இந்தப்பாடலைப்பாடிய
லீட் ஸிங்கர் 'செஸ்ட்டர்
பெனிங்டன்' இறந்து
கிடந்தார். இந்தப்பாடல்
வெளிவரும் நாளில் 20 ஜுலை
2017. லிங்க்கின்
பார்க்' புகழ்பெற்ற
ராக் பேண்ட் பாய் பேண்ட்.
லைட்டாக
கொஞ்சம் பாப்' ஸ்டைலில்
இந்த ராக் பாடல்.
வலுக்கட்டாயமாக
உச்சஸ்த்தாயியில் பாடியே
ஆகவேணும் என்று பாடியதைப்போல
, எல்லா
ராக் பாடல்களும் அப்டித்தாங்ணா.
வரிகள் எல்லாம் சூப் பாய்ஸ் லைன்ஸ்தான். ‘ எனக்குள்ளேயே பேசிக்கொள்கிறேன்' அதத்தான் செய்ய முடியும் வேறு என்ன செய்வது ? I'm just talking to myself இதே குழுவின் இன்னொரு பாடகரும் இதே போல் தற்கொலை செய்துகொண்டார் சில ஆண்டுகளுக்கு முன்னர். இசை கொல்லுமா? ஹ்ம்.. கொலையும் செய்யும் போலிருக்கிறது.
இந்தக்காட்டுக்கத்தலை
பொறுத்துக்கொள்ளும் மனமிருந்தால்
பாடலை ரசிக்கலாம். Pure
Rock Band Song. இந்த
வீடியோ ஸீக்வென்ஸை கட் செய்து
முடித்து இயக்குநர் யூட்யூபில்
ஏற்றி சில மணிகளுக்குப் பிறகே
இறப்பு நிகழ்ந்திருக்கிறது.
I'm just talking to myself கடைசியில்
ஒலிக்கும் அந்த கிட்டார்
பீஸ். மாயம்.
கடந்த
இரண்டு நாட்களாக லிங்கின்
பார்க்' குழுவிற்காக
ட்ரிப்யூட் என 'விஎச்1’
சேனலில்
தொடர்ந்து இக்குழுவினரின்
பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
முக்கியமாக
இந்தப்பாடல். மேலும்
இக்குழுவினரின் பாடல்கள்
மட்டுமே அடங்கிய 'டாப்
20’ பல
முறை ஒளிபரப்பாகியது.
The
truth is, you turn into someone else
You keep running like the sky is falling
I can whisper, I can yell
But I know, yeah I know, yeah I know
I'm just talking to myself
Talking to myself
You keep running like the sky is falling
I can whisper, I can yell
But I know, yeah I know, yeah I know
I'm just talking to myself
Talking to myself
மிஸஸ்
டவுட்ஃபையரில் நடித்த (அவ்வை
சண்முகி ஆங்கில மூலம்)
ரொபின்
வில்லியம்ஸும் இதே போல தற்கொலை
செய்துகொண்டே இறந்தார்.
அதீத மன
அழுத்தம் காரணமாக.
அப்போது
நம்ம கமல் அவரைக்கடிந்து கொண்டார்.
(இங்கயும்
கமல் வந்துட்டாரா ?!) அதீத
மன அழுத்தமோ அல்லது தாங்க முடியாத
துயரோ ஏற்படும்போது காட்டுக்கூச்சல்
போட்டுக் கத்தினால் அத்தனை
ரிலீஃப் ஆக இருக்கும்.
செய்து
பாருங்களேன். பிறகேன்
செஸ்ட்டர் இந்த முடிவை எடுத்தார்
??? இந்தக்குழுவிட
ம் இல்லாத பணமோ ,புகழோ, ஏகத்துக்கு
ரசிகர் கூட்டமோ என
வேறேந்தெக்குழுவிற்கும்
இல்லை. எல்லாருமிருந்தும்
இப்படி ஒரு முடிவு.!
# I'mJustTalkingToMyself
# I'mJustTalkingToMyself
No comments:
Post a Comment