"இன்மை" மே மாத இதழில் வெளியான கவிதைகள்
எல்லாம் மாயை
என்றெழுத
மசியும்
காகிதமும்
கூடவே
ஒரு சூடான தேநீரும்
தேவைப்படுகிறது
*****
ஒவ்வொருமுறையும்
கூரிய
நகங்களுடன்
அணில்
ஏறி இறங்கும்போது
அந்த
மரம் அகமகிழ்ந்துகொள்கிறது
****
என்னுள்
கடந்து
ஊடுருவ
இயலாத ஒளி
எனது
பின்னில்
கருநிழலாக
பதுங்கி
நிற்கிறது
*****
ஒருமுறை
குத்திய கொக்கு
மறுமுறையும்
குத்தமுடிவதில்லை
அதேயிடத்தில்
அந்தக்குளத்தில்
****
மழை
நாட்களில்
பிடரிகள்
குதிரைக்கும்
சிங்கத்திற்கும்
வணக்கம்
ReplyDeleteஇளமை இதழிவ் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-