Saturday, July 29, 2023

மாமன்னன்


                     Mamannan audio launch to happen on this date- Cinema express

மாமன்னனில் இரண்டு காட்சிகள். மிக முக்கியமான காட்சிகள் எனச் சொல்லப்பட்டவை. ஒன்று வடிவேலுவை உட்காரச்சொல்லாமல் நிற்க வைத்தே பேசுவது, இன்னொன்று தலைவியின் இலவசப் பாடசாலையை அடித்து நொறுக்குவது.

நாற்காலியில் வடிவேலுவை உட்காரச்சொல்லவில்லை சரி. அவர் மகன் உதயநிதியை உட்காரப்பா பேசலாம் எனச்சொல்லத்தானே செய்கிறார் ஃபகத். தாழ்த்தப்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த ஒருவரின் மகனை தமக்கு சமமாக உட்காரச்சொல்லத்தானே செய்கிறார் ஃபகத்?.. கொதித்தெழுந்தது மகன், பாசம் காரணமாக இருக்கலாம். தம் தந்தைக்கு சரியான மரியாதை தராததால் அடித்து உடைக்கிறார்.சரி ..இது எப்படி ரொம்ப முக்கியமான காட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது? அடிப்படையில் சிறு நெருடலெனக்கு. தம்மை உட்காரச்சொன்னது பிடிக்கவில்லையா? அடிப்படையில் தடுமாறும் காட்சி இது.

இன்னொன்று கீர்த்தியின் இலவசப்பாடசாலை எதிரிகளால் அடித்து நொறுக்கப்படுகிறது. சரி. அது எதிரியின் பண்பு. அதற்காக இல்லாவதவர்க்கு நன்மை செய்வதாக கூறிக்கொள்ளும் ஒரு பெண்/படித்தவர் இன்னொரு பாடசாலையை/மாணவர்கள் படிக்கும் பாடசாலையை உதயநிதியுடன் கூடவே சென்று புத்தகம்/கணினி என ஒன்றையும் விடாது அடித்து நொறுக்குகிறாரே எப்படி ? என்னால் செரிக்கவே இயலவில்லை. ஒரு ஆசிரியரின் இடத்தில் இருப்பவர் இப்படி நடந்துகொள்வாரா?

ரஹ்மானின் இசை எனப்போட்டிருந்தது. உள்ளே கேட்கும்போது எல்லாம் ராசைய்யாதான் நிறைந்திருக்கிறார். இதற்கு ராசைய்யாவே இசைத்திருக்கலாம். மண்ணுடன் ஒட்டி உறவாட அவரின் இசை தான் பொருத்தம். படத்துக்குள் ஒரு பொருந்தாத ஜீவன் என்றால் அது ரஹ்மான் தான்.

                 Mamannan Trailer: सच्चाई सुनने वाले कान तलाशता एक गीत, दलित स्ट्रगल और  'विरासत' कनेक्शन - mamannan trailer legacy of dalit struggle a gut  wrenching song with fahadh faasil udaynidhi stalin face off

சுரேஷ் கண்ணன்,வடிவேலுவை நாகேஷுடன் ஒப்பிட்டு உயரம் போதவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். நாம் வடிவேலுவை பார்த்ததே அங்கனம் தான். போதாக்குறைக்கு தினமும் அள்ளித்தெறிக்கும் மீம்களும் அவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க ஒப்பவேயில்லை தான். இருப்பினும் வ்டிவேலு தமக்கும் அடக்கி வாசிக்கத்தெரியும் எனவும் மேலும் சீரியஸாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ளத்தெரியும் என்பது தெளிவு.இவ்வளவு நாளா நாம் இவரை எனக்கென்னவோ சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோணுகிறது.

இடைவேளைக்குப்பிறகு படம் தொய்கிறது என்றனர் பலர். நெட்ஃப்ளிக்ஸில் இடைவேளை என்பதே இல்லை. எனக்கோ அங்கனம் தோணவேயிலை. சரியான திரைக்கதை. நேர்கோட்டில் பயணித்து எதிர்பார்த்த முடிவுடன் நிறைவு. மேலும் இவ்வளவு தைரியமாக படம் எடுக்கத்துணிந்த மாரி படத்தின் பெயரையும் ‘அருந்ததியினர் மகன்’ என்றே வைத்திருக்கலாமே. மாமன்னன் எதற்கு ?

#மாமன்னன்

 

mamannan-5

Sunday, July 23, 2023

ஆணை-புலியின்-ஆணை

 


உங்கப்பன் விசிலக்கேட்டவன்.... ஹ்ம்... அடி பட்டையக்கெளப்பிட்டாண்டே. தம்பி. ஆஸ்காருக்கெல்லாம் சேர்த்து ஒரு பாட்டுல பாடையக் கட்டிப்புட்டான். வீரதீரமா ஒரு பாட்டு கேட்டு நெம்ப நாளாச்சு. அதான் பிச்சிருச்சி இந்தப்பாட்டு. டேய் தம்பி. தலைவரு நிரந்தரம். அர்த்தமாயித்தா ராஜா.?! ஆரம்பத்துல ஏறிக்கொண்டே போகும் அந்த ட்ரெம்ப்பெட்/துந்துபி எது வேணா சொல்லலாம். இனி தலைவரு (?) படத்துக்கெல்லாம் இதையே போட்டுத் தாக்கலாம். ஸ்கூல்ல ட்ரில் வெப்பாங்ய. பீட்ஸ் பாத்தீங்கன்னாஆ அதே தான். அறையுது ட்ரம்ஸ். என்ன ஒரே பிரச்னைன்னா,இதுக்கெல்லாம் தாத்தாவால இதுக்கு ஈடு குடுத்து ஆக்ஸேன் குடுக்க முடியுமான்னு தான்..ஹிஹி. 
 
