க மாட்டாரான்னு நினைக்கும்போது , அவரின் அப்பா என்று கூறிக்கொண்டு வரும் ராட்டினம் சுற்றுபவரை Barல் வைத்து சந்திக்கும் போது, ஏற்கனவே பெண் விஷயத்தில் பிரச்சினை செய்தவர்களை "Beer Bottle" ஐ எடுத்து அந்த "அப்பாவி(யி)"ன் தலையிலடித்து உடைத்து அடிக்கும் Stunt Scene Fasntastic. நிஜமாகவே தனக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை சீறும் புலி போலக் காட்டியிருக்கிறார். சபாஷ் விஜய் ஆண்டனி!

அஷோக் (சித்தார்த் வேணுகோபால்)கின் நண்பன் சுரேஷைக்கொல்லும் காட்சிக்கென Home Theaterல் "Oh Fortuna" என்ற விதி மற்றும் எதிர்காலத்தைப்" பற்றிக்கூறும் நாடகக்கதைப் பாடல் (Opera Choir Music) இசைக்கிறது . இந்தக்காயர் ம்யூஸிக்கின் கட்டமைப்பு மிக மெதுவாகத்தொடங்கி , கிசுகிசுக்கும் ஒலியுடன் சேர்ந்திசைத்து , பின் Drums ம் யாழுமாக இசைத்து எதிர்பாராத சமயத்தில் சடாரென முடியும் ஒரு இசைக்கோவை. அவனைக் கொலை செய்வதும் அவ்வாறே தொடங்குகிறது. கட்டையை வைத்து அடிக்கத் தொடங்கி பின்னர் எதிர்பாராத விதமாக மேஜை நாற்காலிகளை வைத்து அடித்து பின்னர் உருட்டுக்கட்டையால் அடித்து மாடிப்படிகளில் ஏறுபவனின் கால்களை இடறி குப்புற விழவைத்து நடுமண்டையில் ஓங்கி அடித்துக் கொல்லும் காட்சிக்கு மிகவும் பொருத்தமான இசைக்கோவை

இந்தக் Choir -ன் ஒலி அளவைக் கூட்டிவைத்துப் பெரும் சப்தத்துடன் பின்னணியில் இசைக்க அவரைக் கொன்று பின் புதைத்துவிட்டு வீடு திரும்பும்போது சுரேஷின் பைக்" வாசலில் நிற்கிறது. விஜயோடு சேர்ந்து நமக்கும் தூக்கிவாரிப் போடுகிறது . பின்னரும் சாவியைத்தேடி அலைந்து களைத்துப்போய் புதைத்த இடம் வரை சென்று மீண்டும் பிணத்தைத்தோண்டி எடுத்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து திரும்ப வந்து பைக்கை யாருமில்லா சாலையில் கொண்டுபோய் நிறுத்தி விட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்த பின்னர் அப்பாடா", என்று பெருமூச்சு விடுகிறாரே, அந்த அத்தனை காட்சியிலும் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் அவ்வாறே தோணுவது ஓடிக்கொண்டிருக்கும் படத்துடன் சேர்த்து நம்மையும் கட்டிப்போடுகிறது.

இவ்வளவு கொலைகளையும் செய்துவிட்டு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு வளைய வருகிறாரே அங்கு ஜெயிக்கிறார் விஜய் ஆண்டனி. அதே போல் She knows Too Much So she should be Killed என்று வழக்கமான ஆங்கிலப்படங்கள் பாணியில் ரூபாவையும் போட்டுத்தள்ளி விடுவார் என்று நினைக்கும் நமக்கு அவருக்குள்ளிருக்கும் தம்மையறியாத காதல் அதைத் தடுத்து நிறுத்தி அவரை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு , தம்மைத்தாமே தாக்கிக்கொண்டு Scene Create பண்ணும் காட்சி நமக்கு விஜய் ஆண்டனி மேல் பரிதாபத்தை வரவழைக்கத் தவறவில்லை.

இத்தனை கொலைகளையும் செய்து விட்டு சாமர்த்தியமாக எல்லா இடங்களிலிருந்தும் தப்பிக்கிறார் என்பது நம்ப முடியவில்லையே , எப்பேர்ப்பட்ட தேர்ந்த குற்றவாளியாக இருப்பினும் , To Err is human என்பதற்கிணங்க ஏதேனும் சிறு தடயமேனும் விட்டுச்செல்லமாட்டானா என்ற நமது ஆதங்கம் , அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கடைசியில் வருவது நம்மை ஓரளவு ஆசுவாசப்படுத்துகிறது. மேலும் "எதையும் நிரூபிக்க தடயங்கள் கிடைக்கவில்லை. அதனால நீ தப்பிக்கிற"" என்று அந்த இன்ஸ்பெக்டர் வலிய வந்து விஜய் ஆண்டனியிடம் வழக்கம் போலச் சொல்லாமலிருப்பதும் பெரிய ஆறுதல் நமக்கு.

"பட்டுக்கோட்டை பிரபாகர்" 80-களின் பிந்தைய காலங்கள்ல "மூன்றாம் கை"" (நம்பிக்கை)ங்கற தலைப்பில ஒரு குற்றப்பின்னணி கொண்ட புதினம் எழுதியிருந்தார்,அதிலயும் கதாநாயகன் இதுபோலவே மூன்று கொலைகளைச் செய்து விட்டு நகரின் மணிக்கூண்டில் ஏறி ஒளிந்துகொண்டு அத்தனை களேபரங்களும் அடங்கிய பின்னர் அமைதியாக இறங்கி வந்து தன் வழமையான வாழ்க்கையைத் தொடங்குவான் , அதுபோலவே இந்தக் கதையும் அமைந்திருக்கிறது.

Star Value இல்லாதது ஒரு பெரிய குறை படத்திற்கு.எத்தனை அழகான பெண்கள் வந்து சென்ற போதிலும் யாருக்கும் பெரிதாக தமது திறமை காட்ட வாய்க்கவில்லை. அவர்களில் ஒருவர் கூட நம் மனதில் நிற்கவில்லை.விஜய் ஆண்டனியே படம் முழுக்க வியாபித்திருக்கிறார்.

இந்த நான்" பார்க்கும் அனைவருக்குள்ளும், மிகச்சரியான தவறேயில்லாத திரைக்கதையினால் ,எத்தனை தவறு செய்தாலும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தினால் தப்பிக்க வழியுண்டு என்ற ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. திரைப்பட அரங்கை விட்டு வெளியே வரும்போது அதை அங்கேயே விட்டுவிட்டு வருதல் மிகவும் நலம்...


.

Saturday, August 4, 2012

இசை என்ற இன்ப வெள்ளம்



எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப் பேசுவது போல, 1990களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா..? இந்தக் காலகட்டத்திய இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறதா,,? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் வாழ்வோடு இணைத்துப்பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா..? கேள்விக்கான விடையை கடைசியில் பார்க்கலாம்,..ஹ்ஹ...இல்ல கேட்கலாம்.

எனக்குத் தெரிந்து ரஹ்மானையும், யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இடுகைகள் இடுவதையும், அவர்கள் கூட சில நாட்களுக்குப்பிறகு இளையராஜாவைப் பற்றியும் அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த, இசைத்தவர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுவதைப் பார்க்கிறேன்..அப்ப அவங்க ஆழ்மனதில Originality ய தேடிப்போறதுங்கறது இருக்கத்தான் செய்யுது , ஆனா இப்ப இருக்கிற இசையமைப்பாளர்கள் அதைக் கவனிக்கத்தவறி அவர்களின் ஆவலைப்பூர்த்தி செய்வதில்லை.அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட(Interlude) நினைவில் வைத்திருந்து ரசித்தனர்.இப்போது அது போன்ற ஈடுபாடுகள் காணக்கிடைக்கவில்லை.

