ஆகிவிட்டது..!!
டெக்னாலஜி புத்தகங்கள்
தேடி எடுத்தேன்
சில காலம்
காதலிக்கு அட்டைகள்
தேடி எடுத்தேன்
சில காலம்
பாரதியையும்,கம்பனையும்
புரட்டி எடுத்தேன்
சில காலம்
ஆனால்
இப்போதெல்லாம்
சமையல் புத்தகம்
மட்டுமே
தேடி எடுக்கிறேன்
என்னவாயிற்று
எனக்கு ?!
நான் மகான் அல்ல
அயோத்தி தீர்ப்பு,
எந்திரன் ரிலீஸ்,
பாங்கு கணக்கு முடிவு,
காமன்வெல்த்
விளையாட்டு,
ஹ்ம்..
பிறகு தான்
உணர்ந்தேன்,
காந்தி பிறந்த நாளும்
இடையே வந்து
சென்றதை.
.
பெரிய மேட்டரை எழுதிட்டு சின்னப்பையன்னு பேரு வெச்சிருக்கீங்க
ReplyDelete@கவிதை காதலன்..உங்க பேரே ரொம்ப நல்லாருக்கு...
ReplyDeleteவருகைக்கு நன்றி..
...சின்னப்பயலா இருந்தாதான் நிறய கத்துக்கலாம்..!
சமையல் புத்தகம்
ReplyDeleteமட்டுமே
தேடி எடுக்கிறேன்
என்னவாயிற்று
எனக்கு ?!
ஏன்னா நீங்க லவ் பண்ணுனமா ,கழட்டி விட்டமான்னு இல்லாம கல்யாணம் பண்ணி இருப்பீங்க,
2 கவிதைகளும் நல்லாருக்கு,சமூக விழிப்புணர்வூட்டும் சிந்தனை தெரியுது,டைட்டில் இன்னும் கவர்ச்சியா வெச்சிருக்கலாம்,.2 வது கவிதை குமுத்த்துக்கு அனுப்புங்க,நல்ல டேஸ்ட்
ReplyDeleteதமிழ்மணத்தில் எனக்கு ஓட்டு விழமாட்டேங்குது,எனவே மற்ற 3 இலும் ஓட்டுபோட்டு வீட்டேன்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
ReplyDeleteபிளாக்கின் லே அவுட் சூப்பர்
ReplyDelete@செந்தில்குமார்
ReplyDeleteநன்றி,வருகைக்கும் கருத்துகளுக்கும்..!