எதுக்கெடுத்தாலும் ராணுவவீரன் எல்லைல நின்னு போராட்றான். ஒனக்கென்னடா
வரிசைல நிக்க வலிக்குதுன்னு கெளம்பறது. எனக்குத்தெரிந்து ராணுவத்துல
சேருவதுங்கறதெல்லாம் நிரந்தர வேலை,போதுமான அளவு சம்பளம், எக்ஸ் சர்வீஸ்மென்
என்ற பலன்கள்,மேலும் பென்ஷன் கிடைக்கும்.அவ்வளவு தான். மேலும் அதற்கென
அத்தனை பரீட்சைகள் எழுதி தேர்வாக வேணும்ங்கற அவசியம் இல்லை. கொஞ்சம்
உடல்தகுதி பெற்றிருந்தால் போதும்,ரெண்டு மாசம் ஜிம் போய்,ஒக்காந்து
சாப்ட்டு உடம்பத்தேத்திக்கிட்டு செலக்ஷனுக்கு போனால் போதும் என்ற
மனநிலையில் சென்று ராணுவத்தில் சேர்ந்தவர் தான் அதிகம்.
எனது நெருங்கிய நண்பனுக்கு அத்தனை உடற்தகுதியோ,இல்லை கட்டுமத்தான உடலோ
கிடையாது. இத்தனைக்கும் மரக்கறி மட்டுமே உண்டு வாழும் சீவன் அது,
கெமிஸ்ட்ரில்லாம் படிச்சான் மதுரைல. எங்கயும் செலக்ட் ஆவல. அத்தனை
பொதுத்தேர்வெல்லாம் எழுதிப் பாத்தான் ஒண்ணும் வேலக்காவல. கண்ணில் குறைபாடு
எப்பவும் கண்ணாடி அணிந்து கொண்டிருப்பான். எனக்குத்தெரிந்து இரண்டு
வயதிலிருந்தே கண்ணாடி தான். அதைக் கழற்றினால் எதுவுமே தெரியாது. காது
ஏகத்துக்கு மந்தம். அதிக சத்தம் கூட அவனுக்கு கேட்காது, அப்படிப்பட்டவனை
கோவையில் நடந்த ராணுவ செலக்ஷனுக்கு அவனோட அப்பா அனுப்பி வைத்து உள்ளில்
கையூட்டு கொடுத்து ராணுவத்தில் சேர்த்தேவிட்டார். அவனைப் பொருத்தவரை ஒரு
வேலை, குடும்பத்துக்கு தேவைக்கான சம்பளம்ன்னு அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு
இருக்கிறான். உள்ளுக்குள் தாஜா செய்துகொண்டு அதிகம் பிரச்னையில்லாத
இடங்களில் இருந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருப்பான்.
இப்ப இங்க
ரியல் எஸ்டேட்ல வேல செய்யும் ஒரு பையன் அதே மாதிரிதான் காலை அஞ்சு மணிக்கு
எழுந்து ஓடுவான். இன்னும் ரெண்டு மாசத்துல செலக்ஷன் வருது என்பான். வேல
நிரந்தரம் இல்லை ராம், அதான் எப்டியாவது சேர்ந்து கொஞ்ச காலத்த ஓட்டிட்டு
அப்பால வீஆரெஸ் வாங்கிட்டு வந்துரலாம்னு இருக்கேன் என்று வெளிப்படையாகவே
சொல்வான். அதான் அவங்களும் நம்மப்போல சாதாரண ஆட்கள் தான். பெரிசா வானத்துல
இருந்தெல்லாம் குதிக்கிறவன்லாம் இல்லை.பெரும்பாலும் ராணுவத்தில் வேலை
செய்யும் எவரும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளுக்குள்
இழுத்துக் கொள்ளவே விழைவர். இதுவும் நம்மல்லாம் நம்ம
கம்பெனீல/நமக்குத்தெரிந்த இடங்கள்ல பயலுகள சேர்த்து விடுவது போலத்தான்.
இந்தப்பதிவின் மூலம் ராணுவவீரர்களை குறை கூறுவதோ/இல்லை சிறுமைப்படுத்துவதோ
எனது நோக்கமில்லை. எனது குடும்பத்தில் கிட்டத்தட்ட ஆறு/ஏழு பேர்
ராணுவத்தில் முப்படைகளிலும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் தான். #ஆயிரம்ஐந்நூறுசம்பாத்தியம்
எப்பவுமே எஸ்ரா'வுக்கு இந்த வாய்ஸ் ஓவர்ல ஒரு க்றேஸ் உண்டு. இங்க பெங்களூர் வந்திருந்தப்ப அதையே பேசிக்கிட்டு இருந்தார். வாய்ஸ் ஓவர்ல சொல்லி கதைய தொடங்கணும்னு. ஆரம்பிக்கிறது சரி..அதுக்காக இப்டி படம் பூராவுமா? கெளதம்?.. கொடுமைங்ணா. சரக்கு தீர்ந்திருச்சு,அவ்வளவுதான் அவுட்டு அப்டீல்லாம் எழுதப்போறதில்ல நான்..ஏன்னா அவர்கிட்ட இருக்குறத தானே வெச்சு எடுப்பாரு? ஹ்ம் சரிதானே. "என் பேர் தமிழ்ச்செல்வன் , நான்..." அப்டீன்னு "காக்க காக்க"லருந்து அதயே தான் பண்ணீண்டுருக்கார். ஹிஹி.. நமக்குத்தான் புளிக்கிறது. அண்ணா பியர் புளிச்சா நன்னா கிக்கேறும், இங்க தாங்கல.