0:20 லருந்து 0:25 வரை ஒலிக்கும் அந்த ஆரோகணம் ஏறிச்செல்லும் சுதி. கேளுங்க. ஏறிச்செல்லும் ஒலி. பாட்டு முழுக்க தேவையான இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப்பாட்டுல அவரோகணம்ங்கறதே -கீழிறங்கும் சுதி - இல்லை. ஏன்னா தலைவரு எப்பவுமே முன்னேறியே செல்பவர். அதான்..ஹிஹி.. 03:01ல கேட்கும்போது அப்டியே அள்ளிக்கிட்டு போகுதுடா எலே தம்பி. அங்கங்க தலைவரு ‘ஏ’ ஏ’ன்னு குரல் கொடுப்பது இன்னமும் வெறியேத்தும் சங்கதி. செமடா!
 
நாடோடிகள் படத்துல ஒரு பாட்டு ’சம்போ சிவசம்போ-ன்னு ஒரு பாடல். அதுவும் இதே போல முன்னேறிச் செல்ல மட்டுமே இசைக்கப்பட்ட பாடல். பிரியாணி படத்துல ’எதிர்த்து நில்’லுன்னு ஒரு பாடல். எல்லாம் ஒரே ஜானர்ங்ணா...அப்டியே எடுத்து காப்பியடிச்சுட்டான்னு சொல்லலை. ராசைய்யாவும் சிந்து பைரவில ஒரு பாடல் போட்டிருந்தார் இதே போல. இசைமேடைகளில் முன்னேறிச்செல்கிறார் ஜேகேபி’ங்கறத சொல்றதுக்கு. என்ன அதெல்லாம் இன்னும் வேகமா/ஃபாஸ்ட்டா (ரெண்டும் ஒண்ணுதானே.. ஹிஹி) இருக்கும், இது தாத்தாவின் வயதை கவனத்தில் கொண்டு கொஞ்சம் மெதுவா, ஆனாலும் ஸ்டெடியா போகுது பாடல். ஹுக்கூம்...டைகர் கா ஹுக்கும்.. அளப்பற கெளப்புறம்!
 
#ஆணை-புலியின்-ஆணை

 

Wednesday, July 5, 2023

ஜாஸ் மாலைப்பொழுது.


 

நேற்றிரவு ஒரு ஜாஸ் பியானோ நிகழ்ச்சி. ஷாரீக் ஹாசன். பெங்களூர்காரர் தான். இப்போது வசிப்பது அமேரிக்காவில். வழக்கம்போல ஐந்து வயதிலேயே பியானோ வாசிக்க கற்றுக்கொண்டு பதினைந்து வயதில் அத்தனை பரீட்சைகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். 
 
Jazz கொஞ்சம் போரடிக்கும்தான். அத்தனை மெலிது, பட்டால் சுருங்கிவிடுமோ என ஆலோசிக்க வைக்க்ம் இசைக்கூறுகள். பொறுமை அவசியம். Jazz பியானோவில் என்பது இதுவே முதன்முறை முழுக்கச்சேரியும் கேட்பது. வழக்கமாக சாக்ஸஃபோனில் கேட்டே பழக்கம். கென்னி ஜீ எல்லோருக்கும் தெரியும், அற்புதமாக பல இசைக் கோவைகளை Jazz-ல் இசைத்துள்ளார். தமிழ்த்திரையில் ஜாஸ் எனில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் என ராசைய்யா, பிறகு தம்பி அநிருத் இப்போது இசைத்த ’மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ போன்றவற்றை சொல்லலாம்.
 
பழமையான மேற்குலக ஐரோப்பிய இசைக்கூறுகள் மட்டுமன்றி, தென்னெமெரிக்க நாடுகளான அர்ஜெண்டீனா, பிரேஸில் போன்ற நாடுகளிலும் Jazz இசைக்கப்படுகிறது அவர்களின் பாணியில். இந்த செய்தி புதிது எனக்கு. ஏனெனில் Jazz எனில் அமுத்தலான, அடங்கிய மென்மையான இசை. தென்னெமரிக்க நாடுகளின் இசை என்பது கொண்டாட்டத்துக்கானது, பெரும் அடிதடிகள் நிறைந்தது. ஃபொன்ஸியின் டெஸ்பராட்டோ போலான இசைகளை கேட்டே நாம் பழகியிருக்கிறோம். ஒலிவாங்கியில் அறிவிக்கையில் Jazz தென்னெமரிக்க நாடுகளிலும் இசைக்கப் படுகிறதாவென எனக்கு ஆச்சரியம். 
 
Moskowsky என்ற போலிஷ்/ஜெர்மானிய கம்போஸர், நிறைய Etude எனும் இசைக்கூறுகளை இசைத்து வைத்துள்ளார். அதிலொன்று பியானொவில் இடது கை விரல்களால் மட்டுமே இசைக்கக்கூடிய ஒரு இசைக் கோவை. கிட்டாரில் இடது கை விரல்களால் மட்டுமே வாசிக்க இயலும். இங்கு பியானோவில் இரு கைகளும் விரல்களும் சேரவில்லையெனில் முழுமை பெறாது. எனினும் இடக்கை விரல்கள் மட்டுமே கொண்டு வாசித்தார் ஷாரிக். அற்புதம்,இதுபோல புதுமைகளை அறிமுகப்படுத்தி வாசித்தது நல்ல அனுபவமாக இருந்தது. வழக்கம்போல செவ்வியல் இசைக்கோவைகளை திறம்பட வாசித்து விட்டு செல்வது அனைவரும் செய்வதே. பிறகு ஷாரிக் தாம் உருவாக்கிய Jazzல் அமைந்த இசைக்கோவைகளை வாசித்தார்.
 