இசை தவிர எந்த alternative மனதிற்கு இதம் ?. இந்தக்கால இசை பற்றி யாரும் சிலாகித்துப் பேசுவதில்லை, அதிக கட்டுரைகளோ, பெருவாரியான கருத்துகளோ வருவதே இல்லை , இப்போது இருப்பவர்களைப் பற்றி. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இளைஞர்களுக்கு இசை தவிர பிற விஷயங்களில் அவர்களின் நாட்டம் இருக்கிறது.“அறிவொளி இயக்கம்“ ச.தமிழ்ச்செல்வன் சமீபத்துல பெங்களூர் வந்திருந்தப்ப சொன்ன ஒரு விஷயம். இந்தக்காலக்கட்டத்தில தான் இலக்கியமும், இசையும் மிகவும் வேண்டியதாக இருக்கிறது , மேலும் அதனோட அவசியமும் அதிகம் என்று.

இசை பற்றி தமிழ் வலைப்பூக்கள்ல பல பேர் எழுதுறதப் பாத்துருக்கேன், ..இருந்தாலும் பெரு வாரியான வெள்ளம் போல இளையராஜா மற்றும் எண்பதின் இசையைப்பற்றி எழுதுவது/ விவாதிப்பது போல இப்போதைய இசைபற்றிக் கருத்துகளோ இல்லை விவாதங்களோ காணக்கிடைப்பது இல்லை


மேலும் இப்போது இசை மலிந்து விட்டது , Uniqueness இல்ல, Originality இல்ல இப்ப இருக்கறவங்ககிட்ட, எப்பவுமே இந்தக்கால எந்த இசை ஆல்பம் கேட்டாலும் , இது இங்க இருந்து காப்பி அடிக்கப்பட்டது , இது இங்கருந்து Lift ங்கற மாதிரிதான் இருக்கு,?! Casio, Roland மாதிரியான Keyboards ரொம்ப சுலபமாகவே எல்லாரும் வாங்கக்கூடிய விலையிலேயே விற்பதும் ஒரு பெரிய காரணம். அதில எல்லாமே இருக்கு, எந்த Beats வேணும் , எவ்வளவு நேரம் அதை இசைக்கலாம் , இடையில் எந்த வாத்யக்கருவிகளை எந்த அளவில் ஒலிக்கச் செய்யலாம் , எத்தனை கருவிகள் தேவை என்றெல்லாம் Program பண்ணி வெச்சிட்டா அதுவாவே இசைக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால வீட்டுக்கு வீடு இப்ப ஒரு Composer உருவாகிவிட்டனர்.

எந்தவித இசை பற்றிய ஞானமும் இல்லாமல், அடிப்படைப்புரிதல்கள் இல்லாமல், Program பண்ணா வாசிக்கிதுங்கற நிலைல எந்த Music Soul Touching ஆக இருக்க முடியும்?!

இசை பாடல்களில் மட்டுமல்ல, நம்ம கைபேசிகளிலும், வாயில் மணிகளும், ஏன் கார் ஹார்ன்ஸ்களிலும் கூட இசை ததும்புகிறது, ஃபோனில் கால் வெய்ட்டிங்கிற்கு கூட இசை தான். இசை”பட” வாழ்கிறோம்.மேலும் அந்தக்காலத்திய இசை என்பது கேட்பதற்காக மட்டுமே இருந்தது. இப்போது இசையை காட்சிகளுடன் சேர்ந்து ரசிப்பது என்ற மனோநிலை. எதைச்செய்தாவது கவர்ந்துவிட வேண்டும் என்று காட்சி ஊடகங்களில் இசையைக்கொண்டு செல்வதற்கென உள்ள மெனக்கெடல்கள் இசையைக் கொல்கின்றன.


முக்கியமா பேசறதா இருந்தா அவங்களுக்கு இசை பற்றின ஆழ்ந்த அறிவோ இல்ல அத எப்படி ரசிக்கிறதுங்கற புரிதல்களோ இல்லைங்கறது தான் நிஜம். இன்றைய இசையை நான் ரசிக்கிறேன்னு சொல்றவங்கெல்லாம் Ipod, Iphone , MP3 Playersலயும் இசையை நிரப்பிக்கிட்டு தொடர்ந்தும் கேட்டு சலித்துத்தான் போகுது அவங்களுக்கு. மேலும் இன்னிக்கு ஒரு சொடுக்கில எங்கருந்து இந்த இசை உருவப்பட்டது, எந்த இசைக்கோவை இந்த இசையை கொண்டுவந்ததுங்கறத தெரிஞ்சுக்க முடியுது இந்த Internet Generations ல , அதுவே கூட பெரிய சலிப்பை உண்டாக்கி அவங்கள இந்தக்கால இசை பற்றி சிலாகித்துப்பேச ஒண்ணுமே இல்லங்கற நிலைக்குக் கொண்டு போய்விடுகிறது.

இப்ப இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு IT Engineer போல Oniste Offer கிடைக்காதாங்கற ஆசைலதான் இருக்காங்க. ஒரு படத்துக்கு இசையமைச்சாச்சுன்னா உடனே அத YouTube-லயும் , இன்னபிற சமூக வலைத்தளங்கள்லயும் உடனே பகிர்ந்துகொண்டு International Audience- ஐக்கவர்ந்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கோடயே இருக்காங்க என்பது தெளிவு. இந்த மாதிரியான சிக்கல்கள்ல மாடிக்கிட்டு , அவங்க Target International Audience தான்னு ஆனப்புறம் , அவங்களுக்கு பிடித்த மாதிரியான இசையைக் கொடுத்தே ஆகவேண்டுமென்ற உந்துதல், அழுத்தங்கள் அவங்களயறியாமலேயே அவங்களுக்குள்ளேயே வந்துவிடுகிறது . அதனால தனித்துவம், மனதை மயக்கும் இசைங்கறதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அதனாலேயே உள்ளூர்ல இருக்கிறவங்களுக்கும் இது போன்ற இசையை பெரிதாக கருத்திலெடுத்துக் கொள்ளாமல் போறபோக்கில ரசித்துவிட்டுச் செல்லும் மனப்பாங்கும் தொடர்கிறது.


மேலும் எண்பதுகளின் இசையைப்பற்றி அப்போதிருந்தவங்ககிட்ட கேட்டால் , இது இன்னார் தான் இசையமைத்ததுன்னு தெளிவா எந்த சந்தேகமும் இல்லாம சொல்ல முடிந்திருக்கிறது . இப்ப எல்லாம் அந்த Uniqueness , அல்லது Originality ங்கற பேச்சுக்கே இடமில்லாமப்போச்சு. எல்லோரின் இசையும் ஒன்றாகவே ஒலிக்கிறது. வேறுபடுத்திப் பார்ப்பதற்கு தனிக்காதுகள் அவசியப்படுகிறது. இன்றைய பத்திரிக்கைகள் , மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சின்னங்களை/பெயர்களை மட்டும் நீக்கிவிட்டால் எல்லாம் ஒன்று போலத்தான் தெரியும் அதுபோலவே இன்றைய போஸ்ட்டர்களில் இருந்து இசையமைப்பாளனின் பெயர் மட்டும் நீக்கப்படுமானால் யார் இசையமைத்தது என்று தெரியாமலேயே போய்விடும். சொல்லப்போனா யாருக்கும் தனக்கான ஸ்டைல் என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மனம் போன போக்கில் இசையமைக்கின்றனர். அளவுக்கதிகமான மேற்கத்திய இன்றைய இசையின் தாக்கமும், அரேபியன் இசையின் தாக்கமும் அவர்களுக்குள் வந்துவிட்டதால் அவர்களின் இசை ஒன்று போலவே தெரிகிறது. எது விற்கிறதோ அதைக் கொடுக்கிறேன் என்பதால் வர்ற பிரச்னை இது.