ட்ராவலாக்' எடுக்கலாம் தான். ஒரு மோட்டார் சைக்கிள் டயரி மாதிரி அதுலயும் காதல்,வீரம், பாசம் எல்லாம் உண்டு.முக்கியமா சே கபாடா இருந்தார் அதுல. இங்க ? 'கத்துக்கிட்ட வித்தைய மொத்தமா எறக்குன' லிங்குசாமி கூடத்தான் ஒரு ட்ராவலாக் 'பையா' (அடங்கொய்யா)ன்னு எடுத்தார். அதுலயுந்தான் அடிதடி காதல் வீரம், ஹ்ம்...அங்க காரு இங்க ராசாளி'ங்ணா. ராயல் என்ஃபீல்டு. நம்ம பாலா' அதுலதான் ஓசூர்லருந்து வருவார்.இப்ப ஃப்ராங்காய்ஸ் டீ பெங்களூர்ல ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி நடந்தது.அதுக்கு கூட அந்த ராசாளீலதான் வந்தார். ஆனா பின்னால ஒரு மஞ்சிமா இல்லை. ஹிஹி..
தலைவி பேர் தெரியாம, இந்த சின்னப்பசங்களுக்கு முட்டாயி,அப்புறம் கேட்பரீஸ் எல்லாம் குடுத்து தலைவன் தலைவியோட பேரைத்தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுவார். அப்டித்தான் நாமெல்லாம் பாத்து பழகிருக்கோம். இங்க ஹிஹி தலைவி பேரை முதல்லயே சொல்லீர்றார் கெளதம். "பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா"ன்னு சிம்பு பாடீருவாரோன்னு பயந்தே போயிட்டேன். ஹ்ம்.அங்க ஹெலிகாப்டர்ல ..இங்க இது ராசாளீ.. ராசாளீ... அந்த சோகம் உன்னத்தாக்கிடுமோன்னு நினைக்கும்போது நின்னுடுது..அதான் காதல். லாட்ஜ்ல ரூம் புக் பண்ணும்போது கூட பேரச்சொல்ல மாட்டேங்றார்னா பாத்துக்கோங்களேன். அதுக்கு நமக்கு கடசீல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கார் கெளதம். ஆனா தேட்டர்ல அதப்பாக்றதுக்குத்தான் யாருமேயில்ல. ஹ்ம்..அந்தக்கொடுமய அப்பால சொல்றேன். இடைவேளைக்கி அப்பால பின்னாடி கேட்டுக்கிட்ருந்த வாஸப் சவுண்டு ஆஃப்..பின்னாடி பாக்றேன். சுத்தம் யாருமேயில்லை.
வசனம் எப்பவுமே வசனமாவே தோணாது அதுவும் காதல் வசனங்களெல்லாம் கெளதம் படங்கள்ல. "ஒரு ஃப்ளாஷ்ல வந்திருச்சு மச்சான்" "சொன்ன டைமிங்தான் தப்பு ஆனா மேட்டர் கரெக்ட்டு". அதேபோல தலைவனும் தலைவியும் வேறு வேறு சமயங்களில் காதலைச் சொல்லுமிடமும் ஹ்ம்..கெளதம்க்கு ஒரு பூச்செண்டு. அதுக்கப்புறம் அந்த பூந்தொட்டியவே தூக்கி அடிக்கிற அளவுக்கு..படம் பயணிக்குது .ஹ்ம்...சரி வேணாம். "பயத்தப்பாத்து நாம ஓடக்கூடாது , நம்மளப்பாத்துதான் அது ஓடணும்" இப்டி கொஞ்சம் அப்பாலிக்காவும் ஓட்ற வசனங்கள்லாம் கீது.
கமல் ஒரு படம் எடுத்தார் ஹேராம்னு. ஒரு நாப்பத்தெட்டு பாஷா பேசீருப்பாளா அந்தப்படத்துல. இங்க ஒரு நாலஞ்சு பாஷா பேசறா. அதுல "நான் தமீழண்டா"ன்னு வேற ஒரு வசனம். மொதல்ல கெளதமே தமிழன் கெடயாது. அது சரி.பரவால்ல. விட்ரலாம். சிம்புவா வர்ற நண்பர் மகேஷ் , அருமை. மச்சான் மச்சான்னு கலக்குறார். இனிமே ஈரோவுக்கு பெரண்டா நிறையப் படங்கள்ல தோன்றுவார். சதீஷ்,சந்தானம், இவாளுக்கெல்லாம் வயசாயிடுச்சில்லியா அதனால. ஆமா சந்தானத்த எங்க காணம் அதுவும் சிம்பு படத்துல.. என்னவோ தெரியல.
"மேம் பீ மடோன்னா"ன்னு ஆல்பம்லாம் போட்டுக்கிட்டிருந்தார் பாபா சேஹ்கல். கொஞ்சம் ஹிப் ஹாப்/ராப் வெச்சிண்டு பொழுது ஓட்டி ஓய்ஞ்சு போனவர். இங்க மொட்ட போலீஸ். நான் கூட 'விசாரணை'ல வந்த அந்த மொட்ட போலீஸ்காரராக்கும்னு நினைச்சிட்டேன். கொஞ்சம் மராட்டியும், பாம்பே இந்தியுமா பேசறார். வில்லனுக்கு ஒத்துவரல அவரது உடல் மொழி.
பாடல்கள் இடம்பெறும் காலங்கள், அதற்கான காரணங்கள், புகுத்தும் இடங்கள் எல்லாமே எப்போதும் கெளதம் படங்களில் பிரமாதமாக இருக்கும். நீஎபொவ' மாதிரியே இங்கும்/எங்கும் பாடல்கள் பொருந்தும் காட்சிகள். அதிலும் "தள்ளிப்போகாதே" பாடல் யாருமே எதிர்பாரா இடத்தில்.. ஆஹா சபாஷ் கெளதம். இதுவரை இப்படி இந்தியப்படங்களிலே வந்ததேயில்லை.
