அவிழாய் அவிழாய்…நல்ல ஒரு டிஸ்கோ
பாடல். தர்புகா சிவாவின் இசையில் தற்போது வெளிவந்திருக்கும் பாடல். டிஸ்கோ டான்ஸர்
பாடல்கள் போல எண்பதுகளின் இசையில் ஒலிக்கும் பாடல். தர்புகா சிவா கலக்குறாண்டா.
தம்பி அநிருத் இன்னும் இது போன்ற ஜானரில் பாடல் போட்டதில்லை. பாடல் சஞ்சனா
கல்மஞ்சே (என்ன பேர்டா இது ?) என்ற பெண்மணி பாடியிருக்கிறார். ( நல்ல ஆகுருதி
..ஹிஹி) ஆனாலும் பல இடங்களில் இவரின்
தமிழ் உச்சரிப்பில் பிழை இல்லை. இருப்பினும் “ண” சொல்லுமிடத்தில் “ன” சொல்கிறார். மன்னிக்கலாம்
தான். பாடல் எழுதினது மதன் கார்க்கி. ’ஆணா பெண்ணா நான் ரெண்டும் இல்லை’ என்பதை ஆனா பென்னா நான் ரென்டும் இல்லை’
என்கிறார். இந்த சென்னைப் பொண்ணுங்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரிவர அமைவதில்லை. வேற்றுமொழி பேசுபவராகக்கூட இருக்கலாம். (சூப்பர்
சிங்கர்2009 ல பங்கு பெற்றவராம் சரி சரி)
இது போன்ற தனிப்பாடற்திரட்டுகள்
தமிழிலும் வரத்தொடங்கி இருப்பது நன்று. அதற்கு மதன் போன்ற பெருந்தலைகளும்
சம்மதித்து பங்கு கொள்வது அதிலும் சிறப்பு. செவன் – அப் மற்றும் சோனி ம்யூஸிக்கின்
பெரும் பண உதவியோடு சன் ம்யூஸிக்கின் ஒத்துழைப்பில் பாடல் உருவாகியிருக்கிறது.
மெட்ராஸ் கேக் ஸீஸன் (Madras Gag Season 2) பாடல் வரிசையில் இதுவும் ஒன்று தனியாத்
தெரிகிறது. இன்னும் சில பழைய பாடல்களின்
இதே சீசனில் மீளுருவாக்கங்கள் நடந்திருந்த
போதிலும் இந்தப்பாடல் தனி. தர்புகா சிவாவின் ஆர்ப்பாட்டமான இசையோடு. ”மறு வார்த்தை
பேசாதே” புகழ் தர்புகா சிவா. ( ஆமா அந்தப்படம் எப்பதான்ப்பா வரப்போகுது ?!)
ஜெமோ சொல்வது போல பெரும்
பண்ணையார்களின் காலங்களில் இசை வளர்ந்தது. ஏனெனில் பணம் கொடுத்து ஆதரிக்க இது
போன்ற பெருந்தலைகள் அவசியம் என. இப்போதும் அதே தான். முதலீடு செய்யாது
எந்தக்கலையும் வளரப் போவதில்லை. அட் லீஸ்ட்
மைக் செட் கட்டுவதற்காவது கொஞ்சம் காசு அவசியம். எவ்வளவு சுத்தினாலும்
கார்ப்பரேட்டுகளின் உதவியின்றி யாரும் காலூன்றி விட இயலாது எந்ததுறையிலும் என்பது
மறுக்கவியலா உண்மை. நொந்து கொள்வதைத் தவிர வேறோன்றும் சொல்வதிற்கில்லை. லினஸ் டோர்வால்ட்ஸ்’ எவ்வளவு தான் ஆணைத்தொடர்
எழுதி இயக்க செயலியை உருவாக்கினாலும் ரெஹேட் என்ற பெரும் பண முதலை உதவியால் தான்
பலரைச் சென்றடைந்தது லினக்ஸ் என்னும் திறந்த ஆணைத்தொடர் இயக்கச் செயலி ( Open Source
Operating System -Linux )
காலங்களைப் பின்னுக்குத் தள்ள கால
இயந்திரம் ஒன்றும் தேவையில்லை. இது போன்ற பாடல்களே அதைச்செய்து விடும்.
