Friday, April 30, 2010

குழம்பிய குட்டையில் சில மீன் கள்

பெய்யற மழையில் தலையைச்சாய்த்து ஆடும் நாணல்
அதில் உட்கார நினைத்து விழ எத்தனிக்கும் போது பறக்கும் சிட்டுக்குருவி
குழம்பிய குட்டையில் சில மீன் கள்
மழை பெய்து முடிந்தவுடன் வரும் மண்வாசம்
இலையில் ஒட்டிக்கொண்ட கடைசி மழைத்துளி
பூத்திருக்கும் ரோஜா
கொஞ்சம் நிலவு
அது அலைஅலையாய்த் தெரியும் தேங்கிய மழை நீர்
உடைந்த முட்டைக்கூட்டை அலகால் ஏந்திக்குடிக்கும் காக்கை
கொஞ்சம் மேலே எப்போதாவது தெரியும் அரை(குறை) வானவில்
அதைப்பார்க்க மேகத்திலிருந்து சிறிது எட்டிப்பார்க்கும் சூரியன்
தெரு நாய்ச்சண்டை
சேவலின் கூவல்
அழகான சரியான கால இடை வெளி விட்டு கத்தும் செம்போத்து
நவ்வாப்பழம் கடிக்கும் அணில்
அதைத்துரத்தும் இன்னும் சில அணில்கள்
வெண்டாவி அத்து வரும் வேளையில் தென்னைமரத்திலிருந்து
வரும் அண்டங்காக்கையின் சத்தம்
வேப்ப மரத்து மூலிகைக்காற்று
என்னதான் இடியே விழுந்தாலும் அலுங்காமல் குலுங்காமல் நடக்கும் சேற்று எருமைகள்
அதன் மேல் அமர்ந்திருக்கும் குருவி
அவை கலக்கிய குட்டையில் மீண்டு வரும் நீர்க்குமிழிகள்
வெண் கொக்கு(குருட்டுக் கொக்கு)
தூரத்துக்கோயிலில் இந்த இடை வெளியில் அடுத்து அடிக்கும் என எதிர்பார்த்து
ஆனால் நின்று போகும் மணியோசை
வியர்க்கும் போது வீசும் இளந் தென்றல்
காலை மட்டும் நனைக்கும் என எதிர்பார்த்து தூக்கிப்பிடித்த உடையின்
விளிம்புகளையும் தொட்டுச்செல்லும் கடலலை
எல்லாம் பேசிமுடித்த பிறகு கிளம்பிய வண்டி சிறிது சுணங்கி நின்ற பிறகு
என்ன பேசுவது என்று தெரியாமல் ஜன்னல் கம்பிகளையும் சிறிது எக்கி எஞ்சினையும்
பார்த்துவிட்டு மீண்டும் அனுப்ப வந்தவரின் முகம் பார்க்கும் அந்த சில நொடிகள்

2 comments:

  1. இயல்பாய் தந்துள்ளீர். வாழ்த்துக்கள்

    ReplyDelete