அவசர வாழ்க்கையில் இசையை அணு அணுவாக ரசித்துக் கேட்க யாருக்கும் நேரம் இல்லை. அப்படிக் கேட்க நினைத்தாலும் ஒரு தமிழ் பாடல், ஒரு ஹிந்திப் பாடல், மலையாளப் பாடல், ஆங்கிலப் பாடல் ஸ்பானிஷ் பாடல் எனப் போய்க் கொண்டே இருக்கிறது. தொழில் நுட்பம் மட்டும் மாறவில்லை. மக்களின் ரசனையும் மாறி அறிவும் இப்போது கூடி விட்டதால் எந்த ஒரு பாடலும் அவர்களின் மனதிலும் வாழ்விலும் நிலைத்து நிற்பதில்லை. பாடல்களின் வரிகளை தம் அன்றாடம் உழலும் வாழ்வில் இணைத்துப் பார்ப்பதற்கு யாருக்கும் தோன்றுவதில்லை. எது மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கிறது ? எதைத் தேடிச் செல்கிறான் என்பது ஒரு புதிர். என் கூட பணிபுரிபவர்கள் எல்லாம் Frustrated ஆனா என்ன பண்ணுவ மச்சி’ன்னு கேட்டா என்னா கொஞ்சம் சரக்கடிச்சிட்டு கவுந்து படுத்துக்கலாம் ,இல்ல எதாவது “மால்”ல போயி Figure வெட்டலாம்னு தான் சொல்வார்கள். இல்லாட்டி Weekend ல எதாவது பக்கத்தில இருக்கிற மலைப்பாங்கான இடத்துக்குப்போயி ஜாலியா கும்மாளம் போடலாம்ங்கற நினைப்பிலதான் பலபேர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கவிதை வாசிக்கலாம், மனதிற்கினிய இசை கேட்கலாம் என்று பொதுவாக யாரும் விரும்புவதில்லை.


ஆத்மார்த்த இசைங்கற விஷயத்தப்பத்தி யாருமே கண்டுக்கிர்றதேயில்ல. கும்மாளம் போடவும், Fast Beatsல தன் சந்தோஷத்த வெளிப்படுத்தவும் மட்டுமே இசை தேவையாயிருக்கு. Weekend Parties எல்லாம் ரொம்பவே பிரபலம் IT Filed ல. அங்கெல்லாம் இந்தக்கூத்து தான் நடக்குது..எப்படியும் வெளிநாட்டவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தான் அவை. [ ஏன் எங்க ஆஃபீஸுலயும் இதே கூத்து தான் ]. இலக்கியம் இசை, கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பது என்பன போன்ற கலை மீதான விருப்பங்கள் குறைந்து கொண்டே வருவதும் ஒரு காரணம். 

நம் மண்ணுக்கான இசை , நமது மண்ணின் மொழி , நமது இசைங்கறதெல்லாம் எப்பவோ இல்லாமப் போயாச்சு. எல்லாம் உலகமயம், தாராளமயமாக்கல் , இந்த விஷயங்கள்லாம் நம்ம கலைகளிலும் , இசையிலும் ஊடுருவி நிற்பது ஒரு வலுவான காரணம்.

எண்பதுகளின் இசை பற்றி , முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்படி ஒரு விவாதம் வந்திருக்கு , அதே போல 2020ல, 1990லிருந்து 2010 வரையிலான இசை பற்றிப் பேசுவாங்களோ..?! இருந்தாலும் ஒப்பிட்டுப் பாக்கறதுக்கு அக்காலத்திய நிகழ்கால இசை பயன்படுத்தப்படும்னு நினைக்கிறேன். :-)

எவ்வளவுதான் சொன்னாலும் , அவங்கவங்க இளைமைல கேட்ட , பாத்த , பழகின விஷயங்கள் தான் அவங்களோட பிற்கால வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.! அப்போது , இப்ப இருக்குறவங்க எந்த விஷயங்களப்பத்தி யாருடைய இசை, மற்றும் எழுத்துகள் பற்றி சிலாகித்துப் பேசுவாங்க..?!


.


Monday, July 16, 2012

பில்லா 2 : அத்து மீறு, அடங்க மறு!



அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும் ஒரு மனிதனின் கதை.”அங்கருக்கப்பவே நீ ஒழுங்கா இருந்ததில்ல, இப்பவும் அப்டியே தான் இருக்கியாடா”ன்னு அக்கா கேட்கிறார்.தவறி விழுந்த துப்பாக்கியை தடவி எடுத்து அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது.

சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல், மிருகம் போல நடத்தப்படுதல், முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது தள்ளிவைத்திருத்தல், தாம் நினைத்த அமைதி வாழ்க்கையை, எல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல், இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்ன தான் செய்வான் ? இதற்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதி போல நடத்தப்படுதல் என்பன அவனின் அடையாளங்கள். “அடங்க மறு அத்து மீறு” என்றே களம் இறங்கியிருக்கிறார் ‘தல’ அஜித்.

இதுபோல பல படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது First Blood தான். சொந்த நாட்டின் ராணுவ வீரனை , யார் எதிரி என்றே தெரியாத வியட்நாம் காட்டில் கொண்டுபோய் விட்டு அவனின் அமைதி வாழ்க்கையை சீரழித்து , அதில் அவனுக்கு வரும் முறையான கோபத்தை மிகுந்த வன்முறையோடு  வெறியாட்டமாக ஆடியிருப்பதைக்காட்டிய படம் அது.ஒரு புழுவை தொடர்ந்தும் சீண்டினாலும் அது தன் கோபத்தை காட்டத்தான் செய்யும், இவனாலும் பொறுத்துக்கொள்ளத்தான் முடியவில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் தான் ஒரு கேங்க்ஸ்ட்டராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து செய்யவில்லை. தான் உயிருடன் இருக்கவும் தன்னையும் ஒரு சக மனிதன் என்று நினைக்கவும் வேண்டுமென்ற வெறி கொண்டவனின் இலக்கில்லாமல் பயணிக்கும் வாழ்க்கை வரலாறு இது.


Prequal , Sequal என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. இதை ஒரு தனிப்படமாகவே பார்க்கலாம். என்ன அவரின் டேவிட் பில்லா என்ற பெயர் மட்டும் ஒத்துப்போவதால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம். ஏதிலியாக வந்தவர்கள் , எவ்வளவுதான் தகுதியுள்ளவராயிருப்பினும் , படிப்பிலும், அனுபவத்திலும் உயர்ந்தவராயிருப்பினும் வாழ்க்கை நாமெல்லாம் வாழ்வது போன்று அவர்களுக்கு கிடைப்பதில்லைதான்.

மீன்களை அனுப்பிவைக்கும் சம்பவத்தில் அவர்களை மாட்டவைப்பதில் இருந்து தொடங்குகிறது வலை. அருமையாகச் சிக்கிக்கொள்கிறார் அஜித். ஒவ்வொரு தடவை சிக்கியபோதிலும் தனக்கிருக்கும் இயல்பான கோபத்தினாலும், திருப்பியடிக்கும் திறமை இருப்பதாலும் லாவகமாத்தப்பிக்கிறார். “ என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானாச்செதுக்கினதுடா” ன்னு அடிபட்ட புலி போலச் சீறுகிறார்.எத்தன பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையும் ? , நாமெல்லாம் வாழ்க்கைல பயணிக்கறதில்ல, அடித்துத்தான் செல்லப்படுகிறோம். அடித்துச்செல்லப்படும் வாழ்க்கையையும் நம்மளால செதுக்க முடிந்தால் ?,,,ஹ்ம்ம்...அது தான் இந்த டேவிட் பில்லாவின் வாழ்க்கை.





