சோ
அடிக்கடி வடமாநில தொலைக்காட்சிகளுக்கு
பேட்டி கொடுக்கும் போது
எப்போதும் சொல்வார்.
முதலில்
என்ன ஃபேஷனாக இருந்தாலும்,
புதிய
மோஸ்தர்கள் முயற்சியாய்
இருந்தாலும், நிகழ்ச்சிகள்,
இன்னபிற
மற்ற ஊடக உத்திகள் எல்லாம்
முதலில் பாம்பேக்கு வந்தபிறகு
தான் சென்னைக்கு வருமென.
(அவர்களுக்கு
வெளிநாட்டிலிருந்து வரும்
அது வேறே விஷயம் ) அதே
தான் இந்த பிக் பாஸும்.
என்ன மாறினாலும்
இந்த காலனிய மனப்பான்மை நம்மை
விட்டு மாறாது போலிருக்கிறது.
அத்தனையும்
திறம்பட எழுதிய திரைக்கதைகள்.
கமலுக்கு
வழக்கம் போல அவர் பாணியை
கிஞ்சித்தும் மாற்றாது
வெளிநாட்டு பாணியில் நடிக்கவேண்டிய
கட்டாயம். என்ன
ஒன்று மேனரிஸங்கள் ஏதும்
இல்லை. கடல்
மீன்களில் மார்லன் ப்ராண்டோ'வின்
காட்ஃபாதர் ஸ்டைல் போல
(குரலைச்செருமி
உச்சந்தலையை சிறிதே சொறியும்
)இங்கு
ஏதும் செய்ய வாய்க்கவில்லை.
அவ்வளவே.
நான் இதுவரை
ஒரு நிகழ்ச்சி கூடப் பார்த்ததில்லை,நேரமும்
இல்லை. கமலின்
பேட்டியும் ஆங்காங்கே
தூவப்பட்டிருந்த சில காட்சிகளும்
மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அத்தனை
ஈர்ப்பு ஒன்றும் இல்லை.
அடுத்தவர்
வீட்டை படுக்கையறையை
எட்டிப் பார்க்க விருப்பமில்லை
என்றெல்லாம் சினிமா வசனம்
பேசவெல்லாம் தோணலை. நேர
விரயம்
கமலின்
நிழல்/வாசம்
கூட பிடிக்காத சாரு அந்த
நிகழ்ச்சியைப்பற்றி இத்தனை
ஏன் சிலாகிக்கிறார் என்று
தெரியவில்லை.
எழுதிக் கொண்டிருக்கும்
புதிய புதினத்துக்கு ஏதேனும்
இப்படி உத்திகள் கிடைக்குமாவென
ஏங்குகிறார் போல. ரியாலிட்டி
ஷோ என்ற பெயரில் ஏற்கனவே வந்து
வெளிநாடுகளில் டிஆர்பி
ரேட்டிங்கிற்காக செய்யப்பட்ட/புனையப்பட்ட
நிகழ்ச்சி தானிது. ஷரோன்
ஸ்டோன் நடித்து வெளியான
ஸ்லைவர், இன்னொரு
ஜிம் கேரி நடித்து வெளியான
(பெயர்
மறந்துவிட்டது) போன்ற
படங்களில் இயல்பில் கேமரா
வைத்து முழுக்க முழுக்க
லைவ்'வாக
குடும்பம்/தனி
மனிதன் போன்றோரைக் கண்காணிப்பதை
பொழுது போக்காகக்கொண்ட
புனைவுகளில் வெளியானவை.எல்லாம்
வெளிநாட்டு சரக்கு.
அதற்கு கமலே
பிரதானம் என்பதில் ஒரு
ஆச்சரியமுமில்லை. அவர்
நடித்த ,இயக்கிய
மேலும் மற்ற இயக்குநர்களின்
அத்தனை படங்களும் ஏதோவொரு
ஹாலிவுட் படங்களின் சாயலே.
அவருக்கு
பணமுடை.நடிக்க
வந்துவிட்டார் சின்னத்திரைக்கும்
கூட. ஒரு
படத்தில் சத்யராஜைப்பார்த்து
ஒரு சின்னத்திரை கலைஞர் இப்படி
ஏசுவார். எல்லாம்
சரக்கு தீந்துருச்சுன்னா
டெலிவிஷனுக்கு வந்து தான்
ஆகணூம்னு. அதான்.
சரி விடுங்க.
அவர் கொடுத்த
பேட்டிதான் எனக்கு ரொம்பப்பிடித்தது.
ஒரு வேளை
அதுகூட ஸ்க்ரிப்ட் எழுதி
இயக்கப்பட்டதாவென அத்தனை
கச்சிதமான கேள்விகள்/பதில்கள்.
ஊடகத்திற்கு
எத்தை விற்றால் பித்தம்
தெளியும் என்ற நிலை.
பார்வையாளனுக்கு
அலுங்காம குலுங்காம அடுத்த
வீட்டில என்ன நடக்குதூன்னு
பாக்கணும்னு கொஞ்சம் குஜ்லி.
அவ்ளவ்தான்.
விஜய் டீவியின்
பங்குகளைப்பற்றி மனிகண்ட்ரொல்.காம்-ல்
பார்த்தால் எல்லாம் விளங்கும்.
நமக்கு
கதிராமங்கலம் முக்கியமில்லை.
கச்சத்தீவு
முக்கியமில்லை. உலகமே
நாடகமேடை. அதில்
அனைவரும் நடிகர்கள்.
ஒரு நடிகை
நாடகம் பார்க்கிறாள்.
அவளோடு
சேர்ந்து நாமும் பார்க்கலாம்.
கொண்டாடலாம்.
வாக்களிக்கலாம்.
பாஸு பாஸு
பாஸு என் பேரேதாண்டா பாஸூஊஊஊஊஊ.!
.
No comments:
Post a Comment