மஞ்சிமா , ஆமாம்மா இந்த அம்மாவப்பத்தி ரொம்பவே சொல்லத்தான் வேணும். செம ஃபிஸிக்.நல்ல ஓங்குதாங்கா இருக்கா. விட்டா நன்னா ஆர்ம்ஸ்/ பைசெப்ஸ்லாம் காமிப்பா போலருக்கு சாக்ஷி மாலிக் மாதிரி சிம்புவத்தூக்கி அந்தால போட்டுர்றா மாதிரி ஒரு உருவம். சன் டீவீல எட்டு மணிக்கு ஒரு சீரியல் வருமே 'தெய்வ மகள்' அதுல காயத்ரி கேரக்டர்ல ஒரு வில்லி வருவா ( அவா ஊதினா இவா வருவா..ஹிஹி ) அது மேரி இருக்குறாங்கோ இந்த மஞ்சிமா. ஒருவேள அவாளோட தங்கச்சியோன்னு நினைக்க வைக்கும் உருவம். இப்டி ஒரு ஈரோயினா. ஹ்ம்.. தமிழ்ப்படங்கள்ல எப்பவுமே பூஞ்சையா, தலைவன் வந்து தான் காப்பாத்த வேணூம்னு நினைக்கிற தலைவிகளைத்தானே இதுவரை பாத்ருக்கோம். அப்டியும் இந்தப்படம் வழக்கமான ஈரோ ஓரியன்ட்டடு சப்ஜெக்ட்டூ.
ஈரோயினுக்கு எக்கச்சக்க க்ளோஸப் வெச்சு, இன்னும் அழகா காட்ட முயற்சி செய்திருக்கார். தலைமுடி நீவிவிடுவதும், கோதி விடுவதும், ராசாளியின் பின்புறம் பயணிப்பதும் அவ்வப்போது தின்னக்கொடுப்பதும், உள்ளங்கைகளை சிம்புவின் தொடயில் வைப்பதும் என அத்தனை க்ளோஸப் ஷாட்கள்.அத்தனையும் அருமை. பாலச்சந்தர் இதுமாதிரிதான் கொஞ்சமே பாக்றா மாதிரி இருக்கிற பெண்டுகளை அவர்கள் அழகாக இருக்கும் சில கோணங்களில் மட்டுமே காண்பித்து காண்பித்து பிடிக்க வைத்து விடுவார்.அதேதான் இங்கே.
சிம்புவுக்கு என்னா இப்டீ ஒரு மேக்கப்பு , பிட்டு பட ஈரோ மேரி. தாடி கீடில்லாம் வெச்சிக்கிட்டு. செம சதை வேற போட்ருக்கு, 'வெட்டி'ன்னு சொல்லி அத ஜஸ்டிஃபை பண்ணீர்றார் கெளதம். அவரோட தங்கை 'அவ கேரளா'ன்னு சொல்லும்போதும், அதானெ பாத்ததேன்னு சொல்லும் போதெல்லாம் சிம்பு உள்ளேன் ஐயா. ட்ரெயின் ஃபைட்டு தான் நம்பறா மேரி இருக்கு. மத்ததெல்லாம் வேஸ்ட்டு வெத்து வேட்டு. இதுல கெளதம் ஒரு கேமியோ ரோல்ல வேற. பெரிய ஹிட்ச்காக்'ன்னு நெனப்பு.
ரஹ்மான் இருக்கார். ரொம்பநாளைக்கப்புறம் நானும் ஃபீல்டுல இருக்கேன்னு காட்றார். என்ன எப்ப பாத்தாலும் "கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொளகழகு"ன்னு ஒரு பாட்டு மின்னாடி போட்ருந்தார் அதையே இங்கே தந்திக்கருவிகளில் வாசித்து வாசித்து போரடிக்க வெச்சிட்டார். என்ன சொன்னாலும் பின்னணி இசை என்பது அவருக்கு தான் வாய்க்கும். சரி அரசியல் பேச வேணாம். ராப்/ஹிப் ஹாப்களில் மலிந்து போகிறார் ரஹ்மான். என்ன சொல்வது அவரைப்பற்றி.
படத்தின் பின்பகுதி முழுக்க இருட்டு.அத்தனையும் அடிதடி. சலித்துப்போய் எழுந்து வரத்தோணுவது படத்தின் பெருங்குறை. சகிக்கவே இயலவில்லை. ஒருவேளை யாராவது அஸீஸ்டென்டு கிட்ட குடுத்து எடவேளைக்கப்றம் எடுக்க சொல்லீட்டாரோன்னு நினைக்க வைக்கும் சொய்வு, இதெல்லாம் கெளதம் தானா என சோதிக்கும் பல காட்சிகள். ஹ்ம்.. முதல் பாதி அருமை, ஹ்ம்...எல்லாக்காதலிலும் முதல் பாதி எப்போதுமே அருமையாகத்தானே இருக்கும்.
ஜாஸ் இசை என்று எடுத்துக்கொண்டால் கொஞ்சம் பழைய,மெல்லிய ரொம்பவும் அதிரடியில்லாத, காதுக்கு இனிமையான இசை என்றே அறியப்படும். ரொம்பவே மெதுவாகச்செல்லும் என்பதால் எல்லோருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிடும். ஜாஸ் கேட்கவென வேறேங்கும் போகவேணாம். இப்பவும் வின்டோஸ்7 பயன்படுத்துபவராயிருந்தால் டீஃபால்ட் ம்யூஸிக் ஃபோல்டரில் பாப் அக்ரி'யின் Sleep Away' வைக்கேளுங்கள். அத்தனை சுகமான மெல்லிய மெலடி. கேட்டும் உறக்கம் வரவில்லையெனில் உங்களுக்கு வேறேதோ பிரச்னை இருகிறது என அர்த்தம். பியானொவில் வாசித்திருப்பார் முழுப்பாடலும். கேட்க ஆரம்பித்தால் இடைவிடாது சுழற்சியில் இட்டு தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோணும்.