 
ChatGPT யிடம் இசைக்கோவைக்கான குறிப்புகளைக் கொடுத்துவிட்டு , (குறிப்புகள் எனில் சூழல், இசையின் போக்கு, ரிதம் பேட்டர்ன்ஸ் போன்றவை), அது இசைத்தது என்று ஒன்றை இசைத்துக் காண்பித்தார்.Melancholy Hero எனப்பெயரிட்டிருக்கிறார். சும்மா விளையாட்டுக்காக சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். உண்மையிலேயே Jazz இசைக்கான அத்தனை இலக்கணங்களையும் கொண்டிருந்தது. ஒருவேளை செயற்கை நுண்ணறிவே இதை இசைத்திருக்குமோ என்ற நம்பிக்கையை அளித்தது.கொஞ்சம் கூட சந்தேகம் எழவேயில்லை.
 
சமீபத்தில் மறைந்த தமது நண்பனுக்கென ஒரு இசைக்கோவையை வாசித்தார். அவரே தம்மை Jazz இசைக்கு இழுத்துவந்தவர் என பெருமையாக கூறினார்.பெங்களூர் கோரமங்கலா க்ளப்களில் அமர்ந்து இசை பற்றி விவாதிப்போம், ஒரு லிட்மஸ் டெஸ்ட் என ஒரு இசைக்கோவை இருக்கிறது அதை வாசிக்க வேணும் என்று எப்போதும் கூறுவார் எனச் சொல்லிவிட்டு அந்தக் கோவையை Round Midnight வாசித்துக் காண்பித்தார்.
 
அர்ஜெண்டீனியன் பீஸ் Malambo என ஒன்றை வாசித்துக் காண்பித்தார். அது அவர்களின் நாட்டார் இசை. Folk Music (இந்த இசையை யூட்யூபில் Malambo என்ற பெயரை இட்டு கேட்டுப் பாருங்கள்....ஆஹா பெருங் கொண்ட்டமாக இருக்கும். எ.கா https://youtu.be/aoxMuPguBxc ) பெரிய பெரிய ட்ரம்ஸ்களை வைத்துக் கொண்டு ஆண்கள் இசைக்கும் இசை. பெண்கள் ஆடுவர் அதற்கு. அத்தனை அதிர்வான இசையினை மென்கட்டைகள் கொண்ட பியானோவில் வாசித்தது அருமை. ஆட்டத்திற்கான இசை அது. கிட்டத்தட்ட ‘மைக்கேல் ஜாக்ஸனின்  ‘All I want to say that, they dont really care about us’ பாட்டில் அடித்து நொறுக்கப்படும் ட்ரம்ஸ் போன்ற இசைக் கோர்வை இது. இந்தபாடல் கூட Malambo இசை அதிர்வுகளின் அடிப்படையில் இசைத்திருக்கலாம் தான். (சட்டென நமது நினைவுக்கு வரும் பாடல் அது.) இருப்பினும் பியானோவில் அந்த இசையின் அனுபவத்தை கொணர முயற்சித்தார். 
 
எல்லாம் பரீட்சார்த்த முயற்சிகள் தான். இப்படியான புதுமையான இசை நிகழ்ச்சிகளை காண வேணுமெனில் யூரோவில் கொட்டிக்கொடுக்க் வேணும். ராசைய்யாவின் இப்பொதைய ஜெர்மன் ட்டூர் டிக்கெட் விலை 150 யூரோக்கள், நம் காசுப்படி 15ஆயிரம் உரூபாக்கள். இங்கு பெங்களூர் இண்டர்நேஷனல் செண்டரில் அத்தனையும் இலவசம் வாழ்க நீ எம்மான்.
 
செக் குடியரசு ப்ராக்கில் இருக்கும்போது ஓவ்வொரு வார இறுதியிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சென்றுவிடுவது வழக்கம். எதுவும் இலவசமில்லை. 500-600 க்ரெளன்கள் இருக்கும் அப்போது. 
 
பின்னரும் Jazz ஜாம்பவான்களின் இசையை செவிகுளிர வாசித்தார். நிறைய பெயர்களை சொல்லி அவர்களின் இசைக்கோவகளை அறிமுகப்படுத்தி , அதில் உள்ள இசைத்தருணங்களை தாம் ரசித்தவற்றை பகிர்ந்து கொண்டார். மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கும் போது தமது இடக்காலை தரையில் தட்டிக்கொண்டே வாசித்தார். கவனித்தேன்.முழு ஈடுபாடு இல்லையெனில் இதுபோன்ற செய்கைகள் வருவதில்லை.!
 