அவனுக்கு பயம்ங்கற ஒண்ணு இருக்கறதேயில்ல, தளைகள் இல்லாத ஒருவனுக்கு பயம் இருக்கணும்ங்கற அவசியம் இருப்பதில்லை. எதிர்ப்போர் யாராக இருப்பினும் தம் வழியை மறைப்பவராயின் அவர்களைப் போட்டுத்தள்ளி விட்டு முன்னேறுகிறான் பில்லா.வகை தொகையில்லாதபடி கொலைகள், தம்மிடம் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அத்தனை சுளுவாக உபயோகிக்கிறான் பில்லா. “மார்க்கெட் சாவுக்குத்தான் ஆயுதங்களுக்கு இல்ல ,சாவுங்கற ஒண்ணு இருக்கிற வரை ஆயுதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்” னு நமக்குப்புரிய வைக்கிறான் பில்லா. அத்தனையும் உண்மை.

The Devils புதினத்துல பீட்டர் வெற்கோவென்ஸ்கிஎன்னும் பாத்திரத்தின் மூலம், தம் கருத்துக்களைத் தஸ்தயேவ்ஸ்கி வெளிப்படுத்துகின்றார் ... நாம் முழுமனதுடன் அழித்தலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.  இத்தகைய அழித்தலானது தொடர்ந்து நடைபெற வேண்டும்.  இப்போது இருக்கக் கூடிய நடைமுறைகள் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்னும் நிலை வரும் வரை, அந்த அழித்தல் பணியினை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.  இந்தப் போரிலே புரட்சியாளர்கள் விஷம், கத்தி, கயிறு போன்றவை களையும் பயன்படுத்தலாம் இதேதான் பில்லாவும் செய்கிறான்.
“நீ நினைச்சத சாதிச்சிட்ட”ன்னு (யோக் ஜேப்பி) ரஞ்சித் சொல்லும்போது , “இல்ல இதுதான் ஆரம்பம்”னு சொல்லுவான் அகதியான எனினும் அனாதையில்லாத பில்லா. பவளத்துறையிலிருந்து தொடங்கும் அவன் பயணம் ,வைரக்கற்கள் கொண்டு சேர்ப்பதிலிருந்து , பௌடர் வரை சென்று , படிப்படியாக ஆயுதம் கொள்முதல் மற்றும் கலாஷ்னிக்கோவ் கடத்தல் வரை பயணிக்கிறான் பில்லா. முடிவுறா சளைக்காத பயணம் அது. ஒருபோதும் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்காத பில்லா.

அஜித் அதிகம் மெனக்கெடாமல், அலட்டிக்கொள்ளாமல் , ஒரு கேங்க்ஸ்ட்டருக்கான முகப்பாங்குடன், கொஞ்சம் அதைத்த ,எப்போதும் முந்தினநாள் அடித்த பியரின் மப்பில் இருக்கும் முகத்துடனேயே காணப்படுகிறார் படம் முழுக்க. எந்தப் பெண்ணிடமும் ஒட்டுதலோ இல்லை உறவோ வைத்துக்கொள்ளாமல், அவள் அக்கா மகளான (“பார்வதி”) முறைப்பெண்ணிடம் கூட ஒட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் பயணிக்கும் , எதற்கும் இடம் கொடாத பாங்குடனேயே இருக்கிறான் பில்லா. சில இடங்களில் மட்டுமே கோட், அணிந்து வருகிறார், மற்ற காட்சிகளில் சாதாரண Angry Young Man ஆகத்தான் காட்சியளிக்கிறார் தல.



இராமேஸ்வரக்கரையில் வந்திறங்கியதிலிருந்து , அங்கிருக்கும் சக மனிதர்களிடம் பேசும் போதும், படம் முழுக்கவும் ஈழத்துப்பாணியில் ஒரு சொல் கூடப் பேசாமல் சாதாரணத் தமிழ்நாட்டுத் தமிழுடனேயே உலா வருகிறார் அஜித்.அவரின் சக தோழரும் அங்கனமே.அது மட்டும் இடிக்கிறது. மேலும் எல்லோரும் அவரிடம் அடி வாங்குவதற்கெனவே ஜனித்தவர் போலக்காணப்படுவதும், போலீஸ்காரர்கள் கூட, கொஞ்சம் ரொம்பவே இடிக்கிறது.

ஒரு வில்லன் பபாசி , “து தின் பேதின் தேரா லிமிட் க்ராஸ் கர் ரஹாஹை பில்லா” (நீ நாளுக்கு நாள் உன் எல்லை தாண்டிப்போற பில்லா ) என்று ஹிந்தியில் வசனம் பேசுகிறார் திப்பு சுல்த்தான் தாடியுடன். வில்லனுக்கான மிடுக்கு என்ற ஏதுமின்றி. இன்னொரு வில்லன் சின்னதாக French Cut வைத்துக்கொண்டு எப்போதும் ரஷ்யனில் பேசுகிறார், Sorry Chakri Sir, இந்தப்படத்தின் வில்லன்கள் என்னைக்கவரவேயில்லை :-)

படத்தில் வரும் பெண்கள் , ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் வில்லிகள் போலவும் , கதாநாயகிகள் போலவும் , ஒல்லியாக தமது ஸீரோ சைஸ் உடலைக் காட்டுவதற்கெனவே வந்தது போல இருப்பது பெரிய குறை, பில்லா 1 லாவது கொஞ்சம் நம்மூர் பெண் போல குண்டாக நமீதா நடித்திருந்தார். இதில் மருந்துக்குக்கூட அப்படி ஒருவரும் இல்லை. மதுரப்பொண்ணு பாடலில் வரும் “மீனாக்ஷி தீக்ஷித்” கூட ரஷ்யன் டான்ஸர் போலவே இருப்பது வருத்தமே, அதிலும் அவர் கதம்பத்தை தலையிலணிந்துகொண்டு பாடுவது பார்க்கச்சகிக்கவேயில்லை.



“ஆசையில்ல அண்ணாச்சி ,பசி” , இது பஞ்ச் டயலாக் மாதிரி தோணவேயில்ல. அடிமனதில் இருக்கிற விஷயமாத்தான் இருக்கு.இது போல பல விஷயங்கள் பேசறார் அஜித் குரலின் மூலம் இரா.முருகன், ரசிக்கவும் சிந்திக்கவும் அவ்வப்போது தைக்கவும் செய்கிறது வசனம்.வகைதொகையற்ற கொலைகள், மற்றும் வன்முறைகளால் அளவுக்கதிகமாக தணிக்கையில் வெட்டுகள் வாங்கியது , திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பது, பல காட்சிகளை பள்ளிக்கூடப்பிள்ளைகள் கூட யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது போன்றவைகளால் படம் பல இடங்களில் தாவித் தாவிச்சென்று , பார்க்கும் நமக்கு ஆயாசம் வருவது தவிர்க்க இயலவில்லை.