ஜாஸ் இசையில் வெகுவாக பெர்குஷன்ஸ் அதாவது சிறிதே அதிர வைக்கும் ட்ரம்ஸும், பியானொ, மற்றும் சாக்ஸஃபோன் போன்ற வாத்தியங்களே பயன்படுத்தப்படும். கேட்டால் காதுக்கு இனிமை, அதிரவைக்காது கூர்ந்து கவனிக்க வைக்கும் இசை. ஒண்ணு சொல்றேனே வயிறுமுழுதுக்குமாக பிரியாணி சாப்பிட்டு விட்டு, நல்ல வெக்கையில் வெண்டாவி அத்து வரும் வேளையில் காகம் கரைய,வேப்ப மர நிழலில் இருந்து கேட்டுப்பாருங்க.ஆஹா. சொல்லவே அருமையாக இருக்கிறது. சொக்கிப் போடும் உங்களை , அதற்குத்தான் சொன்னேன்.
இந்த ஜாஸ்'ஐ ராசய்யா தமது முழு ஸ்டைலாகவே/ பாணியாகவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கிக்கொண்டார் என்றே சொல்லவேணும். நீஎபொவ அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இன்னபிற இசை வகைகள் (genre)அந்தப்பாடல்களில் தென்பட்டபோதிலும் அடிப்படையான இசை ஜாஸ் தான். கிழவர்களுக்கான இசை..ஹிஹி. அப்படி இல்லை. யாரையும் அதிரடியாக இசைத்து இம்சைப்படுத்துவதில்லை என முடிவெடுத்த ராசைய்யாவிற்கு இந்த ஜாஸ் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இன்னொரு பாடலை என்னால் மிகச்சரியாகச்சொல்ல முடியும். 'கண்ணன் வந்து பாடுகின்றான்' என ஜானகி பாடிய பாடல் 'ரெட்டை வால் குருவி'யில். பின்னில் சாக்ஸஃபோன் இசைக்க மைக்கை பிடித்தபடியே ஆடுவார் ராதிகா. இன்னுமொரு பாடல் 'இது ஒரு கனாக்காலம்' டிக் டிக் டிக் படத்தில். பெரும்பாலும் தாளத்திற்கென ட்ரம்ஸின் அந்த சிம்பல்ஸ்'களில் இசைத்ததையே காணலாம். பெரும்பாலும் மேடைப்பாடல்களாகவே ராசைய்யாவிடம் ஜாஸ் ஒலிக்கும். 'மன்றம் வந்த தென்றலையும்' கூட ஜாஸில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக மென்மையான பாடல்களெல்லாம் ஜாஸ் இல்லை.
ரஹ்மான் என்றும் இன்ன இசை என அறியவிடாது தமது ஸ்டைலில் ரஹ்மானியாவாக கொடுப்பதில் வல்லவர். படையப்பாவில் விசிலடித்துக்கொண்டே மனோ பாடும் 'ஓஓஓ கிக்கு ஏறுதே' அந்தப்பாடல் ஜாஸை ஒட்டியது. நிறைய ஹிந்துஸ்தானி பாணியில் இசைத்தே பழகியவர். இப்போது கூட 'கடல்' திரைப்படத்தில் 'சித் ஸ்ரீராம்' பாடிய அந்த 'அடியே' பாடல் நல்ல ஜாஸ். இல்லையெனச் சொல்லுபவர்கள் என்னுடன் சண்டை பிடிக்க வரலாம். ஜாஸுக்குண்டான அத்தனை சாத்தியக்கூறுகளும் அதில் உண்டு. பியானொவின் சிணுங்கல்கள், சிம்பல்ஸின் சிதறல்கள் என எல்லாம் சிறப்பு. ஜாஸின் இலக்கணம் மாறாது இசைத்த பாடல். மணி ஒத்துக்கொண்டார் போலருக்கு, அந்தப்படமே ஒரு மாதிரி தான் இருக்கும்.ஹிஹி.
கென்னி ஜி கேட்காதவர் இருக்கவியலாது. எல்லாப் பாடல்களையும் ஜாஸின் ஸ்டைலில் கொண்டு வந்து விடுவார். அதான் டெம்ப்போவைக் குறைத்து இன்னும் பாடலாம் மெதுவாக என்று தோணும் போது ஜாஸாக மாறிவிட வாய்ப்புண்டு. எம்எஸ்'ஐயா இசைக்காததில்லை. 'என்னைத்தெரியுமா சிரித்துப்பழகி கருத்தைக்கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா'ன்னு ஜாஸில் பிடித்துக்காட்டுவார். பாடலின் கடையிசையைக் கேளுங்கள் புரியும்.ட்விஸ்ட் ஆடலுக்கான பாடல்களுக்கும் ஜாஸ் ஒத்துவரும். 'கண் போன போக்கிலே கால் போகலாமா' நல்ல எகா.
