Bloody Sweet
தொடக்கம் மெதுவாக எரிக் க்ளாப்டனின் கிட்டாரில் அழுந்த எங்கோ ஒலிப்பது போல இசைக்கிறது. தொடர்ந்து அதிர வைக்கும் ட்ரம்ஸ், இல்ல மச்சா இது வேற,...,நான் கூட கொஞ்சம் ப்ளூஸ் இசைதானோன்னு நெனச்சிட்டேன். அடங்கப்பா, இது ஆதென்ட்டிக் ராக்’டா ங்கொம்..சரி வேணாம்..ஹிஹி...அற்புதமான Bass Guitar along with Lead Guitar, கூடவே சேர்ந்து ஒத்திசைக்கும் அந்த குதம் அதிரவைக்கும் ட்ரம்ஸ்.
இங்லீஈஷ்லயே பாட்ட போட்டானே, இதுக்கு இங்கிலீஈஷூல்லாம் தெரியணுமேன்னு ரொம்ப கவலப்பட்டேன்..ஹிஹி.. இசை ஒன்றே போதும் மொழி வேணாம்னு தம்பி என் காதில வந்து சொல்ட்டாஆன்.. ஓதீட்டான்....அதனால பாட்டு எந்த மொழியாருந்தாலும் கேப்பம்டே.
நம்ம LCU Lokesh தம் அடுத்த படத்துக்கு ’சாம் சி.எஸ்’ (இவர் சிஎஸ்
ஜெயராமனின் வாரீசாமே ?!..அப்டியா? ) தான் இசையமைப்பாளார்னு சொல்லீட்டார் ஒரு தடவை. மாஸ்ட்டருக்கு அப்புறம். நான்கூட என்னடா இது, வெளங்காதுடா அம்பின்னு நெனச்சுண்டேன். அப்புறம் பார்த்தா தம்பி குதிச்சு வண்ட்டான்..ஹிஹி..நல்ல வேளயாப்போச்சு..ஹி. ப்ளடி ஸ்வீட்டூ.
அதெல்லாம் சரி. இங்க பாடல் ஆரம்பிக்கும்போது Avril Lavigne - Complicated போல ஒலிக்கிறது, அதுவும் இந்த ப்ளடி ஸ்வீட் போலவே மெதுவாகவே தொடங்கி மெதுவாகவே நடந்து சென்று முடிவடையும்..கிடார் பீஸ் கேளுங்க, முழுக்க முழுக்க கிட்டார் பேஸ்டு பாடல் அதுவும். அதுக்காக அத அப்படியே தூக்கிகொண்டாந்து இங்க போடல.அதுக்கும் இதுக்கும் ஸ்னானப்ராப்த்தி கூட கெடயாது. ( அதென்ன ஸ்னாப்பராப்த்தீ.. குளிச்சதுல தெறிச்ச தண்ணீ கூட ஒண்ணாத் தெரியாது..அப்டீன்னு அர்த்தமாக்கும்) இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பதூன்னு போட்றா மேரி விஜய்ண்ணாவே பாடீருக்கலாம். எனக்கு தோணினது. அவரின் குரல் ரேஞ்சுக்கு ஒத்து வரும் ராகந்தான். ராக்’ இசையாகவே இருப்பினும் அவரால் பாடவியலும். ( ராசைய்யா கமலையும், மனோவையும் சேர்ந்து ‘போட்டு வைத்த காதல் திட்டம்’னு பாடவைத்திருப்பார், அதிலும் கமல் குரல் தான் ஓங்கி ஒலிக்கும். ) இங்கயும் அது போல விஜய்யை கூடப் பாடவைத்து.... எதாவது செய்திருக்கலாம் தான்.
அதே போல இந்த ரிஹான்னாவின் பாடல் ‘DJ Khaled ft. Rihanna & Bryson Tiller - Wild Thoughts’ வரும் அந்த கொஞ்சும் எலெக்ட்ரிக் கிட்டாரின் ஒலி 00:46லும் தொடர்ந்தும் இடை இசையாகவே தொடரும். மொத்ததுல சொன்னா தம்பி போட்ட ப்ளடி ஸ்வீட்டூஊ ...ஒரிஜினல் திருநெல்வேலி இருட்டுக்கடை ராக்’ தான் இஹி இஹி. இலக்கணம் மாறாத ராக் இலக்கியம் ஆன கதை இல்ல.. பாட்டூ..இஹி இஹி.
