முதல் முதலா ஒரு கார் வாங்கணும்னு நினைச்சு, ஓட்டத்தெரியாது
எங்கயாவது போயி இடிச்சா புதுசு வீணாயிருமேன்னு செகண்ட் ஹேண்ட் ஒண்ணு வாங்க நினைத்தேன்.
அப்போ வாடகைக்கு தங்கியிருந்த ஓனரும் ரஃபி ஒரு முஸ்லீம். வீட்டுத்தரகர் , பாருங்க நீங்க பாக்ற ஏரியாலன்னா
முஸ்லீம் வீடு தான் வாடகைக்கு இருக்கு. அங்க போய் இருக்க ஒங்களுக்கு தோதுப்படுமா என்று
சந்தேகத்துடன் கேட்டே என்னை அங்கு கூட்டிச் சென்றார். எனக்கு எதுன்னாலும் பரவால்லை
என்று அங்கு தான் வெகு நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டு ஓனர் ரஃபி அவர்தான் முன்னாபாய்னு
(அவரும் ஒரு முஸ்லீம்) ஒருத்தர் இருக்கார். அவர் இந்த டீலிங்லாம் பண்ணுவார்னு நம்பர்
கொடுத்தார். அவரிடம் பேசி வாங்க முடிவு செய்தேன். பார்த்தா அப்புராணி பேச்சும் அப்படியே. உருவம் மட்டும் ஓங்கு தாங்கா இருப்பர். பார்த்தா
பத்து பேர சாய்ச்சுடுவார் போல.
இங்க பெங்களூரில கால் செண்டருக்கு கார் சப்ளை பண்றவர். அவருக்கு
தெரிந்த கிளையண்ட்டிடம் சொல்லி எனக்கு சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தார். லைசன்ஸ்
எடுக்கவும் தெரியாது. அதுக்கும் உதவி பண்ணினார். காரோ யூ.பி ரெஜிஸ்ட்ரேஷன். அத கர்நாடகாவில
ஓட்றது (அப்போ) பெரிய தொல்லை. ரெஜிஸ்ட்ரெஷன் மாத்தணும்னா முப்பதாயிரம் செலவாகும். ஒங்க
ஏரியாவுக்குள்ளயே ஓட்டிக்குங்க என்றார்.
எப்பவும் நல்லதே நடக்கும். யாருக்கும் தீங்கு வந்திராது.
அல்லா எல்லாரையும் காப்பாத்துவான்னு பேசுவார்.முன்னாபாய் அதிர்ந்து பேசமாட்டார். பாத்தா
இவன் நம்பள ஏமாத்திருவானோன்னு நினைக்கிற முகபாவம். குழைந்த முகம். எப்பவும். குனிந்து குழைந்து தான் எப்பவும் பேசுவார். ஓ அப்படியா
என்று ஹிந்தியில் மட்டுமே பேசுவார். கொஞ்சம் உருது வாடை கலந்து தான். இவர்லாம் எப்டி
பிஸ்னெஸ் பண்றார்னு எனக்கு பெரிய சந்தேகம். முதல்ல ஒரு டாக்டரின் காரைக் காட்டினார்.
எனக்கு என்னவோ அது பிடிக்கவேயில்லை. இந்த வண்டி மட்டும் லிட்டருக்கு பதினஞ்சு ( 7 ஆண்டு
பழைய கார் அது :)
) கிமீ ஓடலைன்னு வெச்சுக்கங்க ராம்பையா உங்க காலூ ஊடால நுழைஞ்சு வெளிய வருவேன்னு சொல்லி
சிரிப்பார்.
ஒவ்வொரு முறை வண்டியைக்காட்ட போகும்போது பேச்சுக் கொடுப்பேன்.
வீட்ல இன்னிக்கி என்ன சாப்டீங்க என்று கேட்டால் (மனதில் நல்ல பீஃப் கறியும் குடலும்
சாப்ட்டு வந்திருப்பார் என நினைத்துக் கொண்டு) இன்னிக்கு ரசம் சோறு சாப்ட்டேன் ராம்
பையா. நேத்து இட்லியும் கெட்டிச்சட்னியும் என்றார். ஓ ராம்பையா நான் அசைவம் தொட்றதேயில்லை ஆப்கோ மாலும் ஹை ? (உங்களுக்கு
தெரியுமா ) என்பார். அடப்பாவி நல்ல அடிச்சுத் துவைக்கிற மாதிரி ஒடம்பை வெச்சுக்கிட்டு
ரசம் சோறா என்று மனதில் நினைத்து சிரித்துக்கொள்வேன்.