இப்ப எதுக்கு ஜாஸ் புராணம்னா...ஒண்ணும் இல்லை. இப்போ எல்லாருமா சேர்ந்து வாரிக் கொண்டிருக்கும் (நானுந்தான்) சந்தோஷ் நாராயண் கூட ஜாஸில் ஒரு பாடல் போட்டு இருக்கிறார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் 'அக்கம் பக்கம் பார்' பாடல் பக்கா ஜாஸ். ஹ்ம்.. இத்தனை மெதுவாக அத்தனை அழகாக இலக்கணம் மாறாது இசைத்தது. இங்கும் மனோதான் பாடியிருக்கிறார். போரடிக்க வைக்கும் தாளக்கட்டு. பாடல் முழுமைக்கும் கூடவே பாடும் பியானோ. சொற்களெல்லாம் தனித்தனியே தொங்கிக்கொண்டு இருக்கும். இணைத்துக்கொண்டு வருவது சங்கிலி போல அந்தப்பியானோதான். இந்தப்பாணி பலருக்கு சொய்வு அடிக்கச் செய்துவிடும். ( நெருப்புடான்னு ராக்/ஹிப் ஹாப்' ல பிளந்து கட்டியவர்தான் இப்படியும் பாடல் போட்டிருக்கிறார் ) இந்தப்பாடலை அத்தனை சிரத்தையாக நான் கவனிக்கவேயில்ல, அன்று ஒரு நாள் இசையருவியில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனிக்க நினைத்தபோது தான் புரிந்தது. அவரின் அத்தனை பாடல்களுமே அப்படி சிரத்தை எடுத்துக் கவனித்தால் தான் புரியும். ஹ்ம்.. என்ன பண்றது. 0:55 ல் ஆரம்பிக்கும் ரூரூஊரூஊ.'வுடன் கூடப்பாடும் அந்தப்பியானோ 01:13ல் உங்களுக்கு பாப் அக்ரி'யை ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பில்லை. ஹிஹி.. இடையிடையே வசனம் வரும்போது அதை இடர்ப்படாமல் இசைக்கும் பியானோவைக் கண்ணுல ஒத்திக்கலாம் சநா.
போத்தல் நுரைக்கும் சோமபானச்சாலைகளில் இந்த மாதிரியான பாடல்களுக்கு தான் கிராக்கி.ஏற்கனவே மூழ்கிக்கிடக்கும் வாற்கோதுமைக்கள்ளர்களுக்கு உறக்கம் வரவழைக்க பொருத்தமான இசை. இவ்வளவு பேர் ஜாஸில் பிளந்துகட்டியிருக்கும்போது தம்பி அநிருத் இதுவரை அந்தப்பக்கமே போகவில்லை. ஹ்ம்.. எதுக்கு போகணும். அதுதான் கிழபோல்ட்டுகளின் இசையாச்சே.. ஹிஹி.. #அக்கம்பக்கம்பார்
https://youtu.be/iy3j9Hg-QAM - அக்கம் பக்கம் பார் (ககபோ) https://youtu.be/I6PHgtdxFrY - bob acri (sleep away) https://youtu.be/rwEt-PTrbmI - கண்ணன் வந்து பாடுகின்றான் (ரெவா குருவி) https://youtu.be/X-Ilp8QNNfQ - அடியே ( கடல் ) https://youtu.be/ZlhaOQSgD_M - என்னைத்தெரியுமா (குடியிருந்தகோயில்)
காஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர்ஸ் பண்ணக்கூடிய ஆள். அந்த ராஜநாயக் பார்ட் அசத்திட்டேள் போங்கோ.உடல்மொழி அருமை. குரல் தான் கொஞ்சம் மாற்றி பேசிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை! காமெடி பார்ட் அவர் ஏற்கனவே செய்தது தான் ஒன்றும் புதிதில்லை.பக்காவா ப்ளான் பண்ணி பேய்,பிசாசு எல்லாம் செட்டப் பண்ணீன்னு கலக்குறார். நிறைய இடங்கள்ல அந்த தலைல சுத்தி துணி கட்டிக்கிட்டு கண்ணில கருவளையம் வெச்சிக்கினு வரும்போது இயக்குநர் பாஇரஞ்சித் மாதிரியே இருக்கார். எனக்கு மட்டும் தான் தோணுதா இல்லை எல்லாருக்கும் தானா ?.
ஹிஸ்டாரிக்கல் பார்ட்டுக்கு டீம் நிறைய வேலை பார்த்துருப்பாங்க போலருக்கு, உழைப்பு அபாரம். ஏதோ ஃபேன்டஸி படம் மாதிரி இல்லாம ஒவ்வொரு காட்சியும் இழைக்கப்பட்டிருக்கிறது. அலீஸ் இன் வொன்டர்லேன்ட் மாதிரி இருக்கும்னு நினைத்து ஏமாந்தேன். வியூகம்,அரண்மனை,போர்க்காட்சிகள் எல்லாம் அபாரம்.எதுவும் எங்கும் அட்டை போல பல்லிளிக்கவேயில்லை. தேர்ந்துட்டானுடே.
ஹிஸ்டரிக்கல் பார்ட்ல கேரக்டரைசேஷன்லாம் கரீபியன் பைரேட்ஸ் போல தலையற்ற உடல்கள், அவ்வளவு பெரிய சான்டிலியர்ஸ்னு பிரம்மாண்டம். இப்பல்லாம் இந்த சிஜி பண்றது ஈஸி போலருக்கு, பொசுக்கு பொசுக்குன்னு பீரியட் படம் எடுத்து விட்டுர்றானுவ.ஹிஹி. ரத்னமகாதேவிய பக்கத்து நாட்டின் இளவரசன் குதிரையில் தூக்கிச்செல்லும் காட்சிகள், அதைத்தொடரும் சண்டைக்காட்சிகள் , வசனம் எல்லாமே அருமை. ஹ்ம்.. பாஜிராவ் மஸ்தானி ..ஹிஹி..ஞாபகம் வருது. விவேக் ரொம்ப நாட்களுக்கு பிறகு நிறைவான வயதுக்கேற்ற வேடம். அந்த பாட்டி இன்னாமா ஆக்ட் குடுக்குதுங்ணா. ரிமொட் கன்ரொல் வெச்சிக்கினு நாய்ச்சங்கிலிய சுத்தவிடுது.
