சினிமா விமர்சனம் எழுதறதுக்கு எல்லோரும் ரெடி. ஆனா புதுசா வந்த ஒரு கவிதை புத்தகத்தையோ இல்லை புதினத்தையோ பற்றி யாரும் எழுதுவதேயில்லையே என்று இளங்கோ எழுதியிருக்கிறார் வருத்தத்தோடு. இதுல ஒரு பெரிய விஷயமே இருக்கு, கவிதைப்புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதுன்னா அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு மொதல்ல புரியணும். எல்லாக்கவிதைகளும் விளங்குவதேயில்லை. பூடகம் தான் அதிகம். சொல்லவந்ததை விளக்கிச்சொல்லாது வேறு மொழியில் எழுதுவது..அதை நான் விளக்குறேன் பேர்வழின்னு போயி வாங்கிக்கட்டிக்கிர்றத விட சும்மா இருக்குறது பெட்டர். இதுல ஒரு பெரிய விவாதமே தொடங்க வாய்ப்புமிருக்கு. விமர்சனம் பண்றேன்னு கெளம்பி இருக்கிற எல்லாரையும் ஒரு வழி பண்ணின ‘தீர்த்தமுனி’ய கொன்னே போட்டானுஹ..ஹிஹி.. இப்பத்திக்கு யாரும் அவ்வளவு காரசாரமா விமர்சனம் பண்றதுக்கு ஆளே இல்லைன்னு தான் சொல்வேன். சும்மா ஒப்புக்காச்சும் இந்த வரி பிரமாதம், இது போன்ற உயரம் யாருமே தொடலை ,வானமே அண்ணாந்து பாக்குதூன்னெல்லாம் எழுத வேண்டிவரும்.
இந்தக்கருமத்துக்கு என்னாத்துக்கு குடிக்கொணூம்னு ஆலையில்லா ஊருக்கு
இலுப்பைப்பூன்னு சினிமாவப் பத்தி எழுதிரலாம். பொறந்ததே சினிமாக் கொட்டயில
தானே அதனால எல்லாப்பயலுக்கும் சுளுவா எழுத முடியுது. அதோட எந்த டைரடக்கரும்
சண்டைக்கில்லாம் வரமாட்டாங்க்ய..அவாளே டிவீடி பாக்க நேரமில்லாம அலயிறாங்க.
முக்கியமா இன்னொண்ணு சினிமா மேரி டொரண்ட்,லைவ் ஸ்ட்ரீமிங்க், இந்த மேரி
ஓசிச்சமாச்சாரமெல்லாம் புதின/கவிதை புத்தகங்களுக்கு கிடைப்பதில்லை. காசு
குடுத்து வேங்கி அதப்படிச்சி, அப்பால வெமர்சன்ம்னு எழுதி,மேலே திட்டும்
வேங்கணும்னு...என்னாத்துக்கு இந்த கெரகம் புடிச்ச வேலைல்லாம்னு தான்
எழுதறதேயில்லை. அப்பால அந்த எழுத்தாளரே நம்மள ப்ளாக் பண்ணி ஆயுள் முழுக்க
அவா மேக்கொண்டு என்ன எழுதறான்னு பாக்க வெடாம பண்றதுங்கற கருமமெல்லாம் வேற
இருக்குதுங்க்ணா..அதான் ஒரு டொரண்ட் போட்டமா/ இல்ல லைவ் ஸ்ட்ரிமிங்க்ல
பாத்தோமான்னு சோலிய முடீக்கிறத விட்டுட்டு நீங்க வேற #விமர்சனம்
No comments:
Post a Comment