சண்டைக்காட்சிகள் பற்றி பேசவேண்டுமெனில் , அந்த சர்ச் காட்சியை மட்டுமே குறிப்பிட்டுச்சொல்லலாம், பார்வதி ஓமனக்குட்டனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் தல பட்டையக்கிளப்புகிறார். இதே காட்சியை வைத்தே திரைப்படம் தொடங்குகிறது.வெறும் கைகளால் தொடங்கி பிறகு சிறு கத்தியை வைத்து அனைவரையும் குத்திச்சாய்ப்பது, குறிப்பாக கடைசியில் அந்த முகத்தில் வெள்ளைத் தழும்புகளுள்ளவரை நெஞ்சில் குத்திச் சாய்ப்பது நினைத்தே பார்க்காத இடம், Hats Off தல. பின்னர் அந்தக் “கார்னிவல்” நடக்கும் சமயத்திலான சண்டைக்காட்சி, வெகு இயல்பான காட்சியமைப்புடன் கவர்கிறது. மற்ற சண்டைக்காட்சிகளில் Latest Machine Guns வைத்துக்கொண்டு சண்டையிடுவது Hollywood படங்களில் ஏற்கனவே பார்த்துச்சலித்தவை.





பில்லா 1-ஐ ஒப்பிட்டுப்பார்க்கையில் யுவனின் பங்களிப்பு , பின்னணி இசையில் குறைந்தே காணப்படுகிறது. பில்லா 1-ல் முழுக்க Jazz மற்றும் அவ்வப்போது Rock இசையுமாக  80-  களில் வந்த இசை போல வெள்ளம்போலபாய்ந்து வந்தது. இங்கு   Hip Hop  மற்றும்  Arabian Style. பல இடங்களில் தெளிவாகத்தெரிகிறது. அந்த டிமிட்ரி’யின் கோட்டையைத்தகர்த்து விட்டு அஜித் வெளியேறும் போது , பின்னணியில் முழுக்க தீ பற்றி எரிவதற்கான பின்னணி இன்னும் மனதில் ரீங்கரித்துக்கொண்டு இருக்கிறது, தீம் ம்யூஸிக்கை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் பில்லா-2 ஆல்பமில் இடம்பெறாத அரேபியன் பெல்லி டான்ஸ்-க்கான பாடலில் பின்னியிருக்கிறார் யுவன். ஊது குழல்களும் டபுள் பாஸுமாக பின்னணி இசை நம்மை சீட்டின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறது. பார்வதி ஓமனக்குட்டன் அறிமுகக்காட்சியில் “இதயம்” பாடலுக்கான Bit ஐ பியானோவின் அழுத்தமான கட்டைகளால் வாசித்திருப்பது நம்மைக்கொள்ளை கொள்ள வைக்கிறது .கடைசி வரை அந்தப்பாடலை படத்தில் தேடித்தேடிப்பார்த்து அலுத்தே போனேன், ஹ்ம்..அந்தப்பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை.

மற்ற அத்தனை பாடல்களும் , அதனதன் தேவையான இடத்தில் கனகச்சிதமாகப் பொருந்திப்போகிறது. பில்லா 1 –ன் Theme Musicஐ அளவோடு இசைத்திருப்பது படத்தை முன்னையதிலிருந்து வேறுபடுத்திக்காட்டப் பயன்பட்டிருக்கிறது . “ஏதோ ஒரு மயக்கம்” பாடல் காட்சியமைப்பு , சுற்றும் Focus Lights- களுடன் அப்படியே “விளையாடு மங்காத்தா “பாடலின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. “எனக்குள்ளே மிருகம்” பாடல் படமாக்கிய விதம் அந்தப்பாடலுக்கு யுவன் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைக் காப்பாற்றுவது போல இருப்பது மிகவும் வலுச்சேர்க்கிறது. படத்தின் கடைசியில் தல’க்காக அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பாடும் கேங்க்ஸ்ட்டர் பாடல் அசத்தல்.




தர்க்கரீதியாக நம்ப இயலாத நிகழ்வுகள் , தொடரும் வகைதொகையில்லாத கொலைகள் மற்றும் வன்முறை, சீராகப்பயணிக்காத திரைக்கதை, பல மொழிகள் சர்வசாதரணமாக படம் முழுக்க, அதுவும் பார்க்கும் தமிழ் மட்டும் கூறும் நல்லுலகத்திற்குப்புரியுமா என்று கிஞ்சித்தும் நினைத்தும் பார்க்காமல் பேசப்படுதல், சப் டைட்டில் பார்த்தே பல விஷயங்களைப்புரிந்து கொள்ள வேண்டியிருப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்தில் வெட்டவெளிச்சமான குறைகள். 

“தல” அஜித்’துக்கு இது இன்னொரு படம் , யுவனுக்கு தன்னுடைய சில புதிய இசை முயற்சிகளை செய்து பார்க்க முடிந்த ஒரு படம், ரசிகர்களுக்கு Hollywood Range-ல் தமிழில் பார்க்க முடிந்த ஒரு படம்,ஒளிப்பதிவாளருக்கு சரியான தீனி கொடுத்த படம் என்றெல்லாம் கூறிக்கொண்டு நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியது தான். :-)

.
.

Tuesday, February 7, 2012

தோனி – நாட் அவுட்



வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி இப்போதுதான் ரசித்தகணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக.முதலிலேயே சொல்லிவிடுகிறேன் , நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” போன்ற இசையை எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன்.கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.அதிகப்பாடல்களும் இல்லை மொத்தமே நான்கு பாடல்கள்.அனைத்தும் ஒவ்வொரு ரகம்.ஒன்றோடொன்று கலக்காத Different Genre. ராகதேவனுக்கு படைப்பதில் உள்ள ஆனந்தம் வேறேதிலுமில்லை, எனினும் பாடல்களைக்கேட்டு வாங்குபவருக்கே அதிஉன்னத பாடல்கள் கிடைத்திருக்கின்றன என்பது அவரின் எண்பதுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.உதாரணத்துக்கு ஸ்ரீதர் படங்களுக்கு ராஜா சார் இசைத்தது,பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்றோரின் படங்களில் அவர்கள் “சபரி” தேர்ந்தெடுத்த நெல்லிக்கனி போல அவரின் இசை ரசிகர்களுக்கெனெ தேர்ந்தெடுத்த பாடல்கள் என்றென்றும் ராகதேவன் மற்றும் அந்த இயக்குனர்களின் பெருமை பேசிக்கொண்டுதானிருக்கிறது. அவ்வகையில் பிரகாஷ்ராஜ் நல்ல ரசிகராயிருந்த போதிலும், நல்ல தெரிவாளராக  இருக்கிறாரா என்றால் மிஞ்சுவது கொஞ்சம் ஏமாற்றமே.! 