 

       

 

Sunday, April 2, 2023

பட்டான்

                           
                             Pataan: ఈసారి ఏ గొడవ అవుతుందో? - NTV Telugu

'பட்டான்’ நல்லாதானப்பா இருக்கு. ஏன் இப்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு கழுவி ஊத்துனாங்ய..?! ம்.. புரியலை. என்ன அண்டர்கவர் ஏஜண்ட். பிடிபட்டால் அப்படியே அரசாங்கம் கை கழுவிவிடும். ஒரு ஆங்கிலக்கதையில் சிறுவர்களை புகைக்கூண்டு வழியாக கீழிறக்கி வீட்டிலுள்ள பொருட்களைத் திருடிக்கொண்டு வரப்பணிப்பர், பிடிபட்டால் மேலிருந்து விடப்பட்ட கயிறு அப்படியே அறுபடும். கீழே இறக்கி விட்டவன் ஓடிவிடுவான். சிறுவனுக்கு நல்ல மொத்து பின்னர் பாலர்சிறை வாசம். அதே தான் இங்கயும். விஎஃபெக்ஸ் எஃபெக்ட்டெல்லாம் பிரமாதம், அதுவும் பாலிவூட் பாதுஷாவின் உடம்பில் பழனிப்படிக்கட்டுகள் கண்கூடு..ஹிஹி.
 
ஸைஸ் ஸீரோ ருபைய்யா, அதான்யா டீபிக்கா, யக்கா என்னமா பொரண்டு பொரண்டு அடிக்கிது.. இந்த ஹாலிவூட் படத்துலல்லாம் எம்புட்டூதான் அழகுப் பதுமையா இருந்தாலும் பெண்டு கழட்டீட்டு தான் விடுவாங்ய சண்டைக்காட்சீல.. உமா துர்மன் பாருங்க கில் பில் பார்ட்டூ 1 அப்பால பார்ட் ட்டூல...எல்லாத்துலயும் அதகளம். ’எந்த நேரத்திலும் ஏமாத்துவா’ன்னு டீப்பிக்கா கண்ணுலெயே தெரியுது.ஒண்ணும் புதிதில்லை.
 
டைகர் இஸ் கமிங். ஆரூப்பா அந்த டைகரூ.. அட நம்ம பஹில்வான் பாஹிஜான் சல்லுமான், இன்னமுந்தான் ஒடம்ப ’வீர்கல்தி’ (ஹிஹி அது வீர்கதி) ல வெச்சிருந்தாப்லயே மெயிண்டெய்ன் பண்றான்யா. ட்ரெயின் ஸ்டெண்ட்டெல்லாம் முடிஞ்சு ஒரு வழியா தண்டவாளத்துல உக்காந்து ரெண்டு பேரும் பேசீண்டுருப்பா. ஆச்சுய்யா முப்பது வர்சம். வேற எவனாவது கண்ல படுறானா? ஹ்ம். அப்டீன்னு பாதுஷா கேக்க, டைகர் ஓசிச்சு ஓசிச்சு இல்ல, அவன் செய்வான்யா ( எனக்கு தோணினது ரண்வீர் சிங்- அதான் டீப்பிக்கா ஹஸ்பெண்டூ) ..இல்ல இல்ல அவனாலல்லாம் செய்ய ஏலாது அப்படீன்னும் ரெண்டு பேரும் பேசிப்பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாம, எல்லாம் நம்ம தாண்டே செய்யணும், வேற ஒருத்தனும் செய்ய லாயக்கில்லைன்னு முடிக்கிறா..ஹிஹி. எல்லாம் நம்ம தலேலேஏழுத்து.. ஹிஹி.
 
கதை இரண்டு இஸ்லாமியர் சேர்ந்து இந்திய நாட்டை தம்முருவில் இருந்து மாறியிருக்கும் ஒரு இந்து விரோதியிடமிருந்து காப்பாற்றும் அடிச்சரடு.. ஹ்ம்.. சரி ரொம்ப பேச வேணாம். ஃபைன் கியின் போட்டு விட்டாலும் விட்றுவாங்ய..நமக்கு எதுக்கு வம்ப்பூ..🙂
 
எனக்குப்பிடிச்ச ஷாரூக்’னா அது ‘ராஜூ பன் கயா ஜெண்டில்மேன், யெஸ் பாஸ், பாஸீகர்’ தான். ’தில் ஸே’ கூட சேத்துக்கலாம். இந்த மாதிரி ஜேம்ஸ்பாண்டூ வேலேல்லாம் செய்யறதுக்கு கொள்ளப்பேர் இருக்காங்ய, நல்லா கரண கரணயா காலும் கையும் ஒடம்பும் வெச்சிக்கிட்டு, இதெல்லாம் எதுக்கு ஷாரூக்குக்கு. ஹ்ம். இங்கு ஹேர்ஸ்டைல், உடல்மொழி எல்லாம் மாற்றிக்கொண்டு அலையும் பாதுஷா, ரஷ்யாவில் ஓட்டல் அறையில் தான் யார் என்பதை டீப்பிகாவிடன் தெரிவிக்கும் காட்சியில் மட்டும் எனக்குப் பிடித்த ஷாரூக். நீங்களும் பாருங்க.
55 is better than 56.... haahaaa.... 🙂
 
ஆயிரம் கோடிப்பே....ஹிஹி.. #பட்டான்

                                                    Pathaan (film) - Wikipedia 


Sunday, March 26, 2023

சிகரத்தில் ஏறு..!