அப்ப ’ வேலே இல்லா பட்டதாஆரீஈஈ (வீஐப்ப்பீஈஈஈ) ன்னு போட்ட ராக்’லருந்து இப்பத்தான் ராக் ஒரிஜினல் ராக்’ இசைக்க வாய்ப்பு கெட்ச்சிருக்கு தம்பிக்கு. புகுந்து வெளயாடிட்டான் புள்ளாண்டான்.
02:17லிருந்து 02:18 வரை அந்தத்தங்ககாசூ (தமிழ் பேசு தங்கக்காசு) சுத்தி வருவது ஐந்து முறை. ட்ரம்ஸ் அதிர்வதும் ஐந்து முறை அதோடு காசு துள்ளி விழும்போது ஒலிக்கும் சில்லறை ஒலி. ஹ்ம்.. எலே தம்பி ..ஒனக்கு நாலு க்ராமி ரெண்டு ஆஸ்கர் எல்லாம் குடுக்கலாம்டா. எவன் எவனோ வாங்குறான் (அப்டித்தான் கமல் சொன்னார், சக தமிழ் பலவேச நடிகர் தேசீய அவார்டூ வாங்கினப்ப..ஹிஹி)
புடிக்கல மாமு’ பாடல் நீதானே என் பொன்வசந்தம் படத்துல , முதல் 44 செகண்டுகள் மட்டும் கேட்டுட்டு வாங்க. ராசைய்யாவும் ராக்’ இசையை அவ்வளவு மென்மையாக கொடுத்திருப்பார். கொஞ்சும் அந்த எலெக்ட்ரிக் கிட்டாருடன். நம்ம ரஹ்மான் , அவரும் முஸ்தஃபா முஸ்தஃபாவில கொஞ்சம் தொடக்க இசையாக ஒலிக்க விட்டிருப்பார். நம்ம சந்தோஷ் கூட நெருப்புடா’ன்னு தீய அள்ளிப்போட்டார் ராக் இசைமேலே...எல்லாம் செய்தது தான் மாமு ஒண்ணும் புதுசுல்ல..ஆனாலும் தம்பி இங்க கலக்குறான். (அப்டித்தானே சொல்லணும்..ஹிஹி)
இந்தப்பாடலில் 00:50 முதல் 01:03 வரை மடங்கி மடங்கி ஒலிக்கும் அந்த Bass Guitar. 00:08ல் ஒலிக்கும் அந்த ராட்டில் ஸ்னேக்கின் வால் குலுக்கி ஆரம்பித்து . பின்னரும் 01:06லிருந்து 01:07 வரை குலுக்கும் சப்தம். 01:29ல் ஈகிள் இஸ் கமிங் கழுகு பறந்து செல்லும் ஒலி. மேலும் 01:06லிருந்து 01:20 வரை ஒலிக்கும் அந்த லீட் கிட்டார் பீஸ், அத்தனையும் கிட்டாரிஸ்ட் கெபா ஜெரீமியா’வின் ஆதிக்கம் (ஆமா இவா ஆண்ட்ரியா ஜெரீமியாவுக்கு சொந்தக்காராவா..? ஹிஹி ) பின்னர் 02:17லிருந்து 2:42 வரை ஒலிக்கும் தாளக்கட்டு ராக் இசையில் ட்ரம்ஸுக்கான பால பாடம்.
இப்பல்லாம் ராக் இசை சரளமாகவே வந்து போகிறது. முழுப்பாடலும் ஹிப்ஹாப்/ராப்/ என்ற எவ்விதக்கலப்புமின்றி ஒரிஜினல் ராக்’ ஆகவே ஒலிப்பது நன்று. இப்ப இருக்கிற சின்னப்புள்ளாரெல்லாம் நெட்ஃப்ளிக்ஸூ/ ஸ்ப்பாட்டிஃபை’ன்னு எல்லாத்துலயும் கணக்கு வெச்சிக்கிட்டிருக்கதால ராக்’ ஒன்றும் தொடத்தகாதது அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இளம் தலைமுறை இசைக் கலைஞர்களும். எஞ்சாயி எஞ்ஞாமி. ரிமோட்டின் ஒரு சொடுக்கில் விஎச்1/எம் டீவீ’யில் ஒலிக்கும் அதே ஒரிஜினல் ராக் இசை சன் ம்யுஸிக்கிலும், ஜெயா மேக்ஸிலும் தமிழில் ஒலித்தால் தவறில்லை.
Bloody Sweet #ஸ்வீட்டெடுகொண்டாடூ.
No comments:
Post a Comment