சின்னக்கண்ணிலே

ஷ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய துள்ளலிசைப்பாடல். என்னைக்கேட்டால் இந்த இருவரும் “ முன்பே வா என் அன்பே வா “ பாடலை விட இந்தப்பாடலை அருமையாகப் பாடியிருக்கின்றனர் என்றே சொல்லுவேன். நரேஷ் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்று நினைக்கும்போது எனக்கு சிலிர்த்துத்தான் போகிறது. பனிக்கால அதிகாலையில் அனைவருக்குமே உரித்தான கரகரப்பான குரலில் , இருப்பினும் பிசிறு ஏதும் தெரியாமல் தெளிவாகப் பாடியிருக்கிறார்.( ஹ்ம்,,,பாட வைத்தது யாரு..?!:-)) ).  ‘கண்ணுக்குள் நிலவு’ படப்பாடல் “ஒரு நாள் ஒரு கனவு” போலவே இதிலும் பியானோவின் இனிய சீன மணி போன்ற இசைக்கோவையுடன் தொடங்கும் பாடல் , பின்னர் அந்த பியானோவின் ஒலித்துள்ளல் பாடலின் இறுதி வரை இருவரின் குரலோடும் சேர்ந்தே பயணிப்பது தென்றலின் மென்மையை உணரச்செய்யும் அற்புதம். பாடலின் கட்டமைப்பு ஐரோப்பியன் பாணியில் அமைந்த ஒரு Church Choir ஆகத்தான் இருக்கிறது. Verse and Chorus என்ற அவர்களின் பாணியில் அமைந்த பாடல் இது. Verse –ஐ ஷ்ரேயா கோஷல் தொடங்க Chorus- பின் தொடர்கிறது. 0:54-ல் தொடங்கும் Choir சட்டெனெ முடிந்து பின்னர் வயலின் மற்றும் ட்ரெம்பெட்டின் இசைக்குப்பின்னரும் தொடர்கிறது Choir. தமிழனுக்கு ஒரு புதிய அனுபவம்தானிது. இடையிடையே வந்து செல்லும் புல்லாங்குழல் இசை எந்த இடத்திலும் ஷ்ரேயா’வின் குரலை மீறிச்செல்லாமல் பாடலுக்குள் புகுந்து செல்லுதல் இன்னும் அழகு. எங்க நம்ம நரேஷக்காணமேன்னு கொஞ்சம் நம்மள நினைக்கவைத்த ராஜா சார் , அவரை இதோ நானும் பாட்டுல இருக்கேன்னு அறிமுகப்படுத்துகிறார் 2:11 ல்,கொஞ்சம் அடிக்குரலிலேயே ஆரம்பிக்கிறார் ,ஒரு வேள ராஜா சார் என்ன சொல்லுவாரோன்னு பயந்துக்கிட்டே அடிக்குரல்ல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு :-) . 

அவர் இசையமைத்த பாடல்களில் இரண்டு சரணங்களுக்குமிடையில் அவர் நமது கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு இதுவரை நாம் காணாத, பிறரால் காண்பிக்க இயலாத ஒரு இசைவெளி’க்கு Interludes மூலமாக அழைத்துச்செல்வார் ராஜா. அவர் இசையமைத்த அத்தனை பாடல்களிலும் இந்தப்பயணம் இனிதே நிகழும்.வெறுமனே கண்ணை மட்டும் மூடிக்கொண்டு நம் கையையும், மனதையும் அவரிடம் கொடுத்து விட்டால் , ஒரு கண்ணில்லாதவனை அழைத்துச்சென்று , திடீரென அவனுக்கு கண்ணைக்கொடுத்து, பிறகு அவன் தன் வாழ்நாளில் எப்போதுமே பார்த்தறியாதவற்றைக்காட்டி அவனை அனுபவிக்க வைத்துவிட்டு, அந்த போதையிலேயே அங்கேயே தங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் பிறகு அங்கேயே விட்டுவிடாமல் Interludes முடியும்போது மீண்டும் இந்த உலகிற்கே அழைத்து வருவது என்பது ராஜா சாரால் மட்டுமே சாத்தியம்.

அப்படியான ஒரு அற்புத Interludesஐ இந்தப்படத்தின் எந்தப்பாடல்களிலும் காணக் கிடைக்கவில்லையெனினும் இந்தப்பாடலில் அவர் Choir மூலமாக அந்தக்குறையை தீர்த்துவைக்கிறார். எனினும் இந்த Choir Style முயற்சி அவர் ஏற்கனவே “பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் “கோடைக்காலக்காற்றே” பாடலில் பரீட்சித்துப்பார்த்ததுதான்.!
ஷ்ரேயாவின் குரலுக்கு அவ்வப்போது இடையே வந்து இதம் சேர்ப்பது புல்லாங்குழல் என்றால் நரேஷின் குரலுக்கு பதம் சேர்க்கிறது Synthesizer. 2:33 ல் ஆரம்பிக்கும் ஒரு Interlude ‘இதயம்’ படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் பழயபாடல் போல் உருக்கொண்ட “ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லே “ பாடலின் Interlude ஐ ஒத்திருக்கிறது. அந்தப்பாடலில் 2:46 ல் ஆரம்பிக்கும் Interlude அப்படியே எடுத்துக் கையாளப் பட்டிருக்கிறது இங்கே. ஒண்ணு பண்ணுங்க, இந்த “சின்னக்கண்ணிலே”வை கொஞ்சம் Tempo-வைக்குறைச்சு கேட்டுப்பாருங்க “ஏப்ரல் மேயிலே” வந்துரும்..! :-)




தாவித்தாவிப்போகும்

Opening Music- ல் கிட்டாரும் மணியும் Synthesizer மாக சேர்ந்து ஒலித்து பின்னர் வயலினுமாக ஆரம்பிக்கும் இந்த ராஜா சாரின் குரலில் இருக்கும் பாடல் உங்களைத்தாலாட்டும். இந்தப்பாட்டுக்கு Guitar ல Chords எடுக்கச்சொன்னா என்னால எடுக்கமுடியும்.ஏன்னா அவ்வளவு எளிமையாக இருக்குங்கறத சொல்லவர்றேன். “சின்னத்தாயவள்” என்று நாயகனில் இடம்பெற்ற தாலாட்டிற்குப்பின் இதுதான் நல்ல தாலாட்டு என்றே தோன்றுகிறது எனக்கு. Pathos ஆக இசைக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல் தாலாட்டவும் தான் செய்கிறது. முதல் Interlude க்கென 1:16 ல் தொடங்கும் வயலின் , பின்னர் Double Bass உடன் இணைந்து கொண்டு இசைக்க ட்ரெம்பட்டின் அமுக்கமான ஒலியுடன் நம் மனதை கனம் கொள்ள வைக்கிறது. இரண்டாம் Interlude , Guitar உடன் தொடங்கி Violin இழைக்க இழைக்க மெருகு ஏறுகிறது.இந்தப்பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் இரண்டு Interludes களும் பாடலை விட்டு வேறு தளத்தில் பயணித்து பின்னர் பாடல் வரிகளுக்கென ஓய்கின்றன.  சின்ன சிம்ஃபொனி என்றே இந்தப்பாடலைக்கூறலாம் என்னுமளவிற்கு அதிக சங்கதிகள் விரவிக்கிடக்கிறது பாடல் முழுதும்..ராஜாவின் கூடவே பாடும் Violin நமக்கு ஒரு Feelஐ உருவாக்கி நம்மை பாடலோடு ஒன்றத்தான் வைக்கிறது.





விளையாட்டா படகோட்டி

இந்தப்பாடலுக்கு இரண்டு Versions இருக்கு, Male Version க்கு ஹரிஹரனும் , Female Versionக்கு ஷ்ரேயாவுமாக. எனக்கென்னவோ ஷ்ரேயாவின் Version தான் Better ன்னு தோணுது. மேலும் இந்தப்பாடல் முழுக்க “விருமாண்டி”யில் ஷ்ரேயாவும் , கமலும் சேர்ந்து பாடின “ஒன்ன விட” பாடலின் பாணியிலேயே அமைந்தது போலவே இருக்கிறது.பாடல் தொடக்கத்திலிருந்து இடையிலும் , முடிவிலும் கூட அதே பாணியிலேயே தான் , Treatment செய்யப்பட்டிருக்கிறது. Rustic Style ல் Chorus உடன் ‘தந்தனத்தன தந்தன்னா’ என்று தொடங்கும் இந்தப் படகோட்டியின் பாடலில் , ஆழியில் ஆடும் ஓடம் போல் நாமும் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க இயலவில்லை.இந்தப்பாட்டு முடிஞ்ச பிறகும் Loop-ல் வைக்கப்பட்டது போல திரும்பத்திரும்ப என் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது  நாள் பூராவும் , ஏதோ போதை ஏறி பின்னர் இறங்காமல் , அதையே இன்னும் அனுபவித்துக் கொண்டேயிருக்கவேணும் என்பது போன்ற உணர்வை இந்தப்பாடல் தருகிறது. கூடவே இசைக்கப்படும் வயலினுடன் , Sarod-ம் கூடவே சேர்ந்து இசைக்கப்பட்டிருக்கும் என்றே எனக்குப்புலப்படுகிறது கேட்கும் போது. அலையில் மேலேறிக்கீழிறங்குவது போல , சட்டென்று அல்ல, கைதேர்ந்த படகோட்டியின் படகில் பயணித்தால் , அவன் அலையின் முகடுகளுக்கேற்ப படகை திறம்பட செலுத்துபவன் போல ராஜா சார் இசைத்திருக்கிறார் இந்தப்பாடலை. தவறியும் கீழே விழுந்துவிடாமல் அதே நேரம் உங்களை முழுதும் அந்த அலைக்கழிப்பிலேயே வைத்திருப்பதும் இந்தப்பாடலின் சிறப்பு. பல விதமான ஏற்ற இறக்கங்களுடனான நோட்ஸ்களுடன் Violin ன் கற்றைகளால் இசைக்கப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். இசைத்த Interludes களும் இந்தப்பாடலில் பாடலை விட்டு வேறு திசையில் பயணிக்காது பாட்டின் Tempo விற்குத்தக்கவே வந்து செல்கிறது.