 


போன வியாழக்கிழமை (26 மார்ச்) BIC-ல ஒரு பதினோரு குறும்படம் போட்டுவிட்டாங்ய...ஆமா.. பதினோரு படம்..ஒற்றையடீல...ஹிஹி... எல்லாம் புதன், வியாழன் இதுமாதிரி நட்டநடு வார வாக்கில போட்டுத்தள்றதே வழக்கம். ஹிஹி.. உகாதிக்கு மறுநாள்ங்கறதால கூட்டம் இருந்ததுன்னு சொல்லலாம். ஒண்ணொண்ணும் பத்து/இருபது/ அல்லது ஆகக்கூடுதல் முப்பது நிமிடப்படங்கள் மட்டுமே.. அதான் ஒரே இரவில் அத்தனை படங்களும் திரையிட முடிந்தது.

சில படங்கள் அற்புதம். சில படங்கள் நெஞ்சைப்பிசைந்து இருக்கையை விட்டு அகல விடாது இருத்தி வைக்கும், சில படங்கள் சாகசம் என பதினொன்றும் ஒவ்வொரு வகை. மூன்று படங்கள் என் நெஞ்சைத் தொட்டவை. திரையிட்ட அத்தனையும் மலையேற்றம் பற்றிய படங்கள்.

From My Window

மாற்றுத்திறனாளி இளந்தாரிப்பெண் ஒருத்தி. மூளை வளர்ச்சி குன்றியவர். சக்கர நாற்காலி விட்டு எழுந்துகொள்ளக்கூட இயலாது. அவர் தாய்மொழியான ஆங்கிலம் பேசுவது வீட்டிலுள்ளோர்க்கு மட்டுமே விளங்கும். பத்து சொற்களைச்சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு பெரும் மலையேற்றம் செய்தது போல உடல் களைத்துப்போகும். ஒரே பொழுது போக்கு அவரின் அறையிலிருக்கும் சன்னல் வழித்தெரியும் மிக உயர்ந்த மலை. அவரின் அவா எல்லாம் அந்த மலை மீது எப்படியேனும் ஏறிவிட வேணும் என்பதே. ஆ.... சாத்தியமா? அவரின் ஆசையறிந்து ஒரு மலையேற்றக்குழுவினர் அவருக்கு ஊக்கமளிக்கின்றனர். நாம அந்த மலையில் ஏறுவோம் ஒரு நாளென.

கிட்டத்தட்ட மூன்று சிகரங்கள்
13,000 அடி, 8000 அடி, மற்றும் 11,000 அடியென. அதில் ஏதேனும் ஒன்றில் ஏறலாம் என நாள் குறித்து காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டு குழு புறப்படுகிறது. இவர் தம்முடைய சக்கர நாற்காலியில் தான் இருக்கிறார். வாலண்டியர்ஸ் இருவர். தம் தோளில் பட்டிகள் கட்டிக்கொண்டு அந்த வண்டியினை இழுத்துக் கொண்டு செல்லவென. முறை மாற்றிக் கொள்கின்றனர் வழியில். கிட்டத்தட்ட ஏழாயிரம் அடி ஏறியாகிவிட்டது.

அனைவருக்கும் சோர்வு
. இருப்பினும் அந்தக்குழு அசராது அந்தப் பெண்ணிடம் நாம் இன்னமும் ஏற வேணும், சோர்வடைதல் கூடாது என அறிவுரை. அவரோ 13,000 அடி இன்னமும் ஏறவில்லையா எனக்கேட்டு கலாய்க்கிறார். ஒரு சிறுசெய்தி. அந்தக்குழுவிலிருக்கும் அத்துணை பேரும் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளியே.! முடிவில் அந்தப்பெண் 13,000 அடி சிகரத்தை தம் சக்கர வண்டியிலேயே சென்று ஏறி முடித்தார். இந்தக்குறும்படத்திற்கு பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.

Link Sar

இரண்டாவது படம், மலையேற்றம் 6000 மீட்டர்கள் (18,000 அடிகள் ) பாகிஸ்தானில் இருக்கும் காரகோரம். முழுக்க முழுக்கப் பனி. (எவெரெஸ்ட் 8848 மீட்டர்கள், 25,000 அடிகள்) மிகுந்த அனுபவமிக்க குழு. மூவர். ஏற ஆரம்பித்த முதல் நாள் பனியில் சிக்கி அவரின் கணுக்கால் சுளுக்கு. நகர முடியவில்லை.வீக்கம், முடங்கியது மலையேற்றம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி பனி மட்டுமே. அவர்களிடம் அத்தனை முன் தயாரிப்புகள் இருந்த போதிலும் இப்படி ஒரு நிகழ்வு எதோ அசம்பாவிதம் நடக்கப்போவது போல. முடங்கி விட்டது குழு. ஏனெனில் இது அவரின் பத்தாண்டுகால கனவு. எப்படியும் ஒரு மாதகாலம் ஆகும் என அவரே கணிக்கிறார். ஒன்றும் செய்யவியலாது. பாதி தூரம் வரை ஏறியாகிவிட்டது.

கீழிறங்கிச்செல்வதும்
, மேலே ஏறிச்செல்வதும் ஒரே தூரம். என்ன செய்யலாம். பனிப்புயல் வேறு. வழி தவறிச்செல்லவழி வகுக்கிறது. குடிலுக்குள் முடங்கிக்கிடக்கும் குழு. கால் நகற்ற இயலவில்லை. தொடர்ந்து தமக்குத்தாமே ஊக்கமளித்துக் கொள்கிறார். அத்தனையும் பதிவு செய்யப்படுகிறது கேமராவில். ஒரு மாதத்திற்கும் கூடுதலாகிறது காலை அசைக்கவேனும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பேபி ஸ்டெப்ஸ் வைத்து நடந்து பழகி (இறுகிக் கிடக்கும் பனி, இன்னமும் நரம்புகளை இறுக்கத்தான் செய்யுமே தவிர இளகவைக்காது.) இஞ்ச் இஞ்சாக ஏற முற்படுகிறார். அத்தனை மன உறுதி.

