Tuesday, October 12, 2010

எண்ணங்கள்

எண்ணங்கள்
உயிரோசை இணைய இதழில் வெளியான எனது கவிதை.

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3507

எதிரே அமர்ந்திருந்த
வெள்ளைக்காரனைப்பற்றி
என்னென்னவோ நினைப்பு
எனக்குள்..
இவனுக்கு என்
கலாச்சாரம் தெரியுமா?
இவன் பின் புலம்
என்னவாயிருக்கும் ?
இவன் தற்போது
எதைப்பற்றி நினைத்துக்
கொண்டிருப்பான் ?
யூகிக்க முடியாமல்
தவித்துக்கொண்டிருந்தேன்.
போதை வஸ்து
உண்டிருப்பானோ ?
எத்தனை பெண்களோடு
சகவாசம் வைத்திருப்பான்?
இவன் மனதில் என்ன
ஓடிக்கொண்டிருக்கும்?
நிச்சயம் சாமியார்களைத்
தேடித்தான் வந்திருப்பான்.
இப்படியெல்லாம்
நான் நினைத்துக்
கொண்டிருக்கும்போது
ஜன்னலுக்கு வெளியே
நீட்டிக்கொண்டிருந்த
என் கையை உள்ளே
வைத்துக்கொள்ளும்படி
அன்புடன் அவன்
மொழியில் உரைத்தான்
விரைவாக நகர்ந்து
கொண்டிருந்தது ரயில்.!



.

6 comments:

  1. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க.. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சூபரா இருக்கு ..வாழ்த்துங்க ..

    ReplyDelete
  4. இயல்புக் கவிதைக்கு இத்தனை வரவேற்பு
    என்னைத் திகைக்கவைக்கிறது.
    வருகை தந்து வாழ்த்திய
    செல்வராஜ்,உழவன்,சுதர்ஷன்,வெறும்பய
    அனைவர்க்கும் எனது நன்றிகள்..!

    ReplyDelete