இந்தப்பாடலைக்கேட்பதற்கு நீங்கள் உங்கள் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.எந்த மனநிலையிலிருப்பினும் உங்களை பாடலின் Mood அதன் திசையில் பயணிக்கவைக்கும் , வழிதவறவிடாமல்.

Male Version- ஐப்பற்றிக்கூற வேண்டுமெனில் , ஹரிஹரனுக்கு பிருகா பாடக்கூடிய குரல்.அதனால் அவர் நிறைய Yodelling- கிற்கு அதிகம் இடம் கொடுப்பார்.பாடலில் அது இல்லாத போதும் வரிகள் முடிந்தபின்னருமான ராகத்தை தொடர்ந்து பாடிக்கொண்டேயிருப்பார் , நல்ல உதாரணத்துக்கு “பொய் சொல்லக்கூடாது காதலில்” பாடலைக்கேட்டீர்களானால் எளிதில் விளங்கும்.அந்த Extra Fittings ராஜா சாரிடம் எடுபடுவதில்லை.அவர் எதையும் , பாடலுக்குத்தேவையானவற்றை மட்டுமே நறுக்கிக்கொடுக்கவைப்பார். அது போல அமைந்தது தான் “ காசி” படத்தில் ஹரிஹரன் பாடிய அத்தனை பாடல்களும், அவரின் இயல்பிலிருந்து முற்றிலும் மாற்றி தமக்கெனப் பாடச்சொல்வார் ராஜா. ( சுருக்கமாகச்சொன்னால் பாடுவதில் சுதந்திரம் கிடைக்காது ராஜா’விடம் :-)). அதனாலேயே இந்த Male Version ல் எனக்கு உடன்பாடில்லை.




கிரிக்கெட்டில் தோனி எப்பவுமே ஸிக்ஸர் அடிக்கிறதில்ல. Ones and Twos மற்றும் சில சமயங்களில் Boundry-யுமாக அடிப்பது போலவே ராஜா சாரின் இசை இந்தப்படத்திற்கு. நாமும் கொஞ்சம் காத்திருக்கலாம் படத்தின் பின்னணி இசையை அனுபவிக்க..!



Monday, January 30, 2012

மயிலு : இளையராஜாவின் தீராத இசை வெள்ளம்







எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் கொலவெறி’யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரின் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா ப்ளஸ்’ஸ ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும்.அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் தம்மை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் மேலும் தமது பாணியிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் அதே பாணியில் இசையைக் கொடுத்திருக்கிறார் ராஜா சார். அனைத்துப்பாடல்களும் வில்லுப்பாட்டின் இசையை ஒத்திருப்பதாக , உருக்கொண்டு இசைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த 16 வயதினிலே மயிலு போலவே , இன்னும் இளையராஜாவின் இசைக்கு வயது பதினாறேதான் என்று நிரூபிக்கிறது அத்தனை பாடல்களும்..!


நம்மளோட பாட்டுதாண்டா

கார்த்திக், திப்பு மற்றும் சைந்தவி இணைந்து பாடிய பாடல் , “ நம்மளோட பாட்டுத்தாண்டா ஒலகம் பூரா மக்கா, கண்டபாட்டக்கேக்க நாங்க காணப்பயறு தொக்கா..?! “ என்று ஆரம்பிக்கும் பாடல் “வேற எந்த பாட்டயும் நாங்க உள்ளவிடமாட்டோம்” என்று திப்பு’வுடன் கார்த்திக்கும் தொடர்கிறார். தொடக்கத்தில் வில்லுப்பாட்டு கோஷ்டியினரின் பாடல்கள் போல உருப்பெற்றிருக்கும் பாட்டு தொடர்ந்தும் அதே பாணியில் பின்னால் கோரஸ் ஒலிக்க கை விரல்களால் நம்மை தாளம் போடவைக்கும் பாடல். இப்டி ஒரு பாட்டு கேட்டு எத்தன நாளாகுது..?! ஹ்ம்.. யுவன் கூட “கோவா”வில ஒரு பாட்டு போட்ருந்தார் , ஏறக்குறய இதே பாணீல..ஐயா இத இப்டித்தான் சொல்லணும் , அய்யா பாட்ட பாத்து மகன் போட்ருந்தார்னு :-)
 
இப்பல்லாம் ஊர்த்திருவிழாவில என்ன பாட்டு போட்றாங்கன்னு பாத்தா இன்னும் கரகாட்டக்காரனும், “ஒத்த ரூவா தாரேன்” பாட்டுந்தான் ஓடிக்கிட்டுருக்கு, இனிமே இந்தப்பாடல் ஒலிக்கும் அத்தனை திருவிழாக்களிலும். 1:47 ல் தொடங்கும் ஷெனாயின் ஒலியுடன் “தப்பு” வாத்தியம் பின்னர் தாளத்திற்கென சேர்ந்து கொள்ள அது தொடர்ந்தும் 2:10 வரை ஒலிக்கிறது.ராஜா சார் எப்பவுமே ஒரே நோட்ஸ பல காற்றுக்கருவிகள் வாசிப்பவருக்கு கொடுத்து [ க்ளாரினெட் , புல்லாங்குழல், ஷெனாய் போன்ற ] ஒரே நேரத்திலும் அந்த நோட்ஸ்களை வாசிக்கச்சொல்வார் , அதனால இந்த வாத்தியத்துலதான் இசை வருகிறதுன்னு சாதாரண காதுகள் கொண்ட நம்மால பிரித்தறிவது மிகக்கடினம்.சிம்ஃபொனி இசைப்பவருக்கு இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா..?! ஹ்ம்..?! பிறகு 2:10 லிருந்து 2:20 வரை அதே நோட்ஸை வயலின்,மாண்டலின் மற்றும் லீட் கிட்டாரில் வாசிக்க முதல் interlude  முற்றுப்பெறுகிறது. பின்னர் திப்பு’வே பாடத்தொடங்குகிறார் முதல் சரணத்தை. “செந்தூரப்பொட்டு  மாறி இப்ப ஸ்டிக்கராகிப்போச்சு “ என்று அடிக்குரலில் திப்பு பாடும்போது இதுகாறும் முப்பது ஆண்டுகளாக நம்மை மயக்கிக்கட்டிப் போட்டிருந்த ஹார்மனி பின்னில் இசைக்கிறது சைந்தவி மற்றும் பிற பெண்களின் குரல்களில்.. ஐயா சாமி ,,இப்பல்லாம் இதெல்லாம் கேக்கவே முடியிறதில்லீங்கோ….தொடருங்க..:-) 3:14 ல் தொடரும் தவில் இசையுடன் பின்னர் சேரும் ஷெனாயும் , மத்தளம் கொஞ்சம் எதிர்நடை கொடுக்க , திப்புவே இரண்டாவது சரணத்தையும் பாட கோரஸ் அவ்வப்போது வந்து செல்கிறது , Typical Raaja Style குதூகலமான பாட்டு..!




