Sunday, July 5, 2020

விண்வெளிப்பயணம்


’ட்ரேஸி கால்ட்வெல்' விண்வெளி வீரர் , பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியைப் பார்வையிடுகிறார். ஒரு முறை இது போன்ற விண்வெளிப் பயணங்களுக்கு சென்று திரும்பி வரும் அனைவரும் சொல்லி வைத்தாற் போல மிகவும் ஆன்மிகப்பற்றாளராக மாறிவிடுவதாக ஒரு கணிப்பு இருக்கிறது. சென்ற மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் ஏவிய தமது ராக்கெட்டை முழு இரவும் உட்கார்ந்து யூட்யூப் நேரலையில் பார்த்துக்கொண்டு இருந்தேன். எல்லாம் எங்கனமாவது இங்கிருந்து விடுபட்டுவிட் மாட்டோமா என்ற ஆதங்கம் தான் அங்கனம் யோசிக்க வைக்கிறது. எனினும் சென்று வந்தவரோ நேரெதிர் மன நிலையில் இருக்கின்றனர் மீதமுள்ள வாழ்நாள் முழுதும். 

க்ராவிட்டி படம் முழுக்க விண்வெளி நிலையப் பிரச்னைகளை வைத்து எடுக்கப் பட்ட படம். அதில் ஏகப்பட்ட குளறுபடிகளில் தலைவி சான்ட்ரா புல்லக் தனியாக மாட்டிக்கொள்வார். முழுக்க முழுக்க மனப்பிறழ்வில் அவருக்கு வரும் கனவில் ஜார்ஜ் க்ளூனி சொல்வார் ‘இங்கு உன்னை யாராலும் தொந்தரவு செய்ய இயலாதென’ உண்மைதானே ,இங்கிருந்து அங்கு வரை செல்ல முடிந்தாலல்லவா தொல்லை தர முடியும். இருப்பினும் ஒருவாறு தப்பிப் பிழைத்து பூமியில் ஒரு நதியில் வந்து விழுவார் சிறு பாராச்சூட் மூலம். நீந்திக்கடந்து எழுந்து வரும் தருணத்தில் அந்த கரையின் ஈரமணலை அள்ளிப் பிடிப்பார். தம் உள்ளங்கையால் ...ஹ்ம்.. அதான் பூமி நமது இல்லத்தின் மீதான பற்று. #விண்வெளிப்பயணம்

.

No comments:

Post a Comment