கூர்க்கிலிருந்து திரும்பி பெங்களூர் வரும் வழியில் திபேத்’ எக்ஸைல். கோல்டன் சிட்டி. சீனா துரத்தியடித்த திபேத் புத்த பிக்குகள் இங்கு வந்து தமது வம்சத்தை வளர்க்கின்றனர். இழைத்து இழைத்து உண்டாக்கிய புத்த விஹார். பள்ளி, இருப்பிடம் மடம் எல்லாம் ஒரே இடத்தில் இந்திய அரசின் முழு ஓத்துழைப்போடு. தமிழன் வந்தால் மட்டும் அடி.அகதி முகாம். எல்லாம் தலேலேழுத்து...
சிறு சிறு பையன்களெல்லாம் வேதம் கத்துக்கிறார். அவர்களின் பிரத்யேக உடுப்போடு. உணவு கொண்டு சென்ற ஒரு ஸ்மால் பிக்குவை புகைப்படமெடுக்க முனைந்த போது ‘திபேத்’ மொழியில் ஆஊ என்றார். எனக்கென்னவோ ஜாக்கிஷான் படத்தில் வரும் குங்ஃபூ போல ஒலித்தது. மொழி எழுத்தெல்லாம் கொஞ்சம் நேபாளத்தோடு ஒட்டிப்போகிறது.
புகைப்படம் எடுக்க அனுமதி இருக்கிறது. இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதிகளும் உண்டு.உள்ளே போனால் எதோ சீன நகரத்தினுள் வந்து விட்டது போல தோன்றும். #திபேத்எக்ஸைல்
//தமிழன் வந்தால் மட்டும் அடி, அகதி முகாம் எல்லாம்//
ReplyDeleteஆதரவு தேடி வரும் தமிழனை அவமானப்படுத்துவோரைத் துதிபாடி, தமிழினப் பற்றாளர்களை வசைபாடுகிறார்கள் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் இங்குள்ள சில கழிசடைகள்.