Friday, September 11, 2015

இங்கிலீஷ் இலந்தப்பழம்


Worth it 

இந்தப்பாட்டு என்னவோ என்னை மயக்கிக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு தடவை 'ட்ரேஸ் அர்பன்' சேனல் போடும் போதும் இந்தப்பாட்டு வந்துவிடுகிறது. புதுசா ஒண்ணும் இல்லை. அதே ஹிப்ஹாப்/ராப் தான். ட்ரெம்ப்பெட்டின் கீறி ஒலிக்கும் ஒலியுடன் ஆரம்பிக்கும்போது தமிழ்ப்பாட்டு கேக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் .இந்த கேர்ஸ் பேன்ட் (Girls Band) இந்தப்பாட்டை வெச்சே நெறய காசு பாத்துட்டாங்கன்னு நெனெக்கிறேன். Really Worth it ! .(ராசைய்யா பாடிக்கொஞ்சம் காசு பாக்கிறார்னு சொன்னா மட்டும்தான் எல்லாருக்கும் எரியுது இங்க..முக்காலமும் உணர்ந்தவருக்குக்கூட ) சரி அத விடுங்க. இந்தப்பாட்டுல வீடியோ சீக்வென்ஸும் உச்சம் ஆஹா கிட்டத்தட்ட உலகத்தின் எல்லாப்பாகங்கள்லருந்தும் பாட வந்திருப்பாங்க போலருக்கு, கொஞம் விக்கி தேடிப்பாத்தா நல்லது, அதுலயும் கைல கட்டீருக்கிற வாட்சப்பார்த்து தட்டிக்கிட்டே பாட்றாரே அவாளப்பத்திக்கொஞ்சம் விஷயஙகள் கிடைச்சா இன்னும் ரொம்ப நல்லது  ( Camilla with some Hispanic accent )

முழுப்பாடல்லயும் பாருங்களேன் , துளி ஆபாசம் கூட இல்லை, நம்ம தமிழ்ப்பாடல்களா இருந்தா இன்னேரம் இத்தனை அழகான ட்யூனுக்கு என்னனென்னவோ காண்பித்திருப்பார்கள், சாஃப்ட் போர்ன் கூட இல்லை. நம்ம கதாநாயகிகள் பாடல் காட்சிகளில் வரும் உடைகளிலிருந்து ஒப்பிடும்போது இந்தப்பாட்டில எல்லாரும் போர்வை போர்த்திக்கொண்டுதான் வருகிறார்கள் என்று தான் சொல்வேன்.இல்ல அந்த ஸ்டஃப்தான் வேணும்னா நிக்கி மினாஜோட "த்ரோ சம் மோ ' ( Nicky Minaj 'Throw some mo') பாட்டு இருக்கு அதப்பார்க்கலாம் ...ஹிஹி.. அத விடுங்க..இங்க மொத்தம் அஞ்சு பேர்..Spice Girls மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..ஆகா. இல்லை இல்லை , அவர்களின் ஆல்பத்தில் எந்தப்பாடலையும் இது ஒத்திருக்கவில்லை. ( Wannabe சொல்லாதீங்க அது ஹிப்ஹாப் ஸ்டைல் இல்லை அது ப்யூர் typical British pop தான். Worth it Worth it-ன்னு கிட் இங்க் (Kid Ink) சொல்லும்போது ஓரளவு ஒத்துப்போற மாதிரி தோணினாலும் அது இல்லை இல்லவே இல்லை ..ஹிஹி )

தெளிவாக ட்ரெம்ப்பெட்டின் ஊதலுடன் ஆரம்பிக்கும் பாடல் , கிட் இங்க் பாட ஆரம்பித்தவுடன் வேகமெடுக்கிறது 00:29-ல. எப்பவும் ஹிப்ஹாப்புக்குண்டான தாளம் தான் ..ரொம்ப யோசிக்கவெல்லாம் இல்லை. எந்த கீபோர்டிலும் ஈஸியா வாசிக்கலாம் தான். 1:08-ல தாளம் மாறுவதும் வரிகள் வேறு திசையில் செல்வதும் தான் பாடலின் சுவாரசியம் கூடும் இடம். இன்னொரு முறை வராதா என ஏங்க வைக்கும் இடமும்கூட.கவலை வேண்டாம் திரும்பத்திரும்பத்திரும்ப வந்து கொண்டேதான் இருக்கிறது. அதானே ராப்பு .ஹிஹி.. ரொம்ப ஸ்ட்ராங்கான தாளம் , அதை விட்டு எப்போதும் விலகாத வரிகள்/ராகம் ஆஹா.. மெருகு சேர்த்து பாடலை எப்போதும் நம்பர் 1 ஸ்பாட்டில் வைத்திருக்கிறது.

