தார் (தந்தி) என்ற மராத்தி குறும்படம் பார்த்தேன். ஆர்கே லக்ஷ்மணின் ’மால்குடி டேய்ஸ்’ கதைகளில் வரும் ஒரு தபால்காரனின் கதை ஞாபகத்துக்கு வந்தது.அதிலும் அப்படித்தான் ஒரு கெட்ட செய்தியை (தந்தியை) கொடுக்க செல்லும் போது அந்த வீட்டில் ஒரு நல்ல நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும். கொடுக்காமல் திரும்ப வருவார். பல முறை சென்று பார்த்து விட்டு இந்த நேரத்தில் இப்படி ஒரு தகவலை கொடுக்கத்தான் வேண்டுமா என அல்லாடுவார். அதே போன்ற ஒரு கதா பாத்திரம். நாகராஜ் மஞ்சுலே (ஃபன்றி இயக்குநர்) தான் தபால்காரராக நடித்திருக்கிறார். இந்திரா காந்தி காலத்தை பின்னொட்டாக வைத்து, அற்புதமான பின்னணி மண்ணுக்கேற்ற இசை. யுவன் இசைத்த ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ இதே பாணியிலான மராத்தியரின் இசை தான்.
அந்தப்பையனை சைக்கிளிலேற்றி கொண்டு செல்கிறார் நாக்ராஜ். ‘சினிமா பாரதீஸோ’ சிறுவன் போல சைக்கிள் பாரின் முன்னில் அமர்ந்து கொள்கிறான். நான் சொன்னேன்ல பையா, ஹரிபாவு ரொம்ப வீரமானவர் அவருக்கெல்லாம் ஒண்ணும் ஆவாதுன்னு எனக்கூறிவிட்டு பின்னர் இங்கியே எறக்கி விடுங்க என்று கூறி இறங்கிக்கொள்கிறான் அவனின் வீட்டு முன்னில்.
மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள் தான். தபால்காரர், அவர் மனைவி மற்றும் பின்னர் “தந்திகளை நீ கொடுக்கவில்லை என்றால் என்ன , இன்னொருத்தன் கொடுக்கத்தான் போறான், அதுக்காக விசனப்பட்டு வேலையை விடுவதெல்லாம் நல்லதல்ல” எனச்சொல்லும் அந்த தபால்கார நண்பர் என.சிறப்பான வழங்கல். நாக்ராஜ் மஞ்சுலெ’ மனைவியின் வளையோசை இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. #தார்
.
No comments:
Post a Comment