சந்தோஷ்க்கு செம தீனி, அவர் ஏற்கனவே வில்லா' படத்துல ட்ரை பண்ணினது தான். அது கொஞ்சம் லோ பட்ஜெட் ,இங்க அளவுக்கு அதிகமாவே பட்ஜெட். இருந்தாலும் அதுல ஒரு பியானொ தீம் ம்யூஸிக் பண்ணீருப்பார்.அரண்டு போயிருவோம் இங்கயும் அதே மாதிரி அரண்மனை தான் ஆனாலும் இங்க தீம் ம்யூஸிக்னு ஒண்ணும் இல்லை. இருப்பினும் அடிச்சு மெரட்டுறார். கார்த்தி பாடும் முதல் பாதியில் வரும் பாடல் திக்கு திக்கு சார் பாடல் , நிக்கி மினாஜ் ( ஹிஹி...அவாளேதான் ) இன்ன பிற ஹிப் ஹாப் தோழர்கள் கூட பாடிய இந்தப்பாடல் தான்.. David Guetta - Hey Mama ft Nicki Minaj, Bebe Rexha & Afrojack பாடல் காட்சி அமைப்புகள், ஆடல் பாடல், மற்றும் லொகேஷன் எல்லாம்.அதேதான். பாருங்களேன். ஆனாலும் சந்தோஷோட ட்யூன் மட்டும் வேற நல்ல வேள.."லெட்சம் பெரியார் வந்தாலும்" ஹிஹி.. ஆனாலும் ஒரு பாட்டும் வெளங்கல. கொஞ்சம் க்ளாஸிக்கலா ட்ரை செய்த நயன்தாராவின் பாடல் மட்டும் கேட்கலாம் ரகம்.
இன்று
எழுத்தாளர்/முனைவர் தமிழவனை அவர்தம் பெங்களூர் பன்ஷங்கரி இல்லத்தில் சந்திக்க
வாய்த்தது.நிறைய மனம்திறந்து பேசிக்
கொண்டிருந்தார். ஸ்ரீனியும் , நல்லதம்பியும் கூட
இருந்தனர், பழங்கால
சிசுசெல்லப்பா,கநாசு, மற்றும் இன்னபிற
நாஸ்டால்ஜியாக்களைப்பற்றியஅவர்தம் எண்ணங்கள்
எங்களுக்கு அரிய செய்தியாய் இருந்தது. ஆத்மாநாம் தற்கொலைசெய்து கொண்ட நீச்சல் குளத்தைப்பற்றி (ஆம் நீச்சல் குளம்
என்றுதான் கூறினார்..முகநூலில் அனைவரும் ‘கிணற்றில் அல்லவா’ குதித்தார் என கூச்சலிட்டனர்.)
வருத்தத்துடன் கூறிக்கொண்டுஇருந்தார்.
சிசுசெல்லப்பா 'சுவை' என்ற பெயரில் ஒரு தனிச்சுற்று இதழ்நடத்தி வந்ததைப்பற்றி கூறினார், எல்லோருக்கும் தெரிந்தது 'எழுத்து' மட்டுமே.பின்னர் தமது
முயற்சியில் வெளிவந்த 'படிகள்' இதழ்களைத்
தொகுத்து இக்காலசந்ததியினருக்கு
கொடுக்க வேண்டிக்கொண்டார். என்னைப்பற்றி விசாரித்தவர் “சின்னப்பயல் ..ஹ்ம்.
தெரியுமேஎன்றவர் 'சிற்றேடு' இதழில்
எழுதுமாறு பணித்தார். எழுத வேணும்.! நிறையப்பேசுகிறார்,
இன்னதானென்றில்லை, நாம் எடுத்துக்கொடுக்க வேணும் என்ற உந்துதலின்றி அவர்தம்
போக்கில் பேசிக்கொண்டே இருக்கிறார். முதுமை வருத்தினும் பேச்சு குறையவில்லை. கநாசு
பாரதிதாசனை சட்டை போலும் செய்ததில்லை, எப்போதும் சிசுசெல்லப்பாவையே கொண்டாடினார்.
ஆத்மாநாம் பற்றி பேசுகையில் அவர் குரல் கம்மியது, பையன் போல வருவார் , நிறைய
கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். வரும்/போகும் வழியில் இருந்த நீச்சல்
குளத்தை பார்த்து வைத்துக்கொண்டு ஒரு நாள் முன்னிரவில் குதித்து தற்கொலை
செய்துகொண்டார் என்றார். மறுநாள் டெக்கான் ஹெரால்டில் அவர் மரணச்செய்தி சின்ன பெட்டி
செய்தி போல வெளியிடப்பட்டது.
சிசுசெல்லப்பா’வின்
எழுத்துகளை வைத்து ஒரு பெண் சென்னையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்ததையும் ,
அவரிடம் இருந்து கிடைத்த சில ‘சுவை’ இதழ்களை எங்களுக்கு பார்க்க கொடுத்தார்.
பட்டம் பெற்றதும் அந்தப்பெண் பின்னர் தொடர்பிலில்லை ,அதோடு அவரின் வருகையும்
நின்றுபோனதை ஞாபகப்படுத்தி கூறினார்.
கர்நாடகத்தில் மொழி வளர்ப்பிற்கென நிதி ஒதுக்குவதாகவும் , அதை நிர்வகிக்க செயலர்கள்
மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. அதில் எந்த அரசியல்
கட்சிகளும் இடர்ப்பாடு செய்வதில்லை, எக்கட்சி ஆட்சியிலிருப்பினும் இந்த நிதி
ஒதுக்குதல்/குழு அமைத்து மொழி வளர்த்தல் தொடர்கிறது. இப்படி ஒரு அமைப்பு தமிழ்நாட்டில்
வருவதற்கு வாய்ப்பே இல்லை. 60களுக்குப்பிறகு மொழி வளர்ப்பு என்பது வேறுபக்கம்
இழுத்துப்போகப்பட்டது இன்னமும் அதை மீண்டும் பாதையில் கொணர இயலவில்லை என்பதை
நினைத்து வருந்துகிறார்.