தாளம் பற்றி பேசும் போது , இப்போது வரும் பாடல்களில் , ஆங்கிலப்பாடல்களில் அத்தனை வேறு மாதிரியான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று தான் சொல்வேன். மைக்கேல் ஜாக்ஸனின் all i want to say that,they dont really care about us பாடலுக்குப்பிறகு எந்தவிதமான பரீட்சார்த்தமான தாளங்கள் இல்லை. எல்லோரும் இப்போது ஜப்பான்காரன் செய்து கொடுத்த எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில் ஊறிக்கிடக்கும் தாளக்கட்டைகளை வைத்தே பாடல் புனைகிறார்கள்.( ராசைய்யா சொல்றதெல்லாம் யார் கேப்பா ?! .. கேட்ஜெட்களை தூக்கி எறியுங்கள் இளம் இசையமைப்பாளர்களே ) யாரோ ஏற்கனவே செய்து வைத்திருப்பதில் கொஞ்சம் நீட்டி மடக்கி பாடல் புனைவதில் என்ன பெருமை வந்து விடப்போகிறது ? நிறைய டெக்னோ'விலும் இதே பிரச்னைகள். ரஹ்மான் கொஞ்சம் இப்போது ஓக்கே கண்மணியில் அந்த க்ராஃபிக்ஸ் பாடல்களுக்காக முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் விளங்கவில்லை.( ஏற்கனவே அழகிய தமிழ் மகன்ல "சாட்டர்டே நைட் பார்ட்டிக்கிபோகலாம் வரியா"ன்னும் கூப்பிட்டுப்பார்த்தார்)

சரி நம்ம பாட்டுக்கே திரும்ப வரலாம் 01:08,02:06,03:03 இந்த நிமிடங்களில் ஆஹா அந்தக்கைதட்டலோட வரும் "Uh huh, you see me in the spotlight" வரிகளெல்லாமே சுகானுபவம். அதோட கைதட்டறதோட இல்லாம ஒவ்வொருத்தரும் அஞ்சனம் தீட்டிய கண்ணிமைகளையும் புருவங்களையும் அசைத்து அசைத்து என்னென்னெவோ செய்றாங்கப்பே.

01:39-லயும் ஒரு அற்புதமான மொமன்ட் இருக்கு மிஸ் பண்ணாதீங்க...ஒரு பாடலை அனுபவிக்கணும். அதான் இப்டி ::) 02:56-லருந்து Worth it Worth it சொல்லும் போதும் அப்டித்தான். பாருங்க. வஞ்சிக்கோட்டை வாலிபன் அந்த நடனப்பாட்டில வருவது போல 06:29-லருந்து ஆஹா என்ன புருவச்சுழிப்புகள். அதெல்லாம் இப்ப நடிக்கிற நடிகைகள் யாருக்கும் வருமான்னே சந்தேகமா இருக்கு பரவால்ல..ஒரு இங்கிலீஷ் பாட்டில அதெல்லாம் பாக்க வாய்ப்பு கிடத்திருக்கிறது கண்டு மகிழுங்கள் கண்ணுகளே ‪#‎ReallyWorthit‬
Fight Song