ஆர்.டீ.ஓ அலுவலகத்தில் லைசன்ஸ் எடுக்கும்போது பிரச்னை. என்ன
முன்னாபாய் இவ்வளவு லேட்டாகுது என்றால் கால் செண்டரிலருந்து பதினஞ்சு கால் வந்தாச்சு.
அனுப்பிச்ச வண்டி ப்ரேக் டவுன். எனக்கிருக்கிற பிரச்னைய நான் யார்ட்ட போயி சொல்றது
யா அல்லா என்பார். முகத்தில் அதே குழைவு. அப்பாவிக்களை. சரியா இங்கிலீஷ் பேச வராது.
லைசென்ஸ் எடுக்க போன போது ”பெஸ்ட் லக்” என்று கூறினார். இங்கிலீஷ்ல பேசணும்னு ரொம்ப
ஆசை. இருந்தாலும் உருது தான் சரளமாக வரும்.
கால் செண்டர் பிஸ்னெஸ்லல்லாம் இங்கிலீஷ் பேச வேண்டிருக்கு ராம் பையா என்று கூறி கொஞ்சம் வெட்கத்துடன் சிரிப்பார்.
எதையும்
முறையா சட்டப்பூர்வமாகவே செய்யணும்னு நினைக்கிற சீவன். நமக்கு எல்லாம் அப்டித்தான்
வாய்க்கும். அப்புறம் வீடு மாற்றியபின் காரை வெளியே எடுக்க இயலவில்லை. சரி இதை வைத்துக் கொண்டு
தீனி போட முடியாது என நினைத்து விற்று விடலாம் என எண்ணி மீண்டும் முன்னாபாயிடம் கேட்டேன்.
அட அதனால என்ன, கஸ்டமருக்கு உதவி பண்ணலன்னா வேற யாருக்கு பண்ணப் போறேன்னு சொல்லி பல
இடங்களில் அலைந்து பார்த்தார். கிராக்கி ஏதும் சிக்கவில்லை.
தொடர்ந்து சிலர் வந்து பார்ப்பதும் வேண்டாமென்று போவதும் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் ராம்பையா இந்தக்காரை நானே வாங்கிக்கிறேன். இருந்தாலும் வித்த விலைக்கே ஆவாது, கொஞ்சம் சஸ்தா ரேட்ல வாங்கிக்குவேன் என்று ரொம்ப யோசிச்சு என்ன சொல்வானோன்னு பயந்துகொண்டே கேட்டார். எனக்கோ இது இடத்தை விட்டு நகர்ந்தால் சரி என்று ஒப்புக்கொண்டேன். வந்து காரை எடுத்துக்கொண்டு போய்விட்டு பணம் அனுப்பி வைத்தார். இடைக்கிடைக்கு அவ்வப்போது ஃபோன் செய்வார் வேறே ஏதும் வண்டி வேணுமா என . இல்லை இப்போதைக்கு வேணாம் என்று கூறி வைப்பேன். இப்போதும் தொடர்பிலிருக்கிறார் முன்னாபாய். இப்பவும் அதே போல பேச்சு குழைவு என...நல்ல நண்பர்.
தொடர்ந்து சிலர் வந்து பார்ப்பதும் வேண்டாமென்று போவதும் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் ராம்பையா இந்தக்காரை நானே வாங்கிக்கிறேன். இருந்தாலும் வித்த விலைக்கே ஆவாது, கொஞ்சம் சஸ்தா ரேட்ல வாங்கிக்குவேன் என்று ரொம்ப யோசிச்சு என்ன சொல்வானோன்னு பயந்துகொண்டே கேட்டார். எனக்கோ இது இடத்தை விட்டு நகர்ந்தால் சரி என்று ஒப்புக்கொண்டேன். வந்து காரை எடுத்துக்கொண்டு போய்விட்டு பணம் அனுப்பி வைத்தார். இடைக்கிடைக்கு அவ்வப்போது ஃபோன் செய்வார் வேறே ஏதும் வண்டி வேணுமா என . இல்லை இப்போதைக்கு வேணாம் என்று கூறி வைப்பேன். இப்போதும் தொடர்பிலிருக்கிறார் முன்னாபாய். இப்பவும் அதே போல பேச்சு குழைவு என...நல்ல நண்பர்.
.
No comments:
Post a Comment