கேரளாவில்
தாம் தமிழ் எம்.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, நம்பூதிரிபாடு ( அப்போதைய முதலமைச்சர்
) சைக்கிளில் செல்வதையும், அதை/அவரை யாரும் பெரிதுபடுத்துவதேயில்லை என்பதை அதே
ஆச்சரியத்துடன் கூறினார். கம்ப்யூட்டர்கள் பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து
எப்போதும் கூச்சல்/ ராலிகள் போராட்டங்கள் நடந்ததை நினைவு கூர்ந்தார்.
சுஜாதா’வைப்பற்றி
பேசுகையில் நல்ல திறமைசாலி, இன்னமும் இலக்கியம் சார்ந்த படைப்புகள் அவரிடமிருந்து
வந்திருக்கலாம். இந்த ‘குமுதம்’ தான் அவரை வேறு பாதைக்கு அழைத்துச்சென்றது. வணிக
நோக்கில் அவரை எழுத வைத்து வருமானம் தேடிக்கொண்டது. அவர் முன்னர் இந்தப்பாதைக்கு
வருமுன்னர் எழுதிய கதை ஒன்றை ( பெயர் மறந்து விட்டது ) ‘நைலான் கயிறு’ என்ற பெயரில்
புதினமாக எழுதினார் அதில் அந்தப்பழைய கதையின் முக்கிய வரிகளை ஆங்காங்கே உறுத்தாமல்
புகுத்தியிருந்தார். பலமுறை கமலஹாசன் வந்து செல்வதையும் குறிப்பிட்டார்.
அவரைச்சந்திக்க ஒரு முறை சென்ற போது ‘இப்போ தான் கமல்’ வந்து விட்டு சென்றார்
என்று சுஜாதா கூறியதைப் புன்முறுவலுடன் பகிர்ந்துகொண்டார். ‘பெல்’ லில் வேலை
செய்தபோது அவரின் பையன் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணம் புரிந்துகொண்டதை வெகுவாக வெறுத்ததாகவும், ஒத்துக்கொள்ளவேயில்லை
என்பதை தமக்குள் சிரித்துக்கொண்டே பேசினார். மதம்/ஜாதி இவற்றை கடைசி வரை
விட்டுக் கொடுத்ததேயில்லை அவர் என்பதைக்கூறினார்.
இடையில்
இரண்டு மூன்று முறை தொலைபேசியில் அழைப்பு வந்து தொந்தரவு செய்தபோதிலும் எங்களுடன்
பேசுவதிலேயே மும்முரமாயிருந்தார். கையில் எடுத்து அதை அணைத்துவிட்டு பின் பேச்சை விட்ட
இடத்திலிருந்து தொடர்ந்தார். ஸ்ரீனி சிலபோது அவர் தானாகவே பேச்சை
நிறுத்திவிடுவார். பின்னர் நாமாக கிளம்பி வந்துவிட வேண்டியது தான் என்றெல்லாம்
பயமுறுத்தி இருந்தார் என்னை. நல்லவேளை அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
நாங்கள் பேசியது மூன்றுபேருமாகச்சேர்ந்து பத்து வரிகள் தான் இருக்கும். அவரோ மடை
திறந்ததுபோல் பொழிந்து கொண்டிருந்தார்.
காவிரிப்பிரச்னை
குறித்த எனது சந்தேகங்களுக்கு அவரிடம் எவ்வித நேரடி பதிலும் வரவில்லை. யூஆர் அனந்தமூர்த்தி,
இன்னொருவரின் பெயரையும் குறிப்பிட்டார். அவர்களெல்லாம் தமிழர்களுக்கு எதிராக
செயல்பட்டபோதும் தமிழ் கவிதைகள்/எழுத்துகள் மீது ஆர்வமாக இருந்தனர். என்ன புதியவை
வந்திருக்கின்றன என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர். தாக்குதல்கள் நடந்ததை பலமுறை (முன்பு
, வெகு காலம் முன்பு ..இப்போதல்ல ) கண்டித்திருப்பதை குறிப்பிட்டார். எப்படி
ஒட்டுமொத்த கர்னாடகாவும் இப்போது இப்படி வெறிச்செயலுக்கு போனதைப்பற்றி அவருக்கு
ஏதும் புரிதல் இல்லை.
முதுமை, யாரேனும் தம்முடன் உரையாட மாட்டார்களா
என்ற ஆதங்கம் அவர்தம்முகத்தில்
தெரிகிறது.இன்னமும் சந்திப்போம். இரண்டாம் ஞாயிறு கூட்டங்கள்குறித்து ஆவலாய்க்கேட்டறிந்தார்.அவர் பகிர்ந்துகொண்ட பழையதனிச்சுற்றுக்கான இதழ்களில் சிலவற்றைப்
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்..அவை சில இங்கே. அந்த
தமிழ்த்தாய் வணக்கம் 'சுஜாதாவால்
சிலாகிக்கப்பட்டதுஎன்ற கொசுறு
செய்தியையும் அவர் கூறத்தவறவில்லை..!
சினிமா விமர்சனம் எழுதறதுக்கு எல்லோரும் ரெடி. ஆனா புதுசா வந்த ஒரு
கவிதை புத்தகத்தையோ இல்லை புதினத்தையோ பற்றி யாரும் எழுதுவதேயில்லையே என்று
இளங்கோ எழுதியிருக்கிறார் வருத்தத்தோடு. இதுல ஒரு பெரிய விஷயமே இருக்கு,
கவிதைப்புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதுன்னா அவங்க என்ன சொல்ல
வர்றாங்கன்னு மொதல்ல புரியணும். எல்லாக்கவிதைகளும் விளங்குவதேயில்லை.
