பீலா பீலா’ன்னு ஒரு பாட்டு போட்ருக்கான் தம்பி அநிருத் ஆஹா.. சிலோன்
‘பைலா’ மீசங்கி மச்சி. நல்ல ரெட்ரொ. அருமை. ரொம்ப நாளாச்சி இது மாதிரி
பாடல் கேட்டு. அவனுக்கு எல்லாம் தெரியுதுடா. :)
இதே பைலா’ இசையில் தேவா ரொம்ப நாள் முன்னால ‘சிலோனு சிங்களப்பெண்ணே
சிணுங்காதே’ன்னு இசைத்திருந்தார். அப்புறமும் ரொம்ப பிரபலமான ‘சுராங்கனி
சுராங்கனி’ சிலோன் மனோகரன் பாடினது தான் இந்தப்பைலா.! இதே பாடலை ராசைய்யா
‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் அப்படியே எடுத்து பயன்படுத்தியிருந்தார்
மலேசியா வாசுதேவனைப்பாடவைத்து. வரிகள் மட்டும்.தமிழில்..
ஈழத்தில் எழுபதுகளில் பொப்பிசைப்பாடல்கள் ( பாப் இசைப்பாடல்கள் தான் …அஹ்ஹ்ஹ்ஹ்ஹா அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. :)
) வெளிவந்த ‘சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..பள்ளிக்கு போனாளோ ?” என்ற
மிகப்பிரபலமான பாடல். எல்லாம் பைலா.! பைலா’ன்னா இசை’ என்றர்த்தமாம்
சிங்களத்தில். இறங்கிப்போட்ருக்கான் தம்பி. எந்தவொரு மாற்றமும், இடைச்
செருகலும் இல்லாது ஒரிஜினல் ரெட்ரோ. மீளக்கொணர்ந்து கொடுத்திருக்கிறார்.:) கேளுங்கோ கேளுங்கோ…கேட்டுக்கிட்டே இருங்கோ :)
இறைவா அடுத்த ராக் அநிருத்திடமிருந்து. பரவலாக ராக்’ இசையில் அமைந்த இது
போன்ற பாடல்களை ரசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் அனைவரும், ராக்ஸ்டார்
பட்டத்துக்கு பொருத்தமானவர் தான் தம்பி அநிருத். ஜீவீப்பீல்லாம் நடிக்க
வந்துட்டான். தம்பி நடிக்கவும் வரலாம் அத்தனை தகுதியும் இருக்கு. என்ன
பாக்றதுக்கு ரகுவரன் மாதிரி தெரிவார். அதனால பரவால்ல. தனுஷ் கூட இந்த ஒடம்ப
வெச்சுக்கிட்டே இந்தப்போடு போடலியா?! :) இது கொஞ்சம் காதல் ஏக்கம். ஐயா படத்துல வந்த அந்தப்பாடல் போல ‘ஒரு வார்த்த சொல்ல ஒரு வருசம் காத்திருந்தேன்’
ரகம். அங்கயும் நயன் தான் ஆஹா.. சாதனா சர்கம் ஆர்வமிகுதியில பூரிப்பில்
பாடுவார். கேகே இருக்கும் அத்தனை சலிப்பையும் சொல்லி அழுவார். அதே போல
இங்கும்.
எம்ஜியார்
பாடல்கள், சிவாஜி பாடல்கள் என இன்னமும் சொல்லிக்கொண்டு அலைவதும்,அதைப்பாடிய
டி எம் எஸ்ஸுக்கு எந்தப்பெயரும் வராது எல்லாப்பெயர்களும் நடிகர்களுக்கு
கிடைத்த காலம் போய், இந்தப்பாடலில் அநிருத்தும், ஜொனிதாவும்
தோன்றிப்பாடுகின்றனர், எனக்கென்னவோ இனியும் சிவகாவும், நயனும் அபிநயித்த
காட்சிகள் வெளி வந்த போதிலும் இவர்கள் தோன்றிப்பாடிய வெர்ஷனே நிலைக்கும் என
நினைக்கிறேன். அத்தனை ஆழமாகப் பதிந்துவிட்டது.
இந்தச்சிறு
உருவத்துக்குள் இருந்து , மழைக்குருவி போல அத்தனை உச்சஸ்தாயி எல்லாம் செம.
சம்மதிக்கணும் தம்பி அநிருத். ‘உட்தா பஞ்சாப்’பில் ராக் இசைக்கலைஞர்கள்
பாடுமுன் கொஞ்சம் வீட்(கஞ்சா) உட்கொண்டே பாடுவர். இல்லாவிட்டால் அத்தனை
உற்சாகமும், உத்வேகமும் குரல்வளையிலிருந்து வெளிவராது.கிட்டத்தட்ட அத்தனை
ராக் இசைக்கலைஞர்களுமே ‘உட்கொள்ளும்’ வகையினர் தான். அதெல்லாம் எடுக்காமல்
பாட முடியாதா எனக்கேட்கலாம்,டி எம் எஸ், மதுரை சோமு இவர்களெல்லாம்
அந்தக்காலத்தில் என்ன உட்கொண்டு பாடினர் அத்தனை உச்சஸ்தாயியில்.?.. ஏன்
பாரதி கூட எழுத அமருமுன்னர் உருண்டை’யை விழுங்கி விட்டே எழுத ஆரம்பிப்பார்
என அறிந்திருக்கிறேன்.
‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ என
அற்புதமான ஜாஸ் இசையில் வெளிவந்த அந்தப்பாடலில் முன் இசையாக வரும் அந்த
மென்மையான கிட்டாரின் ஒலியை ஒத்திருக்கும் இங்கும் முன்னிசை. கெபா
ஜெரீமியாவின் கிட்டார். ஆஹா ராக் இசைப்பாடலுக்கு முன்னிசை ஜாஸிலா. :)
மெலடியும் ராக்’கும் அருமையான கலவை இதே கிட்டார் பீஸ் , ஜொனிதா’வின்
பாடும் அத்தனை பாகங்களிலும் கொஞ்சி விளையாடுகிறது இருப்பினும் அநிருத்தின்
குரல் வா வா வென ஒலிக்கும் போதெல்லாம் பின்னில் அரற்றும் அந்த அழுத்தமான
மின்கித்தாரின் ஒலி இது ஒரிஜினல் ராக்’டே என்று கூவ வைக்கும். ஜொனிதாவின்
பகுதியில் ஆழமாக அந்த பெர்குஷன் அடி மனதைக்கலக்குகிறது இதே ஜொனிதா காந்தி
தான் ‘எந்திரன் 1-ல் லேடியோ பாடினவர் :) ‘நான் விரும்பி அடையும் பொன்சிறையே’ #இறைவா