Monday, April 15, 2013

கேள்



காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்
அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது

ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால்
முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது.

சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால்
பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது

அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால்
நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

மானின் விழிகளைக்கேட்கலாமென்றால்
அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது

உன் மனத்தைக் கேட்கலாமென்றால்
அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது


.

2 comments:

  1. ஒவ்வொன்றும் அருமை...

    மாறிக் கொண்டிருக்கும் மனதை அடைய சிரமம் தான்...

    ReplyDelete