Saturday, May 16, 2015

பிடரிகள்


"இன்மை" மே மாத இதழில் வெளியான கவிதைகள்





 
எல்லாம் மாயை
என்றெழுத
மசியும் காகிதமும்
கூடவே ஒரு சூடான தேநீரும்
தேவைப்படுகிறது
*****
 
ஒவ்வொருமுறையும்
கூரிய நகங்களுடன்
அணில் ஏறி இறங்கும்போது
அந்த மரம் அகமகிழ்ந்துகொள்கிறது
 
****
 
என்னுள் கடந்து
ஊடுருவ இயலாத ஒளி
எனது பின்னில்
கருநிழலாக
பதுங்கி நிற்கிறது

*****
ஒருமுறை குத்திய கொக்கு
மறுமுறையும் குத்தமுடிவதில்லை
அதேயிடத்தில்
அந்தக்குளத்தில்
****

மழை நாட்களில்
பிடரிகள்
குதிரைக்கும் சிங்கத்திற்கும்
ஒன்று

****