Monday, October 26, 2020

'I Love You Baby’

 


'I Love You Baby’ என்ற பாடல் டிக்டாக்கில் மிகப் பிரபலமாம். நான் டிக்டாக் ஆப் எப்போதும் நிறுவியதில்லை. இந்தப்பாடல் மில்லியனுக்கும் கூடுதல் மீள் பகிரப்பட்ட பாடலாம். கேட்கவும் ரம்மியமாக இருக்கிறது. இதை ஒரு விளம்பரத்தின் பின்னணிப்பாடலாகவே கேட்டுக் கொண்டிருந்தேன் எப்போதும் வெளிநாட்டு விளம்பரங்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலப் பாடல்கள் ஒலிக்கும் , ana_d_armas என்ற ஒரு பெண்மணி (ஹிஹி... இவாளப்பாத்துட்டு தான் பாட்டே கேட்டேன்...ஹிஹி இதே ஐடி தான் இன்ஸ்டாவிலும்..இஹி இஹி..) இப்ப ஜேம்ஸு பாண்டூ படத்துலல்லாம் (No Time to Die) நடிக்கிறாராஆஆஅம்...

அப்படியான ஒரு விளம்பர ஜிங்கிள்’ஆக இது இருக்கலாம் என நினைத்தேன், பின்னரும் ஒரு நாள் சேனல் விஎச்1-ல் இந்தப்பாடல் ஒலித்தது. ஆஹா... Surf Mesa என்ற பாடகரின் ily என்று ஆரம்பிக்கும் பாடல். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னர் வெளியான பாடல். இணையமே கெதின்னு மூழ்கிக்கிடக்கிறதால (கரோனாவுக்கு நமஸ்தே) இப்ப இந்த மாதிரி பாட்டெல்லாம் உந்தித்தள்ளி மேல கொண்டு வருது. எல்லாம் கொரொனோவின் ‘கிருப கிருப’ தான் ஹிஹி.. இதே பாட்டை அப்படியே ஒருமணி நேரத்துக்கும் கூடுதலாக ஓட விட்டு ஒரு வீடியோ சீக்வென்ஸ் கெடக்கு யூட்யூபில். முன்னால Continuing Music என்று ஒரு ஜானர் ரொம்ப பிரபலம்.. அது மாதிரி இதுவும்! ஐ லவ் யூ பேபி.! #ily

https://youtu.be/SfQJiGJO5Bo - விளம்பரம்
https://youtu.be/89degLrNZM8 - பாடல்



Wednesday, October 7, 2020

கடைசி வரை - பாவண்ணனின் சிறுகதை

 

பாவண்ணனின் சிறுகதை ’கடைசி வரை’ வாசித்தேன் பதாகை இணைய இதழில். அத்தனை விவரிப்புகள் அத்தனையும் காட்சிக்கோவையாக மனதுள் வந்து நிற்கிறது. ஒரு எழவு வீட்டை இவ்வளவு அட்சர சுத்தமா விவரிக்க முடியுமா ? பேண்டு வாத்திய குழு, பறையடிப்பவர்கள், உறவுக்காரர்கள் ஊர்க்காரர்கள் , அவர்களுக்கிடையேயான உரையாடல் எதிலும் செயற்கை இல்லை. அந்த பேண்டு குழுவினரின் பாடல் தெரிவுகள் அபாரம்.  அண்ணனுக்கு இந்தப்பாடட வாசிச்சாதான் தூக்கமே வரும். வாசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கலைஞனாக மட்டுமே அந்த சூழலில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கிளாரினெட் கலைஞர். ஹ்ம்...அற்புதம்.

ஒரு முதுமையடைந்த  கீதாரி’யின் இறப்பு. மகன்கள் யாருமில்லை மூன்று மகள்கள் மட்டுமே. அத்தனைபேரையும் மணமுடித்துக்கொடுத்து விட்டு வயது மூப்பில் இறந்து போகிறார். துணைக்கென யாருமில்லை. சந்தையில் கிடைத்த ஒரு சிறுவன் மட்டுமே துணை.அவனுக்கோ ஒரு விபரமும் தெரியாது. அவர் இறந்தது கூட. கடைசி மயானக்காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள் நிற்கின்றன. முடிவு என்னவோ எனக்கு சம்மதமில்லையெனினும்  விவரித்த விதம், ஊர்க்காரர்கள்,பேண்டு வாத்திய கோஷ்டி தேர்நீர் கொண்டுவந்து கொடுக்கும் சிறுவர்கள் என அப்படியே ஒரு இழவு வீட்டின் கோலங்களை காட்டுகிறது.

https://padhaakai.com/2020/10/05/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/