எதோ ஒரு உருவம் இப்படி சிக்கிகொள்கிறவர்களை, ஊக்கமளித்து, காதுகளில் இனிய சொற்களைச் சொல்லியும் ,நேரில் தோன்றி வா நாம் நடக்கலாம் என கூடவே வருவது போலவும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படி எதோ ஒன்று அவருக்கு உதவியிருக்கக்கூடும். கடைசியில் அடைந்து விடுகிறார் சிகரத்தை.

Breaking Trail

மூன்றாவது என்னைக்கவர்ந்த அதியற்புதமான குறும்படம். கறுப்பினத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் 1200 மைல்களை ( கிட்டத்தட்ட 1900கிமீ) தூரத்தை நடந்தே கடக்கிறார், அது Ice Age Trails என அழைக்கப் படுகிறது அமேரிக்காவில். கால்களால் நடந்தே கடப்பதென்பது அதுவும் நேர் வழியில் அல்ல. சாலை வ்ழியோ இல்லை நடந்து செல்லும் வழியோ அல்ல. முழுக்க முழுக்க பனிபடர்ந்த மலைகளினூடாக. ஒரே ஒரு நாயைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நடந்தே செல்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு பெண்ணால் அதுவும் 1200 மைல்கள் நடந்தே அதுவும் பனி படர்ந்த மலைகளினூடே தனியாக யாரின் துணையுமின்றி..ஹ்ம்.. இதே கேள்வி அவரிடமும் கேட்கப்பட்டது எனத்தெரிவிக்கிறார். ஒரு நாளைக்கு 20 மைல்கள் என நடக்கிறார். இரவில் குடில் அமைத்து தம் நாய்க்கு உணவளித்து விட்டு அதற்குள் தாமும் உறங்கிக்கொள்கிறார்.

இரவும் பகலும் அத்தனை நீளமில்லை நம் இந்தியாவைப்போல
. ஆதவன் எதோ ஒரு மணிநேரம் தோன்றினால் கூட அற்புதம் நிகழ்ந்துவிடும் என்ற நிலையுள்ள நிலம். அத்தனை தூரத்தை நடந்தே கடக்கிறார் என்ற செய்தி பரவி அவருக்கு கொஞ்சம் உணவு, நீர் என அளிப்பதற்கு இடையிடையே ஆட்கள் நிற்கின்றனர். அவர்களிடம் தேவையானதை வாங்கிக்கொண்டு மீண்டும் தொடர்கிறார் தம் பயணத்தை, அனைத்தையும் வாங்கிக் கொண்டால் யார் தூக்கிச்சுமப்பது? கடைசிக்கு தம் இலக்கை அடைகிறார். தம் கால்களின் உதவிகொண்டு மட்டுமே.அவர் பெயர் எமிலி. கூகிளில் நம் விரல்களால் தேடினால் கிடைப்பார்.

கிட்டத்தட்ட எல்லாப்படங்களையும் அலசிப்பார்க்கும் போது, அடிப்படையாக எனக்குத்தோன்றியது இது மட்டுமே. உடற்தகுதி ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவேயில்லை. அத்தனை பேரின் விடா முயற்சி, செய்தே தீருவது இலக்கை அடைந்தே தீருவது என்ற நோக்கம், மற்றும் எந்த இடர் வரினும் சோர்ந்துவிடாத மன வலிமை. ஏனெனில் இதில் பங்கு கொண்ட அனைவரும் பெரும்பாலும் தனியாகத்தான் சாதனை செய்திருக்கின்றனர். ஊக்கமளிக்க ஆட்கள் இருந்த போதிலும், இடர்ப்பாட்டு சமயத்தில் கூட இருந்து ஆறுதல்/ ஊக்கமளிக்கவென யாருமே இல்லாத தருணங்கள் தான் முழுக்க முழுக்க.

நாங்களும் எங்கள் நண்பர்களுடன் இங்கு கர்நாடகாவின் சில மலைகளை எங்கள் கால்களால் அளந்து பார்த்திருக்கிறோம். கைவாரா ஹில்ஸ் (பாதை என்ற ஒன்றே கிடையாது, இதுவரை நடந்துசென்ற ஆட்களின் தடங்கள் கொண்டு ஆங்காங்கு கற்கள் கொஞ்சம் ஏறத்தகுந்தவை,) பிளிகிரி ரங்கநாதா ஹில்ஸ், மற்றும் கூர்க்கில் இருக்கும் முகில்பேட்டை (ஆகக்கடுமையானது, ஒரு அடிபோலும் எடுத்துவைக்க இயலாதது) , முத்தத்திக்காடுகள், அந்த்தரகங்கா (இங்கு ஒரு வல்லுநர் குழு வழி நடத்திச்சென்றது) என. இருப்பினும் இப்படி ஒரு சாகச மனப்பாங்கில் மலையேறியது கிடையாது. பார்த்த பதினோரு படங்களும் எதோவொரு வகையில் என் மலையேற்ற நினைவுகளைக் கிளறிவிட மறக்கவில்லை.