பூடகம் தான் அதிகம். சொல்லவந்ததை விளக்கிச்சொல்லாது வேறு மொழியில்
எழுதுவது..அதை நான் விளக்குறேன் பேர்வழின்னு போயி வாங்கிக்கட்டிக்கிர்றத
விட சும்மா இருக்குறது பெட்டர். இதுல ஒரு
பெரிய விவாதமே தொடங்க வாய்ப்புமிருக்கு. விமர்சனம் பண்றேன்னு கெளம்பி
இருக்கிற எல்லாரையும் ஒரு வழி பண்ணின ‘தீர்த்தமுனி’ய கொன்னே
போட்டானுஹ..ஹிஹி.. இப்பத்திக்கு யாரும் அவ்வளவு காரசாரமா விமர்சனம்
பண்றதுக்கு ஆளே இல்லைன்னு தான் சொல்வேன். சும்மா ஒப்புக்காச்சும் இந்த வரி
பிரமாதம், இது போன்ற உயரம் யாருமே தொடலை ,வானமே அண்ணாந்து
பாக்குதூன்னெல்லாம் எழுத வேண்டிவரும்.
இந்தக்கருமத்துக்கு என்னாத்துக்கு குடிக்கொணூம்னு ஆலையில்லா ஊருக்கு
இலுப்பைப்பூன்னு சினிமாவப் பத்தி எழுதிரலாம். பொறந்ததே சினிமாக் கொட்டயில
தானே அதனால எல்லாப்பயலுக்கும் சுளுவா எழுத முடியுது. அதோட எந்த டைரடக்கரும்
சண்டைக்கில்லாம் வரமாட்டாங்க்ய..அவாளே டிவீடி பாக்க நேரமில்லாம அலயிறாங்க.
முக்கியமா இன்னொண்ணு சினிமா மேரி டொரண்ட்,லைவ் ஸ்ட்ரீமிங்க், இந்த மேரி
ஓசிச்சமாச்சாரமெல்லாம் புதின/கவிதை புத்தகங்களுக்கு கிடைப்பதில்லை. காசு
குடுத்து வேங்கி அதப்படிச்சி, அப்பால வெமர்சன்ம்னு எழுதி,மேலே திட்டும்
வேங்கணும்னு...என்னாத்துக்கு இந்த கெரகம் புடிச்ச வேலைல்லாம்னு தான்
எழுதறதேயில்லை. அப்பால அந்த எழுத்தாளரே நம்மள ப்ளாக் பண்ணி ஆயுள் முழுக்க
அவா மேக்கொண்டு என்ன எழுதறான்னு பாக்க வெடாம பண்றதுங்கற கருமமெல்லாம் வேற
இருக்குதுங்க்ணா..அதான் ஒரு டொரண்ட் போட்டமா/ இல்ல லைவ் ஸ்ட்ரிமிங்க்ல
பாத்தோமான்னு சோலிய முடீக்கிறத விட்டுட்டு நீங்க வேற #விமர்சனம்
இது என்ன பாட்றா இது..செம.. சுந்தர் சி பாபு, ‘வாளை மீனு'க்கப்புறம்
காணாமயே போய்ட்டார். புடிச்சி இஸுத்துக்கொணாந்துருக்கானுஹ இங்க..மச்சி
அட்டி தாம்லே.. மாகபா கையைக்கையத்தட்டி 'இது அது எது'ன்னு இங்க வர
வண்ட்டான். தகராறு/சண்டைங்கற மாதிரி வரிகள் வரும்போது மட்டும் 'சே குவாரா'
பனியனப்போட்டுக்கினு ஆட்றான். சமீபகாலமா கேட்ட ராப்/ஹிப்ஹாபாப்ல இதாண்டா
ஒரிஜினல். அழுத்தமான கர்நாடக சங்கீத அக்ரஹாரத்து ராகம் ஒண்ணு இருக்கு இதுல (
கொஞ்சம் பொறுங்க, இன்னான்னி கண்டுபிடிச்சுட்டு பின்னாலே சொல்றேண்டா அம்பி ) தேவாவின் கானா பாடல்கள் ஒரு காலம். இது கொஞ்சம் அட்வான்ஸ்டு வெர்ஷன். ( அவை முழுக்க சிந்துபைரவி ராகத்துல அமைந்தவை)
ஆமா கூட ஆட்றது மிஷ்கின் ஸ்டைல் மஞ்சச்சேலை நம்ம 'சிவா மனசுல சக்தி'
அனூயா தானே...ஆஹா ரொம்ப நாளாச்சிபா பார்த்து ..ஆனாலும் இங்க முழுக்க சேலைய
சுத்திகினு அவ்ளவ் சுத்தபத்தமா ஹிஹி ரம்பாவோட அஸெட்ஸ்க்கு அப்புறம்
அம்மையாரொடது தான். ஆட்ற எல்லாரும் திருவிழா பச்ச மஞ்ச செவப்பு
கண்ணாடில்லாம் போட்டுகினு ஸோக்காகீது மச்சி. ‘பழகீட்டா உயிரக்கொடுப்போம்டா
மாட்டுவண்டீ கீழதான் படுப்போம்டா' ஆஹா என்ன வரிடா மச்சி..புல்லரிக்கிது. .
ட்ரேக் (Drake ) இங்கிலீஷ்ல எடுத்து விட்டான் ஒரு ஹிப் ஹாப். you used to
call me on a cell phone’ ன்னு ஒரு பாட்டு.டெக்னிக்கலான தாளமும், ஆட்டமும்
கொள்ளை போகும் , அதே போல ( அதுவே இல்லை..ஹ்ம்.ச்சை ) தெளிவான வரிகளும் ,
ஆட்டமும் , நம்ம குப்பத்துல ஆடசொல்லீ காட்டீருக்கானுங்க. இதோட ஓரு நூறுதபா
பாத்துட்டேண்ணா.. நீங்களும் கேளுங்களேன், தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி
தக்கஜுனு #அட்டீ