துக்கமென்ன துயரமென்ன

ரீட்டா என்ற ஒரு புதுப்பாடகியுடன் ஸ்ரீராம் பார்த்தசாரதி இணைந்து பாடும் பாடல்.எனக்கென்னவோ பாடல் தொடங்கியவுடனே “நிலவே முகம் காட்டு” ( எஜமான் படத்தில் இடம் பெற்ற பாடல் ) மற்றும் “முத்துமணி மால “ ( சின்னக்கவுண்டர் படப்பாடல் ) தான் ஞாபகம் வந்து விட்டது. மனதை உருக்கும் பாடல் முற்றிலும். முதல் Interlude ,violin மற்றும் புல்லாங்குழலுடன் 0:56 ல் தொடங்கி பின்னர் Synthesizer உடன் 1:18 ல் முடிவடைய  ஸ்ரீராம் தொடர்கிறார் முதல் சரணத்தை. இரண்டாவது Interlude கொஞ்சமே வந்தாலும் , பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீக்கிரமே முடிந்துவிடுகிறது. பாடல்களில் இரண்டு Interludes களையும் , வேறுவேறாக இசைத்தது , அவர் இசைக்கத்தொடங்கிய காலத்திலிருந்தே ராஜா சார் மட்டுமே.அதுவரை ஓரே மாதிரியான Interludes களையே தமிழ்கூறும் நல்லுலக மக்கள் கேட்டு வந்தனர். இந்தப்பாடலிலும் ராஜா சார் இரு வேறு இசைத் துணுக்குகளை இரண்டு interludesகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப்பாடலை “இலங்கை வானொலி’ல (அதெல்லாம் ஒரு காலம் மக்கா ) , இரவு பத்து மணிக்குமேல் , இரவின் மடியில் என்று B.H.அப்துல் ஹமீத் இசைப்பார். அந்த நிகழ்ச்சிக்கான மிகப்பொருத்தமான இரவுச்சூழலுக்கான பாடல்,இதைக்கேட்ட பிறகு உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வரவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்..! :-)




யாத்தே அடி யாத்தே

பவதாரிணி தான் சிரமப்பட்டு “யாத்தே யாத்தே” என்று ஆரம்பிக்கிறார். “ பாவிப்பய பாத்தே கொல்லுற்யான்” என்றும் தொடர்கிறார்.இருந்தாலும் அந்தப்பாடலுக்குத் தேவையான விரகத்தை தன் குரலில் காட்ட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலச்சந்தர் , “தாஜ்மகால்” பட ஆரம்ப விழாவில பேசினது தான் எனக்கு நினைவுக்கு வருது.அந்த நிகழ்ச்சில அவர் பாரதிராஜாவை பற்றி சொன்னார் இப்டி.” என்ன அப்பாவே மகனுக்கு காதலிக்கிறது எப்படி’ன்னு சொல்லிக்குடுக்கிறதில் ஒரு Embarrassment இருக்கும்னு சொன்னது போல , ராஜா சாரே எப்டி தன் மகளுக்கு அத விளக்கி சொல்லிருக்க முடியும்னு,J ரொம்பக்கஷ்ட்டம் தான். “மஸ்த்தானா மஸ்த்தானா” பாட்டுத்தான் முதலில் ராஜா சாரிடம் பவதாரிணி பாடின பாடல்னு நினக்கிறேன்.அப்ப ராஜா சார் இப்டி சொல்லீருந்தார்னு ஒரு பேட்டில பவதாரிணி சொல்லிருந்தார். “ சரியா கத்துக்காமவே பாட்ட பாடீட்ட”ன்னு..அதே மாதிரிதான் இந்தப்பாட்டும் இருக்கு,! இருந்தாலும் இடையில பாரதி படத்திற்கென அவர் “ மயில் போல பொண்ணு ஒண்ணு “ என்று பாடி தேசீய விருது பெறவும் தவறவில்லை அவர் :-)
 . 
Friends படத்திலருந்து தன்னுடைய வழக்கமான Bongos வெச்சிக்கிட்டு தாளத்துக்கென இசைக்கிற பாணிய மாற்றிவிட்டார் ராஜா சார். பின்னர் வந்த பாடல்களில் எதிலும் அந்த Bongos பின்னணி தாள இசையை கேட்கவே நம்மால் முடியல. அதே பாணியில் இந்தப்பாடலும் ஸிந்தஸைஸரே பாடலின் தாளத்திற்கென யன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஓரளவு “ஒளியிலே தெரிவது ( அழகி படப்பாடல்) “ போல ஒரு Feelஐ இந்தப்பாடல் தருவதை தவிர்க்க இயலவில்லை.1: 32 ல் Interludeக்கென பவதாரிணி ஹார்மனி பாடுகையில் ‘ஓளியிலே’ நன்றாகவே ‘தெரிகிறது’ :-). 2:50  ல் தொடங்கும் இரண்டாவது Interlude  முழுக்க ஸிந்தஸைஸரிலேயே இசைக்கப்பட,பின்னணிக்கு மட்டும் தபேலா சேர்ந்து கொள்கிறது தாளத்திற்கென. பின்னர் கூடவே தொடர்கிறார் ஸ்ரீராம் பார்த்தசாரதி.


என்ன குத்தம்

வழக்கமான கரகரப்பான ராஜா சாரின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் , காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பதெற்கென இசைக்கப்பட்ட பாட்டு போலவே இருக்கிறது. இருந்தாலும் அந்த மதுரக்குரல் இன்னும் நம் மனதை கீறிடத்தவறவில்லை. வயலின் கூடவே பாடுகிறது ராஜா சாருடன். சோகத்தை இழைத்து இழைத்து ஓடவிடும் பாடலுக்கு உரம் கொடுக்கும் அதிர்வில்லாத பின்னணி இசை. “நானானனா “ என்ற ராஜா சார் பாடும் பாடல்களில் எப்போதும் காணக்கிடைக்கும் ஹார்மனி இந்தப்பாடலிலும் ஒலிக்கத்தவறவில்லை. ஒலம் ஒலிக்கிறது பாடலில். சமீபத்திய ராஜா சாரின் நிகழ்ச்சியில் “பிரகாஷ்ராஜ்” கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தமது பழைய பாடல்களில் ஒன்றை அவர் குரலிலேயே பாடியது போலவே இருக்கிறது இந்தப்பாடலும்..!


கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் என்று குதூகலமாக ஆரம்பிக்கிறார் சின்னப்பொண்ணு. “ஒத்த ரூவா தாரேன்” பாடலின் பின்னணி தவில் போல தொடங்கும் இசையுடன் தொடர்ந்தும் பாடுகிறார் சின்னப்பொண்ணு.முதல் Interlude 1:15ல் நாதஸ்வரத்துக்குப் பின்னரான புல்லாங்குழல் இசை’யை இப்போதும் “அருண்மொழி”யே வாசித்திருக்கக்கூடும். அத்தனை நேர்த்தி ,அத்தனை கச்சிதமாக ஒலிக்கிறது , பாடலின் Tempoவிற்குத்தகுந்த மாதிரி..! :-) பாடல் முழுக்க நாதஸ்வரமும் ,தவிலுமாக நமது முந்தைய ஊர்த்திருவிழாக்களை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. :-)