#சிகரத்தில்ஏறு

Thursday, March 16, 2023

வழிநெடுக காட்டுமல்லி

 


’கூட வருவியா?’ வால்மீகி படத்துல வந்த பாலா ஷிண்டே (இவரும் மராத்தி பாடகி தான் ) பாடல் தான் இப்ப ‘வழிநெடுக காட்டுமல்லி’யா சுத்திக்கிட்டு இருக்கு :). அந்த ஞாபகமே வந்துவிடக்கூடாது என தாளக்கட்டினை மெதுவாக்கி இசைத்திருக்கிறார். இங்க வேகம் கம்மி ,,அவ்வளவுதான்.

ஒரு அடர் கானகத்தின் பின்னணியிலான இசை
. மெதுவாக வருடிச்செல்லும் மழைச்சாரல் போல. க்ஸைலஃபோனின் தாளம் (இப்ப வெகுவாக எல்லோருக்கும் தெரிந்த ஐஃபோனின் டீஃபால்ட் காலர் ட்யூன்..!) இங்கு 01:47 லிருந்து தொடங்கி 02:04 வரையிலான இடையிசையில் அந்த க்ஸைலஃபோனின் தாளம் கேட்கலாம் ..!

இந்தப்பாடலைக்கேட்ட நாள் முதல் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது அதனின் மூலம், இருப்பினும் அத்தனை விரைவில் சிக்கி விடவில்லை அந்தக் ‘கூட வருவியா?’ சிறிதே கிளறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாகத்தேடியலைந்து ’எங்கூட வருவியா? என்று வந்து சேர்ந்தது.

அவர் வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறார். விமர்சனங்களை எதிர்பார்த்து அல்ல. அவரைப்பழிப்பதால் இவர்களுக்கு கூடுதல் விருப்பக்குறிகளும், இரண்டுநாட்புகழும் தவிர வேறேதும் கிட்டப் போவதில்லை. ஐயா நீங்க பாட்டு இசைத்துக்கொண்டேயிருங்க.. அந்த சிம்ஃபொனி பற்றியும் விரைவில் செய்தி தாருங்கள் ..! நன்றி #காட்டுமல்லி



Monday, February 6, 2023

Bloody Sweet

 Bloody Sweet

 
 
தொடக்கம் மெதுவாக எரிக் க்ளாப்டனின் கிட்டாரில் அழுந்த எங்கோ ஒலிப்பது போல இசைக்கிறது. தொடர்ந்து அதிர வைக்கும் ட்ரம்ஸ், இல்ல மச்சா இது வேற,...,நான் கூட கொஞ்சம் ப்ளூஸ் இசைதானோன்னு நெனச்சிட்டேன். அடங்கப்பா, இது ஆதென்ட்டிக் ராக்’டா ங்கொம்..சரி வேணாம்..ஹிஹி...அற்புதமான Bass Guitar along with Lead Guitar, கூடவே சேர்ந்து ஒத்திசைக்கும் அந்த குதம் அதிரவைக்கும் ட்ரம்ஸ்.
 
இங்லீஈஷ்லயே பாட்ட போட்டானே, இதுக்கு இங்கிலீஈஷூல்லாம் தெரியணுமேன்னு ரொம்ப கவலப்பட்டேன்..ஹிஹி.. இசை ஒன்றே போதும் மொழி வேணாம்னு தம்பி என் காதில வந்து சொல்ட்டாஆன்.. ஓதீட்டான்....அதனால பாட்டு எந்த மொழியாருந்தாலும் கேப்பம்டே.
 
நம்ம LCU Lokesh தம் அடுத்த படத்துக்கு ’சாம் சி.எஸ்’ (இவர் சிஎஸ் 
ஜெயராமனின் வாரீசாமே ?!..அப்டியா? ) தான் இசையமைப்பாளார்னு சொல்லீட்டார் ஒரு தடவை. மாஸ்ட்டருக்கு அப்புறம். நான்கூட என்னடா இது, வெளங்காதுடா அம்பின்னு நெனச்சுண்டேன். அப்புறம் பார்த்தா தம்பி குதிச்சு வண்ட்டான்..ஹிஹி..நல்ல வேளயாப்போச்சு..ஹி. ப்ளடி ஸ்வீட்டூ.
 
அதெல்லாம் சரி. இங்க பாடல் ஆரம்பிக்கும்போது Avril Lavigne - Complicated போல ஒலிக்கிறது, அதுவும் இந்த ப்ளடி ஸ்வீட் போலவே மெதுவாகவே தொடங்கி மெதுவாகவே நடந்து சென்று முடிவடையும்..கிடார் பீஸ் கேளுங்க, முழுக்க முழுக்க கிட்டார் பேஸ்டு பாடல் அதுவும். அதுக்காக அத அப்படியே தூக்கிகொண்டாந்து இங்க போடல.அதுக்கும் இதுக்கும் ஸ்னானப்ராப்த்தி கூட கெடயாது. ( அதென்ன ஸ்னாப்பராப்த்தீ.. 🙂 குளிச்சதுல தெறிச்ச தண்ணீ கூட ஒண்ணாத் தெரியாது..அப்டீன்னு அர்த்தமாக்கும்) இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பதூன்னு போட்றா மேரி விஜய்ண்ணாவே பாடீருக்கலாம். எனக்கு தோணினது. அவரின் குரல் ரேஞ்சுக்கு ஒத்து வரும் ராகந்தான். ராக்’ இசையாகவே இருப்பினும் அவரால் பாடவியலும். ( ராசைய்யா கமலையும், மனோவையும் சேர்ந்து ‘போட்டு வைத்த காதல் திட்டம்’னு பாடவைத்திருப்பார், அதிலும் கமல் குரல் தான் ஓங்கி ஒலிக்கும். ) இங்கயும் அது போல விஜய்யை கூடப் பாடவைத்து.... எதாவது செய்திருக்கலாம் தான். 
 
