தீபச்செல்வனோட பேட்டி (செவ்வி..அப்படித்தான் பிபிசி தமிழோசைல சொல்லுவார்கள் ) இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பிரியா வின்செண்டின் கேள்விகளுக்கு பள்ளிப்பிள்ளை போல பதில் கூறிக்கொண்டிருந்தார். இப்ப தமிழ் சினிமாலயும் வேலை செய்கிறார் போல அதான் இங்கிலீஷ் சொற்களும் கலந்து வருது அவர் பேசும்போது. ஆமா குரல் ஏன் இவ்வளவு கரகரப்பா இருக்கு அவருக்கு ? ஒரு வேளை அரங்கத்தண்ணீர் ஒத்துக் கொள்ள வில்லையா ? ஈழத்தமிழர் பேட்டி என்றாலே போர், வன்முறை, ரத்தம் இவற்றைத்தவிர ஏதும் பேசமாட்டாங்களா ? என்று எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும். அவங்களுக்கும் சாதராண தமிழ்நாட்டுத் தமிழன் போல இசை,கவிதை,சிரிப்பு இதெல்லாம் இருந்திராதா என்ற கேள்வி எப்போதும் தொக்கி நிற்கும்.
இங்கும் அதே போல தான், அத்தனை கேள்விகளும் அவர் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணை செய்தது , கல்லூரியில் தலைவனாக பொறுப்பேற்றுக்கொண்டது , பின்னர் போர்க்காலங்களில்
அவரின் செயல் பாடு பற்றி மட்டுமே கேள்விகள்.
கமலகாசன் ஒரு திரைப்படத்தில் ஈழத்தமிழச்சி சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்கவேண்டுமென
இறைவனை வேண்டுவர். அதுக்கு இத்தனை அளப்பறைகள் நடந்தன. யப்பா சாமிகளா அவரும் ஒரு மனுசி
தானே..அவருக்கும் சாதாரண ஆசாபாசங்கள் இருக்கத்தானே செய்யும்? அதெல்லாம் சரி. அவர்களின்
தமிழ் எனக்கு எப்போதும் உவப்பானது. உச்சரிப்பும்,
விடாது தமிழில் மட்டுமே பேசுவேன் என்று உறுதியுடன் இருப்பதும். இங்குள்ள பெருந்தலைகள்
மேடையேறும் போது மட்டும் தனித்தமிழில் உரையாடிவிட்டு பின்னர் கீழிறங்கியதும் மணிப்பிரவாளம்
ஆரம்பித்துவிடும், :)
கல்லூரி வாழ்க்கையை கடந்தவர், அங்கும் நம்மைப்போல அவருக்கும்
ஏதேனும் ராக்கிங் வகைறா நடந்திருக்கும், அல்லது வகுப்பில் ஏதும் சிரிப்பும் கும்மாளமும்
என ஏதும் நடந்தேயிருக்காதா? இதையெல்லாம் கேட்டாலென்ன ? அவரும் முழுப்பேட்டியும் இறுக்கமாகவே அமர்ந்து பேசுகிறார்.
பாவம். இருப்பினும் தீபன் தடம்க்கு அளித்த பேட்டியை விட இது நல்லாயிருக்கு.
நிறைய விஷயங்கள் பேசுகிறார்.
பிரியா கேட்கிறார் தமிழ்த்திரையில் ஈழத்தமிழரை காண்பிக்கும்போது
இத்தனை செயற்கையாக பேச வைப்பதேன் என்று? சினம் கொள்’ளில் அந்தத்தவறு சரி செய்யப்பட்டிருக்கிறது
என்கிறார் தீபச்செல்வன். ஏன் கமல் பேசிய ஈழத்தமிழ் அந்த ஊரு தமிழே இல்லையா ? வட்டார
வழக்கை பரமக்குடி வழக்காக மாற்றிவிட்டாரா அம்மணி ? பிரியா பேசும்போது அத்தனை பெரிய
பெரிய வாக்கியங்கள்... மூச்சு வாங்குகிறது அவருக்கு ஒரு கேள்வியை முடிக்குமுன், எனக்கென்னவோ
பா.வெங்கடேசனின் பாகீரதியும் ,வாரணசியும் தான் நினைவில் வந்தது. காற்புள்ளியோ, இல்லை
முற்றுப்புள்ளியோ இன்றி பதினைஞ்சு பக்கங்களுக்கு ஒரு வரி மட்டும் ஊர்ந்து செல்லும்
அது போல அமைந்திருந்தது கேள்விகள் :)
.
யார் தீபச்செல்வன் ?
ReplyDeleteகாணொலி இணைத்திருக்கிறேன்...பாருங்க!
Delete