Sunday, May 19, 2019

நாளைய இயக்குநர்



இன்னிக்கு நாளைய இயக்குநர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜூரிகள் வெற்றிமாறன், பிரதப் போத்தன் மற்றும் பொன்ராம். ஒவ்வொரு குறும்படம் முடிந்ததும் சொல்லிவைத்தது போல பொன்ராம் அந்தப்படங்களில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். பிரதாப் போத்தனும் வெற்றியும் கிழித்துத் தொங்க விடுகின்றனர், பார்த்தா இதுவே எனக்கு டெம்ப்ளேட் மாதிரி தான் இருந்தது.

மொத்தம் நாலு படம் அதுல ஒண்ணு வழியில் வாழ்பவர்கள், ஹாரர் ஜானர், இன்னொண்ணு அன்பு மட்டுமே சிறந்தது, கடைசியா ஒரு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை பற்றியது. வாழ வழியில்லாததால் வழியில் வாழ்கின்றனர்னு அப்துல் ரஹமான் கவிதைன்னு நினைக்கிறேன். அதுபோலவே ஒரு இளஞ்சோடி வழியில் வாழ முற்பட்டு நடைமுறைச் சிக்கல் களுக்குட்பட்டு , ஒரு தாலி கட்டியிருந்தா இப்டீல்லாம் கேவலப்பட வேணுமான்னு அந்தப்பெண் சொல்லிவைக்க கல்யாணம் முடிந்து, மேற் கொண்டு நடக்க வேண்டிய விஷயங்களுக்கு இடமில்லை. வாழ்வதே வழியில் தானே ? பூங்காவில் ஒதுங்கப்போக போலீஸ் தொல்லையுடன் படம் முடியுது.

இன்னொண்ணு அந்த ஹாரர் படம். ஒண்ணும் புதிதில்லை, பயமே வரலை. வெற்றி மாறன் அதே தான் கேட்டார் பயமுறுத்தணுமே ஏன் நடக்கவேயில்லன்னு. பெண் மேலுள்ள பேய் திருடனின் கூட்டாளி மேல் ஏறிக்கொள்கிறது. ஏன் என்ற கேள்விக்கு இயக்குநரிடம் பதில் இல்லை. அவன் திருடன்ல அதான்னு சொல்லி சமாளிக்கிறார், அப்ப கூட இருக்கிற கூட்டாளி திருடன் இல்லயா அவன் மேல ஏன் ஏறலைன்னு தர்க்க ரீதியான கேள்விக்கு பதில் இல்லை. இது மாதிரி ஏகப்பட்ட குழப்பங்கள். வெற்றி மாறன் கிட்ட படம் போட்டுக் காட்றீங்கன்னா எப்டிக்கேள்வீல்லாம் வரும்னு தெரிஞ்சு அதுக்கு தயாரா இருக்கணுமா வேணாமா ?!

பாலியல் கொடுமைக்கதை கொஞ்சம் பரவால்லை. செல்போனால் கெட்டுப் போகும் குப்பை அள்ளுபவனின் கதை. வெற்றி மாறனின் கருத்துகள் மிகவும் தைப்பதாகவே இருந்தது. கறுப்பா இருக்கிறவன் தான் அந்தப்பெண்ணுக்கு கொடுமை செய்து கொலையும் செய்கிறான். கூட இருக்கும் சிவப்பா இருக்கறவன் அது தெரிஞ்சு செல்போனை போலீஸிடன் ஒப்படைத்து நண்பனைப் பிடித்துக் கொடுக்கிறான். இது நம்ம சப்கான்ஷியஸ் மைண்ட்ல ஓடும் கருத்து. அதிலிருந்து மீண்டு வரும் ஒரு இயக்குநரை அடையாளம் காட்டத்தான் இந்த நாளைய இயக்குநர். அப்டி இப்டீன்னு போட்டு கலாய்ச்சுட்டார் வெற்றி மாறன். பின்னால அவருக்கே ரொம்ப உறுத்தீருக்கும் போல. இல்ல நான் ஒரு கண்ட்ரோல்லயே இல்ல. அப்டீன்னு அப்புறம் சொல்லி சமாளிக்க பார்த்தார்.

 நளன் குமாரசாமி, அப்புறம் கார்த்திக் சுப்பராஜ்-லாம் இங்கருந்து வந்தவங்க தான். குறும்படம் எடுக்கும் வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கும்போது அதை சரிவரப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாய்ப்புகள்.

கதைகள் கிடைக்க வாய்ப்பில்லையா? எத்தனையோ சிறுகதைகள் இருக்கின்றன, ஜெயகாந்தனின் சிறுகதையை ஒட்டி எடுத்தது தான் அந்த வழியில் வாழ்பவர் படம் என்று கடைசியில் சொல்கிறார் இயக்குநர், அதற்கான கிரெடிட்டை போட்ருக்க வேணுமே ஏன் செய்யலை என்று பாய்ந்தார் வெற்றி மாறன். கனவுகள் மட்டும்போதாது போட்டிகள் நிறைந்த உலகம், எதையும் புதிதாக சொல்லத் தெரியவும் வேணும். !

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு தானிருந்தேன், இடையில் இது போல ஒன்றுமே தேறாத படங்களாக போட்டு மொக்கையானதால் விட்டுவிட்டேன். வெற்றி மாறன் அமர்ந்திருக்கிறாரே என்பதற்காக இன்று பார்க்க அமர்ந்தேன் ...ஹ்ம்...! #நாளையஇயக்குநர்

No comments:

Post a Comment