அதே போல இந்த ரிஹான்னாவின் பாடல் ‘DJ Khaled ft. Rihanna & Bryson Tiller - Wild Thoughts’ வரும் அந்த கொஞ்சும் எலெக்ட்ரிக் கிட்டாரின் ஒலி 00:46லும் தொடர்ந்தும் இடை இசையாகவே தொடரும். மொத்ததுல சொன்னா தம்பி போட்ட ப்ளடி ஸ்வீட்டூஊ ...ஒரிஜினல் திருநெல்வேலி இருட்டுக்கடை ராக்’ தான் இஹி இஹி. இலக்கணம் மாறாத ராக் இலக்கியம் ஆன கதை இல்ல.. பாட்டூ..இஹி இஹி.
 
அப்ப ’ வேலே இல்லா பட்டதாஆரீஈஈ (வீஐப்ப்பீஈஈஈ) ன்னு போட்ட ராக்’லருந்து இப்பத்தான் ராக் ஒரிஜினல் ராக்’ இசைக்க வாய்ப்பு கெட்ச்சிருக்கு தம்பிக்கு. புகுந்து வெளயாடிட்டான் புள்ளாண்டான்.
 
02:17லிருந்து 02:18 வரை அந்தத்தங்ககாசூ (தமிழ் பேசு தங்கக்காசு) சுத்தி வருவது ஐந்து முறை. ட்ரம்ஸ் அதிர்வதும் ஐந்து முறை அதோடு காசு துள்ளி விழும்போது ஒலிக்கும் சில்லறை ஒலி. ஹ்ம்.. எலே தம்பி ..ஒனக்கு நாலு க்ராமி ரெண்டு ஆஸ்கர் எல்லாம் குடுக்கலாம்டா. எவன் எவனோ வாங்குறான் (அப்டித்தான் கமல் சொன்னார், சக தமிழ் பலவேச நடிகர் தேசீய அவார்டூ வாங்கினப்ப..ஹிஹி)
 
புடிக்கல மாமு’ பாடல் நீதானே என் பொன்வசந்தம் படத்துல , முதல் 44 செகண்டுகள் மட்டும் கேட்டுட்டு வாங்க. ராசைய்யாவும் ராக்’ இசையை அவ்வளவு மென்மையாக கொடுத்திருப்பார். கொஞ்சும் அந்த எலெக்ட்ரிக் கிட்டாருடன். நம்ம ரஹ்மான் , அவரும் முஸ்தஃபா முஸ்தஃபாவில கொஞ்சம் தொடக்க இசையாக ஒலிக்க விட்டிருப்பார். நம்ம சந்தோஷ் கூட நெருப்புடா’ன்னு தீய அள்ளிப்போட்டார் ராக் இசைமேலே...எல்லாம் செய்தது தான் மாமு ஒண்ணும் புதுசுல்ல..ஆனாலும் தம்பி இங்க கலக்குறான். (அப்டித்தானே சொல்லணும்..ஹிஹி) 
 
இந்தப்பாடலில் 00:50 முதல் 01:03 வரை மடங்கி மடங்கி ஒலிக்கும் அந்த Bass Guitar. 00:08ல் ஒலிக்கும் அந்த ராட்டில் ஸ்னேக்கின் வால் குலுக்கி ஆரம்பித்து . பின்னரும் 01:06லிருந்து 01:07 வரை குலுக்கும் சப்தம். 01:29ல் ஈகிள் இஸ் கமிங் 🙂 கழுகு பறந்து செல்லும் ஒலி. மேலும் 01:06லிருந்து 01:20 வரை ஒலிக்கும் அந்த லீட் கிட்டார் பீஸ், அத்தனையும் கிட்டாரிஸ்ட் கெபா ஜெரீமியா’வின் ஆதிக்கம் (ஆமா இவா ஆண்ட்ரியா ஜெரீமியாவுக்கு சொந்தக்காராவா..? ஹிஹி ) பின்னர் 02:17லிருந்து 2:42 வரை ஒலிக்கும் தாளக்கட்டு ராக் இசையில் ட்ரம்ஸுக்கான பால பாடம்.
 
இப்பல்லாம் ராக் இசை சரளமாகவே வந்து போகிறது. முழுப்பாடலும் ஹிப்ஹாப்/ராப்/ என்ற எவ்விதக்கலப்புமின்றி ஒரிஜினல் ராக்’ ஆகவே ஒலிப்பது நன்று. இப்ப இருக்கிற சின்னப்புள்ளாரெல்லாம் நெட்ஃப்ளிக்ஸூ/ ஸ்ப்பாட்டிஃபை’ன்னு எல்லாத்துலயும் கணக்கு வெச்சிக்கிட்டிருக்கதால ராக்’ ஒன்றும் தொடத்தகாதது அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இளம் தலைமுறை இசைக் கலைஞர்களும். எஞ்சாயி எஞ்ஞாமி. ரிமோட்டின் ஒரு சொடுக்கில் விஎச்1/எம் டீவீ’யில் ஒலிக்கும் அதே ஒரிஜினல் ராக் இசை சன் ம்யுஸிக்கிலும், ஜெயா மேக்ஸிலும் தமிழில் ஒலித்தால் தவறில்லை.