'ராச்சல் ப்ளேட்டன்' ( Rachel Platten) பாடிய இந்தப்பாடல். வெம்மையும் வெறுப்பும் அதோடு கூடிய கண்ணீரும் என்னால் செய்துகாண்பிக்க முடியும் என்ற உறுதியும் இப்படி நிறைய உணர்ச்சிக்குவியலான கொந்தளிக்க வைக்கும் பாடல். இந்தக்கேட்டகரியில் நிறையப்பாடல்கள் வந்திருந்த போதும்,வரிகளும் அதனோடு கூடிய காட்சிகளும் கண்கலங்க வைக்கும். பாப் வகையில் சேர்த்துவிடலாம் இந்தப்பாடலை. எல்லாப்பாடகிகளின் பாடலையும் பாப்'பில் சேர்த்துவிடுவது போல. டெய்லர் ஸ்விஃப்ட்,செலீனா கோமெஸ்( இப்போது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இவரின் good for you),ப்ரிட்னி ஸ்பியர்ஸ் போல ,,இருந்தாலும் இந்தப்பாடலில் நிறைய நிறைய எனக்கு அதிகம் பிடித்த ராக் ஸ்டஃப் இருக்கிறது.திடும் திடும் என்று அடித்துப்பிளக்கும் ட்ரம்ஸும் கூடவே எலக்ட்ரிக் கிட்டாரின் விள்ளல்களுமாக கொண்டாட்டமாக உணரவைக்கிறது.

மனதின் அடியில் சென்று எழுப்பிவிடும் அந்தப்பியானோவின் வெள்ளைக்கட்டைகளில் வாசித்த முதல் நோட்ஸ்கள், இது மெதுவாகச்செல்லும் பாடலென. பெரும்பாலும் வைட் சிக்ஸ்'களுக்கு (White Chicks) ராப்/ஹிப் ஹாப்/ராக் கையறாக்கள் பாடவராது என்ற கூற்றை தோற்கடிப்பதுபோல 0:29ல் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து 0:39ல் அதிரடியாக வெளிக்கிளம்புகிறது இத்தனை நாளும் அடக்கிவைத்திருந்த நமது கோபத்தைப்போல. வலியும் வேதனையும் ஒரு நிலை கடந்து செல்லும்பொது வெடித்துக்கிளம்பும் உணர்வு இந்தப்பாடல் முழுக்க.பாடி முடித்ததும் அதன் மூலம் கிடைக்கும் அற்புதமான மகிழ்வு,பாடிட்டேன்டா'ங்கற மாதிரி. என்னாலும் இறங்கி அடிக்க முடியும் என்று உரத்துக்கூறுவதைப்போல பாடல் முழுக்க அமைந்திருக்கிறது. 2:50ல் நிறுத்தி நிறுத்தி பின்னில் ஒலிக்கும் அதிரடி ட்ரம்ஸ்கள் பாடலோடு ஒன்றிப்போக வைப்பதோடு நமக்குள்ளேயும் கிளப்பி விடுகிறது இத்தனை நாளும் அடக்கிவைத்திருந்த இயல்பான கோபங்களை.! இதைப்போல இயல்பான உணர்வுகளைப்பாடலில் கொண்டுவருபவர்களில் இவருக்கென ஓரிடம் எப்போதும் உண்டு.இடையில் வெடித்துக்கிளம்பாது இந்தப்பாடல் அப்படியே அமைதியாகச் சென்றிருக்குமேயானால் , Vanessa Carlton-னின் ' thousand miles' போல நல்ல மெலடியாகவும் உருவெடுத்திருக்கும்! தொடக்கத்திலும் மென்மையான இடங்களிலும் அந்த ' thousand miles'-ன் தாக்கத்தை உணரமுடியும் நம்மால் இந்தப்பாடலில்!

இதே ராச்சல் 'beating me up','lone ranger',(இவற்றையெல்லாம் நேரடியாக பாப்'பில் சேர்த்துவிடலாம் சந்தேகமேயின்றி )எனப்பல குறிப்பிடத்தகுந்த பாடல்களைப்பாடியிருந்தபோதிலும் அவரே எழுதிப்பாடிய வெறி கிளம்பும்போது 'ராக்'கிலும்,அமர்த்தலாகப்பாடும்போது 'பாப்'பிலுமாக கலக்கியிருக்கும் இந்த 'fight song' தான் special !

"Like a small boat on the ocean
Sending big waves into motion
Like how a single word
Can make a heart open
I might only have one match
But I can make an explosion"


No comments:

Post a Comment