Sunday, July 23, 2023

ஆணை-புலியின்-ஆணை

 


உங்கப்பன் விசிலக்கேட்டவன்.... ஹ்ம்... அடி பட்டையக்கெளப்பிட்டாண்டே. தம்பி. ஆஸ்காருக்கெல்லாம் சேர்த்து ஒரு பாட்டுல பாடையக் கட்டிப்புட்டான். வீரதீரமா ஒரு பாட்டு கேட்டு நெம்ப நாளாச்சு. அதான் பிச்சிருச்சி இந்தப்பாட்டு. டேய் தம்பி. தலைவரு நிரந்தரம். அர்த்தமாயித்தா ராஜா.?! ஆரம்பத்துல ஏறிக்கொண்டே போகும் அந்த ட்ரெம்ப்பெட்/துந்துபி எது வேணா சொல்லலாம். இனி தலைவரு (?) படத்துக்கெல்லாம் இதையே போட்டுத் தாக்கலாம். ஸ்கூல்ல ட்ரில் வெப்பாங்ய. பீட்ஸ் பாத்தீங்கன்னாஆ அதே தான். அறையுது ட்ரம்ஸ். என்ன ஒரே பிரச்னைன்னா,இதுக்கெல்லாம் தாத்தாவால இதுக்கு ஈடு குடுத்து ஆக்ஸேன் குடுக்க முடியுமான்னு தான்..ஹிஹி. 
 
0:20 லருந்து 0:25 வரை ஒலிக்கும் அந்த ஆரோகணம் ஏறிச்செல்லும் சுதி. கேளுங்க. ஏறிச்செல்லும் ஒலி. பாட்டு முழுக்க தேவையான இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப்பாட்டுல அவரோகணம்ங்கறதே -கீழிறங்கும் சுதி - இல்லை. ஏன்னா தலைவரு எப்பவுமே முன்னேறியே செல்பவர். அதான்..ஹிஹி.. 03:01ல கேட்கும்போது அப்டியே அள்ளிக்கிட்டு போகுதுடா எலே தம்பி. அங்கங்க தலைவரு ‘ஏ’ ஏ’ன்னு குரல் கொடுப்பது இன்னமும் வெறியேத்தும் சங்கதி. செமடா!
 
நாடோடிகள் படத்துல ஒரு பாட்டு ’சம்போ சிவசம்போ-ன்னு ஒரு பாடல். அதுவும் இதே போல முன்னேறிச் செல்ல மட்டுமே இசைக்கப்பட்ட பாடல். பிரியாணி படத்துல ’எதிர்த்து நில்’லுன்னு ஒரு பாடல். எல்லாம் ஒரே ஜானர்ங்ணா...அப்டியே எடுத்து காப்பியடிச்சுட்டான்னு சொல்லலை. ராசைய்யாவும் சிந்து பைரவில ஒரு பாடல் போட்டிருந்தார் இதே போல. இசைமேடைகளில் முன்னேறிச்செல்கிறார் ஜேகேபி’ங்கறத சொல்றதுக்கு. என்ன அதெல்லாம் இன்னும் வேகமா/ஃபாஸ்ட்டா (ரெண்டும் ஒண்ணுதானே.. ஹிஹி) இருக்கும், இது தாத்தாவின் வயதை கவனத்தில் கொண்டு கொஞ்சம் மெதுவா, ஆனாலும் ஸ்டெடியா போகுது பாடல். ஹுக்கூம்...டைகர் கா ஹுக்கும்.. அளப்பற கெளப்புறம்!
 
#ஆணை-புலியின்-ஆணை

 

No comments:

Post a Comment