ஆதெண்ட்டிக் டிஸ்கோ. இருப்பினும் ஹிப் ஹாப்/ராப்’ இடையில் புகுந்து செல்கிறது. 02:20
ல் தொடக்கம். முழுக்கவும் தனித் தன்மையான
டிஸ்கோ சலிப்பைத்தரும் என்று இசையமைப்பாளர் நினைத்திருக்கலாம். ராசைய்யா ‘தங்கமகன்’ படத்தில் நல்ல டிஸ்கோ
இசையைக் கொடுத்திருந்தார். இருப்பினும் அவரின்’ஏய் உன்னைத் தானே’ன்னு கமல் ஆடின
பாட்டுத்தான் ஒரிஜினல் டிஸ்கோ. ஹிந்தியில்
பப்பி லஹரி காலம் என்று ஒன்று உண்டு. எல்லோரும் மறக்க நினைக்கும் காலம். ஹ்ம்..
பன்னிப்பன்னி அதைத்தவிர வேறேதையும் செய்ய விடாது இந்தி இசையை ஒரு முடுக்குக்குள்
தள்ளி சலிக்க வைத்த அவரின் டிஸ்கோ இசை.
கால்வின் ஹாரீஸின் இசையில் டெய்லர்
ஸ்விஃப்ட்டின் வரிகளை ரிஹானா பாடிய (எம்ப்பூட்டு பெரிய ஆட்களெல்லாம் இந்தப்பாட்டுக்கு
வேலை பாத்திருக்காங்க..ஹிஹி ) அந்தப்பாடலும்
பெர்ஃபெக்ட் டிஸ்கோ. EDM Electronic Dance Music வரிசையில் வைத்த போதும் எனக்கு
இதன் ஜானர் எப்பொதும் பழைய டிஸ்கோ’’வை போன்றே தோன்றுவது வழக்கம்,. அந்த EDM-ம்
பார்ட்டிகளில், பப்களில் ஆட வசதியாக மின்னணுக் கருவிகளைக் கொண்டு குரலை
பின்னுக்குத்தள்ளி மேலோங்கி இசைக்க வைக்கும் ஜானர். எல்லாம் ஒண்ணுதாண்டா …ஹிஹி இப்போது இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பு செய்தது
This is What You Came For !
இது போல சொல்லிக்கொண்டே போகலாம்.
டிஸ்கோவை ரசிக்க இந்தக்காலத்தில் 2019-ல் முடியுமா என்ற கேள்விக்கு பதில் இந்த
அவிழாய் அவிழாய்! மதன் கார்க்கியின் வரிகளைக்குறிப்பிடாமல் இந்தக்கட்டுரை முடியாது
…
----
ஹிப் ஹாப்/ராப்பிற்கென இந்த வரிகள்
எழுந்திடும் அலையென விழுந்திடும் மழையென
எழுந்திடும் அலையென விழுந்திடும் மழையென
அழுதிடும் முகிலென ஆடு
அதிர்ந்திடும் நிலமென உதிர்ந்திடும் மலரென
எதிர்த்திடும் புயலென ஆடு
காதல் காமம் எல்லாம் உன் காலடியில் போட்டு !
ஆடும்போது நீயும் கடவுள் என்று காட்டு!
நீயே உந்தன் தாளம் !
நீயே உந்தன் மேடை!
நீயே உந்தன் விசிறி !
வேறாரும் இல்லை!
--- டிஸ்கோவிற்கென இந்த வரிகள்
ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து
ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து!
இந்த டிஸ்கோவிற்கான வரிகள் அந்த
ஹிப்ஹாப் முடிந்ததும் உடனே தொடங்கும்.. ஆஹா. பல்லில் வெகுநேரம் சிக்கிக்கொண்ட பாக்குத் துகள் சிறு நாவின் நுனி நெருடலில்
வெளிக்கிளம்பி விட்ட உற்சாகம் பற்றிக் கொள்ளுவது போல. ஆஹா… ஹிஹி .. கேளுங்க ஐ ஆம் அ
டிஸ்கோ டான்ஸர்.!
பாடல் ஆரம்பத்தின் 40 செகண்டுகள் வரை,
பாடலைத்தொடங்க ஒரு சூழல் உருவாக்க (அதாம்ப்பா என்விரான்மெண்ட்டூ..ஹிஹி) ஒரு அம்மணி
தன் தலைவனோடு சண்டை போடுகிறார் அத்தனையும் செயற்கை, உடல்மொழியோ இல்லை நடிப்போ
எதுவுமே ஒத்துழைக்காது பாடல் எப்ப ஆரம்பிக்கும் என்று ஏங்க வைக்கிறார். (படத்தைப்போடுங்கடா
டேய்…ஹிஹி ) அதைப் பொறுத்துக் கொண்டு மேலும் கேட்க ஆரம்பித்தால் பாடலை முழுதுமாக
ரசிக்கலாம்!.. #அவிழாய்
No comments:
Post a Comment