பாம்பே பேகம்ஸ். நெட்ஃப்ளிக்ஸ்க்கென்றே உருவாக்கப் படடது. கதையும் களமும். இதே போல ஷோபாடீ எழுதினது தான்னு நினைக்கிறேன். முன்பு பிரபல ஹிந்தி சேனலில் ஒரு தொடர் வெளிவந்தது. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சூடான காட்சிகள், பின்னர் அடித்து துவைக்கும் ஆங்கிலத்தில் மட்டுமே வசனங்கள். தங்கிலீஷ் போல ஹிங்கிலீஷாகவே தொடரும் உரையாடல்கள். கார்ப்பொரேட் உலகம் அத்தனையும் கசடுதான் உள்ளே கேரக்டர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் நேரம் ஒதுக்கி முழு தொடரிலும் அத்தனை பேரும் வருவது போல பார்த்துக் கொண்டதால் வந்த வினை.
கன்சென்ஷுவலா இல்லை வற்புறுத்தலான்னு கூட தெரியாத பொண்ணாக இருக்கிறார்கள் என்று ஒரு வசனமும் வருகிறது. இந்த இடத்தில் தான் மீட்டூ’ வுக்கான அத்தனை சாத்தியங்களும் சாஸ்வதமாக உலவுது உலகம் முழுதும். டிஸ்க்ளோஸர் என்ற டெமிமூரின் படம் ஒன்று வந்தது. அது பேசிய விஷயம், அரசியல் அத்தனை எடுபடவில்லை. ரிப்போர்ட்டிங் மேனேஜர் தூக்கி வீசின ஒருத்தர் நேரே சீஈஓ’வைப் பார்ப்பதெல்லாம் பேத்தல். ஒருநாளும் நடக்காது. அத்தனை கதவுகளும் சாமர்த்தியமாக சார்த்தப் பட்டுவிடும்.
Betrayed or Betraying என்பதில் தொடங்கி ஃபாத்திமா தன் கணவரிடம் சொல்லி குமுறி அழுதபின்னர் அவன் எழுந்து விட்டு விலகிச்செல்லும் காட்சிகள் அப்படியே ஒரு கவிதை போல பரிணமிக்கிறது. இது போல ஆழமான அழுத்தமான காட்சிகள் ரொம்பவே ரேர். மேலே வரவிடாது அழுத்தப்படுவது பெண்கள் மட்டுமே என்று விமன் செண்ட்ரிக்’காகவே முழுத்தொடரும் செல்வது சலிப்பு. ஹ்ம்.. என்ன செய்வது இது பாம்பெ பேகம்ஸ்ஸை பற்றின தொடர்.
பார்க்கும்படியான ரசிக்கும் படியான கேரக்டர்கள் இரண்டே பேர், அந்த லஷ்மி கொண்டாளி , (மராட்டியர்கள் தமது பெயரை எல்லோரும் சரியாக உச்சரித்தே தீரவேணும் என்று நம் தமிழர்கள் போல அடம்பிடிப்பார்கள்) பின்னர் அந்த பார்களில் ஜாஸ் பாடும் இரவுநேரப்பாடகி. வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்கும் அந்த இரவுநேரப்பாடகி. ஆக இரண்டே கதாபாத்திரங்கள்.
இங்க காட்டப்படும் பேகம்கள், வழக்கமாக முக்காடு போட்டுக்கொண்டு முகமே காட்டக்கூடாது என்று தம் சொந்த வீட்டில் கூட மறைத்தே வாழும் வடநாட்டு 'ச்சூலா பட்டி' பேகம்ஸ் அல்ல. #பாம்பேபேகம்ஸ்
No comments:
Post a Comment